Posts Tagged ‘வினவு’

வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்? அட்ரா சக்கை,அட்ரா சக்கை

ஜூன் 2, 2010

வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்?

அட்ரா சக்கை,அட்ரா சக்கை


வினவில் வெளியான நர்சிம் குறித்த கட்டுரை மிகுந்த குற்ற உணர்ச்சியை எமக்கு உண்டாக்கியது. சந்தன முல்லை எனும் பதிவரை நர்சிம் மிகக்கேவலமாக வர்ணித்திருக்கிறான். இச்சம்பவம் வினவினைப் படித்தபோதுதான் அறிய முடிந்திருக்கிறதெனில் பதிவுலகை விட்டு நாம் தள்ளிப்போயிருக்கிறோம் என்பது சூடு வைத்தாற்போல உறைக்கிறது.

ஒரு பெண் பதிவர் மட்டுமல்ல பலர் பாதிக்கப்பட்டு சிலர் எழுதுவதைக்கூட நிறுத்தியிருப்பதை அறியும் போது குற்றவுணர்ச்சிதான் ஏற்படுகிறது. காரணம் ஒரு பெண்ணோ ஆணோ பாதிக்கப்படும் போது/ ஒடுக்கப்படும் போது பேசாமல் அமைதியாயிருப்பது அல்லது கண்டுகொள்ளாமலிருப்பது மறைமுகமாக ஒடுக்குவதற்கு துணை போகிறது. நர்சிம் சந்தன முல்லையை மிகக்கேவலமாக பிறப்பைப்பற்றியயல்லாம் பேசிவிட்டு அதுவும் கதையாக வடித்து விட்டு அவரே மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டும் இடத்தை காலிசெய்து விட்டார்.

பார்ப்பன ஆணாதிக்க வெறிபிடித்த நர்சிமை விமர்சித்து வினவில் கட்டுரை வருகிறது. உண்மைத்தமிழனோ வினவைப் புறக்கணிக்க அறைகூவலிடுகிறார். ஏன் வினவை புறக்கணிக்க வேண்டும்? சாதிப்பிரிவினையை நமக்குள் துVண்டிவிட்டதுதான் காரணம் என்கிறார். இதுவரை சாதிபாராது நட்பு பாராட்டி வந்ததாகவும் வினவு இதை திட்டமிட்டு சீர்குலைப்பதாகவும் கூறும் உ.த “”எதாயிருந்தாலும் நாங்க பாத்துக்குவோம் நீ பேசாதே”என்று தீர்ப்பு வழங்க மொக்கைக் குழுவினர் அங்கு சதிராட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

எல்லாவற்றையும் நாங்களே பேசிக்கொள்வோம் நீ தலையிடாதே


இது ஏதோ ஒரு குடும்பத்துக்குள் வெளியாள் மூக்கை நுழைத்தது போல பதறுகிறார் உண்மைத்தமிழன். அப்படியெனில் உ.த.வும் சந்தனை முல்லையும் ஒரே குடும்பம். சரி ஏண்ணே உங்க குடும்பத்து பபொண்ணான அப்புடி கேவலமா நர்சிம் பேசியிருக்காரு. நாங்களே பேசி தீர்த்துக்குவோம்னு சொல்றீங்குளே. இதுத்தாண்ணே புரியமாட்டேங்குது. நேத்து முளைத்த காளான் எனக்கே சுர்ர்ன்னுனுனுனு ஏறுதே ஏன்ணே உனக்கு கோவமே வரலீயா? சூடு சொரண இல்லாம கிடக்க நீ சரி சொரண தரலாம்னு வினவு பேசுனா எங்க பிரச்சின நீ தலையிடாதேங்குற.

உங்க பிரச்சினைன்னா அது உங்கள் (நர்சிம்& உ.த) தொடர்புடையதாக மட்டும் இருந்தால் தான். இப்பிரச்சினை அதை தாண்டி வந்து விட்டது.ஐமீன் வூட்டுக்கு வெளிய வந்துடுச்சு,  ஸோ இது பொதுப்பிரச்சினை. உ.த அண்ணன் மாதிரி சொரணைக்கெட்டு கிடக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.

நீ தலையிடாதே

இதைக் கொஞ்சம் ஆராய்வோம் .  என் மனைவியை நான் கொல்லுவேன் அடிப்பேன் அதை கேக்க நீயார்? என் தங்கச்சி அந்த கீழ்சாதிப் பையனை காதலிச்சா நான் மிதிப்பேன் அதைகேக்க நீயார்?  தலித்துங்களும் நாங்களும் ஒண்ணாத்தான் இருக்கோம் நாங்க அடிச்சுக்குவோம் அதை கேக்க நீயார்?  இந்த ஆத்து தண்ணிய விலை கொடுத்து நான வாங்கியிருக்கேன அதை கேக்க நீயார்?  அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்? அதை கேக்க நீயார்?

கோக் நிறுவனம் தாமிரவருணியை வாங்கிய போது பு.ஜவில் ஒரு அட்டைப்படம் வந்திருந்தது. அதில் ஒரு குழந்தை தன் உடலெல்லாம் கொப்பளங்களோடு காட்சியளிக்கும். அப்போது படிக்கத்தெரியாத தாய்மார்கள் கூட படத்தைப்பார்த்து செய்தியை அறிந்து கண்ணீர் விட்டார்கள் தண்ணீர் தனியார்மயத்துக்கெதிராக வசவுகளை பொழிந்தார்கள். உ.த.வின் பார்வையில் அந்தத்தாய்மார்களெல்லாம் கங்கைகொண்டான் கிராமக்களுக்கும் கோக் கம்பெனிக்கும் இருந்த உறவை கெடுத்தவர்களா என்ன?

ராஜபக்ஷே சொல்கிறான் இது எங்களுடைய பிரச்சினை நீ தலையிடாதே என்று?  க.பிரியா போன்றவர்கள் சொல்வார்கள் ”  பாத்தீயா நார்சீமைப்பத்தி பேசுனா ரா பக்¼ க்கு போயிட்டான்”. இது ஆதிக்கவாதிகளின் குரல். தங்களின் ஆதிக்கம் நீடித்துக்கொண்டே இருக்க வேண்டும் எதுவாக இருந்தாலும் நாங்கள் பேசிக்கொள்கிறோம், நீ தலையிடாதே!!!

பாதிக்கப்படுவோர் வாய் திறந்து பேசிட உரிமை இல்லை.  நாங்கள் நண்பர்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீ விசத்தை விதைக்காதே என்கிறார்கள். இந்த நாங்கள் என்றால் என்ன? நீங்கள் என்றால் என்ன?

உ.த தெளிவாக சொல்லிவிட்டார் க.பிரியா அழகாக கும்மியும் அடித்துக்கொண்டுமிருக்கிறார், நாங்கள் நபர்கள் எங்களுக்குள் யாரையும் அடிப்போம் நீ வந்து கேட்காதே என்று.அய்யா உ.த அப்படியயல்லாம் சொரணைக்கெட்டு எங்களால் இருக்க முடியாது. ஒருவருக்கு பிரச்சினை என்றால் அதைகேட்க உறவு முறை அவசியம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மனிதாபிமானம் ,  அவனும் பாதிக்கப்படுகிறான் நானும் பாதிக்கப்படுகிறேன் என்ற உணர்வு இருந்தால் போதும் , நக்சலைட்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்?

அட்ரா சக்கை,அட்ரா சக்கை

ஏன் வினவை புறக்கணிக்க வேண்டும்? தன்னுடைய ஆணாதிக்க சிந்தனையை பார்ப்பன  ஆதிக்கத்தை கேள்வி கேட்பதால் அதை புறக்கணிக்க வேண்டும். போரிலே / மக்கள் பாதிக்கப்படும் போது / சக பதிவர் பாதிக்கப்படும் போது வாய் மூடி இருக்காதே போராடு, அந்த நாயை அடித்து விரட்டு என்பதால் அவர்களில் குடும்பம் போல் வாழும் உறவு சிதையுமாம். சிதையட்டுமே அந்த மானங்கெட்ட உறவுகள்!!!!

சக பதிவர் பாதிக்கப்படும் போது வாய் மூடி இருத்தலை கற்றுக்கொடுக்கும் அந்த உறவு முறைக்குப்பேர் என்ன? “அவனைத்திட்டினால் அவன் கோவித்துக்கொண்டு விடுவான், அப்புறம் யார் மச்சி நமக்கு தண்ணி வாங்கி கொடுப்பா? என்ற ஊதாரியின் / பொறுக்கியின் பேச்சுக்கும் உங்களுக்கும் வித்யாசமிருக்கிறதா?  இது வரை சாதிவெறிப்பதிவுகள்/மதவெறிப்பதிவுகள்/ஆணாதிக்கவெறிப்பதிவுகள் இல்லாத இடமாக தமிழ் வலை இருந்ததாகவும் வினவு அதை வலிந்து ஏற்படுத்துலது போலவும் கதை விட்டுக்கொண்டு திரிகிறார்கள்.

வினவை புறக்கணிக்கச்சொல்வதன் நோக்கமே அவர்கள் எல்லாவிதமான ஆதிக்கத்தை எதிர்க்க மட்டும் செய்யவில்லை எதிர்க்கவும் சொல்கிறார்கள், அதுதான் இவர்களுக்கு வலிக்கிறது. எனக்கு விடுதலை வேண்டும் ஆனால் நான் போராட மாட்டேன் என்ற சுயநலவாத ஊற்றுக்கண்ணே இவர்களின் மூதாதையன். அது அப்படியே பரவி நீ எதுக்கு போராடுகிறாய் , அவர்கள் எல்லாவற்றையும் திட்டுவார்கள்,  நம்மைப்பிரிப்பார்கள் என்று பஜனை பாட ஆரம்பித்து விட்டார்கள். வினவை திட்டுவதற்கு இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. வினவில் தனிநாபர் தாக்குதல் என்று கிழிய பேசுபவர்கள் உண்மைத்தமிழனின் பதிவிலிருக்கும் எழுத்துக்களை பார்ப்பது நலம்.

உண்மைத்தமிழன் & அங்கே கும்மியடிப்போரின் கவனத்திற்கு

மொக்கைமார்களே !!!

மீண்டும் நாங்கள் சொல்லிக்கொள்கிறோம், நீங்கள் தனிப்பட்ட முறையில் தனக்குத்தானே வதைத்துக்கொள்ளுங்கள் யாரும் கேட்க வில்லை, மற்றவர்கள் பாதிக்கப்படும் போது அவர்களோடு தோள் கொடுக்காமல் எங்களால் இருக்க முடியாது ஏனென்றால் நாங்கள் மனிதர்கள், சொரணையுள்ளவர்கள்.  அப்புறம் இன்னொரு கும்மி சொல்கிறார் ” இப்படி திட்டுகிறீர்களே நர்சிம் தற்கொலை செய்து கொண்டால் யார் பொறுப்பு? ”  இந்த பூச்சாண்டியெல்லாம் சொரணையற்றவர்களின் கண்களில்தான் கண்ணீரை வரவழைக்கும்.

நர்சீமின் யோக்கியதையை ஏன் அவரின் தெருக்களுக்கு கொண்டு செல்லக்கூடாது? இது லீனாவுக்கும் பொருந்தும். உன் கருத்து சரி என்று தானே சொல்கிறாய் மக்கள் மன்றத்தில் உரத்து முழங்கு உன் கருத்துக்களை, எமக்கும் மக்களுக்கும் இடைவெளி எப்போதும் இருந்ததில்லை, இவர்களைப்போல் அங்கு ஒரு பேச்சு இங்கு ஒரு பேச்சு என்று மொள்ளமாறித்தனம் எங்களால் செய்ய இயலாது.  ஆணாதிக்கவாதிகளை தனிமைப்படுத்துவது மட்டும் போதாது, அவர்களை அடித்து விரட்டுவோம். உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் வினவுக்கு தோள் கொடுப்போம்.

  • ஆணாதிக்க பொறுக்கிகளை அம்பலப்படுத்தி விரட்டியப்போம் !
  • பெண்களை நுகர்பொருளாக்கும் எழுத்து புரோக்கர்களுக்கு பதிலடி கொடுப்போம் !!
  • தமிழ்மணத்திலிருந்து ஆணாதிக்க பொறுக்கிகளை தூக்கியறியவைப்போம் !!!

கண்டிப்பாய் வருவீர்களா தோழரே? புதுவையில் போர்க்கோலம்

மே 4, 2010

கண்டிப்பாய் வருவீர்களா தோழரே?
புதுவையில் போர்க்கோலம்

இந்த முறையும் மே 1க்கு கலந்து கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாயிருந்தேன். முதல் நாள் விழுப்புரத்தில் ஒரு வேலை விசயமாக நண்பரின் இல்லத்தில் தங்கி விட்டேன். மே 1 காலை 10.30 மணிக்கு கிளம்பினேன்.   காலை 10.30 மணியையைப்போலவே இல்லை. இரவெல்லாம் மழை. விழுப்புரம் பேருந்து நிலையம் கூட்டமின்றி வெறிச்சோடிக்கிடக்க, பேருந்திற்காக காத்திருந்தேன் வரிசையாய் தனியார் பேருந்துகள். அரை மணி நேரம் கழித்து வந்த அரசுப்பேருந்தில் ஏறினேன். வெளியூர் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்களை போராட்டங்களில் மட்டும் தான் பார்க்க முடிகிறது.

கடைசியாய் நாங்கள் தோழர் பசந்தா கருத்தரங்கில் பார்த்ததுதான். அப்புறம் வாய்ப்பே இல்லை. ஒவ்வொருமுறை வாய்ப்பு கிடைக்கும் போதும்  எப்படி இருக்கீங்க என்பதில் தொடங்கி, சுவையான நிகழ்வுகள் என போய்க்கொண்டு இருக்கும்.  இம்முறை முக்கியமாக அங்காடித்தெருவைப் பற்றி பேசலாம் என எண்ணியிருந்தேன். பேருந்து விழுப்புரம் டவுனை கடக்கும் போது ஒரு கண் கொள்ளாக்காட்சியைப் பார்த்தேன்.

சிஐடியூ தோலர்கள் கும்பலாக பேனர் பிடித்தபடி பேரணியில் சென்று கொண்டிருக்க, முன்னே பேண்ட் வாத்தியம் சென்று கொண்டிருந்தது. சினிமாப் பாட்டுக்கு தாளம் தப்பாமல் அடித்துக்கொண்டிருக்க, சிஐடியுவோ அதில் வர்க்கப்பார்வையை தேடிக்கொண்டிருந்தது. புதுவையை அடைந்தேன் மணி 12 ஆனது. பேருந்து நிலையத்தில் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அமைதியாய் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்தேன்.

நண்பர்கள் இருவருக்கும் போன் செய்து கேட்டேன் இருவரும் ஒரே மாதிரி சொன்னார்கள் லேட் ஆயிடுச்சு, எப்புடியும் 3 மணி ஆயிடும். சரி என்ன பண்ணலாம் என்று யோசித்தபடியே  அருகிலிருந்த நபரிடம் பேச்சுக்கொடுக்க, புதுவையில் பீச் இருப்பது தெரிந்தது. சரி பீச்சுக்குத்தான் நடந்து போவோமே என்று கிளம்பினேன். வேடிக்கைப்பார்ப்பதற்கு அல்ல, நேரம் கடக்க ஒரு வழி.

பேருந்து நிலையம் விட்டு நேராய் போய்க்கொண்டிருந்தேன், யாரையும் கேட்க வில்லை, ஆங்காங்கே போர்டுகள்பல்லைக்காட்டின” பீச்-க்கு செல்லும் வழி”. செல்லும் வழியில் தெருக்களின் பெயர்களைப்பார்த்தேன். முதலில் தமிழ், பின்பு ஆங்கிலம், பின்னர் பிரெஞ்சு என மும்மொழிகளில் இருந்தன. காலனியின் எச்சங்கள் பெருமையாய் படர்ந்திருந்தன.கடற்கரைக்கென செல்லும் அந்த பிரத்யேகமான அந்த சாலைதான் மினிஸ்டர் ரெசிடென்சியல் ஏரியாவாம். பல புதிய கட்டிடங்கள் கூட பிரெஞ்சுமுறையில் இருந்தன.
அமைதியாக இருந்தது. பீச்சை நெருங்கிய போது மற்றொரு கிளைச்சாலையில் ஏதோ கூட்டமாய் இருந்தது.

நெருங்கிபார்த்தேன் அது சினிமா பட சூட்டிங், கொரியாகாரர் போல இருந்த அந்த ஸ்டண்ட் மாஸ்டர் சண்டைகாட்சிகளை தெளிவான தமிழில் இயக்கிக்கொண்டிருந்தார். சூட்டிங்கை பார்த்தேன் ஒரு ஆம்புலன்ஸ் போன்ற வண்டி அதில் சில முகமூடி அணிந்த நபர்கள் , வெயிலில் துணை நடிகர்கள் பைக்கில் நால்வர், எங்கடா  நாயகனைக்காணவில்லைஎன்று தேடியபோது ஜீவா வந்தார். மற்ற துணை நடிகர்களெல்லாம் வெயிலில் நனைந்து வியர்வையில் ஊறிப்போயிருக்க. ஜீவா செயற்கையாக ஒரு டப்பாவிலிருந்து வியர்வையை தெளித்துக்கொண்டிருந்தார்.

பார்த்தால் உண்மையான வியர்வைவிட ஜீவாவின் மேல் போடப்பட்ட வியர்வை அதிகமாய் இருந்தது,எப்போதும் போலிகள் தான உண்மைகளைத் தின்கின்றன. அங்கிருந்து கிளம்பி கடற்கரைக்கு சென்றேன், அம்பேத்கார் மணி மண்டபம் இருந்தது. கடற்கரையை இரண்டு ரவுண்ட் சுற்றினே. பிரெஞ்சுகாரர்கள் பலர் அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நம்மவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் நினைத்தேன் “அவனோட ஊர்ல போய் என்னன்னு சொல்லுவான், நம்ம காலனி நாட்டுக்கு போய்ட்டு வந்தேன்னு சொல்லுவானா”

மீண்டும் கிளம்பினேன். வரும் வழியில் கம்பன் அரங்கத்தில் விழாவாம், கவர்னர், முதல்வர், எல்லா அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்களாம். இன்றுதான் திறக்கப்படப்போகிறதாம். அதைக்கடக்கும் போது ஒருவர்என்னிடம் கேட்டார்”இன்னைக்கு திறக்கப் போறாங்களாமா?”   “ஆமா இன்னிக்கே போயிடுங்க அப்புறம் உடமாட்டாங்க” என்ற படியே கிளம்பினேன். ஆபாசக்கவிஞனுக்கு கோடிக்கணக்கில் அரங்கம், உழைக்கும் மக்களுக்கோ பட்டை நாமம்.

மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்தேன். எதிர்பார்த்த நண்பர்கள் வந்து சேர , பேருந்து நிலையத்தில் திரும்பியபக்கமெல்லாம் சிவப்பு நிறமாயிருக்க, நண்பர்களோடு  பேசிக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. பசித்தது, எந்த ஹோட்டலிலும் சாப்பாடு இல்லை, இறுதியாக
ஒரு ஹோட்டலில் நுழைந்து ஆளுக்கொரு தோசை சொன்னோம், சாப்பிட ஆரம்பித்த வேளையில் பறைசத்தம் கேட்டது. அப்படியே விட்டுவிட்டு கிளம்பினோம்.

தோழர்கள் பறையடித்தவாறே இருக்க, மற்ற தோழர்கள் பேருந்து நிலையத்தில் இரு பக்கங்களையும் முற்றுகையிட்டு  முழக்கமிட்டனர். சுமார் 20 நிமிடம் கழித்து ஒருபக்கத்தை மட்டும் விட்டு மற்ற பக்கத்தை முற்றுகையிட்டு  தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசு பொறுமையாய் வந்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை போலும். அனைத்து பேருந்துகளும் முடங்கிப்போயின.

தோழரின் மைக்கைப் பிடுங்கினார் ஒரு  அதிகாரி,  மைக்கிலிருந்து முழக்கம் வருகிறதென்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது அந்த மெத்தப்படித்தவர். தோழர்கள் தங்கள் போர்க்குரலைத்தொடர
கடுமையான டிராபிக் ஜாம். தோழர்கள் பேருந்து போக்குவரத்தை வரிசைப்படுத்தினர். போலீசு வேடிக்கைப்பார்த்தது. கைது செய்ய வரும் வேனை தோழர்கள் டிராபிக் ஜாமிலிருந்து மீட்டு முன்னே கொண்டு வந்தனர். (என்னன்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்குது !!!!!)

நடுவில் ஒரு சீபீஎம் கொடி கட்டிய ஆட்டோ வந்தது அதில் எம்ஜியார்படத்து வர்க்கப்பாடல்களை ஒலிபரப்பியபடி சென்றார் ஒரு தோலர்.அவர் பார்வையில் அவர் வர்க்கப்போராட்டத்தை சினிமாப்பாட்டுக்கள் மூலம் நடத்திக்கொண்டிருந்தார்.

போலீசின் வண்டிகள் வரிசையாய் நிரம்பின, அவர்களிடம் போதிய வண்டிகள் இல்லை. தனியார் பேருந்துகளை கொண்டு வந்தனர். ஒவ்வொரு பேருந்துக்கும் அளவுக்கு ஏற்ற தோழர்களை தோழர்களே ஒழுங்கமைத்துக் கொண்டு வண்டியில் ஏறினர்.சீறிய முழக்கம் ஆளும் வர்க்கத்தின் காதை கண்டிப்பாய் கிழித்திருக்கும்.   இப்போது கலைக்குழு தோழர்களிடமிருந்து பறை  வேறு  தோழர்களிடமிருந்தது.

அவர்கள் ஆரம்பித்தார்கள். அந்த இசை இறுதிவரை குறையவே இல்லை. அதிலும் மிகவும் ஒரு குட்டித்தோழர் ஆர்வமாக பறையடித்தார். அவரைபார்க்க எனக்குப் பொறாமையாக இருந்தது. இந்த வயதில் நான் என்ன செய்திருப்பேன் என நினைத்தேன்” விளையாடவும் வயிறு முட்டத்தின்னவும் தவிர எதுவும் நினைவில் இல்லை ” வெட்கம் பிடுங்கித்தின்றது.

உன் விரல்களில்  இன்னும்
உரமேற்று  தோழனே
மரத்துப்போன எங்கள்
அடிமைத்தோல்களை
அடித்துக் கிழி

காவல் வண்டியில் ஏற்றவே 6 மணிக்குமேல் ஆனது. தோழர்கள் காவல் பயிற்சிப்பள்ளியில் வைக்கப்பட்டார்கள். அங்கேயே பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சியாவும் நடந்தேறியது. 8 மணிக்கு போலீசு விடுதலை செய்தது நாங்கள் கிளம்பினோம், ஆளுக்கொரு திசையாய். மறுபடியும் அடுத்த போராட்டத்தில் தானே பார்க்க முடியும்.

மீண்டும் பேருந்தில் ஏறிசென்ற போது வழியில்  பல சிஐடியூ போர்டுகளுக்கு சந்தனம் பொட்டு வைத்திருந்தார்கள். பூசையெல்லாம் காலையிலேயே முடிந்திருக்கும் போல.அதிமுக  மேதின விழா சாலையில் நடந்து கொண்டிருந்தது. தோலர் குண்டு கல்யாணம் பேசிக்கொண்டிருந்தார். அவர் என்ன பேசுவார் தொழிலாளர் உரிமைகள் செயாவின் சுருக்குப்பையில் இருப்பதை விளக்குவார். ஒருவகையில் புதுவையின் இப்போராட்டம் ஒரு தொடக்கமே. “நம்முடைய ஆயுதத்தை எதிரி தான் தீர்மானிக்கிறான்”

உண்மைதான் புதுவையிலிருந்து 4 கி.மீ தள்ளி உள்ள இடத்தில்  பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தந்திருந்தால் இவ்வளவு சிரமம் போலீசுக்கே இருந்திருக்காது.  பாசிசம் எவ்வளவு கொடூரமானதாயிருந்தாலும் அது முட்டாள்தனமானது. ஆசான் மார்க்ஸ் சொன்னாரே “முதலாளித்துவம் தன் புதைகுழியை தானே தோண்டிக்கொள்கிறதென்று” எத்துணை உண்மை. இந்த முட்டாள் பாசிசம் தானே நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை தீர்மானித்தது. அது இதனால் எதை மூடி மறைக்க நினைத்ததோ அது தானாய் வெடித்து விட்டதல்லவா,   “மகிழ்ச்சி என்பது போராட்டமே”, இனி போராட்டங்களை மகிழ்ச்சியாய் தொடர்வோம்.
அடுத்தப்போராட்டத்தில் அந்த குட்டித்தோழரை பார்ப்பதற்கு ஆவலாயிருக்கிறேன். கண்டிப்பாய் வருவீர்களா தோழரே? இன்னமும் எங்கள் தோல்கள் கிழிக்கப்படவில்லையே.





1.ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் போராட்டம் – படங்கள் !!

2.ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம் ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!

வினவு

ஜனவரி 11, 2009

வினவு
ஒரு பார்வை

வினவு  – இது  மிகவும் பிரபலமான வலைத்தளம், கடந்த ஆறு மாதத்தில் 90 கட்டுரைகள் இடப்பட்டிருக்கின்றன  ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்திருக்கின்றனர்,ஆயிரக்கணக்கானோர்  பின்னூட்டமிட்டுருக்கின்றனர். வினவு கட்டுரைகள் ஆறு புத்தகமாக வெளிவந்திருக்கின்றன.உண்மையில் இது மகிழ்ச்சிகரமான விசயம் தான்.நான் கவனித்ததிலிருந்து பலமாதங்கள் வேர்ட்பிரஸ்ன் மேலோங்கும் பதிவுகளில் வினவின் பெயர் இடம் பெறாத நாளை மிக மிக சில நாட்கள் எனலாம்.பலரும் கூறலாம் .இதிலென்ன பெரிய விசயம் எழுதுவதில் நேர்த்தி என்பது இருந்தால் யாரும் இந்த இடத்தை பிடிக்கலாம்,எழுத்து நேர்த்தி என்பது பதிவர்க்கு தேவையானது தான் என்றாலும் வினவின் தளத்தை அந்த ஒரு சிறப்பில் மட்டும் ஆழ்த்திவிட முடியாது,புரட்சிகவியையும் காமக்கவிஞன் வாலியையும் ஒரே தட்டில் வைத்து  படைப்பாளி என்று சொல்வது எவ்வளவு கடுமையான தவறோ அதைப்போன்றதே வினவின் இந்த வளர்ச்சியையும் மற்ற கழிசடை தளங்களின் வளர்ச்சியோடு ஒப்பிடுவது.

இசைஞானி என எல்லோராலும் புகழப்படும் இளையராசாவின் இசை எதை எந்த கருத்தை தாங்கி வருகிறது என்பதை பொறுத்தே அவரின் திறமையை புகழ்வதா இல்லை இகழ்வதா என தீர்மானிக்க முடியும்.ஒரு படைப்பாளி என்பவனின் கடமை யாது?மக்களின் அன்றாட பிரச்சினைகளை சந்திக்காது இல்லை அதை பற்றி சிந்திக்காது இருப்பவன்,மக்களின் பிரச்சினைகளை தன் கலை மூலமாக   வெளிப்படுத்தாது இருப்பவன் எப்படி vinavu-copy ஆகமுடியும்.. ஆசான்கள்   சொன்னது போல “வர்க்கத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை”,வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட எழுத்தாளனோ அல்லது ஒரு படைப்பாளியோ இருக்கவே  முடியாது.

பல படைப்பாளிகள் இருக்கிறார்கள் எதையுமே சிறப்பாக வெளிப்படுத்துவார்கள் கதையாக,கவிதையாக,கட்டுரையாக,இசையாக இப்படி பல வழிகளில்,கண்ணதாசன் வயிரமுத்தன்களி¢ன் கவிதைகளை படித்து பலரும் இப்படி சொல்வதுண்டு”எதை கொடுத்தாலும் அந்த ரெண்டு பேரும் அப்படியே கவிதையா வடிப்பாங்க” அப்படித்தான் “ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே” என்று பாட்டெழுதிய வைரமுத்து தான் “ஆண் தொடாத பெண்மையா” என்றும் எழுதினார்.ஒரு  படைப்பாளி  தன்னுடைய படைப்புக்களை உண்மையாகவே சிந்தித்து படைக்கின்றான் எனில்  எப்படி ஒரே கையால் ஏழையின் வறுமையை பற்றியும் , முதலாளித்துவத்தின் பெருமையைப்பற்றியும் படைக்க முடிகின்றது, அவன் முதலாளித்துவத்தின் பெருமையை படைப்பதற்க்ககவே ஏழையின் வறுமையை படிக்கின்றான் . எந்த படைப்பாளியும் தன் வர்க்கத்துக்காகவே சிந்திக்கின்றான்  அவனின் தேவைக்கு  ரசிப்புக்கு ஏழையின் கண்ணீரும் தேவைப்படுகின்றது என்பது தான் உண்மை.

இந்த மாடர்ன் உலகத்திலே உலகமே கையளவாக சுருங்கி போய்விட்டது, தினசரி பத்திரிக்கைகள் போல  புற்றீசலாய் இணையத்தில் பல வலைத்தளங்கள் உள்ளன,எப்படி மஞ்சள் பத்திரிக்கைகளும் ஆபாச எழுத்தாளர்களும் வெளியில் குவிந்து கிடக்கின்றார்களோ அதை விட இணையத்தில் மிக அதிகமாகவே நிரம்பியிருக்கின்றார்கள்,”பெண்களை வளைக்க என்ன செய்வது,கடலை போடுவது எப்படி போன்ற சிறப்பு பாடங்கள்  வலைத்தளங்களில்  இன்றைய சூடாட இடுக்கைகளில் நிரம்பி வழிகின்றன.சைதப்பேட்டையில் வட நாட்டினர் எப்படி குளிக்கின்றார்கள் என்பதைபற்றி ,ஒரு பதிவர்  அதை தடுக்க கோரி அரசுக்கு தன் பதிவை பதிக்கின்றார் அதற்கு தலைப்பே அம்மண குளியல். தன் தளத்தை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எதைவேண்டுமானாலும் எழுதுவது  என இப்டித்தான் இருக்கின்றது வலைப்பூக்கள்.

அவர்கள் எப்படி தன் வர்க்கத்துகாக எழுதுகின்றார்களோ அப்படித்தான் வினவின் படைப்புக்களும் உழைக்கும் வர்க்கத்துக்காக எழுதப்படுகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் மக்களின் வாழ்வாதரம் எப்படி தொடர்புடையதென்பதை   நிரூபிக்கும் அவரின் எழுத்துக்கள்.வினவின் எழுத்துக்களை படிக்கும் ஒவ்வொரு வரும் கண்டிப்பாய் நழுவ முடியாது பதில் சொல்லியே தீர வேண்டும்,மறுமொழிகளை படித்தாலே புரியும்   பின்னூட்டமிடும் யாருமே தான் எந்த சார்பை சார்ந்தவரென்பதை தெளிவாக எடுத்துவைக்கவேண்டிய முடிவுக்கு தள்ளப்படுகின்றார். குறிப்பாக சாதி வெறிக்கட்டுரையில் தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராய்  ஊடகங்கள் செய்த மோசடியை அம்பலப்படுத்தி மாணவர்கள் தாக்கியது சரியே என்ற கருத்தை வைத்தது.எதையும் நடு நிலைமையாய் பேசுவோம் எனக்கூறி  ஈனத்தனமாய் முடிவெடுத்த பலருக்கும் சவுக்கடி கொடுத்தது,அதனால் தால் குழலி எழுத நேர்ந்தது”செய்தியாளர்களை குறை சொல்லும் பதிவர்களே…..”.

கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இங்கு இல்லை என்பது தான் உண்மை.ஆனால் கேள்வி கேட்கவே கூடாத பல புனிதங்கள் வரிசையாய் நிற்கின்றன.அவற்றை வெட்டி வீழ்த்தாது மக்களுக்கு கண்டிப்பாய் விடுதலை இல்லை.புனிதங்களுக்கு  கல்லறை கட்டும் வேலையை செய்யும் வினவை கண்டிப்பாய் பாராட்டித்தான் ஆக வேண்டும்,பொழுதுபோக்கென கூறி புரளிகளையும் புரட்டுகளையும் பேசும் இந்த வலைஉலகில்  வலைக்கு வெளியே பரந்து பட்ட மக்கள் உலகம் இருகின்றது அது இன்னமும் அடிமையாயிருக்கின்றது,அந்த அடிமை விலங்கை உடைக்க போராடி நம்மையும் அப்போர்க்களத்திற்கு அழைத்து செல்லும் வினவின் பதிவுகள் தொடர வேண்டும்.மீண்டும் சொல்வோம் இது மகிச்சிகரமான விசயமே ஏனெனில் மகிச்சி என்பது போராட்டம் தானே.