Posts Tagged ‘பு மா இ மு’

மாற்றங்களும் சில கற்களும்

ஏப்ரல் 28, 2011

மாற்றங்களும் சில கற்களும்


பதிமூன்று முறையாக
மாற்றங்கள் வந்தன
முகமூடிகளில் மட்டும்

முகமூடிகளைத்தாண்டி
பற்கள் கோரமாய்
வளர்ந்து கொண்டே இருக்கின்றன

வாக்குச்சீட்டுகள்
எந்திரங்களாகி

நூறு ஆயிரமாகி
பில்லியனர்கள்
ட்ரில்லியனர்களாகி
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாண்டு
பணக்காரர்கள் வாழ

மிட்டல்களின் தொப்பைகளில்
செத்துப்போன எம்
பழங்குடிகளின் பிணங்கள்

டாடா பிர்லா
அம்பானி வேதாந்தா
இந்தியாவின் வாசனைத்திரவியங்கள்
உழைக்கும் மக்களின் ரத்தக் கவுச்சிகள்

சிந்தும் ரத்தத்துளிகளை
ருசிக்க மண்மோகன்
கருணா செயா சிபீஎம்
ச்சீப்பீஎம் திருமா
ராமதாஸ் வைகோ வரிசையாய்
வந்துவிட்டது பதினான்காவது தேர்தல்

வன்புணர்ச்சியின் பாரத மாதா
இந்திய ராணுவத்துக்கு தேர்தல்கள்
தராதாத தீர்ப்பை
கற்கள் தான் தந்தன

இங்கேயும் கற்கள்
இருக்கின்றன – இதோ
உழைத்து உழைத்து மரத்துப்போன
கைகளும் இருக்கின்றன.

தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி

ஏப்ரல் 17, 2011

தேர்தலைப்புறக்கணி ! – இனி நக்சல்பாரியே உன் வழி


கடமையை செய்தால் உரிமையை பெறலாம்
.தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை.

கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன

எம் வாயில்
பீயைத் திணிக்கவும்

ஏழை மாணவனின்
கல்வியினைப் பறித்து காசாக்கவும்

ஆத்தாளின் தாலியறுத்து
அப்பனுக்கு சரக்கடிக்கவைக்கவும்

உழைப்பின் நரம்பினைப்
பிடுங்கி எம் ரத்ததை
நக்கி குடிக்கவும்

ஈழத்திலே குண்டு மழை
பொழிந்த போது
கிரிக்கெட் பந்து மழை சொரியவும்

என
கடமைகள் வரிசையாய்
நிற்கின்றன

ஆம் அது
ஆண்டைகளுக்கான முதலாளிகளுக்கான
கடமை

ஓட்டுப்பெட்டி அது
முதலாளிகளின் பணப்பெட்டி
உழைக்கும் மக்களுக்கோ சவப்பெட்டி

பதிமூன்று முறையாய்
மாறாத தேசத்தை
புரட்டிப்போட
உழைக்கும் வர்க்கத்தின்
கடமை அழைக்கிறது – விரைந்து வா !
தேர்தலைப்புறக்கணி !

அலைகடலென ஆயுதமேந்தி ஆர்ப்பரி
இனி  நக்சல்பாரியே உன் வழி

இது பதினாலாவது தேர்தல்

ஏப்ரல் 9, 2011

இது பதினாலாவது தேர்தல்

காந்தியின் கைராட்டையில்
சிக்கிக் கதறிய
எம் பாட்டனின்
சத்தங்கள் அடங்கிப்போயின
முதல் தேர்தலில்……..

இது பதினாலாவது
தேர்தல்

எத்தனையோ மாற்றம்
அன்று ஒருவனுக்கு
பாய்விரித்த  நாடு
பலருக்கும் பாய்விரிப்பதைப்
பார்க்கையில் என்னமாய்
புன்னகைக்கிறார் காந்தி

பதிமூன்று முறை
ரத்தம் குடித்த முதலாளியின் காட்டேரிகள்
திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் சிப்பீஎம்
சீபீஐ  பிஎஸ்பி விசி பாமக
என பல வண்ண செருப்பணிந்து
வருகின்றன

நீர் நிலம் காற்று
அனைத்தையும்
அன்னியனுக்கு யார் மூலமாக
தாரை வார்க்க என
தராதரம் பார்க்கத்தானா தேர்தல்

உணவு மூட்டைகளை
எலிகள் தின்கின்றன
உழைக்கும் மக்களை
கார்ப்பரேட் கரையான்கள் அரிக்கின்றன

ஜேப்பியார்களின்
பணமூட்டைகளில்
சிக்கித்திணறுகின்றான்
ஏழை மாணவன்

முதலாளித்துவசுரண்டலில்
சுண்டி விட்டது
தொழிலாளியின் ரத்தம்

சோறில்லை வேலையில்லை
கல்வியில்லை இல்லை
இல்லை
எங்கும் இல்லைகள்
எங்கு காணிணும்
இல்லைகள்

உண்டென்பதற்கு
இங்கு டாஸ்மாக்கைத்தவிர
வேறென்ன இருக்கிறது?

படிக்க காசின்றி
சட்டியைத்தூக்கும் மாணவனின்
முனகல்களும்

உழைக்கும் வர்க்கத்தின்
அழுகைகளும் கவலைகளும்
இன்றோடு நின்றுவிடுமா என்ன?

சனநாயகக் கடமையாற்றுவது
ஏதும் இல்லாமல்
செத்துப்போவதற்கா என்ன ?

இதை மாற்ற முடியுமா?
கண்டிப்பாய் முடியாது
இது உன் கடமை என்றால்
ஓட்டு எந்திரத்தை உடைத்துப்போடு

உழைக்கும் மக்களை உரித்துப்போடும்
தேர்தலைப் புறக்கணித்து
ஆயுதமேந்துவோம்
கார்ப்பரேட் முதலாளிகளின்
சொத்துக்களைப் பறிப்போம்!
ஆம்
அது ஒன்றுதான் தீர்வு தரும்

புரியுதா ! நான் தாண்டா தேர்தல் கமிசன்

ஏப்ரல் 3, 2011

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

 

புரியுதா !  நான் தாண்டா தேர்தல் கமிசன்

எம்மன்னவரே
அழகான சின்னவரே
நீ சிரிச்சா ரோசா பூ பூக்கும்
நீ  நடந்தா நதியெல்லாம்
துள்ளி வெளையாடும்
நீ கண் மூடிப்படுக்கையிலே
விண்மீண்களெல்லாம் தாலாட்டும்

சொத்துக்கும்
சோத்துக்கும் உனக்கென்ன
கேடு இங்கே
ரூபாய்க்கு அரிசியிருக்க
அதைப்பேசு
பொறந்தது முதல் நீ
கட்டையில போற வரை
எல்லாம் தருவாரு தலைவரு
நீ அதைப்பேசு
தலைவன் தெரியாம செஞ்சிருக்கலாம்
நீ தப்பு செய்யலயா
வயசோ கூடிப்போச்சு
அறிவோ ஏறிப்போச்சு
கொடுடா சான்ஸ் அய்யாவுக்கு

இல்லை தலைவன் வேணாமுன்னா
தலைவியப்பாரு
ஊரெல்லாம் மேஞ்சு திரிஞ்சு
வாயில போட்டாலும் இவ இப்ப
மூலி அலங்காரி
காதுல ஒரு தோடுண்டா? வெங்கல
கழுத்துல ஒரு தாலி ச்சீ ச்சீ
செயினு உண்டா
இதைப்பேசு
டான்சி கீன்சின்னு
கண்டதையும் பேசாத
எம்ஜியாருக்கு தொண்டு
செஞ்ச’ புண்ணியவதி
போன மொற உன் தாலியறுத்ததப்
பேசாதே மாறிட்டா
கலர் கூட ஏறிப்போச்சு
சத்தியமா மாறிட்டா
இன்னும் நீ நம்பலீயா

போன முற அவ
மண்டைய உடைக்கயில
கத்திக்கதறுனவன் சிபிஎம்காரன்
பாப்பாத்தின்னு சீன் காட்டி
சீட்டு வாங்கிட்டுப்போன பாண்டிக்குட்டி
மாறுனதுதான் தெரியலயா
சிறுதாவூருன்னு கேஸ்போட்டு
அவ கால சுத்தி கிடப்பதுதான் தெரியலயா
சத்தியமா அவ மாறிட்டாடா

அவங்க வேணாமுன்னா
தொப்புளுல பம்பரம் வுட்டு
வாயில சரக்கவுட்டு வாரார்
நம்ம தலைவரு புச்சிக்கலைஞரு

ஜெயிச்சு வந்தா அத்தனைப்பயலும்
மொதலமைச்சரு
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
இதுதாண்டா காங்கிரசு

ஈழத்துல மக்கள் செத்துப்போனதுக்கு
மவன் அமைச்சர் பதவியின் கண்ணியம் காக்க
நாலு நாள் தள்ளி ஒப்பாரி
வச்ச தமிழ்க்குடி தாங்கி இருக்க

மாஞ்சோலையில  மக்களை
கொன்னான்னு சூளுறைச்ச
என் சிங்கக்குட்டி
வொவ் வொவ் வொவ்
சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தா
தோ பார்ரா
திருமா என்கின்ற
அழகான நாய்க்குட்டி

கிருஷ்ணசாமி, சரத்குமார்
வாண்டையார்,கார்த்திக்,
கழுத்தறுக்க இல.கணேசன்,
பூவையார்,பெஸ்ட் ராமசாமி
என முதலாளிகள் போட்ட
போண்டா தான் புடிக்கலையா

திமுக, அதிமுக, தேமுதிக
காங், சிப்பீஐ, சிப்பீஎம்,
என ராடியாக்கள்
ஊத்தும் சட்னிதான்
பிடிக்கலையா

இது
சும்மா வந்த ஜனநாயகம் இல்ல
மாமா வேலை
பார்த்து பார்த்து
வெள்ளைக்காரனுக்கு பெத்துப்போட்டதை
இந்த அரசு முறையை

தப்புன்னு
நீ பேசாத
மீறி சொன்னா
நீ தீவிரவாதி

அயோக்கியத்தேர்தலுக்கு
முடிவுகட்ட நெனைச்சு
ஓட்டுப்போடாம இருந்தா
நீ துரோகி

டாடா பிர்லா அம்பானி
மிட்டல்ன்னு கொள்ளையடிக்க
நீ வேடிக்கைப்பாக்கலாம்
புறக்கணிக்கச் சொன்னா
உனக்கு ஜெயிலு

இனியும்
எதுவும் பிடிக்கலையா
எவனும் பிடிக்கலையா
டேய் ங்கோத்தா!!!!

ஒழுங்கா ஓட்டுப்போடு
இல்லைன்னா
டே!
போலீசு
அவன் வாயிலயே
ஒண்ணு போடு

புரியுதா
நான் தாண்டா தேர்தல் கமிசன்

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!

பிப்ரவரி 28, 2011

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !

போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!

” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு ”

23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் தேதி தொலைக்காட்சியில் அச்செய்தியை கவனித்த பலரின் எண்ணங்களில் உதித்தவை மேலே கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்கும். ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது.  ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?

மேலே வெளிப்பட்ட வார்ர்த்தையின் வடிவத்தை மட்டுமே மாற்றியமைத்து ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.

இப்போது 23-ம் தேதிக்குச் செல்வோம், எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள் ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள்  திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன்திட்டத்தோடு(preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத்தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள்சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது.

கலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக்கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது,ரத்தக்கணக்குச்  சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.

தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் “தம்பி” என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.

அவர் அந்த ஆசிரியர் மதிப்பெண் போடமாட்டார், அவர் எப்போதும் ஆப்செண்ட் போடுவார் ,  என்ற எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய் உண்மையாக மாணவர்களாக களமிறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். மதியம் 2.15க்கு தொடங்கிய வெறியாட்டம் 3.30 வரை நீடித்தது.

இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல பதிலளித்து இருக்கிறார் இணைஆணையர் சாரங்கன். மாணவர்கள் மீது வழக்கு பதியப்படாதென அவர் உறுதியளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது, அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூடாது என நிர்வாகத்தை நிர்பந்தித்தது. ஒவ்வொரு வருடமும் பீஸ் கூட கட்ட வக்கற்ற அந்த ஏழை மாணவர்கள் ரத்தம் சிந்தியபடி அலைந்தார்கள். ஆறாத ரத்தத்துடன் அலைந்தபடியே வேறுவழியின்றி வீடுகளுக்கு சென்றார்கள்.

இதோ காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு மட்டும், வேலை நாளாக கணக்கு காட்டிவிட்டு கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு வெதுப்பிக்கிடக்கிறார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். 170 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை , எளிய மாணவர்களுக்காக திறந்திருந்த அக்கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விடுதிகளில் இனி இடம் கிடைக்குமா என தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள் மாணவர்கள். வெளியே ரத்தவெறியோடு காத்திருக்கிறது போலீசு.

ஆம் உண்மைதான், தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாணவர் சமூகம், ஆறாத செங்குருதியோடு உலாவிக்கொண்டிருக்கிறது.

———————————————————————————————————————————————————–

ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன் கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன் ” எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.

பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம்  பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத்தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.

பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.

இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம்  யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.

அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.

காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்?  நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு  நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம்  கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப்போகின்றதா என்ன?

ஈராண்டுகளுக்கு முன்புவரை “ரூட்” பிரச்சினைக்காக அடித்துக்கொண்ட மாணவர்கள் தற்போது வேறுபாடுகளை மறந்து கல்லூரியைக்காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால்தான் தங்களினுடைய ஆசிரியர்களின் கதறல்களை  பொறுக்கமுடியவில்லை அவர்களால். தாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய கல்லூரி மைதானத்தை, சோற்றுக்கே வழியின்றி இருந்த தங்களுக்கு வாழ்வளித்த கல்லூரி நொறுக்கப்படுவதை, தாங்கள் சாய்ந்திருந்த இருக்கைகள், எழுதி கிறுக்கிய மேசைகள் எல்லாம் உடைக்கப்படுவதை அவர்களால் பொறுக்கமுடியாது கிளர்ந்தெழுந்து பேராசிரியர்களையும், கல்லூரி அலுவலர்களையும் காத்தார்கள் மாணவர்கள்.

உடைக்கப்பட்டது பச்சையப்பன் சிலை மட்டுமல்ல அது நம் வாழ்வுரிமையை உடைப்பதாய் உணர்கிறார்கள் மாணவர்கள். சிலையுடைப்பின் தொடர்ச்சி  கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள்.அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.

இது ஏதோ “பஸ் டே” பிரச்சினை என்று மட்டும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. இது பஸ்டே பிரச்சினை அல்ல என்பது மற்றவர்களை விட இணை ஆணையர் சாரங்கனுக்கு நன்றாகவே தெரியும். இதே பச்சையப்பன் கல்லூரியில் 81-ம் ஆண்டுப்பிரிவில் படித்த அவர் எத்தனை பேருந்துகளை உடைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. தாங்கள் மாணவர் பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளைத்தான் இப்போதைய மாணவர்களும் செய்கிறார்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறது. இழுத்துப்போட்டு மாட்டைப்போல் அடிப்பதால் மட்டும் இப்பிரசினை தீர்ந்து விடப்போவதில்லை. மாணவர்களை கலாச்சார ரீதியிலேயே மாற்ற வேண்டியிருக்கிறது. ஆக ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புலனாகிறது பஸ்ஸிலே ரூட் அடிப்போருக்கும் , கல் விடுவோருக்கும் எந்த வேலை கிடைக்கிறதோ இல்லையோ இணை ஆணையர் பதவி கண்டிப்பாய் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.

NDTVக்கு பேட்டியளித்த இணை ஆணையர் சாரங்கன் ” மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுறங்கன்னா உள்ள ஏதோ சக்தி அவங்கள இயக்குது” என்றார். அவருக்குத்தெரியுமோ தெரியாதோ நமக்குத் தெரியாது. அந்த சக்திக்குப்பெயர் “மாணவர் சக்தி “. தன் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கப்படுகையில், தன் கல்லூரி அடித்து நொறுக்கப்படுகையில், தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக அது எரிமலையாய் வெடித்துக்கிளம்பும்.

மாணவர்களுக்காக ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்காக மாணவர்களும், இருவரும் கல்லூரிக்காக போராடும் தருணம் வந்து விட்டது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கையிலே அத்தருணத்திலே கூட போராடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம்.  ஆனால் அவர்கள் போராடினார்கள்-போராடுகிறார்கள்-போராடுவார்கள்.நிகழ்காலத்தின் நிகழ்வுகள் தான் வரலாறாய் மாறுகின்றன. இந்தி எதிர்ப்புப்போரில் முக்கியக் களமாய் நின்ற பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர் வரலாறு மீண்டும் திரும்புகிறது.

மாணவர்களாக, முன்னாள் மாணவர்களாக, பேராசிரியர்களாக, அலுவல பணியாளர்களாக, மனசாட்சியுள்ள மனிதர்களாக, உழைக்கும் மக்களாக ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராணி மேரிக்கல்லூரி மாணவிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவு கூர்வோம். ” கடந்த நேரமும், தவறவிட்ட வாய்ப்பும்” மீண்டும் கிடைப்பதில்லை. இந்த நல்ல’ நேரத்தைப் பயன்படுத்தி மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு இறந்த காலமாகிவிடும்.

இதோ !!!!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம் நாம் ?

பு.மா.இ.மு

சென்னை

பொரட்ச்சிசீசீசீ!!!!!!!!

நவம்பர் 8, 2010

பொரட்ச்சிசீசீசீ!!!!!!!!

எல்லாரும் கியூவுல நின்னு புரட்சிக்கு வாழ்த்து சொல்லுங்க பார்ப்போம்

அதோ அங்கே பாருங்கள், வறண்ட , நெடிய கண்மாயில் பெண்கள் எல்லாம் போர் போட்டு குடி நீர் எடுத்துக்கொண்டுஇருக்கிறார்கள். என்னங்க செய்யறது? கண்மாய் வத்திப்போய் பல வருசம் ஆச்சு, ஓட்டு கேக்க வருவானுங்க எப்பயாவது.மண்ணை பொன்னாக்குறேன்ன்னு சொல்லுவான் ஒருத்தன், நாயை பேயாக்குறேன்னு சொல்லுவான் ஒருத்தென் இப்புடியேஎல்லாம் கருமாந்திரம் புடிச்ச பயலுவலும் சொல்லிகிட்டு திரியும் , எங்க தண்ணீ பிரச்சினைய எவனும் தீக்குற மாரி தெரியல.

அன்னக்கி தண்ணி எடுக்க வந்த பெரியாத்தா கூட சொல்லுச்சி “ஏய் மாரியம்மா இந்த பூமிய அழிச்சுப்புடு தாயீ , புதுசா கொண்டா ஆத்தா, நாங்க தெனமும் சாவுறோம் ஆத்தா” கண்ணீர் வுட்டு கதறுச்சி. எல்லாம் இச்சு கொட்டிட்டு போய்ட்டாங்க.

அடச்சே நாம எதுக்கோ வந்துட்டு எதைப்பத்தியோ பேசிகிட்டு இருக்கோம், நாம பேச வந்ததே நம்ம மாணிக்கத்தை பத்திதான், வயசு 35. அவுங்க தாத்தா துரையன் அந்த காலத்துலயே கம்யூனிஸ்டு கட்சியில இருந்தாராம். வெள்ளக்காரன்

காலத்துல துரையன் இருந்த ஜெயில்ல பக்கத்து ரூமிலதான் நல்லக்கண்ணு இருந்தாராம். கட்சி ரெண்டா உடைஞ்சப்பகூட துரையன் நகரலை. ” சாகுற வரைக்கும் தோலர் நல்லக்கண்ணுக்காகத்தான் அவுரு கட்சியிலத்தான் இருப்பேன்“ன்னாரு. அவரு போட்ட சபதத்த  மாணிக்கம் காப்பாத்துறாரு. ஆமா அவரும் சிபிஐ கட்சியிலதான் இருக்குறாரு. அவுங்க அப்பாவுக்கு ஒரு நல்லக்கண்ணுன்னா? மாணிக்கத்துக்கு வானவராயன்தான்.

போன முறை கோயம்புத்தூர் எம்பியா நின்னப்ப மாணிக்கம் செஞ்சவேலை என்ன? மாடாட்டம் வேல செஞ்சான். நாளைக்கு தேர்தல்ன்னா இன்னைக்கு வரைக்கும் தோரணம் கட்டுறதுகொடிபுடிக்குறதுன்னு அவன் தெருவையே கலக்கிப்புட்டான் போங்க.

வானவராயன் செயிச்சவொடனே  மாணிக்கத்த கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தாரு அப்புறம் சொன்னாரு “என்ர மாணிக்கம் இருக்குற வரைக்கும் எனக்கு கவலையே இல்லை” ஆமா அவரு வீடு எங்க இருக்குன்னு தெரியலீங்களே! யாரை கேக்கலாம்………………… அதோ அந்த வெள்ளசீலை ஆயாவை கேக்கலாங்களா ?  “ஆயா இங்க துரையன் பேரன் மாணிக்கம் வீடு எங்க இருக்குதுங்க? ” ” நம்ம மாணிக்கம் வீடா? தா அந்த முக்குல போய் சோத்தாங்கை பக்கம் திரும்புங்க”

அதோ வெளிய கயித்துக்கட்டல்ல  இருக்குறாரே அவருதான் மாணிக்கம். திரைக்கதையெல்லாம் போதும் இனி கதைக்குள்ள போவோம்.

…………………………

……………………………………………………………………………………………………………………………………………………………………..

மாணிக்கத்துக்கு ஒரு சந்தோசமாய் இருந்தது, இருக்காதா என்ன? சிபிஐ மாநில செயலாளர் ” நில மீட்பு போராட்டம்” அறிவிச்சதை பார்த்தவுடனே அப்படி ஒரு சந்தோசம். எல்லா கட்சியும் எப்படியெல்லாம் எங்களை கேவலப்படுத்துனீங்க நாய்ங்களா? வர்ரண்டா டேய்! சிங்கம் மாரி எங்க தோலர் கிளம்பிட்டார்டா………………….. அவன் மனசுக்குள் பல்லாயிரம் வாலா பட்டாசுகள் வெடித்தன. மாணிக்கத்தோட மாமன் வெள்ளையன் பக்கத்து வீடுதான்.

மாமன் வெள்ளையன்  சிபிஎம் கட்சியில இருக்குறாங்க. அவருகிட்ட சோலியா போறப்ப எல்லாம் சிபிஐ கட்சியை குத்தி குத்தி காட்டுவாரு. மனசு வலிக்கும், ஏன் போன வருசம் எங்க கட்சி மூத்த தலைவர் ஒருத்தரு சிபிஐ, சிபிஎம் ரெண்டு கட்சியும் இணையனும்ன்னு சொன்னவுடனே சிபிஎம் காரர் ஒருத்தரு “அதெல்லாம் முடியாது, பழச மறக்க முடியாது, எங்களை துரோகின்னு சொல்லி வெளியேத்துனீங்களே”ன்னு மைக்குல பேச எங்க தலைவருங்க மூஞ்செல்லாம் எவ்வளவு கவலையாஇருந்துச்சு தெரியுமா?

அதை பேப்பர்ல பாத்தவுடனே மாமங்காரன் சொன்னான் “டே மாப்புள! உங்கட்சியே ஒண்ணுமில்லாம போயிடுச்சு, செயலாளர் பதவிக்கு ஆள் இல்லாம ஓடிப்போன பாண்டியை புடிச்சுகிட்டு வந்தீங்க, இப்ப எங்க கட்சிக்கே மேட்டர் போடுறீங்களா? எங்க கட்சிய வளச்சுக்கிட்டு ஆள்புடிக்கப்போறீங்களா? அப்புடியே சொத்தப்புடுங்க பாக்குறீங்க”

வேற யாராவது சொல்லியிருந்தா அவன் சாவறதுக்கு கருப்பண்ணன் கோயில்ல கோழியை தலை கீழா தொங்கவுட்டுருப்பான் மாணிக்கம், மாமாங்குற ஒரே காரணத்துக்காக மனசுக்குளேயே புழுங்குனான். அவன் சொல்றது உண்மையா இருக்குமோ? ஏன் நம்ம கட்சியில யாருமே சேர மாட்டேங்குறாங்க! நமக்கு பின்னாடி பொறந்தவன் சிபிஎம், அவன்கூட கேரளாவுலயும் மேற்குவங்கத்துலயும் ஆட்சிய புடிச்சுட்டான்.  எச்சிப்பாலை (கொள்கையில்) குடிச்சு வளந்தவனுக்கே அவ்வளவு திமிறா?

ரொம்ப டென்சன் ஆகிப்போனான் மாணிக்கம். ” வொக்காளி என்ன திமிரு ஆளாளுக்கு ஆடுறானுங்க, நேத்து முளச்ச விஜயகாந்து புரச்சி பண்ணப்போறேங்குறான், நாங்க தாண்டா கம்யூனிசத்த இந்த நாட்டுக்கே அறிமுகப்படுத்துனோம், இப்ப எவன் பாத்தாலும் மதிக்க மாட்டேங்குறானுங்க, எம்பி சீட் கொடுத்தாலும் சரி, எம்மெலே சீட்கொடுத்தாலும் சரி எச்சிப்பாலு குடிச்சவனுக்குத்தான் எச்சா தராங்க” கவலையிலே சாயங்காலம் படுத்தவன்தான்,

ராத்திரி அவன் மனைவி ரத்தினம் எழுப்பிய போது அழுது அழுது அவன் கண்கள் வீங்கியிருந்தது, கேட்டாள் ” ஏ மாமா அழுவுற “, அவன் காலையில் மாமங்காரன் திட்டியதை சொன்னான்.

“அட கெரகம் புடிச்சவனே! இதுக்கா அழுவுற , கருப்பண்ண சாமிக்கு கெடா வெட்டறன்னு நேந்துக்கோ எல்லா
சரியாயிடும்” மனைவியின் சொல் இதமாயிருந்து. சாப்பிட்டு விட்டு மீண்டும் படுத்தான். கண்கள் சொக்கின, கூடவே ஒரு கவிதையும் வந்தது.

சொக்கும் கண்களை
நிறுத்துகிறது எனது வர்க்க உணர்வு

அடுத்த தேர்தலில்
ஒரு சீட்டாவது அதிகம் வாங்க
துடிக்கும் மனதே கேள் ! கலங்காதே
புரட்சி என்பது நாளை அல்ல – இதோ
இதுதான்
சாதிவெறியெனன,
செயாவின் அல்லக்கையென  தூற்றப்படலாம்

கலங்காதே மனமே!

புரட்சி ஒன்றே தீர்வு

விஜய்யின் உண்ணாவிரதாமாயினும்
விசயகாந்தின் அரசியல் பிரவேசமாயினும்
அம்மாவின் ஆணையிலும்
கருணாவின் பார்வையிலும் இல்லையா புரட்சி

போராட்டம் …………….அது நமக்கு மட்டும்தான் சொந்தம்
யார் செய்தாலும்  எங்கு செய்தாலும்
அந்த போராட்டம், அந்த புரட்சியின்
விதை நம்மால் மட்டுந்தான் தூவப்பட்டது
மனதில் வை

சாந்தம் கொள் மனமே
சஞ்சலப்படாதே
அறிவால் வெல் உலகை
அரிவாள் கதிரிருக்க பயமேன்

அப்போதுதான் சன் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது, இப்போதுதான் அந்த செய்தி வந்தது ” சிபிஐ மாநிலச்செயலர்அறிவிப்பு,  நிலமற்ற மக்களுக்கு நிலத்தை வழங்கக்கோரி நில மீட்பு போராட்டம்”. என்ன ஒரு சந்தோசம். போன வாரம்கூடசன் டிவியில வந்துச்சே சேதி,

“தில்லையில 4 ஆயிரம் ஆண்டுகளாய் பூட்டு போட்டிருக்கிறார்கள் அதை அரசு அகற்றாவிடில் நாங்கள் அகற்றுவோம்” நம்ம பாண்டி தோலர் பேசும் போது எப்படி சிங்கம் மாரி பேசினார். அந்த ம.க.இ.க காரனுங்க என்னமோ 8 வருசமா போராட்டம் பண்ணுறாங்களாம்.  நம்ம பாண்டி தோலர் எப்பவுமே உசாரு!!! எட்டு வருசமா போராடுறவனுக்கு பேர் கிடைக்க வுட்டுடுவாரா என்ன ?  சிபிஎம் காரணெல்லாம் பேசும் போது எங்களுக்கு பேச உரிமை இல்லையா என்ன? எவன் எட்டு வருசம் போராடி மண்டை உடஞ்சா நமக்கென்ன?  நமக்கு பேர் வரணும் அவ்வளவுதான்? இதுல என்ன தப்பு? அவனுக்குள்ளே கேள்விக்கேட்டுக்கொண்டே தூங்கிப்போனான்.

—————————————————————————————————————————————————————

யாரோ எழுப்பியது போல் இருந்தது . மணியைப்பார்த்தான் அது 4 என பல்லைக்காட்டியது. மாவட்டப்பொறுப்பாளர் நேரே வந்திருந்தார் “ஏப்பா மாணிக்கம் இங்க வா” தனியாக அழைத்தார். காலங்காத்தால தோலர் வந்திருக்காரே குழப்பத்தோடுபின்னே சென்றான். ” ஏப்பா நேத்து நியூஸ் கேட்டியா “.

” கேட்டேன் தோலர், நம்ம பாண்டித்தோலரோட பேட்டியில நில மீட்பு போராட்டம்ன்னு சொன்னாரே” என்றான்
“கரெக்டா விசயத்துக்கு வந்துடுறேன். நேத்து பாண்டித்தோலரோட பேட்டியைப்பாத்த மொத்த தமிழ் நாடே ஆடிப்போயிடுச்சு, குறிப்பா  அரசாங்கம் ரொம்பவே கலங்கிப்போயிடுச்சு, தலைவர் கலைஞர் நம்ம தோலருக்கு ராத்திரி 10 மணிக்கு போன் பண்ணி “தயவு செஞ்சு உங்க போராட்டத்த ஒத்திவையுங்கன்னு” கெஞ்சிப்பாத்தாரு நம்மாளு கேக்கவே இல்லை.”

“ஒரு சாதாரண போராட்டத்துக்கு ஏன் முதல்வர் போன் பண்ணியிருக்காரு தெரியுமா?” சஸ்பென்சோடு மாணிக்கத்தைப்பார்த்தார். நில மீட்பு போராட்டம்ங்குறது புரட்சி செய்யறதுக்கான அறிகுறி !!!!. எல்லா கட்சியும் நம்மள எப்படியெல்லாம் திட்டுனாங்க, அதுக்கு பதிலா யாருக்குமே தெரியாம புரட்சியை செஞ்சு முடிக்கறதுன்னு மேல்கமிட்டியில தீர்மானம் போட்டிருக்கோம்.”

மாணிக்கத்தின் முகம் கலவரமடைந்தது. அந்த பனி கொட்டும் வேளையில் முகத்தில் பூத்திருந்த வியர்வையை வேட்டியில் துடைத்துக்கொண்டான். தோலர் தொடர்ந்தார் “அந்த விசயம் எப்படியோ உளவுத்துறை மூலமா லீக் ஆயிடுச்சு, அதனால தான் கலைஞர் போன் பன்ணியிருக்காரு.”  “அப்படியா” என வாயைப்பிளந்தான் மாணிக்கம்.

“இதுக்கே திகைச்சுட்டியே, நைட்டு 12 மணிக்கு  பிரதமர் போன் செஞ்சு புரட்சியை ப்ளீஸ் ஒத்தி வையுங்கன்னு கெஞ்சி இருக்காரு, அப்புறம் சோனியா காந்தி, அத்வானின்னு எத்தனையோ பேர் சொல்லியும் பாண்டித்தோலர் கேக்கல. வேற வழி இல்லாம நைட்டு 1 மணிக்கு அம்மா போன் பண்ணி புரட்சிய ஒத்தி வையுங்க இன்னைக்கு நாள் சரியில்லைன்னு சொல்ல அதுக்கு நம்ம தோலரோ ‘ நாளைக்குத்தான் நல்ல நாள் என் ராசிக்கு  நாளைக்கு  குரு உச்சத்துல இருக்கான், கண்டிப்பா

நாளைக்கு புரட்சி செய்யணும்னு மேல் கமிட்டியில தீர்மானம் போட்டுட்டாங்க அதுக்கு முன்னாடி ஆவி ஆவி ஆரதா மூலமா ரணதிவே கிட்ட கூட ஆசி வாங்கியாச்சு”ன்னு ஆணித்தரமா சொன்னாராம். அம்மா கம்முன்னு ஆப் ஆயிடுச்சாம்”

மணிக்கத்துக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. ” தோலர் நான் என்ன செய்யணுன்னு சொல்லுங்க? “. ” இப்ப மணி 4.இன்னும் சரியா ரெண்டு மணி நேரத்துல விடிஞ்சிடும் அதுக்குள்ள  நம்ம ஊருல இருக்குற எல்லா ஸ்கூல்,  பீடிஓ ஆபீஸ், அப்புறம் அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் , கொடிக்கம்பங்கள் எல்லாத்துலயும் நம்ம கதிர் அறிவாள் கொடியை ஏத்துனா போதும்,

நம்ம தோலர் பாண்டிக்கு அவர் ராசிப்படி காலையில 8.50 மணிக்கு நல்ல நேரம் ஆரம்பமாகுது, அவர் சரியா 9 க்கு டிவி ஸ்டேசனுல முறைப்படி புரட்சி நடந்து முடிந்ததை அறிவிப்பார். அதுக்கு முன்னாடி மக்கள் எழக்கூடாது.  அவங்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் வேணுமில்ல , அதால காலையில மக்கள் முழிக்கறதுக்கு காரணமான சேவல்களை எல்லாம் இப்பவே நாம கொல்லணும். அதுக்கு தனியா ரெண்டு தோலர்களை அனுப்பிட்டேன். அவங்க எல்லா சேவலையும் கொன்னுட்டதா எனக்கு மெசேஜ் அனுப்பிட்டாங்க”.

மாணிக்கம்  தன் வீட்டு சேவல்கள் கொல்லப்பட்டு கிடப்பதை அப்போது பார்த்தான். அவன்
கண்ணீர் கசிந்தது. புரட்சிக்காகத்தான சேவல்கள் செத்தன என்பதை நினைத்து மனதை தேற்றிக்கொண்டான்.

” தோலர் 7 மணிக்கு காலையில சங்கு ஊதுவானே ?”  ” நீங்க அதைப்பத்தி கவலைப்படாதீங்க, அவருக்கு கொஞ்சம் பணத்தைக்கொடுத்து  8.45 க்கு சங்க ஊத சொல்லிட்டேன், நீங்க விடியறதுக்குள்ள எல்லா கொடிக்கம்பத்துலயும் கொடியை ஏத்துனா போதும், காலையில எட்டே முக்கால் மணிக்கு மக்கள் எல்லாம் எந்திரிப்பாங்க, சுத்தியும் சிவப்பு கொடியை பார்ப்பாங்க, ஆச்சரியமா டிவி பெட்டியப் போடுவாங்க. அப்ப நம்ம தோலர் புரட்சி  நடந்து முடிந்ததை முறைப்படிஅறிவிப்பார்.” என்ற படி தோலர் கிளம்ப மாணிக்கம்  “ஒரு சந்தேகம்” என்று நிறுத்தினான் அவரை,

“தோலர் புரட்சின்னா அவ்வளவுதானா? யார்கிட்டயேயும் சண்டை போடவேண்டியதில்லையா?, இப்படி யாருக்குமே தெரியாம புரட்சி பண்ணிட்டமே தோலர், வேற கட்சிக்காரங்க சண்டைக்கு வரமாட்டாங்களா? ”

தோலர் புன்சிரிப்போடு சொன்னார் ” சில விசயங்களை சொல்ல முடியும் பல விசயங்களை சொல்ல முடியாது, புரட்சி என்பது மண்ணுக்கேற்றவகையில் இருக்கணும், ஒவ்வொரு நாட்டுலேயும் , பிரதேசத்துலேயும், பகுதியிலேயும் வேற மாதிரி தான் நடக்கும். புரட்சிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிஞ்சிடுச்சு, நைட்டு 1 மணிக்கு மேல் என்ன நடந்துச்சுன்னு நான் சொல்லக்கூடாது அது கட்சி ரகசியம், அதை காலையில டிவியில தோலர் சொல்லுவார், நீங்க கொடியை ஏத்தி முடிக்குற நேரம் எல்லா ஊரிலேயும் இருக்கிற நம்ம தோலர்கள் கொடியை ஏத்தி முடிச்சிருப்பாங்க.  உங்க தாத்தா காலத்துல இருந்து நீங்க பார்ட்டியில இருக்கறதால தான் உங்களுக்கு இந்த பாக்கியம், சரி கிளம்பறேன், வேலையை முடிச்சவுடனே எனக்கு போன் பண்ணி சாப்பிட்டாச்சுன்னு சங்கேதமா சொல்லுங்க நான் புரிஞ்சிக்குவேன்.”

உடனே அவர் கொடுத்த கொடித்துணிகளையெல்லாம் வண்டியில் வைத்துக்கொண்டு பறந்தான், எல்லா இடத்திலும் கொடிகளை கட்டினான். கடிகாரத்தைப்பார்த்தான் அது 8.15 என்றது, போனை எடுத்து பேசப்போகும் போது நினைவு வந்தது, அந்த ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்குல கட்டவே இல்லையே !!! வண்டியை ஸ்டார்ட் செய்தான், பெட்ரோல் இல்லை,

வண்டியை தள்ளி விட்டு ஓடினான், ஒரு மைல் தூரத்தை 20 நிமிடத்தில் ஓடி வந்திருந்தான் மணி  8.40 என்றது. காலையில்சங்கும் ஊதவில்லை, சேவல்களும் கூவாததால் யாரும் எழ வில்லை. பெட்ரோல் பங்கில் கொடியை கட்டிவிட்டு இறங்கினான். பல சிராய்ப்புக்கள் உடலெங்கும், ஓடிவந்ததன் காரணமாம நெஞ்சு அடைத்தது. மாசெக்கு போன்  செய்யணுமே. மணி 8.45 என்றது.

நாம் போன் செய்ய வில்லை என்றால் ஒரு வேளை புரட்சி டிக்ளேர் செய்யப்படாமல் போய்விடுமோ? அந்த என்ணம் அவன் உடம்புக்குள் சக்தியை கொடுத்தது, ஒரு தேஜஸ் அவனுள் இறங்கியது போலிருந்தது, ஒரு வேளை இதுதான் “வர்க்கதேஜஸ்”ஆக இருக்குமோ? போன் செய்து சொன்னான். எதிர் முனையில் “என்ன தோலர் இவ்வளவு லேட்டாசொல்லுறீங்க, 5 நிமிசம் லேட்டாயிருந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா? புரட்சி பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போயிருக்கும் , எனக்கு உங்க கிட்ட ஓரியாட நேரம் இல்லை சங்கூதறவனுக்கு போன் செஞ்சு சொல்லிடுறேன், சீக்கிறம் வீட்டுக்கு போய் டிவியைப்போடுங்க”என்றார்.

மாணிக்கம் ஓடினான் ” மணி 8.59 என்றது வீட்டில் , அதற்குள் சங்கூதி முடித்திருக்க, மக்கள் எல்லாம்
பதறியடித்துக்கொண்டி எழுந்திருந்தார்கள். அவர்கள் திரும்பிய பக்கமெல்லாம் சிவப்பு கொடியாயிருக்க, அவர்களுக்குபுரியவில்லை. எல்லோரும் டிவியப் போட்ட நேரத்தில் மாணிக்கமும் போட்டிருந்தான். சன் டிவியில் ப்ளாஷ் நியூஸ் ஓடியது “புரட்சி நடந்து முடிந்தது சிபிஐ கட்சி தமிழகத்தை கைப்பற்றியது, தோலர் பாண்டியின் உரை பின்னும் சிறிது நேரத்தில்ஒளிப்பப்படும்”

தோலர் பாண்டி டிவியில் தோன்றினார். அவர் சிவப்பு நிறம் கொண்ட சட்டை, சிவப்பு பேண்ட், ராணுவ
வீரனைப்போல உடை யணிந்து மார்பில் பல பதக்கங்களை அணிந்திருந்தார்.டிவியில் பேச ஆரம்பித்தார் பாண்டி ” நில மீட்பு போராட்டம் என்ற பெயரில் புரட்சி நடந்து முடிந்து விட்டது, பொதுமக்களும்
தோலர்களும் எல்லோரும் இதை கொண்டாட வேண்டும் இது உங்களுக்கான புரட்சி. நேற்று இரவு 10 மணிக்கு முன்னாள்முதல்வர் கலைஞரும் பின்னர் 12 மணிக்கு அம்மாவும், 1 மணிக்கு மன்மோகன், அத்வானி, சோனியா என எத்தனையோ
பேர்சொல்லியும் நான் கேட்கவில்லை, காரணம் என் உள்மனது என்னை வழி நடத்தியது, நேற்று முன் தினம் மத்திய கமிட்டி ஆவிஆரதா மூலமாக ரணதிவேயிடம் குறி கேட்கப்பட்டது, அவரும் இன்று புரட்சிக்கான நாளை குறித்தார். ஆயிரம் தடைகள்
வந்தாலும் புரட்சிக்கான சரியான நாளை தேர்வு செய்பவனே புரட்சியின் தலைவன், அவ்விதத்தில் நான் புரட்சியின் தலைவனாகிறேன்.

அதிகாலை இரண்டு மணிக்கு வேறு வழியின்றி அனைத்துக்கட்சி தலைவர்களும் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலையை நமது கட்சி உருவாக்கியது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, கடைசியாக சிபிஎம் போன்ற அனைத்து கட்சி MLAக்களும் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து தங்களை சிபிஐ கட்சியில்  இணைத்துக்கொண்டனர், மேலும் கடவுளின் அனுக்கிரகம் போல சில சம்பவங்கள் நடந்தன.கலைஞர், புரட்சித்தலைவி, ராமதாசு, திருமாவளவன், வரதுக்குட்டி,புரட்சிக்கலைஞர், வாண்டையார், பச்சமுத்து உடையார், பெஸ்ட் ராமசாமி, தனியரசு, கிருஷ்ணசாமி ஆகிய அனைத்துக்கட்சி

தலைவர்களும், நமீதா, குஷ்பூ, மனோரமா, ரஜினி, விஜய், ஆர்யா, சூர்யா போன்ற முன்னணி நடிக நடிகையர்களும் தங்களை சிபிஐயில் இணைத்துக் கொண்டனர், இது நடந்தது அதிகாலை மூன்று மணிக்கு. பின்னர் புரட்சியின் திட்டப்படி அதிகாலையில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்கு அவர்கள் காலை 8.50 வரை உறங்கவைக்கப்பட்டார்கள், அவர்கள் காலையில் நல்ல செய்தியை கேட்க வேண்டுமென்பதற்காகவே. தற்போது ஆளுனர் மாளிகையை நோக்கி ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர செல்லப்போகிறோம்.”

மாணிக்கத்துக்கு அடடா நேத்துதான புரட்சி வராதான்னு யோசிச்சோம், இன்னைக்கே வந்துடுச்சே, அதுக்குள்ளே முடிஞ்சு போச்சே, புரட்சிக்கு முக்கியமான காரணமே நாம ஏத்துன கொடிதான், 5 நிமிசம் லேட்டாயிருந்தாலும் என்னா ஆயிருக்கும்.சன் டிவியில் சிறப்பு செய்திகள் போட்டார்கள் “வணக்கம்” “முக்கிய செய்திகள்…………….. புரட்சி நடந்து முடிந்தது, பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் பாண்டியை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைத்ததை அடுத்து, தமிழக முதல்வராக தோலர்பாண்டி பதவியேற்பு, கம்யுனிசம் முறைப்படி மலர்ந்ததாக அறிவிப்பு……………………… நிதித்துறை அமைச்சராக கலைஞரும், போலீஸ்துறை அமைச்சராக அழகிரியும், திரைப்பட நல்வாழ்வுத்துறை அமைச்சராகசெயலலிதாவும், போக்குவரத்து துறை அமைச்சராக விஜய காந்தும், இளைஞர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இளையதளபதி விஜயும் முதல் கட்டமாக பதவி யேற்றனர். மேலும் பொதுத்துறை சீரமைப்பிற்கான அமைச்சர் பதவி புதியதாக ஏற்படுத்தப்பட்டு அது  பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு தரப்படும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.”

மாணிக்கத்துக்கு தன்னை நம்பவே முடியவில்லை. ஆகா புரட்சி நடந்து முடிஞ்சுடுச்சே, அந்த கருமாந்திரம் புடிச்சவெள்ளையன் எங்க போனான் தெரியலையே? சரி அவனை தேடுறது இருக்கட்டும். காலையில சீக்கிரமே எழுந்தாச்சு,புரட்சிக்காக இவன் பட்ட பாடு கொஞ்சமா என்ன எத்தனை கம்பங்களில் ஏறி சிராய்ப்புக்காயங்களுடன், ரொம்பவேகளைத்துப்போய்விட்டான், கொஞ்ச நேரம் படுக்கலாம் என்றவாறு படுத்தான்.

ஒரே அழுகை சத்தம், மாணிக்கத்தின் 6 வயது மகள் “புரட்சி” வீறிட்டு அழுது கொண்டிருந்தாள். மாணிக்கம் கண்ணை விழித்தான். சுற்றியும் பார்த்தான், அவன் கட்டிய சிவப்புக்கொடிகளை காணவில்லை, அட ! எங்க போச்சு தெரியலையே ? பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தான்.  சமையல் செய்து கொண்டிருந்த அவன் மனைவி “ஏ மாமா புத்தி கீது கெட்டுப்போச்சா உனக்கு இப்புடி முழிக்குற! புள்ள அழுவுதே என்னன்னு பாக்கமாட்ட” என்றாள்.  மாணிக்கத்தின் முதல் மகன் ட்ராட்ஸ்கி பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

புரட்சியை இந்த புரட்சி கெடுத்துடுச்சே!!!!!!!!. கவலையோடு அவன் புரட்சியை தூக்கினான்.  அடச்சே இது கனவா?  அடச்சே இது கனவா? அவனுக்கு அவனே பதில் சொன்னான் “கனவாயிருந்தது  நனவானா எப்பூடி இருக்கும் ? ”  சப்பு கொட்டியபடி பல் விளக்க சென்றான்.

” இது கூட புரட்சி தானே?, பின்ன கனவில புரட்சிய சாதிச்சதை பாராட்டுனுமா இல்லையா ? எங்க எல்லாரும் கியூவுல நின்னு புரட்சிக்கு வாழ்த்து சொல்லுங்க பார்ப்போம்

அரிவாள் கதிரிருக்க பயமேன்………..கவிதைகள்

செப்ரெம்பர் 27, 2010

சொக்கும் கண்களை
நிறுத்துகிறது எனது வர்க்க உணர்வு

அடுத்த தேர்தலில்
ஒரு சீட்டாவது அதிகம் வாங்க
துடிக்கும் மனதே கேள் ! கலங்காதே
புரட்சி என்பது நாளை அல்ல – இதோ
இதுதான்
சாதிவெறியெனன,
செயாவின் அல்லக்கையென  தூற்றப்படலாம்

கலங்காதே மனமே!

புரட்சி ஒன்றே தீர்வு

விஜய்யின் உண்ணாவிரதாமாயினும்
விசயகாந்தின் அரசியல் பிரவேசமாயினும்
அம்மாவின் ஆணையிலும்
கருணாவின் பார்வையிலும் இல்லையா புரட்சி

போராட்டம் …………….அது நமக்கு மட்டும்தான் சொந்தம்
யார் செய்தாலும்  எங்கு செய்தாலும்
அந்த போராட்டம், அந்த புரட்சியின்
விதை நம்மால் மட்டுந்தான் தூவப்பட்டது
மனதில் வை

சாந்தம் கொள் மனமே
சஞ்சலப்படாதே
அறிவால் வெல் உலகை
அரிவாள் கதிரிருக்க பயமேன்

கண்டிப்பாய் வருவீர்களா தோழரே? புதுவையில் போர்க்கோலம்

மே 4, 2010

கண்டிப்பாய் வருவீர்களா தோழரே?
புதுவையில் போர்க்கோலம்

இந்த முறையும் மே 1க்கு கலந்து கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாயிருந்தேன். முதல் நாள் விழுப்புரத்தில் ஒரு வேலை விசயமாக நண்பரின் இல்லத்தில் தங்கி விட்டேன். மே 1 காலை 10.30 மணிக்கு கிளம்பினேன்.   காலை 10.30 மணியையைப்போலவே இல்லை. இரவெல்லாம் மழை. விழுப்புரம் பேருந்து நிலையம் கூட்டமின்றி வெறிச்சோடிக்கிடக்க, பேருந்திற்காக காத்திருந்தேன் வரிசையாய் தனியார் பேருந்துகள். அரை மணி நேரம் கழித்து வந்த அரசுப்பேருந்தில் ஏறினேன். வெளியூர் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்களை போராட்டங்களில் மட்டும் தான் பார்க்க முடிகிறது.

கடைசியாய் நாங்கள் தோழர் பசந்தா கருத்தரங்கில் பார்த்ததுதான். அப்புறம் வாய்ப்பே இல்லை. ஒவ்வொருமுறை வாய்ப்பு கிடைக்கும் போதும்  எப்படி இருக்கீங்க என்பதில் தொடங்கி, சுவையான நிகழ்வுகள் என போய்க்கொண்டு இருக்கும்.  இம்முறை முக்கியமாக அங்காடித்தெருவைப் பற்றி பேசலாம் என எண்ணியிருந்தேன். பேருந்து விழுப்புரம் டவுனை கடக்கும் போது ஒரு கண் கொள்ளாக்காட்சியைப் பார்த்தேன்.

சிஐடியூ தோலர்கள் கும்பலாக பேனர் பிடித்தபடி பேரணியில் சென்று கொண்டிருக்க, முன்னே பேண்ட் வாத்தியம் சென்று கொண்டிருந்தது. சினிமாப் பாட்டுக்கு தாளம் தப்பாமல் அடித்துக்கொண்டிருக்க, சிஐடியுவோ அதில் வர்க்கப்பார்வையை தேடிக்கொண்டிருந்தது. புதுவையை அடைந்தேன் மணி 12 ஆனது. பேருந்து நிலையத்தில் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அமைதியாய் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்தேன்.

நண்பர்கள் இருவருக்கும் போன் செய்து கேட்டேன் இருவரும் ஒரே மாதிரி சொன்னார்கள் லேட் ஆயிடுச்சு, எப்புடியும் 3 மணி ஆயிடும். சரி என்ன பண்ணலாம் என்று யோசித்தபடியே  அருகிலிருந்த நபரிடம் பேச்சுக்கொடுக்க, புதுவையில் பீச் இருப்பது தெரிந்தது. சரி பீச்சுக்குத்தான் நடந்து போவோமே என்று கிளம்பினேன். வேடிக்கைப்பார்ப்பதற்கு அல்ல, நேரம் கடக்க ஒரு வழி.

பேருந்து நிலையம் விட்டு நேராய் போய்க்கொண்டிருந்தேன், யாரையும் கேட்க வில்லை, ஆங்காங்கே போர்டுகள்பல்லைக்காட்டின” பீச்-க்கு செல்லும் வழி”. செல்லும் வழியில் தெருக்களின் பெயர்களைப்பார்த்தேன். முதலில் தமிழ், பின்பு ஆங்கிலம், பின்னர் பிரெஞ்சு என மும்மொழிகளில் இருந்தன. காலனியின் எச்சங்கள் பெருமையாய் படர்ந்திருந்தன.கடற்கரைக்கென செல்லும் அந்த பிரத்யேகமான அந்த சாலைதான் மினிஸ்டர் ரெசிடென்சியல் ஏரியாவாம். பல புதிய கட்டிடங்கள் கூட பிரெஞ்சுமுறையில் இருந்தன.
அமைதியாக இருந்தது. பீச்சை நெருங்கிய போது மற்றொரு கிளைச்சாலையில் ஏதோ கூட்டமாய் இருந்தது.

நெருங்கிபார்த்தேன் அது சினிமா பட சூட்டிங், கொரியாகாரர் போல இருந்த அந்த ஸ்டண்ட் மாஸ்டர் சண்டைகாட்சிகளை தெளிவான தமிழில் இயக்கிக்கொண்டிருந்தார். சூட்டிங்கை பார்த்தேன் ஒரு ஆம்புலன்ஸ் போன்ற வண்டி அதில் சில முகமூடி அணிந்த நபர்கள் , வெயிலில் துணை நடிகர்கள் பைக்கில் நால்வர், எங்கடா  நாயகனைக்காணவில்லைஎன்று தேடியபோது ஜீவா வந்தார். மற்ற துணை நடிகர்களெல்லாம் வெயிலில் நனைந்து வியர்வையில் ஊறிப்போயிருக்க. ஜீவா செயற்கையாக ஒரு டப்பாவிலிருந்து வியர்வையை தெளித்துக்கொண்டிருந்தார்.

பார்த்தால் உண்மையான வியர்வைவிட ஜீவாவின் மேல் போடப்பட்ட வியர்வை அதிகமாய் இருந்தது,எப்போதும் போலிகள் தான உண்மைகளைத் தின்கின்றன. அங்கிருந்து கிளம்பி கடற்கரைக்கு சென்றேன், அம்பேத்கார் மணி மண்டபம் இருந்தது. கடற்கரையை இரண்டு ரவுண்ட் சுற்றினே. பிரெஞ்சுகாரர்கள் பலர் அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நம்மவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் நினைத்தேன் “அவனோட ஊர்ல போய் என்னன்னு சொல்லுவான், நம்ம காலனி நாட்டுக்கு போய்ட்டு வந்தேன்னு சொல்லுவானா”

மீண்டும் கிளம்பினேன். வரும் வழியில் கம்பன் அரங்கத்தில் விழாவாம், கவர்னர், முதல்வர், எல்லா அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்களாம். இன்றுதான் திறக்கப்படப்போகிறதாம். அதைக்கடக்கும் போது ஒருவர்என்னிடம் கேட்டார்”இன்னைக்கு திறக்கப் போறாங்களாமா?”   “ஆமா இன்னிக்கே போயிடுங்க அப்புறம் உடமாட்டாங்க” என்ற படியே கிளம்பினேன். ஆபாசக்கவிஞனுக்கு கோடிக்கணக்கில் அரங்கம், உழைக்கும் மக்களுக்கோ பட்டை நாமம்.

மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்தேன். எதிர்பார்த்த நண்பர்கள் வந்து சேர , பேருந்து நிலையத்தில் திரும்பியபக்கமெல்லாம் சிவப்பு நிறமாயிருக்க, நண்பர்களோடு  பேசிக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. பசித்தது, எந்த ஹோட்டலிலும் சாப்பாடு இல்லை, இறுதியாக
ஒரு ஹோட்டலில் நுழைந்து ஆளுக்கொரு தோசை சொன்னோம், சாப்பிட ஆரம்பித்த வேளையில் பறைசத்தம் கேட்டது. அப்படியே விட்டுவிட்டு கிளம்பினோம்.

தோழர்கள் பறையடித்தவாறே இருக்க, மற்ற தோழர்கள் பேருந்து நிலையத்தில் இரு பக்கங்களையும் முற்றுகையிட்டு  முழக்கமிட்டனர். சுமார் 20 நிமிடம் கழித்து ஒருபக்கத்தை மட்டும் விட்டு மற்ற பக்கத்தை முற்றுகையிட்டு  தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசு பொறுமையாய் வந்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை போலும். அனைத்து பேருந்துகளும் முடங்கிப்போயின.

தோழரின் மைக்கைப் பிடுங்கினார் ஒரு  அதிகாரி,  மைக்கிலிருந்து முழக்கம் வருகிறதென்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது அந்த மெத்தப்படித்தவர். தோழர்கள் தங்கள் போர்க்குரலைத்தொடர
கடுமையான டிராபிக் ஜாம். தோழர்கள் பேருந்து போக்குவரத்தை வரிசைப்படுத்தினர். போலீசு வேடிக்கைப்பார்த்தது. கைது செய்ய வரும் வேனை தோழர்கள் டிராபிக் ஜாமிலிருந்து மீட்டு முன்னே கொண்டு வந்தனர். (என்னன்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்குது !!!!!)

நடுவில் ஒரு சீபீஎம் கொடி கட்டிய ஆட்டோ வந்தது அதில் எம்ஜியார்படத்து வர்க்கப்பாடல்களை ஒலிபரப்பியபடி சென்றார் ஒரு தோலர்.அவர் பார்வையில் அவர் வர்க்கப்போராட்டத்தை சினிமாப்பாட்டுக்கள் மூலம் நடத்திக்கொண்டிருந்தார்.

போலீசின் வண்டிகள் வரிசையாய் நிரம்பின, அவர்களிடம் போதிய வண்டிகள் இல்லை. தனியார் பேருந்துகளை கொண்டு வந்தனர். ஒவ்வொரு பேருந்துக்கும் அளவுக்கு ஏற்ற தோழர்களை தோழர்களே ஒழுங்கமைத்துக் கொண்டு வண்டியில் ஏறினர்.சீறிய முழக்கம் ஆளும் வர்க்கத்தின் காதை கண்டிப்பாய் கிழித்திருக்கும்.   இப்போது கலைக்குழு தோழர்களிடமிருந்து பறை  வேறு  தோழர்களிடமிருந்தது.

அவர்கள் ஆரம்பித்தார்கள். அந்த இசை இறுதிவரை குறையவே இல்லை. அதிலும் மிகவும் ஒரு குட்டித்தோழர் ஆர்வமாக பறையடித்தார். அவரைபார்க்க எனக்குப் பொறாமையாக இருந்தது. இந்த வயதில் நான் என்ன செய்திருப்பேன் என நினைத்தேன்” விளையாடவும் வயிறு முட்டத்தின்னவும் தவிர எதுவும் நினைவில் இல்லை ” வெட்கம் பிடுங்கித்தின்றது.

உன் விரல்களில்  இன்னும்
உரமேற்று  தோழனே
மரத்துப்போன எங்கள்
அடிமைத்தோல்களை
அடித்துக் கிழி

காவல் வண்டியில் ஏற்றவே 6 மணிக்குமேல் ஆனது. தோழர்கள் காவல் பயிற்சிப்பள்ளியில் வைக்கப்பட்டார்கள். அங்கேயே பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சியாவும் நடந்தேறியது. 8 மணிக்கு போலீசு விடுதலை செய்தது நாங்கள் கிளம்பினோம், ஆளுக்கொரு திசையாய். மறுபடியும் அடுத்த போராட்டத்தில் தானே பார்க்க முடியும்.

மீண்டும் பேருந்தில் ஏறிசென்ற போது வழியில்  பல சிஐடியூ போர்டுகளுக்கு சந்தனம் பொட்டு வைத்திருந்தார்கள். பூசையெல்லாம் காலையிலேயே முடிந்திருக்கும் போல.அதிமுக  மேதின விழா சாலையில் நடந்து கொண்டிருந்தது. தோலர் குண்டு கல்யாணம் பேசிக்கொண்டிருந்தார். அவர் என்ன பேசுவார் தொழிலாளர் உரிமைகள் செயாவின் சுருக்குப்பையில் இருப்பதை விளக்குவார். ஒருவகையில் புதுவையின் இப்போராட்டம் ஒரு தொடக்கமே. “நம்முடைய ஆயுதத்தை எதிரி தான் தீர்மானிக்கிறான்”

உண்மைதான் புதுவையிலிருந்து 4 கி.மீ தள்ளி உள்ள இடத்தில்  பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தந்திருந்தால் இவ்வளவு சிரமம் போலீசுக்கே இருந்திருக்காது.  பாசிசம் எவ்வளவு கொடூரமானதாயிருந்தாலும் அது முட்டாள்தனமானது. ஆசான் மார்க்ஸ் சொன்னாரே “முதலாளித்துவம் தன் புதைகுழியை தானே தோண்டிக்கொள்கிறதென்று” எத்துணை உண்மை. இந்த முட்டாள் பாசிசம் தானே நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை தீர்மானித்தது. அது இதனால் எதை மூடி மறைக்க நினைத்ததோ அது தானாய் வெடித்து விட்டதல்லவா,   “மகிழ்ச்சி என்பது போராட்டமே”, இனி போராட்டங்களை மகிழ்ச்சியாய் தொடர்வோம்.
அடுத்தப்போராட்டத்தில் அந்த குட்டித்தோழரை பார்ப்பதற்கு ஆவலாயிருக்கிறேன். கண்டிப்பாய் வருவீர்களா தோழரே? இன்னமும் எங்கள் தோல்கள் கிழிக்கப்படவில்லையே.





1.ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் போராட்டம் – படங்கள் !!

2.ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம் ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!

செருப்புகள் காத்திருக்கின்றன……

ஏப்ரல் 10, 2009
செருப்புகள் காத்திருக்கின்றன……
என்ன செய்வது தெரியவில்லை
கலைஞருக்கோ எதுவும் புரியவில்லை
காண்பது கனவா இல்லை நனவா?
பசிக்கு போன் போட்டு
நிஜம்தானென புலம்புகிறார்
விசியும் சொல்கிறார்
“வருந்ததக்கது,கண்டிக்கத்தக்கது”……

ஈராக்கில் அடித்தார்கள்
பிரான்ஸில் அடித்தார்கள்
இந்தியாவிலும் அடிப்பார்களா?
பசிக்கு விழுந்த செருப்படியின்
வடுக்கள் கலைஞரிடத்தில் தெரிக்கிறது……

செருப்பாலடித்தும்
கலங்காமல் உட்கார்ந்திருந்தாராம்
பொறுமையினை
காத்தாராம் தீட்டுகிறது
தலையங்கம் தினமணி
செருப்புக்களின் தேவை முடிந்துவிடப்போவதில்லை……

பத்திரிக்கையாளர் கண்ணியத்தை
காற்றில் விட்டுவிட்டாராம்
மானத்தை விட்டு அடிமையாய்
நக்கிப்பிழைக்கும் கூட்டத்தில்
மனிதனாய் எதிர்த்தானே அவன் வீரன்
நாங்கள் பெருமையாய் சொல்லுவோம்
கண்ணியத்தினை விட்ட மாவீரனென்று……..

யார் காலை  யார் நக்குவது
நக்குவதற்கு போயஸ்தோட்டத்துக்கும்
கோபாலபுரத்துக்குமென
சிறுத்தையும் மாங்காயும்
புலியும் சிங்கமும் அரிவாள் கொண்டையோடு
படையெடுக்க

 
ஈழத்திலோ
ரசாயன எரிகுண்டு
தமிழகத்திலோ
செயாவுக்கு பூச்செண்டு…..

 
“காங்கிரசை புறக்கணிபோம்”
காங்கிரசை புறக்கணித்து
இந்தியச்சாக்கடையில் விழச்சொல்கிறார்கள்
புறக்கணிக்கப்படவேண்டியது
காங்கிரசு மட்டுந்தானா இல்லை இந்தியமா?………..

 

செருப்புகள் காத்திருக்கின்றன
இப்போது தவறவிட்டால்
மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்காது
வாக்கு மழை தேடிவரும் ஓட்டுப்பொறுக்கி
பன்றிகளுக்கு செருப்புமழையை
பரிசாய்த்தருவோம் – பரிசோடு
கொசுறாக  போலி சனனாயகத்துக்கு பாடையும் கட்டுவோம்.

சரணடை … சரணடைந்து விடு

ஏப்ரல் 10, 2009

சரணடையத்தயாராகுங்கள்
கட்டளைகள் பிறக்கின்றன
சரணடை … சரணடைந்து விடு

பிணங்களால் சரணடைய
முடியாது
ஆனால்  சரணடைந்த பிணங்களால்
சொர்க்கத்தில் மலந்தின்று
வாழமுடியும்

கருணா டக்ளஸ் கருணாநிதி
வைகோ ராமதாசி என வரிசைகள்
செல்ல செல்ல
நீண்டு கொண்டே இருக்கின்றன

நாளை சொர்க்கத்தின் கதவுகளை
உடைப்போம் அப்படியே உங்கள்
தலைகளையும்

உயிர் வாழ
ஒரே தீர்வு தான் உழைத்து  வாழ்
கண்டிப்பாய் நீங்கள்
செத்துப்போவீர்கள்

ஏனெனில் உழைப்பைவிட
சாவது  உங்களுக்கு
-நரக வேதனையை தராது

“தேர்தல் பாதை………. திருடர் பாதை! ” – ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

மார்ச் 19, 2009

தேர்தல் பாதை………. திருடர் பாதை! “
ஆனந்த விகடனில் வந்த தோழர் மருதையனின் பேட்டி

maruthaiyan-copy1
” ஓட்டுப்போடாதே புரட்சி செய் ” – மக்கள் கலை இலக்கிய கலகத்தின் புகழ் பெற்ற வாசகம்.உலகமய ,தாராளமய, தனியார்மய எதிர்ப்பை முன் வைத்து தீவிரமாக செயல் படும் ம க இ க ஒவ்வொரு தேர்தலிலும் “ஓட்டு போட வேண்டாம்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறது.  ம க இ க வின் பொதுச்செயலாளர் மருதயைனை சந்தித்தேன்.
மக்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது?

” ஓட்டு அரசியல் என்பது, வேறு மாற்று தெரியாமல், பழக்கமாகிவிட்டதால் பின்பற்றபடும் ஒரு நடைமுறை.பழனிகோயிலுக்கு போகும் பக்தனுக்குக்கூட “முருகனுக்கு மொட்டை போட்டால்  ஏதாவது நல்லது நடக்கும்” என்ற நம்பிக்கை இருக்கிறது. வாக்காளனுக்கோ அந்த நம்பிக்கை கூட கிடையாது. இருந்தாலும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், அது வேறு வழி இல்லாத கையறு நிலை. இன்னொரு வகையில் கருணா நிதி மீதும் செயலலிதா மீதும்  உள்ள கோபத்தை மாற்றி மாற்றி தணித்துக்கொள்ளும் ஆசுவாசம். இது ஒரு புறமிருக்க, அரசியல் வாதிகள் வாக்காளர்களை ஊழல் மயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு திருமங்கலம் இடைத்தேர்தலே அண்மைக்கால சாட்சி.”
வாக்குரிமை என்பது ஓர் அடிப்படை சன நாயக உரிமை தானே?”
” நாங்கள் தேர்தலே தப்பு என சொல்லவில்லை. இது ஒரு போலி ஜன நாயகம் என்கிறோம். ஓட்டு போடும் உரிமை மட்டுமே ஜனநாயகத்தை முழுமை  செய்துவிடாது. அது ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத்தவிர, வேறு எந்த உரிமையை கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை விரும்புவதும் இல்லை, அளிப்பதும் இல்லை. கல்வி,

வேலை, உணவு போல பேச்சுரிமை கூட அடிப்படை உரிமை தான். இந்த  உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது ஜனநாயகமா என்ன?”
அப்படியானால்  என்னதான் உங்கள் மாற்று அரசியல்?”

“இந்தப்போலி ஜன நாயகத்தை அம்பலப்படுத்தி வேறு ஒரு மாற்று பற்றிய நம்பிக்கையைக் கண்டறிவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நாங்கள்”புதிய ஜனநாயகம்” என்ற மாற்றை சொல்கிறோம். அதிலும் தேர்தல் உண்டு . ஆனால் அது “வாக்காளப் பெருமக்களே” என்று அழைக்கின்ற தேர்தலாக இருக்காது. டாடாவையும் டாடாவால் துப்பாக்கி சூடு வாங்கிய  சிங்கூர் விவசாயிகளையும்  சமப்படுத்தி “வாக்காளப் பெருமக்கள்” என்ற ஒரே வரையறையின் கீழ் எப்படி கொண்டு வர முடியும்? சட்டம் இயற்றுவது சட்ட மன்றம் அதை அமல் படுத்துவது அதிகார வர்க்கம் என்ற இப்ப்பொதுள்ள இரட்டை ஆட்சி முறை ஒழித்துக்கட்டப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளே சட்டத்தை அமல் படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாகவும்  இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இந்த உத்திர வாதங்கள் தான் ஜனநாயகத்தை பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக ஆக்கும். அப்படி ஒரு மாற்று தான் ஏற்கனவே ரஷ்யாவிலும் சீனாவிலும் அமலில் இருந்தது

“சோவியத் யூனியன் உடைந்து விட்டது. சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதான் அப்படியானால்?”

“இந்தியாவின் தேர்தல் ஜன நாயகம் மட்டும் வெற்றி அடைந்ததாக சொல்ல முடியுமா என்ன? ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கும் போது  கம்யூனிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மிகச்சாதாரண விசயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு  நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். “அது தோற்று விட்டதே” என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சியடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ , அதைசெய்ய வேண்டும். கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றால், நேபாளத்தில் மட்டும் எப்படி வென்றது? நேபாளத்தில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்பதும் உண்மை”

“தேர்தல் புறக்கணிப்பு ஒரு புறம் இருக்கட்டும்…ஈழப்பிரச்சினை இந்ததேர்தலை எப்படி எதிரொலிக்கும்?”

“இப்போது தேர்தல் களத்தில் இருப்பது இரண்டே அணிகள் தான். ஈழத்தமிழர்களுக்கு எதிரிகள் அணி மற்றும் ஈழத்தமிழர்களுக்கு துரோகிகள் அணி. எனவே, தேர்தல் அரசியலை நம்பி இழ ஆதரவாளர்கள் ஏமாறக்கூடாது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்வது இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தான். நாம்  கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கின்ற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்த்மிழனுக்கு காங்கிரஸ் மட்டும் தான் துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இத்ற்கு முந்தைய பா.ஜ.க ஆட்சியில் யாழ் கோட்டையைபுலிகள் சுற்றி வளைத்த போது , உள்ளே ஏறத்தாழ  20  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கி இருந்தனர். அப்போது, “உடனே புலிகள் முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்திய விமானங்கள் வரும்” என்று வாஜ்பாய் அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. இந்த்யா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்காது!”
” இது ஈழ ஆதரவாளர்களுக்கு தெரியாமலா இருக்கும் ?”

“யாராலும் அதிகம் பேசப்படாத கோணமும் இதில் இருக்கிறது.இந்தியா, இலங்கை தீவை தனது பொருளாதார நலன் சார்ந்தே அணுகுகிறது.இந்திய பெரு முதலாளிகளுக்கு இலங்கை என்பது ஒரு லாபமுள்ள சந்தை.டீ எஸ்டேட், வாகன மார்க்கெட், பெட்ரோல் பங்குகள், எண்ணைக்கிணறுகள்  என இந்தியாவின் அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் இலங்கை ஒரு வர்த்தகச் சந்தை. “இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்த பகுதிகளை சீரமைக்க இந்தியா உதவும் என்று பிரணாப் முகர்ஜி சொன்னதன் பின்னால், இந்தியப்பெருமுதலாளிகளின் நலன் இருக்கிறது. நாளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் இதையே சொல்லும்..இதுதான் இந்திய அரசின் உண்மை முகம்!

இன்னொன்று, ஏதோ இலங்கையில்தான் போர் நடக்கிறது, இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை காஷ்மீரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டு காலமாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சிதான் நடந்து வருகிறது. எந்த ஓர் இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத மக்கள்விரும்பாதபட்சத்தில், அவர்களை அந்நாட்டில் ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. அதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை.இந்த நியாயம்  ஈழத்துக்குமட்டுமல்ல, காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும்”
“இந்திய இறையாண்மை பற்றி இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன.இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?”

“அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங் தான் இப்போது இந்தியாவின் பிரதமர். அவர் படத்தை கொளுத்தினால் தேசியப்பாதுகாப்பு சட்டம் பாயும் என்று கருணாநிதி சொல்வது எவ்வள்வு அபத்தம். ஒரு கருத்தினை தெரிவிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு நாட்டில் ஜன நாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதை போல ஒரு கேலிக்கூத்து வேற் எதுவும் இல்லை. அதனால் தான் மீண்டும்

வலியுறுத்திச் சொல்கிறோம் “தேர்தல் பாதை………. திருடர் பாதை! “

தோழரின் முழுப்பேட்டியையும் காண வினவில்

 

http://vinavu.wordpress.com/2009/03/31/elec0903/

பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்! தளராத போரும் வீழ்த்தப்பட்ட தில்லையும்

பிப்ரவரி 3, 2009
பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்போம்!
தளராத போரும் வீழ்த்தப்பட்ட தில்லையும்thillai-copy
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆறுமுகசாமி எனும் ஒரு கிழவர் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு சிதம்பரம் கோயிலுக்கு நீதிமன்ற அனு மதியுடன் சென்றார் போலீசு பாதுகாப்புடன்,அடுத்த நாள் போலீசு ஸ்டேசனில் வந்து சொன்னார்” பாதுகாப்புக்கு வாங்க!” ” ஏன் சாமி நீதான் நீதி மன்ற ஆணைய வச்சுருக்கியே  தைரியமா போ சாமி” தைரியமாகத்தான் போனார் தேவாரம் பாடி முடிப்பதற்கு முன்னரே தீட்சித பார்ப்பன ரவுடிகளால் அடித்து குற்றுயிரும் குலையுயிருமாக தெருவில் வீசப்பட்டார். சாலையில் இருந்தவர்கள் அவரை  மருத்துவமனையில் சேர்த்தனர் .

பிறப்பால் பார்ப்பனராய் பிறக்காததால்  தான் சந்தித்த கொடுமைகளுக்கு தன்னந்தனியாய் கையளவு நோட்டீசுகளுடன் மக்களிடம் முறையிட்டார் அவர்கள் கூடுமிடங்களில்,பின்னர் மனித உரிமை பாதுகாப்புமையத்தை நாடி  ம.க.இ.க,மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சீறிய முயற்சியால் தற்போது தினமும் அவரின் கடவுளை தமிழால் வழிபடுகிறார்,தீட்சிதப்பார்ப்பனர்களோ  வயிறெரிந்து  சாபமிடுகிறார்கள் ,சாமியார் ஆறுமுக சாமியோ  வெற்றிநடைப்போட்டு  கோயிலுக்கு  வருகிறார்.

கோயிலை இந்து அறனிலையத்துறை அதிகாரி நியமிக்கப்பபட வேண்டும் என்று இன்று வந்த தீர்ப்பால்  தீட்சிதர்களோ  வீட்டுக்கு மூட்டை முடிச்சை கட்டலாமா மேல்முறையீடு செய்யலாமா எனக் காத்திருக்கிறார்கள்.
புதியதாய் இதை படிக்கும் பலருக்கும்  அண்ணாமலை படப்பாணியை நினைவிருக்கலாம்,இந்த நீண்ட நெடிய வரலாறு  2 மணிநேரத்தில் முடிந்து விடவில்லை,பல்லாண்டுகளாக போராடியது மனித உரிமை பாதுகாப்புமையம் , ம க ,இ க அதன் தோழமை அமைப்புகள்,

முதலில்  மனித உரிமை பாதுகாப்புமையம்  உள்ளூரில் உள்ள சனனாய சக்திகளை திரட்டியது,ஆரம்பத்தில் ஆகா ஓகோ என முண்டியடித்து வந்தவர்களெல்லாம் நேரம் ஆக ஆக ஒவ்வொருவராய் கழண்டு போனார்கள்.அதிலும் முக்கியமாக முதல் கூட்டத்தில் சீபீஎம் மட்டும்தான் இதை சாதிக்கும் என பேஇய அக்கட்சியின் மா செ அடுத்த மீட்டிங் முதல் தாங்கள் விலகுவதாக அறிவித்தார் . கேட்டதற்கு சொன்னார்கள் நீங்கள் “பார்ப்பனர்கள் என்று பிராமணர்களை திட்டுகிறீர்கள்” அன்று பார்ப்பான் என்று சொன்னதால் ஓடிப்போன சூரப்புலிகள்  தான்  இன்று ம க இ க வை பார்ப்பனீயம் என அழைக்கிறார்கள்,

பிறகு சிதம்பரத்தில் ஆறுமுக சாமி தேவாரம் பாடுவது தொடர்பாக  வழக்கு நடைப்பெற்றது,அதற்கு  திர்ப்பு வழங்கிய அம்பேத்கார்”ஆறுமுக சாமி தமிழில் பாட நிரந்தர தடை விதித்தார்,மேலும் இவர்கள் நுழைந்தால்  கோயில் நகைகள் திருடு போக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்”
ஒன்றல்ல ரெண்டல்ல எத்தனை வாய்தாக்கள்  எத்தனை துரோகிகள்  துவளவில்லை மனித உரிமை பாதுகாப்புமையம்.தொடர்ந்து போராடினார்கள்.சாதித்து விட்டார்கள், மக இ க ,பு மா இ மு, பு ஜ தொ மு, ஆகிய அமைப்புகள் மக்களிடையே  வழக்கினை கொண்டு சென்றன.முதல் கட்டமாக தமிழ் நுழைந்தது,  அந்த தமிழ் நுழைவதற்குதான் மாபெரும் போர் நடத்த வேண்டியிருந்தது..அவ்வரலாறை சொல்லுவதற்கு ஆயிரம் பக்காங்கள் போதாது .

அக்கோயிலில் நடந்த கொள்ளை பற்றியும் கொலை பற்றியும் விசாரிக்க வழக்கு தொடர்ந்தது மனித உரிமை பாதுகாப்புமையம்.இன்று (திங்கள்) கோயி லை அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கோரும் மனு மீது நீதிபதி கீழ்க்கண்ட வாறு தீர்ப்பளித்திருக்கிறார்”

 

 

இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்

 

 

ஆயிரமாண்டுகளாக வெல்லப்படாத அந்த பார்ப்பன கோட்டை வீழ்த்தப்பட்டு விட்டது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீட்சிதர்களால் சிறைபிடிக்கப்பட்ட நடராசன்  விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார் நாத்திகர்களால்,

சோவின் மொழியில் சொன்னால் “நக்சலைட்டுகளால்”. தினமும் பார்ப்பனர்களின்  குறட்டை சத்தத்தால் தூங்காத நடராசன்  நிம்மதியாய் தூங்கப்போகிறான். .நாளையே மீண்டும் ஏதாவது உத்தரவினை காட்டி மீண்டும் நடராசனை கைப்பற்றலாம் தீட்சிதர்கள் ,பார்ப்பன தீட்சிதர்களோ கோயிலை விட்டு வெளியேற்றப்படவில்லை ,திங்கள் இரவு 11.30க்கு அதிகாரி வந்து கோயிலை பூட்டிவிட்டு  செவ்வாய் கிழமை காலை 7.30க்கு கோயிலை திறக்கிறார்.இத்தனை காலம் நாம் போராடியது அரசு வாட்சுமேனை நியமிப்பதற்காகவா.

பார்ப்பனர்களோ திமிராய் இருக்கிறார்கள் மேல் முறையீடு செஞ்சு வந்துடுவோம் என்று.இதுவல்ல முழு வெற்றி எப்ப்போது பார்ப்பன கும்பல்  கோயிலை விட்டு   முற்றாக துடைத்தெறியப்படுகின்றதோ  அதுதான்   “தில்லை தீட்சிதர் சொத்தல்ல” எனும் முழக்கம்  வெற்றிபெற்றதாய்  அறிவிக்கப்படும். நந்தனுக்காக போடப்பட்ட சுவர் தூள் தூளக்கப்பட வேண்டும்.தீண்டாமை அறவே அழிக்கப்படவேண்டும்.தமிழ் நுழைய போரினை நடத்திய புரட்சிகர அமைப்புகளால் தில்லை நடராசனை  நிம்மதியாய் தூங்க வைக்க முடியாதா என்ன?

இந்த வெற்றிக்கு முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள பிரசுரத்தை தேவை கருதி இங்கே பதிவுக்கு…..

http://vinavu.wordpress.com/2009/02/02/thillai1/

சுடாத நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்

ஜனவரி 30, 2009

சுடாத  நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்

neru-copy

நேற்று காலை சுமார் 11 மணியளவில்  முத்துக்குமார் எனும் இளைஞர் தன் உடலில் தானே தீயை வைத்துகொண்டார்.ஈழத்திலே கொத்து கொத்தாய் மக்கள் செத்துக்கொண்டிருக்கும் போது தன்னால் மட்டும் எப்படி இவ்வுயிரை கையில்  வைத்திருக்க முடியும்  என்ற படி செத்து விட்டார் அவ்விளைஞர், அவர் நமக்கு கோடிட்டு காட்டிய செய்தி ஈழத்தமிழர்  தினமும் சிங்கள ஓநாய்களால் கொல்லப்படுகிறார்கள் என்பதும் ,செம்மணி புதையல் போல பல புதையல் கள் வெளிவர இருக்கின்றன என்பது மட்டுமல்ல,வேறொரு முக்கிய செய்தியும் இருக்கிறது.”ஆமா இலங்கையில குண்டு போட்டுட்டாங்க என்ன பணறது  நேரமாச்சு  \கோலங்கள் வையுடா” என  பூச்சாண்டிகள் பலருக்கும் தான் செத்தாலாவது மானம் வருமா என உயிரை விட்டார் முத்துக்குமார், ஆனால் மானம் வந்த பாடில்லை.

ஒரு மனிதன் தனது கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காக,தமிழர்களுக்கு சொரணை கொடுப்பதற்காக தன் உயிரை கொடுத்தாக வேண்டிய கட்டத்தில் தள்ளப்பட்டிருக்கிறான்.உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன,இவற்றுக்கு சளைக்காமல் திரையரங்குகளில் படங்களோ  வெற்றிகளை குவித்து ஓடிக்கொண்டிருக்கின்றன .டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது,மெரினாவில்  சுற்றிபார்க்க வருபவர்களும்,தீம் பார்க்கில் கூத்தடிக்க போவோரின் எண்ணிக்கையும்  குறையவில்லை.தங்க கடற்கரையில் சிலு சிலு காத்து வாங்க கூட்டமோ முண்டியடிக்கிறது.

செத்துப்போன முத்துக்குமார் மட்டுமல்ல தாளமுத்து நடராசன் போன்றோரும் சும்மா சாகவில்லை,சும்மா தான் செத்துப்போனதாக இன்றைய பொடுசுகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன, முத்துக்குமாரின் மரண வாக்கு மூலத்தை படித்துப்பாருங்கள்.எவ்வளவு சிந்திருத்திருந்தால் அப்படி ஒரு கடிததை எழுத முடியும்.பலரு சொல்வதுண்டு தற்கொலை ஒரு முட்டாள் தனம் .

ஆனால் ஒரு தற்கொலை ஒட்டு மொத்த தமிழகத்தை அவமானத்தால் கூனிகுறுக வைத்திருக்கிறது,அமைப்புகள் நடத்தும் கூட்டத்துக்கு  10,20 என நன்கொடை வழங்கிவிட்டு நானும் ஈழத்தமிழனின் துக்கத்தில் பங்கு கொண்டேன் என கண்ணை கசக்குவதால் கிடைத்திடுமா விடுதலை,ஈழத்தமிழனின் சாவுச்செய்திகளோடு நடிகையின் படுக்க்யறை செய்திகளைகலந்து தந்த பத்திரிக்கைகள் எவ்வித இடையூருமிலாமல் தனது சர்க்குலேசனை உயர்த்திக்கொண்டே போகின்றன . ஈழத்தமிழன் இப்போது பிணமாகிவிட்டான் அவன் விற்பனைக்கு ஒரு நாளுக்கு மேல் உதவமாட்டான்.தனது தன் மானத்தை இழந்து வாழும் மானங்கெட்ட தமிழர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க.

செங்கல் பட்டு சட்டகலூரி,சேலம் சட்டகல்லூரி மாணவர்கள் என சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.மாணவர்களோ தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்,ஏறத்தாழ எல்லா அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழரை காப்பாற்று என முழங்கியாயிற்று..ஆனால் இது ஏன் நடைமுறைக்கு வரவில்லை? இலங்கைக்கு சென்ற பிரணாபோ தனது முழு ஆதரவை தெரிவித்து விட்டார்.கருணவோ முதுகுவலி என்று குப்புறக்கிடக்கிறார்,மத்திய அரசோ மிக வருத்தத்துடன்  கவனிக்கிறது,னம் செஇதிகளை வருத்ததுடன் கவனிக்கும்  அதே கண்கள் தான் சிங்கள வெறியன்  ஈழத்தாய்மார்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும் போதும் ரசிக்கின்றன.

இந்த நிலையில் நம்முடைய போராட்டங்கள் எப்படி இருக்கின்றன.இன்னும் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் அதுவும் “இந்திய அரசே தலையிடு”. வெங்கட்ராமன் செத்துப்போனதற்கு ஒரு வாரம் துக்கம்  கொண்ட மத்திய அரசு  கொத்து கொத்தாய்  கொல்லப்படும் தமிழர்களின் பிணங்களை பார்த்து முகத்தை திருப்பிக்கொள்கிறது.நமது போராட்டங்கள் பலனளிக்காததற்கு காரணமே ஈழப்போரின் சூத்திரதாரியை அம்பலப்படுத்தாதே..இந்திய அர்சு ஈழத்தில் தலையிட்டு போரினை நடத்திக்கொண்டிருப்பதால் தால் சிங்களன் கொலைவெறியாட்டம் போட முடிகிறது.
இந்திய அரசை எதிர்க்காத நமது போராட்டங்கள்  ஈழத்தமிழனுக்கு வாய்க்கரிசியாகவே மாறும்.
எந்த ஓட்டு கட்சியும் இந்தியத்தை அம்பலப்படுத்த மாட்டார்கள் ஏனெனில் இவர்கள் தான் இந்த அரசை தூக்கி தாங்கி பிடிப்பவர்கள்,

முன்னரே சொன்னது போல முத்துக்குமார் சொல்லாத முக்கிய செய்தி  எது தெரியுமா ?. இனியும் கெஞ்சி கொண்டிருப்பதால் இந்திய அரசு கேட்காது,காது கேட்காதவன் அல்ல அப்படி நடிப்பவன் அவனுக்கு செவுளில் அறைந்து தான் மருத்துவம் கொடுக்க வேண்டும்.1965 களில் தீவிரமான மக்கள் போராட்டமே இந்தியை செருப்பால் அடித்து துரத்தியது.மத்திய அரசினை உண்ணாவிரதத்துக்கும் ஆர்ப்பாட்டத்தினால் மட்டும் கவனத்தை திருப்ப முடியாது.எப்போது பாதிக்கப்படுகிறானோ அப்போது தான் அவனும் திரும்புவான் .மத்திய அரசு பாதிக்கப்படுமாறு எவ்வித போராட்டமும் இன்னும் துவக்கப்படவில்லை.அப்படி துவக்கப்படுமெனில் அது போராட்டமாகயிராது,போராக மாறும்.

ஆம் போர்
தான் தேவை இப்போது இந்தியை எதிக்க பெரியார் செய்தாரே கிளர்ச்சி  அப்படிப்பட்ட   கலகம் தான் தேவைதானே தவிர கண்ணீர் துளிகளுக்கு இங்கு இடமில்லை.போர் இந்திய தேசியத்துக்கு மட்டமல்ல இன்னும் கிரிக்கெட்ட் பார்த்து பல்லைகாட்டுபவனுக்கும்,தியேட்டர் வாசலில் கால் கடுக்க நிற்பவனுக்கும்,டாஸ்மாக்கில் முதல் ஆளாய் போணி செய்பவர்களுக்கும்,இன்னமும் “மேச ராசி நேயர்களே” என ஊளையிடுபவர்களுக்கும் எதிராகத்தான் தொடங்க வேண்டும்.போரை நம்மிடமிருந்தே தொடங்குவோம். முடிவாய் தெரிவியுங்கள் நீங்கள் யார் பங்காளியா? பகையாளியா?

ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம் ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!

ஜனவரி 28, 2009

ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம்
ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!
eezham-3-copy

சனவரி 26-ம் நாள் மாபெரும் இந்திய சன நாயகம் துரோகத்தை தின்று மென்று  துரோகத்தை குடித்து 60 வயதினை கடந்துவிட்டது.களவாணி காங்கிரசு முதல் போலிகள்வரை குடியரசு தினத்தையோ சுதந்திரதினத்தையோ விமர்சித்ததேயில்லை. அது நாட்டிற்கு ஊறு விளைவிப்பதாகவே கருதப்பட்டது.தந்தை பெரியார் போலிசுதந்திரத்தை கடுமையாக எதிர்த்தார்.ஆனால் போலிகளோ இதுதான் உண்மைசுதந்திரம் என ஒத்து ஊதினர்.அவர்களின் ஒத்து ஊதல் இன்று வரை தொடர்கிறது.வடகிழக்கு மற்றும் காசுமீர் இனப்பிரச்சினையல் இந்திய தேசியத்தை பாதுகாத்தனர்,இசுலாமிய பயங்கரவாத தாக்குதலுக்கு மூலமான பார்ப்பனீயத்தை கண்டிக்காது பார்ப்பன செறிப்பிலே கழிவாகிப்போயினர்.

 

பலரும் நினைக்கலாம் தேவையின்றி போலிகளை ஏன் விமர்சிக்கிறோம் என்று? ஒரு கம்யூனிஸ்டு கட்சியானது தேசிய இனப்பிரச்சினையின் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாதோ அப்படியெல்லாம் நடந்து கொண்டு பாசிச அரசுக்கு வால் பிடித்து இன்று பாசிஸ்டாக பரிணாம வளர்ச்சியச்சியடைந்த போலிகள் இன்று தங்களை கம்யூனிஸ்டாக அறிமுகப்படுத்திகொண்டு திரிகிறார்கள்.ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர்களின் கால்களை தேடி பாண்டி கம்பெனியோ நாக்கை சுழட்டுகிறார்கள்.முன்னெப்போதையும் விட முதலாளித்துவம் சீர்கெட்டு “டவுசர் கிழிந்து” போயிருக்கும் சூழலில் மக்களுக்கான சரியானதலைமையாக புரட்சிகர அமைப்புக்களே உள்ளன. 

கம்யூனிசம் சாகாது அது மக்களின் உழைப்பு ,உயிர்,அப்படி  கம்யூனிசப்பாதையில் செல்லும் புரட்சிக அமைப்புகளான ம க இ க , பு ஜ தொ மு, பு மா இ மு,பெ வி மு, ஆகியவை  போலிகுடியரசு நாளன்று ஈழமக்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசின் பங்காளியான  இந்தியாவை கண்டித்து  நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடந்த சில  இங்கே ,கண்டிப்பாக  பதிக்கப்படவேண்டும். நாளைய வரலாறு உழைக்கும் மக்களால் எழுதப்படும். ஏனெனில் வாய்ச்சொல்வீரர்களான தமிழ்ப்பூச்சாண்டிகள் பலரும் பம்மிப்பதுங்கிய இவ்வேளையில் புரட்சிக அமைப்புகளும் பெரியார்திக போன்ற சில அமைப்புக்கள் மட்டுமே இந்திய தேசியத்தை அம்பலப்படுத்தினர். போலிகம்யூனிஸ்டில் உள்ள தரகர்கள் சாகும் போது இந்திய சுதந்திர போராட்ட வீரர் என்றே குறிக்கிறார்கள்.இப்படி மற்ற ஓட்டு பொறுக்கிகள் போலவே இந்திய அரசின் கைக்கூலிகளாகவே செயல் படும் போலிகம்யூனிஸ்டுகளை வீழ்த்தாது உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை பறித்தெடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த பாசிச அரசினை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல வீழ்த்துவது புரட்சிகர அமைப்புகளாலே மட்டுமே சாத்தியம்.

 

முதுகெலும்பில்லாத கருணாநிதிக்கு முதுகில் வலி வந்து ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,மண்மோகனுக்கு  இதய அடைப்பு ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,பார்ப்பன பன்னாடைகள் இழவு செய்திகள் தான்  தலைப்பு செய்திகளில் வருமே தவிர உழைக்கும் மக்களின் போராட்டம்  தலைப்பு செய்திகளில் மிளிராது என்பது தான் உண்மை. குடியரசு நாளில் செங்கொடிகளால் கிழிக்கப்பட்ட  தேசியத்தை அச்சம்பவத்தை   நேரில் கண்டவர் என்ற முறையில்  பெருமையோடு   பதிக்கிறோம்.

சனவரி-26,காலையில் பனகல் மாளிகை நோக்கி புறப்பட்டோம்.25-ம் தேதி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு  மாநாடு மக்களை தின்னும் முதலாளிகளை அம்பலப்படுத்தியும்  ,அவர்தம் காலில் கிடக்கும் ஐடி அடிமைகளை தொழிலாளியாக மாறக்கோரியும் முழங்கின புரட்சிக அமைப்புக்கள். அடுத்த நாள் ஈழத்தமிழரை கொல்லும் இந்தியஅரசை முறியடிக்ககோரி ஆர்ப்பாட்டம் செய்வதாய் சுவரொட்டிகள் மூலம் 26-ம் தேதி  காலை அறிவித்தன. எங்கள் பகுதியிலிருந்து செல்லும் வழியில் குடியரசின் மாண்பினை தவறாமல் மிட்டாய்கள் மூலமும்,சர்க்கரை பொங்கல் மூலமும் சிலர் நிரூபித்தனர். சாலையில்  வருவோர் போவோரை எல்லாம் கூப்பிட்டு தந்து கொண்டிருந்தனர். சட்டையில்லாத குழந்தைகள் முண்டியடித்து நின்றனர்.அவர்களுக்கு தெரியவில்லை நாம் இப்படி நிற்பதற்கும் அதனை நீட்டிப்பதற்கும் தான் குடியசு தினம் கொண்டாடப்படுகிறதென்று.

ரயிலைப்பிடித்தோம் சைதாப்பேட்டை செல்வதற்காக, எங்களோடு  பயணித்த தின்று கொழுத்த ஊளைச்சதைகள்,அரைகுறை ஆடையோடு  வழக்கம்போல மேய்வதற்காக தேவையான இடம்  நோக்கி சென்று கொண்டிருந்தனர்,மார்பில் தேசியக்கொடியை குத்தியபடி, ஸ்ட்டெசனில் இறங்கினால் கண்ணில் பட்ட பலரும்  தனது தேசபக்த்தியை பறை சாற்றிக்கொண்டிருந்தனர். பனகல் பார்க்குக்கு சென்றோம்.தோழர்கள் வரிசையாய் நிற்க அரை மணி நேரத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது ஆயிரக்கணக்கான போராளிகள் முழக்கமிட்டார்கள்

 

அரசி எதிர்த்து.முழக்கங்கள் தோழர் மருதையன் குரலில்  வெடியாக வெடித்தன.”ஈழத்தில் நடக்குது கொலைவெறியாட்டம் இங்கே என்ன குடியரசு கொண்டாட்டம்” என்ற கேள்வி உண்மையான இந்தியபற்று வைத்திருக்கும் எவரையும் உலுக்கும் ஆனால் காதில் கேட்காதவாறு ஐடி அடிமைகள் பீபீஓ தொண்டுகளும் 19B க்காக காத்திருந்தனர்,தோழர்கள் பலரிடமும் நோட்டீசுகளை கொடுத்தனர்.படித்த மேதாவிகளும் ஐடி அட்மைகள் சிலரும் வான்கிய நோடீசைன் தலைப்பை பார்த்தவுடன் கீழேப்போட்டன.தன்வாழ்க்கையை தவற விட்டவன் ஈழத்தமிழன் உயிரைபற்றி கவலைப்படுவான் என எதிர்பாப்பது கூட தவறுதான் போலும்.
“இலங்கையில் அடிக்கடி மூக்க நுழக்குற ராஜீவு குப்புற கிடந்தத மறந்து போகுறே” என்ற தோழர்களின் பாடல் காங்கிரசு களவாணிகளை அம்பலப்படுத்திய பாடலை பலரும் தங்கள் பேருந்துகளை விட்டுவிட்டுகூட கேட்டனர்.

பத்துக்கும் மேற்பட்ட காவல் வண்டிகள் மூலம் தோழர்களை கைது செய்த்தது காவல் துறை.கடைசி தோழர் ஏறும் வரை முழக்கங்கள் தொடர்ந்து எதிரெலித்தது.
கடைசியால் சென்னை பெ வி மு தோழர்கள்  இந்திய அரசை எதிர்த்து முழங்கினார்கள்.ஒரு தோழர் தன் கைகுழந்தையோடு வண்டியிலேறினார்.என்னருகில் நின்றிருந்த போலீசு அதிகாரி சக காவலரை பார்த்து சொன்னார்”இந்த வயசிலேயே ஜெயிலுக்கு போவுது பாத்தியா ?அந்தக்குழந்தயோட  பார்வை எப்படி இருக்கப்போவுது பாரு?”
ஆம் அந்த புரட்சித்தாய் தன் குழந்தையோடு  புரட்சிகர வாழ்வில் பயணிக்கிறார்.அவர்களின் பார்வை எப்போதும் மக்களுக்கானதாகவே இருக்கும். பெண் தோழர்களின் முழக்கங்கள் அதிர்ந்து கொண்டே இருந்தன.

அதற்கு பதிலளிக்காது காவலர் சொன்னார் ” பெண்களோட வேகத்த பாத்தா இவங்களுக்குன்னே 2025ல தனி forceபோடனும் போல இருக்கு”

இன்னும் எத்தனை படைகள் வந்தாலும் புரட்சியாளர்கள் சோர்ந்து விடப்போவதில்லை.பீனிக்ஸ் பறவையாய் வீறு கொண்டு எழுவார்கள் போரிடுவார்கள் மக்களுக்காக,

அம்முழக்கங்களால்  எக்கட்டிடமும் அசையவில்லை.துரோகத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இவ்வரசின் கட்டிடங்கள்  உடைபடுவதற்கு கலகக்குரல்களின் எண்ணிக்கை ஆயிரமல்ல லட்ச,கோடிகளாக பெருகவேண்டும்,இன்னும் நாம் பார்வையாளராகவே இருந்தால் ஈழத்தில் மட்டுலல்ல இங்கேயும் தமிழினம் மொத்தமாய் அழிக்கப்படும்.ஒப்பாரிகளோ ஈழத்தமிழனின் கதறல்களை பார்த்து கண்ணை கசக்குவது மட்டும் பலன் தராது, ஈழத்தில் போரினை நடத்திக்கொண்டு இரூக்கும் இந்திய அரசினை எதிர்க்காத நமது கண்ணீர்  செத்துக்கொண்டிருக்கும் அம்மக்களை சுட்டெரிக்கவே துணை போகும்.

 

போராட்டவீடியோ காட்சிகள்

நன்றி : வினவு

http://vinavu.wordpress.com/2009/01/29/eelam12/