பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்! தளராத போரும் வீழ்த்தப்பட்ட தில்லையும்

பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்!
தளராத போரும் வீழ்த்தப்பட்ட தில்லையும்thillai-copy
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆறுமுகசாமி எனும் ஒரு கிழவர் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு சிதம்பரம் கோயிலுக்கு நீதிமன்ற அனு மதியுடன் சென்றார் போலீசு பாதுகாப்புடன்,அடுத்த நாள் போலீசு ஸ்டேசனில் வந்து சொன்னார்” பாதுகாப்புக்கு வாங்க!” ” ஏன் சாமி நீதான் நீதி மன்ற ஆணைய வச்சுருக்கியே  தைரியமா போ சாமி” தைரியமாகத்தான் போனார் தேவாரம் பாடி முடிப்பதற்கு முன்னரே தீட்சித பார்ப்பன ரவுடிகளால் அடித்து குற்றுயிரும் குலையுயிருமாக தெருவில் வீசப்பட்டார். சாலையில் இருந்தவர்கள் அவரை  மருத்துவமனையில் சேர்த்தனர் .

பிறப்பால் பார்ப்பனராய் பிறக்காததால்  தான் சந்தித்த கொடுமைகளுக்கு தன்னந்தனியாய் கையளவு நோட்டீசுகளுடன் மக்களிடம் முறையிட்டார் அவர்கள் கூடுமிடங்களில்,பின்னர் மனித உரிமை பாதுகாப்புமையத்தை நாடி  ம.க.இ.க,மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சீறிய முயற்சியால் தற்போது தினமும் அவரின் கடவுளை தமிழால் வழிபடுகிறார்,தீட்சிதப்பார்ப்பனர்களோ  வயிறெரிந்து  சாபமிடுகிறார்கள் ,சாமியார் ஆறுமுக சாமியோ  வெற்றிநடைப்போட்டு  கோயிலுக்கு  வருகிறார்.

கோயிலை இந்து அறனிலையத்துறை அதிகாரி நியமிக்கப்பபட வேண்டும் என்று இன்று வந்த தீர்ப்பால்  தீட்சிதர்களோ  வீட்டுக்கு மூட்டை முடிச்சை கட்டலாமா மேல்முறையீடு செய்யலாமா எனக் காத்திருக்கிறார்கள்.
புதியதாய் இதை படிக்கும் பலருக்கும்  அண்ணாமலை படப்பாணியை நினைவிருக்கலாம்,இந்த நீண்ட நெடிய வரலாறு  2 மணிநேரத்தில் முடிந்து விடவில்லை,பல்லாண்டுகளாக போராடியது மனித உரிமை பாதுகாப்புமையம் , ம க ,இ க அதன் தோழமை அமைப்புகள்,

முதலில்  மனித உரிமை பாதுகாப்புமையம்  உள்ளூரில் உள்ள சனனாய சக்திகளை திரட்டியது,ஆரம்பத்தில் ஆகா ஓகோ என முண்டியடித்து வந்தவர்களெல்லாம் நேரம் ஆக ஆக ஒவ்வொருவராய் கழண்டு போனார்கள்.அதிலும் முக்கியமாக முதல் கூட்டத்தில் சீபீஎம் மட்டும்தான் இதை சாதிக்கும் என பேஇய அக்கட்சியின் மா செ அடுத்த மீட்டிங் முதல் தாங்கள் விலகுவதாக அறிவித்தார் . கேட்டதற்கு சொன்னார்கள் நீங்கள் “பார்ப்பனர்கள் என்று பிராமணர்களை திட்டுகிறீர்கள்” அன்று பார்ப்பான் என்று சொன்னதால் ஓடிப்போன சூரப்புலிகள்  தான்  இன்று ம க இ க வை பார்ப்பனீயம் என அழைக்கிறார்கள்,

பிறகு சிதம்பரத்தில் ஆறுமுக சாமி தேவாரம் பாடுவது தொடர்பாக  வழக்கு நடைப்பெற்றது,அதற்கு  திர்ப்பு வழங்கிய அம்பேத்கார்”ஆறுமுக சாமி தமிழில் பாட நிரந்தர தடை விதித்தார்,மேலும் இவர்கள் நுழைந்தால்  கோயில் நகைகள் திருடு போக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்”
ஒன்றல்ல ரெண்டல்ல எத்தனை வாய்தாக்கள்  எத்தனை துரோகிகள்  துவளவில்லை மனித உரிமை பாதுகாப்புமையம்.தொடர்ந்து போராடினார்கள்.சாதித்து விட்டார்கள், மக இ க ,பு மா இ மு, பு ஜ தொ மு, ஆகிய அமைப்புகள் மக்களிடையே  வழக்கினை கொண்டு சென்றன.முதல் கட்டமாக தமிழ் நுழைந்தது,  அந்த தமிழ் நுழைவதற்குதான் மாபெரும் போர் நடத்த வேண்டியிருந்தது..அவ்வரலாறை சொல்லுவதற்கு ஆயிரம் பக்காங்கள் போதாது .

அக்கோயிலில் நடந்த கொள்ளை பற்றியும் கொலை பற்றியும் விசாரிக்க வழக்கு தொடர்ந்தது மனித உரிமை பாதுகாப்புமையம்.இன்று (திங்கள்) கோயி லை அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கோரும் மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட வாறு தீர்ப்பளித்திருக்கிறார்”

 

 

இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்

 

 

ஆயிரமாண்டுகளாக வெல்லப்படாத அந்த பார்ப்பன கோட்டை வீழ்த்தப்பட்டு விட்டது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீட்சிதர்களால் சிறைபிடிக்கப்பட்ட நடராசன்  விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார் நாத்திகர்களால்,

சோவின் மொழியில் சொன்னால் “நக்சலைட்டுகளால்”. தினமும் பார்ப்பனர்களின்  குறட்டை சத்தத்தால் தூங்காத நடராசன்  நிம்மதியாய் தூங்கப்போகிறான். .நாளையே மீண்டும் ஏதாவது உத்தரவினை காட்டி மீண்டும் நடராசனை கைப்பற்றலாம் தீட்சிதர்கள் ,பார்ப்பன தீட்சிதர்களோ கோயிலை விட்டு வெளியேற்றப்படவில்லை ,திங்கள் இரவு 11.30க்கு அதிகாரி வந்து கோயிலை பூட்டிவிட்டு  செவ்வாய் கிழமை காலை 7.30க்கு கோயிலை திறக்கிறார்.இத்தனை காலம் நாம் போராடியது அரசு வாட்சுமேனை நியமிப்பதற்காகவா.

பார்ப்பனர்களோ திமிராய் இருக்கிறார்கள் மேல் முறையீடு செஞ்சு வந்துடுவோம் என்று.இதுவல்ல முழு வெற்றி எப்ப்போது பார்ப்பன கும்பல்  கோயிலை விட்டு   முற்றாக துடைத்தெறியப்படுகின்றதோ  அதுதான்   “தில்லை தீட்சிதர் சொத்தல்ல” எனும் முழக்கம்  வெற்றிபெற்றதாய்  அறிவிக்கப்படும். நந்தனுக்காக போடப்பட்ட சுவர் தூள் தூளக்கப்பட வேண்டும்.தீண்டாமை அறவே அழிக்கப்படவேண்டும்.தமிழ் நுழைய போரினை நடத்திய புரட்சிகர அமைப்புகளால் தில்லை நடராசனை  நிம்மதியாய் தூங்க வைக்க முடியாதா என்ன?

இந்த வெற்றிக்கு முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள பிரசுரத்தை தேவை கருதி இங்கே பதிவுக்கு…..

http://vinavu.wordpress.com/2009/02/02/thillai1/

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

16 பதில்கள் to “பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்! தளராத போரும் வீழ்த்தப்பட்ட தில்லையும்”

  1. paarvaiyalan Says:

    அவர்கள் மேல் முறையீடு செய்து இடைக்காலத் தடை பெறவும்,
    அதன் அடிப்படையில் முன்னிருந்த படி தீட்சிதர்கள் பொறுப்பில்
    கோயில் இருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த வழக்கு உச்சநீதி
    மன்றம் வரை இருதரப்பாராலும் எடுத்துச் செல்லப்படும்.
    ‘தீட்சிதர்கள் ,பார்ப்பன தீட்சிதர்களோ கோயிலை விட்டு வெளியேற்றப்படவில்லை ,திங்கள் இரவு 11.30க்கு அதிகாரி வந்து கோயிலை பூட்டிவிட்டு செவ்வாய் கிழமை காலை 7.30க்கு கோயிலை திறக்கிறார்.இத்தனை காலம் நாம் போராடியது அரசு வாட்சுமேனை நியமிப்பதற்காகவா.’
    கோயிலை விட்டு தீட்சிதர்கள் வெளியேற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளதா?. தீர்ப்பு அவர்களை நீக்கிவிட்டு புதிதாக
    பூசாரிகளை நியமிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளதா?
    நிர்வாகம் அரசு பொறுப்பில் இருந்தாலும், தீட்சிதர்கள்தானே
    பூசை,சம்பிரதாயங்களை செய்யப் போகிறார்கள்?.

  2. Bhuvan Says:

    அண்ணே, எல்லாம் சரி .. ஆனால் இது வீழ்த்தப்பட்ட தில்லை இல்லை!! மீட்டெடுத்த தில்லை! நான் சொல்லுவது சரி தானே??

  3. BARANI Says:

    நல்ல முடிவு, கோயில் என்பது ஒரு தனிபட்ட நபருக்கோ, இனத்துக்கோ சொந்தமானதல்ல, இதைதான் தமிழக அரசும் சொல்கிறது, பின்பு எப்படி தி.மு.கா இந்து மக்களுக்கு எதிர்ரானவர்கள் என்று சொல்ல முடியும், இந்து மதம் என்று சொல்லிகொண்டு தமிழில் வழிபாடு செய்யாதிருப்பதையும், ஒரு இனம் உயர்ந்தது எனையவை தாழ்ந்தது என்று இருக்கும் வேறுபாடுகளையும், அதில் இருக்கு முடநம்பிக்கைளையுமே எதிர்கிறது தி.மு.கா,சில விசமிகள் திமுகா மிது வேண்டாத விசயங்களை பரப்பி விடுகிறார்கள், நானும் ஒரு இந்துதான் என் கோயில் தமிழ் ஓலிக்கபட வேண்டும் என்று நான் எண்ணுவதில் என்ன தவறு, ஏன் என் மொழியில் கடவுள் கூடாது என்று சொன்னாரா அப்படி சொன்னால் எங்களுக்கு அப்படி ஒரு கடவுள் தேவையில்லை

  4. PARAMA PITHA Says:

    This judgement is not a CONCLUSIVE judgement. It is only an endorsement on the previous verdict given in Ramalingam case of 1983. This can be challenged further in apex court.
    Moreover, the verdict underlines the rights of Dikshithar hereditory in worship related items. This means that it still belongs to them for setting and directing the way that rituals are conducted. The board’s rights are limited to just admin and maintenance (clerical)

    By the way, all these socialist, forward, rational party guys must act to free lot of churches and mosques in Tamilnadu which are used for family welfare of limited group. Example is Eruvadi Dharga Haqdar Committtee, Kilavasal CSI Nemudi Family Church, etc. There are lot of complaints of anti-social actions like prostitutions, drinking, happening in these places in the disguise of religious properties

    PARAMS

  5. nondhakumar Says:

    நிர்வாக அதிகாரி நியமிக்கப்படுவது என்பதன் பொருள் இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் கோவிலை கொண்டு வருவது தான். அந்த வகையில் ஏற்கனவே நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக தீட்சிதர்கள் தொடுத்திருந்த ரிட் மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

    அரசாங்கத்தை கையில் போட்டுக்கொண்டு இந்த வழக்கை விசாரனைக்கே கொண்டு வராமல் தீட்சிதர்கள் இழுத்தடித்து வந்தார்கள் இவ்வழக்கில் நாம் தலையிட்டதன் விளைவாகத்தான் இது முடிவுக்கு வந்துள்ளது.

    தோழமையுடன்
    வினவு

  6. nondhakumar Says:

    //தமிழ் நுழைய போரினை நடத்திய புரட்சிகர அமைப்புகளால் தில்லை நடராசனை நிம்மதியாய் தூங்க வைக்க முடியாதா என்ன?//

    ?????????

  7. senkodi Says:

    இது இறுதி வெற்றியல்ல. சிதம்பரம் கோவில் மட்டுமே இலக்கும் அல்ல. காஞ்சி ஜெயேந்திரனின் ஆபாச லீலைகளும், கேரள கண்டரரு மோகனருவின் அந்தரங்க லீலைகளும் அம்பலப்பட்டு நாறியதைப்போல் பெருங்கோவில்களின் நெடுங்கதவுகளுக்குப்பின்னால் புதைந்து கிடக்கும் அசிங்கங்களும் தீண்டாமைக்கொடூரங்களும், கொலைகளும் அம்பலப்படுத்தப்படவேண்டும். ஒண்டக்குடிசையின்றி கோடிக்கணக்கானோர் சாலையோரம் குடியிருக்கும் நாட்டில் கோவில்களுக்கு ஏக்கர்கணக்கில் நிலமும், பல கோடிக்கணக்கில் சொத்தும் இருப்பதும்; குந்துமணித்தங்கமில்லாமல் திருமணமாகமுடியாமல் பெண்கள் முதிர்கன்னிகளாய் உலாவரும் நாட்டில் கோவிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டிருப்பதும் தன்மானமுள்ள மக்கள் முன் விடப்பட்டுள்ள சவால். அந்த சவால்கள் நேர்செய்யப்படுவதுவரை போராட்டங்கள் தொடரும். ஓயாது.

  8. KURUTHU Says:

    “தில்லையில் தீட்சிதர்களிடமிருந்து நடராசரை காப்பாற்ற வாருங்கள்!” என்றதும் மக்கள் அமோக ஆதரவு தந்தார்கள்.

    தீட்சிதர்கள் யாரென்றால்… கைலாயத்திலிருந்து 3000 தீட்சிதர்கள் பூமிக்கு வந்து, சிதம்பரத்தை அடையும் பொழுது, எண்ணிப்பார்த்தார்களாம். 2999 பேர் தான் இருந்தார்களாம். 1 ஆள் மிஸ்ஸிங்.

    அந்த மிஸ்ஸிங் ஆள் தான் நடராசராம். தீட்சிதர்கள் நடராசரின் நெருக்கமான உறவினர்களாம்.

    எப்பேர்ட்டப்பட்ட உடான்ஸ் கதை. எனக்கென்னமோ, இந்த கதையில் கூட, மிஸ்ஸிங் என்பது சந்தேகம் தான். தீட்சிதர்களின் பண்பைப் பார்க்கும் பொழுது, அப்பொழுதே, ஒரு தீட்சிதரை போட்டுத்தள்ளி விட்டு, காணாமல் போனவர் நடராசர் என கதைவிட்டு விட்டார்கள் என நினைக்கிறேன்.

  9. லாலாஜி Says:

    //தமிழ் நுழைய போரினை நடத்திய புரட்சிகர அமைப்புகளால் தில்லை நடராசனை நிம்மதியாய் தூங்க வைக்க முடியாதா என்ன?//

    நிரந்தரமாக தூங்க வையுங்கள் உங்களுக்கு கோடி புண்ணியமா இருக்கும்!

    லாலாஜி

  10. லண்டண் லாலாஜி Says:

    பாப்பானுக்கு ஆப்பு ! ஜலியோ ஜிம்கானா!
    வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  11. தமிழனாடின் சிறப்புப்பட்டியல் 'தமிழர்கள்' Says:

    தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

    கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
    வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
    ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

    நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

    சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

    தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
    விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

    வந்ததா? இல்லை.

    இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

    அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.

  12. உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்! « வினவு, வினை செய்! Says:

    […] பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்! தளர… தமிழிஷில் வாக்களிக்க… தமிழ்மணத்தில் வாக்களிக்க… வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற… […]

  13. easwara Says:

    என் இனிய நெஞ்சமே
    வாழ்த்துகளுடன் எமது வணககமும் உங்களுக்கு
    மிக மிக நேர்த்தியாக வடிவு அமைக்கப்பட்ட கட்டுரை
    தில்லை நடராசன் இப்பொழுதான் மிக சுக மாக விழித்துகொண்டான்.
    தமிழ் இனம் மெல்ல மெல்ல தான் விழிக்கும்
    என்பதற்கு இது ஒரு சான்று
    உங்களின் கலகம்
    மேலும் வளர்ந்திட
    எமது வாழ்த்துக்கள்
    அன்புடன்
    ஈஸ்வரா

  14. Karthi Says:

    AAga varinji katti Ezuthum veerarkale, Oru varudathiruku munbu vizuppuram churchil nadntha piraichinaya pathi ezutha oru veera sigamanyiyaum kaanom.Nenjula thil iruntha Velankanni churchyaum Nagore Dharkavayum Goverment eduthukidanum enru oru Article Ezuthunga parpom.

  15. Karthi Says:

    மிக மிக நேர்த்தியாக Poi sollura katturai vazka ungal poi thondu.

  16. Karthi Says:

    “நல்ல முடிவு, கோயில் என்பது ஒரு தனிபட்ட நபருக்கோ, இனத்துக்கோ சொந்தமானதல்ல. “If barani have GUTs why don’t he speak or write about muslims and christiens.Why don’t he protest against usage of urdu and arabic in Dharka. Periya gnani enru paranikku ninaipu.

பின்னூட்டமொன்றை இடுக