Posts Tagged ‘கதை’

பொரட்ச்சிசீசீசீ!!!!!!!!

நவம்பர் 8, 2010

பொரட்ச்சிசீசீசீ!!!!!!!!

எல்லாரும் கியூவுல நின்னு புரட்சிக்கு வாழ்த்து சொல்லுங்க பார்ப்போம்

அதோ அங்கே பாருங்கள், வறண்ட , நெடிய கண்மாயில் பெண்கள் எல்லாம் போர் போட்டு குடி நீர் எடுத்துக்கொண்டுஇருக்கிறார்கள். என்னங்க செய்யறது? கண்மாய் வத்திப்போய் பல வருசம் ஆச்சு, ஓட்டு கேக்க வருவானுங்க எப்பயாவது.மண்ணை பொன்னாக்குறேன்ன்னு சொல்லுவான் ஒருத்தன், நாயை பேயாக்குறேன்னு சொல்லுவான் ஒருத்தென் இப்புடியேஎல்லாம் கருமாந்திரம் புடிச்ச பயலுவலும் சொல்லிகிட்டு திரியும் , எங்க தண்ணீ பிரச்சினைய எவனும் தீக்குற மாரி தெரியல.

அன்னக்கி தண்ணி எடுக்க வந்த பெரியாத்தா கூட சொல்லுச்சி “ஏய் மாரியம்மா இந்த பூமிய அழிச்சுப்புடு தாயீ , புதுசா கொண்டா ஆத்தா, நாங்க தெனமும் சாவுறோம் ஆத்தா” கண்ணீர் வுட்டு கதறுச்சி. எல்லாம் இச்சு கொட்டிட்டு போய்ட்டாங்க.

அடச்சே நாம எதுக்கோ வந்துட்டு எதைப்பத்தியோ பேசிகிட்டு இருக்கோம், நாம பேச வந்ததே நம்ம மாணிக்கத்தை பத்திதான், வயசு 35. அவுங்க தாத்தா துரையன் அந்த காலத்துலயே கம்யூனிஸ்டு கட்சியில இருந்தாராம். வெள்ளக்காரன்

காலத்துல துரையன் இருந்த ஜெயில்ல பக்கத்து ரூமிலதான் நல்லக்கண்ணு இருந்தாராம். கட்சி ரெண்டா உடைஞ்சப்பகூட துரையன் நகரலை. ” சாகுற வரைக்கும் தோலர் நல்லக்கண்ணுக்காகத்தான் அவுரு கட்சியிலத்தான் இருப்பேன்“ன்னாரு. அவரு போட்ட சபதத்த  மாணிக்கம் காப்பாத்துறாரு. ஆமா அவரும் சிபிஐ கட்சியிலதான் இருக்குறாரு. அவுங்க அப்பாவுக்கு ஒரு நல்லக்கண்ணுன்னா? மாணிக்கத்துக்கு வானவராயன்தான்.

போன முறை கோயம்புத்தூர் எம்பியா நின்னப்ப மாணிக்கம் செஞ்சவேலை என்ன? மாடாட்டம் வேல செஞ்சான். நாளைக்கு தேர்தல்ன்னா இன்னைக்கு வரைக்கும் தோரணம் கட்டுறதுகொடிபுடிக்குறதுன்னு அவன் தெருவையே கலக்கிப்புட்டான் போங்க.

வானவராயன் செயிச்சவொடனே  மாணிக்கத்த கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தாரு அப்புறம் சொன்னாரு “என்ர மாணிக்கம் இருக்குற வரைக்கும் எனக்கு கவலையே இல்லை” ஆமா அவரு வீடு எங்க இருக்குன்னு தெரியலீங்களே! யாரை கேக்கலாம்………………… அதோ அந்த வெள்ளசீலை ஆயாவை கேக்கலாங்களா ?  “ஆயா இங்க துரையன் பேரன் மாணிக்கம் வீடு எங்க இருக்குதுங்க? ” ” நம்ம மாணிக்கம் வீடா? தா அந்த முக்குல போய் சோத்தாங்கை பக்கம் திரும்புங்க”

அதோ வெளிய கயித்துக்கட்டல்ல  இருக்குறாரே அவருதான் மாணிக்கம். திரைக்கதையெல்லாம் போதும் இனி கதைக்குள்ள போவோம்.

…………………………

……………………………………………………………………………………………………………………………………………………………………..

மாணிக்கத்துக்கு ஒரு சந்தோசமாய் இருந்தது, இருக்காதா என்ன? சிபிஐ மாநில செயலாளர் ” நில மீட்பு போராட்டம்” அறிவிச்சதை பார்த்தவுடனே அப்படி ஒரு சந்தோசம். எல்லா கட்சியும் எப்படியெல்லாம் எங்களை கேவலப்படுத்துனீங்க நாய்ங்களா? வர்ரண்டா டேய்! சிங்கம் மாரி எங்க தோலர் கிளம்பிட்டார்டா………………….. அவன் மனசுக்குள் பல்லாயிரம் வாலா பட்டாசுகள் வெடித்தன. மாணிக்கத்தோட மாமன் வெள்ளையன் பக்கத்து வீடுதான்.

மாமன் வெள்ளையன்  சிபிஎம் கட்சியில இருக்குறாங்க. அவருகிட்ட சோலியா போறப்ப எல்லாம் சிபிஐ கட்சியை குத்தி குத்தி காட்டுவாரு. மனசு வலிக்கும், ஏன் போன வருசம் எங்க கட்சி மூத்த தலைவர் ஒருத்தரு சிபிஐ, சிபிஎம் ரெண்டு கட்சியும் இணையனும்ன்னு சொன்னவுடனே சிபிஎம் காரர் ஒருத்தரு “அதெல்லாம் முடியாது, பழச மறக்க முடியாது, எங்களை துரோகின்னு சொல்லி வெளியேத்துனீங்களே”ன்னு மைக்குல பேச எங்க தலைவருங்க மூஞ்செல்லாம் எவ்வளவு கவலையாஇருந்துச்சு தெரியுமா?

அதை பேப்பர்ல பாத்தவுடனே மாமங்காரன் சொன்னான் “டே மாப்புள! உங்கட்சியே ஒண்ணுமில்லாம போயிடுச்சு, செயலாளர் பதவிக்கு ஆள் இல்லாம ஓடிப்போன பாண்டியை புடிச்சுகிட்டு வந்தீங்க, இப்ப எங்க கட்சிக்கே மேட்டர் போடுறீங்களா? எங்க கட்சிய வளச்சுக்கிட்டு ஆள்புடிக்கப்போறீங்களா? அப்புடியே சொத்தப்புடுங்க பாக்குறீங்க”

வேற யாராவது சொல்லியிருந்தா அவன் சாவறதுக்கு கருப்பண்ணன் கோயில்ல கோழியை தலை கீழா தொங்கவுட்டுருப்பான் மாணிக்கம், மாமாங்குற ஒரே காரணத்துக்காக மனசுக்குளேயே புழுங்குனான். அவன் சொல்றது உண்மையா இருக்குமோ? ஏன் நம்ம கட்சியில யாருமே சேர மாட்டேங்குறாங்க! நமக்கு பின்னாடி பொறந்தவன் சிபிஎம், அவன்கூட கேரளாவுலயும் மேற்குவங்கத்துலயும் ஆட்சிய புடிச்சுட்டான்.  எச்சிப்பாலை (கொள்கையில்) குடிச்சு வளந்தவனுக்கே அவ்வளவு திமிறா?

ரொம்ப டென்சன் ஆகிப்போனான் மாணிக்கம். ” வொக்காளி என்ன திமிரு ஆளாளுக்கு ஆடுறானுங்க, நேத்து முளச்ச விஜயகாந்து புரச்சி பண்ணப்போறேங்குறான், நாங்க தாண்டா கம்யூனிசத்த இந்த நாட்டுக்கே அறிமுகப்படுத்துனோம், இப்ப எவன் பாத்தாலும் மதிக்க மாட்டேங்குறானுங்க, எம்பி சீட் கொடுத்தாலும் சரி, எம்மெலே சீட்கொடுத்தாலும் சரி எச்சிப்பாலு குடிச்சவனுக்குத்தான் எச்சா தராங்க” கவலையிலே சாயங்காலம் படுத்தவன்தான்,

ராத்திரி அவன் மனைவி ரத்தினம் எழுப்பிய போது அழுது அழுது அவன் கண்கள் வீங்கியிருந்தது, கேட்டாள் ” ஏ மாமா அழுவுற “, அவன் காலையில் மாமங்காரன் திட்டியதை சொன்னான்.

“அட கெரகம் புடிச்சவனே! இதுக்கா அழுவுற , கருப்பண்ண சாமிக்கு கெடா வெட்டறன்னு நேந்துக்கோ எல்லா
சரியாயிடும்” மனைவியின் சொல் இதமாயிருந்து. சாப்பிட்டு விட்டு மீண்டும் படுத்தான். கண்கள் சொக்கின, கூடவே ஒரு கவிதையும் வந்தது.

சொக்கும் கண்களை
நிறுத்துகிறது எனது வர்க்க உணர்வு

அடுத்த தேர்தலில்
ஒரு சீட்டாவது அதிகம் வாங்க
துடிக்கும் மனதே கேள் ! கலங்காதே
புரட்சி என்பது நாளை அல்ல – இதோ
இதுதான்
சாதிவெறியெனன,
செயாவின் அல்லக்கையென  தூற்றப்படலாம்

கலங்காதே மனமே!

புரட்சி ஒன்றே தீர்வு

விஜய்யின் உண்ணாவிரதாமாயினும்
விசயகாந்தின் அரசியல் பிரவேசமாயினும்
அம்மாவின் ஆணையிலும்
கருணாவின் பார்வையிலும் இல்லையா புரட்சி

போராட்டம் …………….அது நமக்கு மட்டும்தான் சொந்தம்
யார் செய்தாலும்  எங்கு செய்தாலும்
அந்த போராட்டம், அந்த புரட்சியின்
விதை நம்மால் மட்டுந்தான் தூவப்பட்டது
மனதில் வை

சாந்தம் கொள் மனமே
சஞ்சலப்படாதே
அறிவால் வெல் உலகை
அரிவாள் கதிரிருக்க பயமேன்

அப்போதுதான் சன் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது, இப்போதுதான் அந்த செய்தி வந்தது ” சிபிஐ மாநிலச்செயலர்அறிவிப்பு,  நிலமற்ற மக்களுக்கு நிலத்தை வழங்கக்கோரி நில மீட்பு போராட்டம்”. என்ன ஒரு சந்தோசம். போன வாரம்கூடசன் டிவியில வந்துச்சே சேதி,

“தில்லையில 4 ஆயிரம் ஆண்டுகளாய் பூட்டு போட்டிருக்கிறார்கள் அதை அரசு அகற்றாவிடில் நாங்கள் அகற்றுவோம்” நம்ம பாண்டி தோலர் பேசும் போது எப்படி சிங்கம் மாரி பேசினார். அந்த ம.க.இ.க காரனுங்க என்னமோ 8 வருசமா போராட்டம் பண்ணுறாங்களாம்.  நம்ம பாண்டி தோலர் எப்பவுமே உசாரு!!! எட்டு வருசமா போராடுறவனுக்கு பேர் கிடைக்க வுட்டுடுவாரா என்ன ?  சிபிஎம் காரணெல்லாம் பேசும் போது எங்களுக்கு பேச உரிமை இல்லையா என்ன? எவன் எட்டு வருசம் போராடி மண்டை உடஞ்சா நமக்கென்ன?  நமக்கு பேர் வரணும் அவ்வளவுதான்? இதுல என்ன தப்பு? அவனுக்குள்ளே கேள்விக்கேட்டுக்கொண்டே தூங்கிப்போனான்.

—————————————————————————————————————————————————————

யாரோ எழுப்பியது போல் இருந்தது . மணியைப்பார்த்தான் அது 4 என பல்லைக்காட்டியது. மாவட்டப்பொறுப்பாளர் நேரே வந்திருந்தார் “ஏப்பா மாணிக்கம் இங்க வா” தனியாக அழைத்தார். காலங்காத்தால தோலர் வந்திருக்காரே குழப்பத்தோடுபின்னே சென்றான். ” ஏப்பா நேத்து நியூஸ் கேட்டியா “.

” கேட்டேன் தோலர், நம்ம பாண்டித்தோலரோட பேட்டியில நில மீட்பு போராட்டம்ன்னு சொன்னாரே” என்றான்
“கரெக்டா விசயத்துக்கு வந்துடுறேன். நேத்து பாண்டித்தோலரோட பேட்டியைப்பாத்த மொத்த தமிழ் நாடே ஆடிப்போயிடுச்சு, குறிப்பா  அரசாங்கம் ரொம்பவே கலங்கிப்போயிடுச்சு, தலைவர் கலைஞர் நம்ம தோலருக்கு ராத்திரி 10 மணிக்கு போன் பண்ணி “தயவு செஞ்சு உங்க போராட்டத்த ஒத்திவையுங்கன்னு” கெஞ்சிப்பாத்தாரு நம்மாளு கேக்கவே இல்லை.”

“ஒரு சாதாரண போராட்டத்துக்கு ஏன் முதல்வர் போன் பண்ணியிருக்காரு தெரியுமா?” சஸ்பென்சோடு மாணிக்கத்தைப்பார்த்தார். நில மீட்பு போராட்டம்ங்குறது புரட்சி செய்யறதுக்கான அறிகுறி !!!!. எல்லா கட்சியும் நம்மள எப்படியெல்லாம் திட்டுனாங்க, அதுக்கு பதிலா யாருக்குமே தெரியாம புரட்சியை செஞ்சு முடிக்கறதுன்னு மேல்கமிட்டியில தீர்மானம் போட்டிருக்கோம்.”

மாணிக்கத்தின் முகம் கலவரமடைந்தது. அந்த பனி கொட்டும் வேளையில் முகத்தில் பூத்திருந்த வியர்வையை வேட்டியில் துடைத்துக்கொண்டான். தோலர் தொடர்ந்தார் “அந்த விசயம் எப்படியோ உளவுத்துறை மூலமா லீக் ஆயிடுச்சு, அதனால தான் கலைஞர் போன் பன்ணியிருக்காரு.”  “அப்படியா” என வாயைப்பிளந்தான் மாணிக்கம்.

“இதுக்கே திகைச்சுட்டியே, நைட்டு 12 மணிக்கு  பிரதமர் போன் செஞ்சு புரட்சியை ப்ளீஸ் ஒத்தி வையுங்கன்னு கெஞ்சி இருக்காரு, அப்புறம் சோனியா காந்தி, அத்வானின்னு எத்தனையோ பேர் சொல்லியும் பாண்டித்தோலர் கேக்கல. வேற வழி இல்லாம நைட்டு 1 மணிக்கு அம்மா போன் பண்ணி புரட்சிய ஒத்தி வையுங்க இன்னைக்கு நாள் சரியில்லைன்னு சொல்ல அதுக்கு நம்ம தோலரோ ‘ நாளைக்குத்தான் நல்ல நாள் என் ராசிக்கு  நாளைக்கு  குரு உச்சத்துல இருக்கான், கண்டிப்பா

நாளைக்கு புரட்சி செய்யணும்னு மேல் கமிட்டியில தீர்மானம் போட்டுட்டாங்க அதுக்கு முன்னாடி ஆவி ஆவி ஆரதா மூலமா ரணதிவே கிட்ட கூட ஆசி வாங்கியாச்சு”ன்னு ஆணித்தரமா சொன்னாராம். அம்மா கம்முன்னு ஆப் ஆயிடுச்சாம்”

மணிக்கத்துக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. ” தோலர் நான் என்ன செய்யணுன்னு சொல்லுங்க? “. ” இப்ப மணி 4.இன்னும் சரியா ரெண்டு மணி நேரத்துல விடிஞ்சிடும் அதுக்குள்ள  நம்ம ஊருல இருக்குற எல்லா ஸ்கூல்,  பீடிஓ ஆபீஸ், அப்புறம் அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் , கொடிக்கம்பங்கள் எல்லாத்துலயும் நம்ம கதிர் அறிவாள் கொடியை ஏத்துனா போதும்,

நம்ம தோலர் பாண்டிக்கு அவர் ராசிப்படி காலையில 8.50 மணிக்கு நல்ல நேரம் ஆரம்பமாகுது, அவர் சரியா 9 க்கு டிவி ஸ்டேசனுல முறைப்படி புரட்சி நடந்து முடிந்ததை அறிவிப்பார். அதுக்கு முன்னாடி மக்கள் எழக்கூடாது.  அவங்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் வேணுமில்ல , அதால காலையில மக்கள் முழிக்கறதுக்கு காரணமான சேவல்களை எல்லாம் இப்பவே நாம கொல்லணும். அதுக்கு தனியா ரெண்டு தோலர்களை அனுப்பிட்டேன். அவங்க எல்லா சேவலையும் கொன்னுட்டதா எனக்கு மெசேஜ் அனுப்பிட்டாங்க”.

மாணிக்கம்  தன் வீட்டு சேவல்கள் கொல்லப்பட்டு கிடப்பதை அப்போது பார்த்தான். அவன்
கண்ணீர் கசிந்தது. புரட்சிக்காகத்தான சேவல்கள் செத்தன என்பதை நினைத்து மனதை தேற்றிக்கொண்டான்.

” தோலர் 7 மணிக்கு காலையில சங்கு ஊதுவானே ?”  ” நீங்க அதைப்பத்தி கவலைப்படாதீங்க, அவருக்கு கொஞ்சம் பணத்தைக்கொடுத்து  8.45 க்கு சங்க ஊத சொல்லிட்டேன், நீங்க விடியறதுக்குள்ள எல்லா கொடிக்கம்பத்துலயும் கொடியை ஏத்துனா போதும், காலையில எட்டே முக்கால் மணிக்கு மக்கள் எல்லாம் எந்திரிப்பாங்க, சுத்தியும் சிவப்பு கொடியை பார்ப்பாங்க, ஆச்சரியமா டிவி பெட்டியப் போடுவாங்க. அப்ப நம்ம தோலர் புரட்சி  நடந்து முடிந்ததை முறைப்படிஅறிவிப்பார்.” என்ற படி தோலர் கிளம்ப மாணிக்கம்  “ஒரு சந்தேகம்” என்று நிறுத்தினான் அவரை,

“தோலர் புரட்சின்னா அவ்வளவுதானா? யார்கிட்டயேயும் சண்டை போடவேண்டியதில்லையா?, இப்படி யாருக்குமே தெரியாம புரட்சி பண்ணிட்டமே தோலர், வேற கட்சிக்காரங்க சண்டைக்கு வரமாட்டாங்களா? ”

தோலர் புன்சிரிப்போடு சொன்னார் ” சில விசயங்களை சொல்ல முடியும் பல விசயங்களை சொல்ல முடியாது, புரட்சி என்பது மண்ணுக்கேற்றவகையில் இருக்கணும், ஒவ்வொரு நாட்டுலேயும் , பிரதேசத்துலேயும், பகுதியிலேயும் வேற மாதிரி தான் நடக்கும். புரட்சிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிஞ்சிடுச்சு, நைட்டு 1 மணிக்கு மேல் என்ன நடந்துச்சுன்னு நான் சொல்லக்கூடாது அது கட்சி ரகசியம், அதை காலையில டிவியில தோலர் சொல்லுவார், நீங்க கொடியை ஏத்தி முடிக்குற நேரம் எல்லா ஊரிலேயும் இருக்கிற நம்ம தோலர்கள் கொடியை ஏத்தி முடிச்சிருப்பாங்க.  உங்க தாத்தா காலத்துல இருந்து நீங்க பார்ட்டியில இருக்கறதால தான் உங்களுக்கு இந்த பாக்கியம், சரி கிளம்பறேன், வேலையை முடிச்சவுடனே எனக்கு போன் பண்ணி சாப்பிட்டாச்சுன்னு சங்கேதமா சொல்லுங்க நான் புரிஞ்சிக்குவேன்.”

உடனே அவர் கொடுத்த கொடித்துணிகளையெல்லாம் வண்டியில் வைத்துக்கொண்டு பறந்தான், எல்லா இடத்திலும் கொடிகளை கட்டினான். கடிகாரத்தைப்பார்த்தான் அது 8.15 என்றது, போனை எடுத்து பேசப்போகும் போது நினைவு வந்தது, அந்த ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க்குல கட்டவே இல்லையே !!! வண்டியை ஸ்டார்ட் செய்தான், பெட்ரோல் இல்லை,

வண்டியை தள்ளி விட்டு ஓடினான், ஒரு மைல் தூரத்தை 20 நிமிடத்தில் ஓடி வந்திருந்தான் மணி  8.40 என்றது. காலையில்சங்கும் ஊதவில்லை, சேவல்களும் கூவாததால் யாரும் எழ வில்லை. பெட்ரோல் பங்கில் கொடியை கட்டிவிட்டு இறங்கினான். பல சிராய்ப்புக்கள் உடலெங்கும், ஓடிவந்ததன் காரணமாம நெஞ்சு அடைத்தது. மாசெக்கு போன்  செய்யணுமே. மணி 8.45 என்றது.

நாம் போன் செய்ய வில்லை என்றால் ஒரு வேளை புரட்சி டிக்ளேர் செய்யப்படாமல் போய்விடுமோ? அந்த என்ணம் அவன் உடம்புக்குள் சக்தியை கொடுத்தது, ஒரு தேஜஸ் அவனுள் இறங்கியது போலிருந்தது, ஒரு வேளை இதுதான் “வர்க்கதேஜஸ்”ஆக இருக்குமோ? போன் செய்து சொன்னான். எதிர் முனையில் “என்ன தோலர் இவ்வளவு லேட்டாசொல்லுறீங்க, 5 நிமிசம் லேட்டாயிருந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா? புரட்சி பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போயிருக்கும் , எனக்கு உங்க கிட்ட ஓரியாட நேரம் இல்லை சங்கூதறவனுக்கு போன் செஞ்சு சொல்லிடுறேன், சீக்கிறம் வீட்டுக்கு போய் டிவியைப்போடுங்க”என்றார்.

மாணிக்கம் ஓடினான் ” மணி 8.59 என்றது வீட்டில் , அதற்குள் சங்கூதி முடித்திருக்க, மக்கள் எல்லாம்
பதறியடித்துக்கொண்டி எழுந்திருந்தார்கள். அவர்கள் திரும்பிய பக்கமெல்லாம் சிவப்பு கொடியாயிருக்க, அவர்களுக்குபுரியவில்லை. எல்லோரும் டிவியப் போட்ட நேரத்தில் மாணிக்கமும் போட்டிருந்தான். சன் டிவியில் ப்ளாஷ் நியூஸ் ஓடியது “புரட்சி நடந்து முடிந்தது சிபிஐ கட்சி தமிழகத்தை கைப்பற்றியது, தோலர் பாண்டியின் உரை பின்னும் சிறிது நேரத்தில்ஒளிப்பப்படும்”

தோலர் பாண்டி டிவியில் தோன்றினார். அவர் சிவப்பு நிறம் கொண்ட சட்டை, சிவப்பு பேண்ட், ராணுவ
வீரனைப்போல உடை யணிந்து மார்பில் பல பதக்கங்களை அணிந்திருந்தார்.டிவியில் பேச ஆரம்பித்தார் பாண்டி ” நில மீட்பு போராட்டம் என்ற பெயரில் புரட்சி நடந்து முடிந்து விட்டது, பொதுமக்களும்
தோலர்களும் எல்லோரும் இதை கொண்டாட வேண்டும் இது உங்களுக்கான புரட்சி. நேற்று இரவு 10 மணிக்கு முன்னாள்முதல்வர் கலைஞரும் பின்னர் 12 மணிக்கு அம்மாவும், 1 மணிக்கு மன்மோகன், அத்வானி, சோனியா என எத்தனையோ
பேர்சொல்லியும் நான் கேட்கவில்லை, காரணம் என் உள்மனது என்னை வழி நடத்தியது, நேற்று முன் தினம் மத்திய கமிட்டி ஆவிஆரதா மூலமாக ரணதிவேயிடம் குறி கேட்கப்பட்டது, அவரும் இன்று புரட்சிக்கான நாளை குறித்தார். ஆயிரம் தடைகள்
வந்தாலும் புரட்சிக்கான சரியான நாளை தேர்வு செய்பவனே புரட்சியின் தலைவன், அவ்விதத்தில் நான் புரட்சியின் தலைவனாகிறேன்.

அதிகாலை இரண்டு மணிக்கு வேறு வழியின்றி அனைத்துக்கட்சி தலைவர்களும் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலையை நமது கட்சி உருவாக்கியது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, கடைசியாக சிபிஎம் போன்ற அனைத்து கட்சி MLAக்களும் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து தங்களை சிபிஐ கட்சியில்  இணைத்துக்கொண்டனர், மேலும் கடவுளின் அனுக்கிரகம் போல சில சம்பவங்கள் நடந்தன.கலைஞர், புரட்சித்தலைவி, ராமதாசு, திருமாவளவன், வரதுக்குட்டி,புரட்சிக்கலைஞர், வாண்டையார், பச்சமுத்து உடையார், பெஸ்ட் ராமசாமி, தனியரசு, கிருஷ்ணசாமி ஆகிய அனைத்துக்கட்சி

தலைவர்களும், நமீதா, குஷ்பூ, மனோரமா, ரஜினி, விஜய், ஆர்யா, சூர்யா போன்ற முன்னணி நடிக நடிகையர்களும் தங்களை சிபிஐயில் இணைத்துக் கொண்டனர், இது நடந்தது அதிகாலை மூன்று மணிக்கு. பின்னர் புரட்சியின் திட்டப்படி அதிகாலையில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்கு அவர்கள் காலை 8.50 வரை உறங்கவைக்கப்பட்டார்கள், அவர்கள் காலையில் நல்ல செய்தியை கேட்க வேண்டுமென்பதற்காகவே. தற்போது ஆளுனர் மாளிகையை நோக்கி ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர செல்லப்போகிறோம்.”

மாணிக்கத்துக்கு அடடா நேத்துதான புரட்சி வராதான்னு யோசிச்சோம், இன்னைக்கே வந்துடுச்சே, அதுக்குள்ளே முடிஞ்சு போச்சே, புரட்சிக்கு முக்கியமான காரணமே நாம ஏத்துன கொடிதான், 5 நிமிசம் லேட்டாயிருந்தாலும் என்னா ஆயிருக்கும்.சன் டிவியில் சிறப்பு செய்திகள் போட்டார்கள் “வணக்கம்” “முக்கிய செய்திகள்…………….. புரட்சி நடந்து முடிந்தது, பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் பாண்டியை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைத்ததை அடுத்து, தமிழக முதல்வராக தோலர்பாண்டி பதவியேற்பு, கம்யுனிசம் முறைப்படி மலர்ந்ததாக அறிவிப்பு……………………… நிதித்துறை அமைச்சராக கலைஞரும், போலீஸ்துறை அமைச்சராக அழகிரியும், திரைப்பட நல்வாழ்வுத்துறை அமைச்சராகசெயலலிதாவும், போக்குவரத்து துறை அமைச்சராக விஜய காந்தும், இளைஞர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இளையதளபதி விஜயும் முதல் கட்டமாக பதவி யேற்றனர். மேலும் பொதுத்துறை சீரமைப்பிற்கான அமைச்சர் பதவி புதியதாக ஏற்படுத்தப்பட்டு அது  பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு தரப்படும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.”

மாணிக்கத்துக்கு தன்னை நம்பவே முடியவில்லை. ஆகா புரட்சி நடந்து முடிஞ்சுடுச்சே, அந்த கருமாந்திரம் புடிச்சவெள்ளையன் எங்க போனான் தெரியலையே? சரி அவனை தேடுறது இருக்கட்டும். காலையில சீக்கிரமே எழுந்தாச்சு,புரட்சிக்காக இவன் பட்ட பாடு கொஞ்சமா என்ன எத்தனை கம்பங்களில் ஏறி சிராய்ப்புக்காயங்களுடன், ரொம்பவேகளைத்துப்போய்விட்டான், கொஞ்ச நேரம் படுக்கலாம் என்றவாறு படுத்தான்.

ஒரே அழுகை சத்தம், மாணிக்கத்தின் 6 வயது மகள் “புரட்சி” வீறிட்டு அழுது கொண்டிருந்தாள். மாணிக்கம் கண்ணை விழித்தான். சுற்றியும் பார்த்தான், அவன் கட்டிய சிவப்புக்கொடிகளை காணவில்லை, அட ! எங்க போச்சு தெரியலையே ? பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தான்.  சமையல் செய்து கொண்டிருந்த அவன் மனைவி “ஏ மாமா புத்தி கீது கெட்டுப்போச்சா உனக்கு இப்புடி முழிக்குற! புள்ள அழுவுதே என்னன்னு பாக்கமாட்ட” என்றாள்.  மாணிக்கத்தின் முதல் மகன் ட்ராட்ஸ்கி பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

புரட்சியை இந்த புரட்சி கெடுத்துடுச்சே!!!!!!!!. கவலையோடு அவன் புரட்சியை தூக்கினான்.  அடச்சே இது கனவா?  அடச்சே இது கனவா? அவனுக்கு அவனே பதில் சொன்னான் “கனவாயிருந்தது  நனவானா எப்பூடி இருக்கும் ? ”  சப்பு கொட்டியபடி பல் விளக்க சென்றான்.

” இது கூட புரட்சி தானே?, பின்ன கனவில புரட்சிய சாதிச்சதை பாராட்டுனுமா இல்லையா ? எங்க எல்லாரும் கியூவுல நின்னு புரட்சிக்கு வாழ்த்து சொல்லுங்க பார்ப்போம்

அரிவாள் கதிரிருக்க பயமேன்………..கவிதைகள்

செப்ரெம்பர் 27, 2010

சொக்கும் கண்களை
நிறுத்துகிறது எனது வர்க்க உணர்வு

அடுத்த தேர்தலில்
ஒரு சீட்டாவது அதிகம் வாங்க
துடிக்கும் மனதே கேள் ! கலங்காதே
புரட்சி என்பது நாளை அல்ல – இதோ
இதுதான்
சாதிவெறியெனன,
செயாவின் அல்லக்கையென  தூற்றப்படலாம்

கலங்காதே மனமே!

புரட்சி ஒன்றே தீர்வு

விஜய்யின் உண்ணாவிரதாமாயினும்
விசயகாந்தின் அரசியல் பிரவேசமாயினும்
அம்மாவின் ஆணையிலும்
கருணாவின் பார்வையிலும் இல்லையா புரட்சி

போராட்டம் …………….அது நமக்கு மட்டும்தான் சொந்தம்
யார் செய்தாலும்  எங்கு செய்தாலும்
அந்த போராட்டம், அந்த புரட்சியின்
விதை நம்மால் மட்டுந்தான் தூவப்பட்டது
மனதில் வை

சாந்தம் கொள் மனமே
சஞ்சலப்படாதே
அறிவால் வெல் உலகை
அரிவாள் கதிரிருக்க பயமேன்

தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡ – சும்மா அதிருதுல்ல

ஜூலை 21, 2010

தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡
சும்மா அதிருதுல்ல

அது மிகப்பெரிய தொழில் நகரம். தொழிற்சாலைகள்  வரிசையாய் தீப்பெட்டிகள் அடுக்கி வைத்தாற் போல் அழகாக  தொடர்ச்சியாக அமைந்திருந்தன. அந்த நிறுவனம் கொஞ்சம் பெரியதுதான், நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பெரியதல்ல. சுமர் 2000 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.  தொழிற்சாலை என்றாலே தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்றாலே சச்சரவு என்றிருக்கும் பல
லட்சக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு இதுவொன்றும் விதிவிலக்கல்ல. பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆலைக்கு செல்லும் ரோடு அது வளைந்து வளைந்து பார்ப்பதற்கு அரிவாள் போலவே இருக்கும்.

இந்த தொழிற்சாலையில் பெரிய சங்கம் என்றால்  அது சிஐடியூ(மத்திய சங்கம்) சங்கம் தான். தொழிலாளர்களின் பிரச்சினை என்றாலே மத்திய சங்கம் தான் முன் வந்து பைசல் செய்யும். ஏதாவது பிரச்சினை அதிகமென்றால் போதும் “தொழில் அமைதியை கெடுக்காதே” மத்திய சங்கத்தால் போஸ்டர்
ஒட்டப்படும். அவ்வளவுதான் முதலாளிகள் “ஆடி”ப்போய் விடுவார்கள். சங்கத்தின் தலைவர் அடிக்கடி சொல்லுவார் நம்ம சங்கம் இங்க வலுவா இருக்குறதால தான் நமக்கும் முதலாளிக்கும் அதிகமா பிரச்சினை வரதே இல்லை”.

தீபாவளி காலங்களில் போஸ்டர்கள் மத்திய சங்கத்தால் ஒட்டப்படும்.  வர்க்கமாய் தொழிலாளர்களை அணிதிரட்டச்சொல்லி அழைப்பு விடுக்கும். கடந்த முறை கூட போனஸ் பேச்சு வார்த்தையின் போது  நம்ம தோலர் தானே சிறப்பாக செய்து முடித்தார். ஓவ்வொருமுறையும் பண்டிகைகளின் போதுபோனஸ் கோரி  தோலர்களின் பணி சிறப்பாக இருக்கும். நான் கூட இந்த சங்கத்துல தான் இருக்கேன்.எனக்கு வயது 30 தான்
ஆகுது. நான் கேட்பேன் மத்திய சங்க தோலர்கள் கிட்ட “வித்யாசமா போராட்டம் பண்ணக்கூடாதா?” அதுக்கு பொறுப்புத்தோலர் சொல்வார் ” தோழர் உங்க வயசுதான் என்னோட அனுபவம், எதுக்கும் அவசரப்படக்கூடாது”.

கடந்த முறை போனஸ் பிரச்சினையின் போது சுமுகமாய் முடித்து விட்டு வந்த போது என்னிடம் சொன்னார் “அவசரப்பட்டா வெற்றிய சாதிச்சு இருக்க முடியுமா?” எப்பவாவது வேலை நிறுத்தம் என்று மத்திய சங்கம்
சொன்னால் கூட சிஐடியூ-ன் பல தோலர்கள் தவறாமல் வேலைக்கு வந்து விடுவார்கள்.  ஆரம்பத்தில் நான் எல்லா போராட்டங்களில் கலந்து கொள்வேன். மற்ற தோலர்களின் வர்க்க உணர்வு எல்லைக்குள் இருப்பதை அறிந்து நானும் அளவோடு இருக்கிறேன். “எதுவா இருந்தாலும் அளவோடுதான்ன்னு சும்மாவா சொன்னாங்க?”

அன்னைக்குகூட பேருந்தில் நானும் சங்கத்தோலரும் பயணித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நிறுத்தத்தில்ரெண்டு பசங்க ஏறினார்கள் பேருந்தில் கையில் புத்தகங்களோடு.”அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………..” என ஆரம்பித்த அந்த ஒல்லியான, கருத்தப்பையன் உலக நடப்பு, இந்துமதம், போலி கம்யூனிசம் என்று எனக்கு புரியாத பலவற்றையும் பேசிக்கொண்டே போனான் கடைசியாக புதிய ஜனநாயகம்ன்னு ஒரு புத்தகம் அதையும் வித்தாங்க. அந்தப்பபையன் என்கிட்ட கேட்ட போது நான் 7 ரூவா கொடுத்து அப்புத்தகத்தை வாங்கினேன்.

பேருந்து நகர்ந்தது. என்னவோ தோலர் செமக்கடுப்பில் இருந்தார். நான் கேட்டதுக்கெல்லாம் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தார். புத்தகத்தின் தலைப்பில் போலிக்கம்யூனிஸ்டுகளின் துரோகம் என்று போட்டிருந்தது. அட நம்ம தோலர்(அச்சுதானந்ந்தன்) படம் போட்டிருந்தது. நான் தோலரிடம் கேட்டேன்”தோலர் அவங்க யாரை போலி கம்யூனிஸ்டுன்னு சொல்றாங்க?” “தெரியலை ” என்றார். “என்னா தோலர் இப்புடி சொல்றீங்க? நம்ம அச்சு தோலர் போட்டோவை போட்டுருக்காங்களே”

” நீங்க மொதல்ல  எதுக்கு அந்த புக்க வாங்குனீங்க, அவங்க நக்சலைட்ஸ், அவங்க கருத்த ஏன் நீங்க புடிச்சுகிட்டு தொங்கறீங்க?”,

“தீவிரவாதிங்க எல்லாம் பகிரங்கமா பேசுறாங்களா, போலீசு இவங்கள பிடிக்காம இருக்கு, அவன் சொல்றபடி பார்த்தால் கேரளாவில அச்சு தோலர் இனவெறி பிடிச்ச நபரா?,ஈழப்பிரச்சினையில  இந்திய போலி சனநாயகத்தை எதிர்த்து ஏன் ஒரு போராட்டம் கூட பண்ணல” நான் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனேன்.

மிகவும் குழப்பமான தோலர் சொன்னார் “முதல்ல சங்கத்த மதிக்க பழகுங்க, ஏதோ ரெண்டு தீவிரவாதிங்க கொடுக்கற புத்தகத்த வச்சு பேசாதீங்க? நீங்க ஈழத்துக்கு ஆதரவா என்ன பண்ண முடியும்? அதுக்கு நம்ம கட்சி சீபீஎம் இருக்கு. அவங்களுக்குத் தெரியாததா உங்களுக்கு தெரியும்? “. இந்த ஜனநாயகத்தில நம்பிக்கையில்லாதவங்க அவங்க, லால்கரில கூட மாவோயிஸ்டுங்க மக்களை பகடைக்காயா பயன் படுத்துனாங்களே, தெரியாதா? என்ன?”

“போன வாரம் ஒரு பையன் பஸ்ஸில சொல்லிக்கிட்டு இருந்தான் “மார்க்சிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களை கொன்று  நிலங்களை இந்தோனேஷியாவின் சலீம் குழுமத்திற்கு கொடுக்க நினைக்கிறது, மக்கள் போராட்டத்தை பாசிசமாய் அடக்குகிறது……………….

நான் முடிப்பதற்குள் அவர் சொன்னார் “முதல்ல  இதுமுதலாளித்துவ நாடு சோசலிச நாடு அல்ல, இதுக்கேத்தபடி தான் வாழ வேண்டும், உங்களுக்கு போனஸ் வாங்கி கொடுத்தது யார் அந்த மாவோயிஸ்டா ,சங்கமா?,” அவர் கடைசியாய் கேட்ட கேள்வி என் வாயை அடைத்தது.அப்புறம் தோலரிடம் அது சம்பந்தமாக எதுவும் கேட்பதில்லை.

ஆனால் இப்போது அந்த தீவிரவாத புத்தகங்களை அதிகமாய் என்னோடு வேலை செய்யும் ராஜா படித்துக் கொண்டிருப்பதாகவும் அதிகமாய் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் வேறு சிலர் சொன்னார்கள். என்னிடம் கூட பலமுறை கேள்வி கேட்டிருக்கிறான். நான் உட்பட பலரும் காதில் போட்டுக்கொள்ளவே மாட்டோம். அவன் இப்போது தனியாளாக ஆலை நுழைவாயிலில் புத்தகமெல்லாம் விற்கிறான். சிலர் வாங்குவார்கள். பொறுப்புத்தோலருக்கு அவனைப்பார்த்தாலே செம எரிச்சலாக இருக்கும் அவனை பற்றி  எங்களிடம் திட்டிவிட்டுதான் வருவார். ஆனால் மற்ற சங்கங்களின் தலைவர்களோடு நம்ம தோலர் நெருக்கமாக இருப்பார். ஏன் பி.எம்.எஸ் (bharathiya masthur union) சங்க  மாநாட்டுக்கு தோலர்தான்
வாழ்த்துரை சொன்னார்.

திடீரென்று எங்கள் ஆலையில்   ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். சுமார் 60 பேர் வரை தூக்கி விட்டனர், அந்த ராஜாவுக்கும் ஆப்பு வைத்து விட்டார்கள்.அதில் நம்ம தோலருக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால்  மத்திய சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். எல்லா சங்க நிர்வாகிகளும் கூடினார்கள். வழக்கம் போல இதற்கும் மத்திய சங்கம் தலைமை வகிக்க, அல்லும் பகலும் என்ன வகையான போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. வந்திருந்த ஒருவர் சொன்னார்

ஓசூர்- ல யாரோ துடைப்பக்கட்டை, செருப்பு எடுத்துக்கிட்டு போராடுனாங்களாமே அப்புடி பண்ணுவமா தோலர்”

பொறுப்புத்தோலர் சொன்னார்”சட்டம் ஒழுங்க பாதிக்குற மாதிரி எதுவும் செய்யக்கூடாது, என்ன செய்தால் முதலாளி பயப்படுவானோ அப்படி போராடணும். நான் எதுக்கும் சீபீஎம் மாவட்டச்செயலாளர் கிட்ட கலந்து
ஆலோசனை பண்ணிக்குறேன்”. என்றபடி கிளம்பியவர் சுமார் 2 மணி நேரம் கழித்து வந்தார்.

” நாளைக்கு நாம நடத்துற போராட்டம்,இந்த முதலாளிக்கு மட்டுமில்ல, உலக முதலாளித்துவத்துக்கே குலை நடுங்கும், அகில உலக பாட்டாளி வர்க்கமே பெருமைப்படுற மாதிரி ஒரு சிறப்பான போராட்டத்தை நாளைக்கு முன்னெடுக்கப்போறோம். இப்ப நான் சொன்னா முதலாளிக்கு தெரிஞ்சுடும், தோலர்களே நீங்க நாளைக்கு தயாரா வாங்க எதுக்கும் ” நான் எப்போதுமே தோலரின் கண்களில் அப்படி ஒரு நெருப்பைபார்த்ததில்லை”

சின்னதாய் கவிதை தோன்றியதெனக்கு

உன் கண்கள்
நாளை வெடிக்கும் எரிமலை
உடைபடட்டும்  முதலாளித்துவ பணமலை
தொழில் அமைதியே தொழிலாளர் நலன்

உயர்த்துவோம் செங்கொடி
சுத்தியலறிவாள் நட்சத்திரத்தோடு
ஆண்டவனே கருணைக்காட்டு
அழிந்து போகட்டும் அடக்குமுறைகள்

எனக்குத்தூக்கம் வரவில்லை, நாளைக்கு என்ன வகையான போராட்டம் நடக்கும்” ஒரு வேளை ஆலையை இழுத்து மூடுவாரா தோலர்? இல்லை முதலாளிக்கு அடிவிழுமா? ச்சே ச்சே அவர் அப்படி சட்டத்துக்குவிரோதமாக செய்ய மாட்டார். யோசனையிலேயே தூங்கிப்போனேன்.  காலையில் பூஜை புணஸ்காரங்களை முடித்தபடி மனைவியிடம் சொன்னேன். அவளோ “பாத்துங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு தள்ளி நின்னுக்கோங்க, போலீஸ் லத்தி சார்ஜ் பண்ணுனா  நான் பஸ்ஸ¤க்கு வந்தேன்னு பொய் சொல்லுங்க,

அரெஸ்ட் ஆயிடாதீங்க, யார் எப்புடி நாசமா போனா நமக்கென்ன? சொல்றத நல்லா புரிஞ்சுக்கோங்க” என்று சொல்லிக்கொண்டிருக்க என் மனமோ தோலரின் வித்யாசமான போராட்டத்தைப்பற்றியே லயித்துப்போனது.

பேருந்திலிருந்து இறங்கினேன், ஆலைக்கு செல்லும் வழியெங்கும் போஸ்டர்கள் முளைத்திருந்தன. அதில் நூதன போராட்டம் என்று இருந்தது. நான் நினைத்தேன் “நம்ம தோலர் உஷார் தான் எதிலேயும்”.

போராட்டத்தை ஆரம்பித்து வைப்பவர் என்று சீபீஎம் மாவட்டச்செயலாளர் பெயர் போட்டிருந்தது. “சரி இன்னைக்கு எப்படியோ போர்க்களமாகிவிடும்”
ஆலையை நெருங்கினேன், போராட்டம் இன்னும் அரை மணி நேரத்தில் துவங்கப்போவாதாய் பொறுப்புத்தோலர் சொன்னார்.  எனக்கு கொஞ்சம் நடுக்கமாய் இருந்தது. அவர் என்னிடம் வந்து “இங்க பாருங்க தோழர், இது முதல் கட்டப்போராட்டம் தான் இதிலே மொத்தம் 30 பேர் மட்டும் தான்
கலந்துக்கப்போறோம், அதில நீங்களும் ஒண்ணு” எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

நான் மறுப்புச்சொல்ல வாயெடுத்தேன் . “மறுக்காதீங்க தோழர், இப்படி மறுத்தா எப்படி புரட்சி வரும் , இப்படி தயங்குனா எப்படி ரஷ்யாவில லெனின் புரட்சிய நடத்திக்காட்டி இருப்பார்? நாம் தொழிலாளர் வர்க்கம் என்ற படி அவர்
மைக்கில் 30 பேர் பேரையும் அறிவித்து விட்டார்.எங்கள் 30 பேருக்கும் மாலைகள் போடப்பட்டன. நாங்கள் பந்தலின் முன்னே வந்து கோஷங்கள் போட்டோம்.

மாவட்டசெயலாளர் கட்சி அவருக்கு ஒதுக்கியிருக்கும் சுமோவில் வந்தார். எங்களை பெருமிதத்தோடு பார்த்துவிட்டு ரஷ்யாவில் நடந்த புரட்சிகர நடடிக்கைகளைப்பற்றி கனல் தெறிக்க பேசிவிட்டு கடைசியாய் சொன்னார்”இப்போராட்டம் உலக முதலாளித்துவத்துக்கு மரணத்தைப் பரிசாய்
தரும்”நாங்கள் 30 பேரையும் சுற்றி கோஷம் போட்டபடி  இருந்தார்கள். முதலில் நான் தான் நின்றுகொண்டிருந்தேன். நான் என் மனைவிக்கு என்ன பதில் சொல்லுவேன், ஜெயிலுக்கு போய் விட்டால் என்ன செய்வது?

சீபீஎம் மாசெ வந்தார் என்னிடம் “பரவாயில்லையே தோழர் சின்ன வயசில ரொம்ப துணிச்சலான முடிவு” என்றபடி கையில் சிறிய கத்தியை எடுத்தார். என் தலைக்கருகில் கொண்டு வந்தார்.அய்யோ என்ன நடக்கப்போகிறதெனக்கு? ஒருவேளை ரத்தம் சிந்தபோகிறேனா? இல்லை என் ரத்தத்தை  அவர் வெற்றித்திலகமாக இட்டுக்கொள்ளப்போகிறாரா? இல்லை கையை கிழித்துக்கொள்ளும் போராட்டமா?

அய்யோ எனக்கு பயம் அதிகமாகி நடுங்கினேன், கண்களை இறுக்கி மூடினேன். அவ்வளவு தான் இவ்வுலகத்தைகடைசியாய் பார்க்கிறேன் என நினைத்துக்கொண்டேன். மாசெ தோலர் என் தலையின் கையை வைத்தார். தலையில் தன்ணீர் தெளிக்கப்பட்டது. “அய்யோ என்ன நடக்கபோகிறது”

மாசெ தோலர் சிறிய கத்தியால் என்  தலையில்………………………………………… …….எடுத்தார். கண்ணைத்திறந்தேன். ரத்தத்துளிகள் கத்தியில் இருந்தது.  எனக்கு டெட்டால் வைத்தார்கள்.முழக்கங்கள் திமிறின,  பொறுப்புத்தோலர் பேசினார்”இதோ இந்த முதலாளித்துவத்துக்கெதிராக புரட்சிகரமான முறையில்  நமது தோழர்கள்………………….. போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். இதற்கு இந்த ஆலை நிர்வாகம்

அசையாவிட்டால் நாளை இந்த உலகமே அதிரும் படி இன்னொரு போராட்டம் நடக்கும்” ஒளிந்திருந்து முதலாளியின் ஆட்களும் போலீசும் பயத்தோடு கேட்டுக்கொண்டிருந்தது.

முடிந்து வேலைக்கு சென்றோம்.எல்லோரும் கை கொடுத்தார்கள், யோசித்தேன், புரட்சி அது சீபீஎம் கட்சியால் மட்டும்தான் நடத்தும். அதற்கு மட்டுமே தகுதி இருக்கிறது.

————————————————————————————————————————

வேலை முடிந்து வீட்டிற்கு போனேன். பக்கத்து வீட்டு குழந்தை அலறி அடித்துக்கொண்டு ஓடியது, என்மனைவி பார்த்தாள் என்னை “என்னங்க இப்புடி மொட்டை அடிச்சுகிட்டு வந்திருக்கீங்க?” காலையின்
புரட்சிகர போராட்டத்தை அவளுக்கு விளக்கினேன். கடைசியாய் சொன்னேன் . “போராட்டம்ன்னா யாருக்கும் பாதகம் இல்லாம இருக்கணும்? இந்த பு ஜ தொ மு காரனுங்க மாதிரி சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது, தொழில் அமைதியை பாதுகாக்க வேணும் “. கடைசி வாக்கியத்தை எனக்கு அருகில்
வசிக்கும் ராஜாவின் காதில் விழுமாறு உரக்கக்கூறினேன். ” நாளைக்கு என்ன போராட்டம் தெரியுமா?

கோவணத்தோடு கையில் சட்டி வச்சிருக்குற போராட்டம்”

தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡
சும்மா அதிருதுல்ல

——————————————————————

மாபெரும் தோலர் கோவிந்துக்குட்டி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை ஒட்டி இக்கதை பலமாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தாலும் இப்போது பதிப்பிக்கப்படுகிறது.

மார்க்சிஸ்டு பாசிஸ்டுகளின் பரிணாம வளர்ச்சி

சாயம் வெளுத்துப் போன போலிகள்

தீவிரவாதத்தை வேரறுப்போம் இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் – CPM!!

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

விழுப்புரத்தில் விவிமு தோழர்களை வெட்டிப் படுகொலை செய்த பாசிச CPM

உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வதற்கு அரிவாள்! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல்!

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல், CPMன் தோல்வி, ரவுடியிசம், உத்தபுரம்

கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!

லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

இது ஒரு காதல் கதை – காதலனா ? தாலியா?

ஜூலை 13, 2010

இது ஒரு காதல் கதை
காதலனா ? தாலியா?

நாங்கள் நால்வர் நண்பர்கள். எல்லாம் தேடிப்பிடித்து பொருத்தியது போல் சிந்தனையில் ஒற்றுமை, எதிலும் எந்த விசயத்தை பகிர்ந்து கொள்வதிலோ புதியதாக ஒன்றைத் தெரிந்து கொள்வதிலா ஈகோ பார்த்ததில்லை. எங்களில் ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாக  அப்படி ஒரு நெருக்கம். சொல்லப்போனால் நாங்கள் எல்லாருமே அரசியலறிவில் புதியதாய் நுழைந்திருந்தோம்.  நாம்இப்போது பார்க்கப்போவது மற்ற இருவரைப்பற்றியல்ல அதோ அவர்தான் கதிர் . அவருக்கும் என்னுடைய வயதுதான் ஆகிறது ஆனாலும் நாங்கள் “வாங்க” மரியாதையாகவே பேசிவந்தோம்.

நால்வரும்  ஒரு ஞாயிறு காலை ஒரு வேலையினை முடித்து விட்டு ஜூட் விட ஆரம்பமானோம்.

மற்ற இருவரும் எங்களை இறக்கிவிட்டுவிட்டு வடபழனி சிக்னலிலிருந்து வேறுதிசையில் செல்ல நானும் குமாரும் பேசிக்கொண்டிருந்தோம். சரியான வெயில், மண்டையைப்பிளந்தது. கதிர்  சொன்னார். ” ஏங்க கரும்பு ஜூஸ்……….”  கடைக்குப்போய் குடித்தோம்.

நான் கிளம்பும் வேளையில் ” ஒரு பொண்ணுகிட்ட கல்யாணம் பண்ணிக்குறீங்ளான்னு கேக்கலாம்னு இருக்கேன் “என்றார் கதிர் . “என்ன சொன்னீங்க , தெளிவா சொல்லுங்க” என்றேன். “இல்ல என் கூட ஆபிஸ்ல ஒருத்தர் வேலை செய்யறாங்க அவங்கிட்ட காதலிக்கறதா சொல்லிடலாம்னு இருக்கேன்”. எனக்கு அதிர்ச்சி, இருக்காதா ஒரு மாதத்திற்கு  முன் கதிருக்கும் எனக்கும் கடுமையான விவாதம் காதலைப்பற்றி. என்னைப்பொறுத்தவரை காதல் அது தன் துணையை தெரிவு செய்வதற்கான வழி. நிலபிரபுத்துவ காலத்தில்  பெண்ணும் பொருளாக மாற்றப்பட்டனர். கடுமையான ஆணாதிக்க சுரண்டலின் தவிர்க்க இயலாத வகையில் பெண் தன் துணையை தெரிவு செய்யத்துணிகிறார், அதுதான் காதல்.

ஆணாதிக்க சமுதாயத்தை மீறி என் துணையை நான் தெரிவு செய்வேன் என்பது ஒரு முற்போக்கான  சுதந்திரமான முடிவு அது வரவேற்கதக்க முடிவும் கூட.  வருகின்ற துணையைப்பற்றி ஏதும் அறியாது குடும்பத்தினர் முடிவு செய்து வேறு வழியின்றி வாழ்வதெல்லாம் நல்லபடியாக வாழ்வை கொண்டு போகாது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து  பின்னர் செய்யும் மணம்  நீடித்திருக்கும் என்பதோடு பிறக்கின்ற குழந்தையின் வாழ்க்கை முறையும் சிறப்பாக இருக்கும்.

ஆணும் பெண்ணும் தன் துணையை தெரிவு செய்வதற்கு காதலைத்தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்ன?ஒரு பெண்ணோ ஆணோ  தன் துணையை தெரிவு செய்ய விடாமல் தடுப்பது எது? சாதி, மதம், பணம், குலம், கவுரவம், அந்தஸ்து போன்றவை தானே. பெரும்பான்மை காதல் திருமணங்களில் இவற்றில் ஏதாவதொன்று உடைபடுகின்றது. ஆனால் கதிரைப் பொறுத்தவரை காதல் என்பதே பொய் அது பெண் சுதந்திரத்திற்கான முதல் படி அல்ல, ஒரே சாதியில் தான், சொந்தத்தில்தான் என் அலுவலகத்தில் காதலிக்கிறார்கள் என்பார். காதலைப்பற்றிய இவ்விவாதம் சில நாட்கள் நீடித்தது.  கடைசியாக காதல் முற்போக்கின் ஒரு அம்சம் என்ற அளவில் மட்டும் அவர் ஒத்துக்கொண்டார்.

அவர் இப்படி கேட்பார் நான் சிறிதும் எதிர்பார்க்க வில்லை. விசாரித்தேன் பெண்ணைப்பற்றி அவரிடம். அவர் பணி புரியும் அதே நிறுவனத்தில் அப்பெண்ணும் வேலை செய்வதாகவும் சொந்தஊர் சென்னையிலிருந்து 150 கி.மீ தள்ளி இருப்பதாகவும் கூறினார். அப்பெண் மறைமுகமாக காதலிப்பது போல் தெரிவதால் தான் அந்த முடிவுக்கு வந்ததாகவும் சொன்னார். தன்னுடைய சாதி மறுப்புக்கொள்கைகள் அவருக்குத்தெரியுமென்றும் கூறினார்.

” உங்களுக்கு எதிரி யாருங்க” என்றேன். “இந்த நாட்டை சூறையாடுற உலக வங்கி ஏகாதிபத்தியம் அப்புறம் ஏகாதிபத்திய கைக்கூலிகள் ” என்றார். ” அந்தப் பொண்ணைக் கேட்டுப்பாருங்க எதிர்த்த வீட்டு பிரமிளாவோ அல்லது பக்கத்து வீட்டு அனிதா இல்லைன்னா கூட வேலை செய்யுற தாரிணின்னு சொல்லுவாங்க. உழைக்கும் மக்களை  ஒடுக்குறவன பத்தி நீங்க பேசுறீங்க ஆனா அந்தப் பொண்ணு கவலை என்னவாயிருக்கும்?  அவ முடி நெறயா வளர்த்திருக்கா, அவ குத்திக்காட்டி பேசுறவ,  அவ அன்னைக்கு புது ட்ரெஸ் போட்டுகிட்டு ரொம்ப பந்தா காட்டுறா இதைத் தாண்டி வேற ஏதாவது இருக்கப்போவுதா என்ன?

“அந்தப்பொண்ணு மட்டுமில்ல பையனோ பொண்ணா  இந்தக்காலத்துல எப்புடி இருக்காங்க? இந்த நாட்டு மக்கள் மேல அக்கறையா இருக்காங்களா என்ன?  இந்த மக்கள் மேல அக்கறை வச்சு அதுக்குன்னு போராடுற நீங்களும் மக்களை மதிக்காத ஒருத்தரும் எப்படி இணைஞ்சு வாழ முடியும்? ”

“அவங்கள மாத்தவே முடியாதுன்னு சொல்லுறீங்களா?” இது கதிர் .

“நான் அப்புடி சொல்லலை மாற்றம் ஒன்றே மாறாததுன்னு ஆசான்கள் சொல்லியிருக்காங்க, மக்களை மாற்ற முடியுமின்னுதான்  நாம இப்ப வரை பேசறோம். முதல்ல அந்தப்பெண் கிட்ட உங்களைப்பத்தி பேசுங்க அரசியலை கொண்டு போங்க புத்தகங்களை  படிக்கச்சொல்லுங்க, என் திருமணம் இப்படித்தான்னு, என் வாழ்க்ககை இப்படின்னு உங்கள் மீது ஒரு கருத்தை ஏற்படுத்துங்க, அப்புறம் உங்க காதலை தெரிவியுங்க , அவங்களே முடிவு செய்யட்டும், உங்களை வாழ்க்கைத்துணையா ஏத்துக்கறதா வேண்டாமா என்று”

“சரிங்க” என்றபடி சென்றவரை சில நாட்கள் கழித்து கேட்டேன். தான் காதலை தெரிவித்து விட்டதாகவும் மனசு கேக்கவில்லை என்றும்  அப்பெண்ணும் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார்.”முட்டாள்த்தனமான முடிவென்று நினைத்துக்கொண்டு என்னுடைய சந்தேகம் அவரிடமே கேட்டேன் “எப்புடிங்க அன்னைக்கு அப்புடி பேசுனீங்க அதுக்குள்ள காதல் வலையில விழுந்துட்டீங்க”.

“நீங்கதான சொன்னீங்க காதல்ங்குறது உரிமைன்னு பெண்சுதந்திரத்திற்கானதுன்னு அதான் யோசிச்சு என் கருத்தை மாத்திகிட்டேன் என்றார் ” ஆக  சும்மா கிடந்த சங்கை நான்தான் ஊதி விட்டிருக்கிறேன்.

சில மாதங்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது அவர் சொல்லுவார் அந்தக்கூட்டத்துக்கு வரச்சொன்னேன் வந்திருந்தாங்க” சில மாதங்கள் ஓடின. அப்பெண் தன் வீட்டில் காதலை சொல்லி விட்டதால் அவருடைய தந்தை கதிரை சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார்.

“சரி போய்ட்டு வாங்க” என்றோம். அவர் மட்டும் அப்பெண் வீட்டிற்கு சென்றிருந்தார். எங்களுக்கு கொஞ்சம் பயம் தான். பொண்ணு வீட்டுக்காரனுங்க ஏதாவது செய்திடுவார்களோ என்று. அன்று இரவு வந்த அவர் அப்பெண்ணின் வீட்டில் போய் பேசி விட்டதாகவும் சொன்னார்.

அப்பெண் ஒரு மாதம் கழித்து தன்னுடைய தந்தை கண்டிப்பாக தாலி கட்டவேணடுமென்று சொல்லி விட்டதாகவும்  அப்பெண்ணின் அக்கா வீட்டுக்காரர் தி.க என்றும் அவர் தாலி கட்டிவிட்டதால் நீங்களும் தாலி கட்ட வேண்டுமென்று கதிரிடம் சொல்ல ஆரம்பித்தார். பார்ப்பானை வைத்துதான் சாங்கியமென்றும்  கண்டிச­ன்  ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருந்தது.

பார்ப்பன இந்து முறையில் பெண்ணை கேவலப்படுத்ததான் தாலி என்றும் பார்ப்பனனின் மந்திரமே பெண்ணை விபச்சாரியாக்குவதுதான் என்று பல முறை சொல்லியும் அப்பெண் கேட்கவேயில்லை. அப்பெண்ணின் அப்பாவுக்கு பணிஓய்வு பெற 4 மாதங்களிருப்பதால் அதற்குள் திருமணம் நடத்த ஏதுவாக விரைவாக பதில் சொல்லுமாறு அப்பெண் கூறினார்.

இந்த சம்பவமெல்லாம் எங்களுக்கு முன்னே நடந்தேறுகிறது. ஒருகட்டத்தில் அப்பெண் “தாலி கட்டுனா என்னை கல்யாணம் பண்ணு………….” என்க ,குமாருக்கும் அப்பெண்ணிற்கும்  சண்டையில் முடிந்திருக்கிறது. நாங்கள் எடுத்த சமாதான முயற்சிகள் பயனற்றுப்போயின. அப்பெண்ணின் ஒரே பதில் “தாலிகட்டி சம்பிரதாயத்தோடுதான் கல்யாணம் அப்படீன்னா பேசுங்க….”

“குறைந்தபட்சம் தாலிகட்டுறது தப்புன்னு தெரியாத அளவுக்கு என்ன வெங்காயம் காதலிச்சீங்களோ ஒரு இழவும் தெரியல, இப்ப என்ன பண்றது” என்றேன்.

“இல்ல நான் தாலியப்பத்தி யல்லாம் பேசியிருக்கேன், சுயமரியாதையா இருக்கணுமுன்னு பேசியிருக்கேன்” என்றார் கதிர்.

“அப்பன் கிட்ட பேசி காதலனை கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தற அளவுக்கு தைரியம் இருக்கு ஆனா தாலிகட்டாம கல்யாணம் பண்ண முடியலை இல்லையா? வரதட்சணை வேண்டாமெனில் கசக்குதா? அடிமைத்தனம் புடிக்குது உனக்கு சுதந்திரம் கொடுக்குறவன் பிடிக்கலையா? எவன் உன்னை விபச்சாரியா (பார்ப்பன இந்து மதம்) ஆக்குறானோ அவன் மேல வைக்குற நம்பிக்கையை ஒரு சதவீதம் இந்தக்காதலன் மேல வைக்க முடியலேன்னா இதுக்குப்பேர் காதல் கிடையாது. ரெண்டு பேரும் உணர்வுகளுக்கு அடிமையாயிட்டீங்க “என்றேன்.

இன்னொரு நண்பர் சொன்னார் “கடைசியா அந்தப்பெண்கிட்ட பேசிப்பாருங்க, அரசியலை சொல்லிட்டு  பக்குவமடைஞ்ச பிறகு காதலிச்சிருக்கணும். இப்ப என்ன பண்றது. எல்லாம் அப்பெண்ணோட கையில்தான் இருக்குது.”

எனக்கோ நம்பிக்கையில்லை கதிர் மீது ” தாலிகட்டிகிட்டுதான் வரப்போறாரென நினைத்தேன்”

அப்பெண் கடைசி வரை தன் முடிவில் தெளிவாயிருந்து அடிமைத்தனத்தில்  இல்லற வாழவென உறுதியாயிருக்க , கதிரோ   அந்தக்காதலை விட்டார். கதிர்  விட்டார் என்பதை விட அப்பெண் தன் முடிவில் மிக உறுதியாயிருந்தார் என்பது தான் உண்மை. ஒரு மாதம் கழித்து அப்பெண் முதல் அவர்கள் வீட்டிலிருப்பவர் வரை பலரும் கதிரை கெஞ்சிப்பார்த்து விட்டார்கள்,  தயவு செஞ்சு  “தாலி கட்டுங்க” என்று.

அப்பெண் ஆரம்பத்தில் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிவிட்டு பின்னர் காதலித்தால் மீள மாட்டான் என்று கட்டளைகள் விதித்து இருக்கிறார் .  அப்பெண்ணின் கண்ணீர், கோபம் ” எல்லாம் தாலி கட்டுங்க” என்றமைந்திருந்தது. பின்னர் வேறு நபருடன் பார்ப்பன முறைப்படி திருமணமும் செய்து ஈராண்டுகளாகிவிட்டன.

இந்த பார்ப்பன இந்து சமூகத்தின் மேல் அப்பெண் வைத்த நம்பிக்கையில்  கொஞ்சம் கூட தன் குடும்பத்தை மீறி மணக்கத்   துணிந்த காதலன் மீது இல்லை. அப்படியயனில் அந்தப்பெண் பொய்யாய் காதலித்தாரா?  இல்லை அவர் உண்மையாக கூட காதலித்திருக்கலாம் ஆனால் தாலிகட்டாமல் சாதி சொல்லாமல் வாழ்ந்தால் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணம் அந்தக்காதலைலையே தின்று விட்டது. தாலி பெரியதா? காதலன் பெரியதா? என்றபோட்டியில் அப்பெண் கடைசியில் தாலியை கட்டிக்கொண்டு போய்விட்டார்.காதலிப்பது பெரிய விசயமல்ல, இந்த மூடநம்பிக்கை சமுதாயத்தை எதிர்த்து இயங்குவதுதான் பெரியது.

பெண்ணுரிமையை வைத்துக்கொள் என்றால் எனக்குத்தேவையில்லை நான் இடிமையாய்தான் இருப்பேன், அடிமைத்தன வாழவில் அடிமைத்தன பிள்ளையை பெற்று அடிமைக்குழந்தையை அடிமைத்தனமான முறையில் வளர்ப்பேனென்றால் இங்கு என்னதான் செய்ய முடியும். கொண்ட காதலுக்காக கடைசி வரை சுயமரியாதையை கொண்ட அரசியலை இழந்து வாழமுடியுமா என்ன?

இல்லை நீ மக்களை பற்றி சிந்தித்துதான் ஆக வேண்டும். சுயமரியாதையோடுதான் வாழ வேண்டும். நீ சிந்திப்பதற்கு எல்லாமிருக்கிறது, இவ்வுலகே எனக்கு சொந்தம். சுயமரியாதைக்கு, உழைக்கும் மக்கள் உரிமைக்கு , முக்கியமாக பெண்ணுரிமைக்கு  உன்னால் முடிந்ததை எதுவேண்டுமென்றாலும் செய். பெண் ஆணைப்போல சுயேச்சையான பொருளாதாரத்துடன் வாழ அனுமதி அளிப்பதை விட வேறு ஏது சுதந்நிரம்?

ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம் வாரதிற்கொருமுறை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வேண்டும் எனில் தாலி கட்டித்தான் ஆக வேண்டுமென்று அடிமை விலங்கை ஆசையாய் மாட்டிக்கொண்டு திரிபவர்களுக்கு சுயமரியாதையும் , கம்யூனிசமும் கசக்கத்தான் செய்யும் .
சிலருக்குத் தோன்றலாம் தாலிங்குறது ,பார்ப்பானை வச்சு கல்யாணம் பண்றது சாதாரண விசயம் அதுக்கு காதலை விடலாமா? தாலி என்பதோ பார்ப்பன மந்திரமோ ஒரு செயல் மட்டுமல்ல. தாலி ஏன் உருவாக்கப்பட்டது?  இது என்னுடைய பொருள் என்று கணவன் சொல்லுவதற்காக, ஆம் திருமணத்திற்கான அடையாளமாய் பெண்ணுக்கு இருக்கும் தாலி ஆணுக்கு ஏன் இருப்பதில்லை?

ஆண்களும் பெண்களும் நிறைந்துள்ள ஒரு கூட்டத்தில்  மணமான பெண்களை கண்டறியமுடியும். ஆனால் ஆண்களை முடியுமா என்ன? அவனே சொன்னால் தான்  தெரியும். சரியான விசயமெனில் அது ஏன் ஆணுக்கில்லை. பெண்ணை பொருளாக்கும் எதையும் ஏற்பதற்கில்லை. எனும் போது எப்படி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் பெண்ணை வைப்பாட்டியாக்கும் மந்திரத்தை ஏற்க முடியும்.

பெண்ணுக்கு விடுதலை தர நினைத்த கதிரின் உண்மையான சுயமரியாதையுள்ள அரசியல்   அடிமைத்தனத்திற்கு கிஞ்சித்தும் விலை போகாமல் நின்றது. சுயமரியாதை அது தனக்குமட்டுமல்ல மற்றவர்களையும் சுயமரியாதையாகவே இருக்கக்கோருகிறது. நாத்திகர்களாக கூறிக்கொள்ளும் பலர் மறு அழைப்பின்போது தாலி கட்டிக்கொள்வதை அறிந்திருக்கிறேன். ஆனால் எதுவும் புரியாதது போல் நடிக்கும் ஒரு அடிமையை திருமணம் செய்வது ஒரு உண்மையான பகுத்தறிவுவாதியால் இயலாது.

இப்பாது காதல் என்று நான் பேச ஆரம்பித்தாலே கதிரின் கதைக்கு சென்று விடுகிறேன். அந்த அளவுக்குகாதல் பற்றிய பெரிய படிப்பினையாகிப்போனது கதிரின் காதல். காதல், பாசம்,வீடு,நட்பு,அப்பா,அம்மா,

உறவினர்கள் இதில் எதுவுமே அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. ஒரு அரசியலில் இருக்கும் நேர்மை  இப்படி எல்லாவற்றிலும் பிரதிபலிப்பது சாத்தியம்தான். அதற்கு முதலில் நேர்மையாக இருத்தல் வேண்டும். கதிர்  என் நண்பன் என்பதில் மிகவும் பெருமைதான்.

மக்களைப்பிளக்கும் சாதியை

மாதரை வதைக்கும் தாலியை

சித்தத்தையே அழிக்கும் சாத்திரத்தை

மொத்தமாய் புதைப்போம்

மகஇக, புமாஇமு,புஜதொமு,விவிமு ஆகிய புரட்சிகர அமைப்பில் உள்ள தோழர்களின் புரட்சிகர மணவிழா பத்திரிக்கையில் பொறிக்கப்படும் புகழ்பெற்ற வாசகம்.

I.T-ன் ஆணாதிக்கம்

கதை

சோறு – சோறு நடத்திய பாடம்

ஜூன் 14, 2010

சோறு
சோறு நடத்திய பாடம்

அது ஒரு கிராமம். ஆம் கிராமம் தான். இங்கு பாரதிராஜா படத்தில் வருவது போல் பச்சை பசேலென்ற வயல் வெளிகளை நான் பார்க்க வில்லை. அது மேட்டாங்காடு என்று சொல்லப்படும் அதாவது மழை வந்தால்தான் பிழைப்பென்ற பகுதி.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே……………. பெருமை வாய்ந்த தமிழச்சமூகத்தின்  கூடப்பிறந்த பிறப்பான சாதி ஆதிக்கம் கடையைப்பரப்பி தாழ்த்தப்பட்டோரின்  ரத்தத்தை குடிக்கும் நிகழவுகள் தவறாது நடக்கும் கிராமம் அது. என்னுடன் வேலை செய்த இருவர்  இந்த ஊரில் தானிருக்கிறார்கள். அவர்களை பார்க்கத்தான் நானும் தோழரும் வந்திருக்கிறோம்.

அந்த நண்பர்கள் தன் ஊரின் சாதிக்கட்டுமானத்தைப்பற்றி சாதி ஆதிக்கத்தின் விளைவை  அவ்வப்போது சொல்லுவார்கள். சில சமயம் இருவரும் ஒரே நாளில் விடுமுறை எடுத்து விட்டு ஊர்ல பிரச்சினை என்பார்கள். என்னைப்பொறுத்தவரை  இதையல்லாம் அதிகம் கவனிப்பேன்  அவர்களிடம் பேசுவேன். அவர்களைப்பொறுத்தவரை ஆதிக்கசாதிப்பிரச்சினையை  இங்த நிறுவனத்தில் காது கொடுத்து கேட்டு ஆவேசமாக பேசும் நபர் நான்.
நானும் தோழரும் எங்கள் ஊரிலிருந்து அந்த கிராமத்திற்கு  செல்வதற்கு அவர்களிடம் வழிகேட்டபோது இரண்டு முதல் மூன்று பேருந்து பிடிக்க வேண்டும் என்றார்கள். இவ்வொரு பேருந்துக்கும் அரை மணி நேரம் என ஒரு வழியாய் வந்து சேர்ந்து நண்பர் சொன்ன படி  வந்து கொண்டிருக்கிறோம்.

அக்கிராமம் சரியாய் இரண்டாய் பிரிக்கப்பட்டிருக்கிறது. மெயின் ரோட்டுக்கு இருபுறமும் குடியிருப்பு பகுதிகள்  அநியாயத்துக்கு வறண்டு போன நிலங்கள் அதற்கெதிராக போராடாத மக்களின் மீது அனற்காற்றை வீசிக்கொண்டிருந்தது.  நண்பரின் செல் “not reachable ” என்றது. அவர் முன்னரே மேப் போட்டு கொடுத்திருந்தார் எப்படி வருதென்று. முதலில்  ஓட்டு வீடுகளாகவும்  தார்ஸ் போட்ட வீடுகளும்  அந்த சிறு வீதிக்கு இருபுறமும் இருந்தது. கொஞ்ச தூரம் நடந்தவுடன்   சந்திக்க வேண்டிய நபர்  ராஜா வந்தார் . அவருடனே பயணித்தோம்.

அவர் சொன்னார் ” நீங்க முன்னாடி பார்த்த அந்த வூடுங்கெல்லாம்  அந்த சாதிக்காறங்க ”  ,அந்த வீடுகள் சுமார் 150 இருக்கும் அப்புறம் வறண்ட பாலைவனம் போல இருந்த அந்தப்பகுதியில் நடந்து சென்றோம். அனல் வெகுவாய் அடித்தது.   நண்பர் சொன்னார் “இதுதான் எங்க ஊர் வாய்க்கால் ஆத்துல தண்ணீ வந்தா மழை வந்தா இங்கேயும் வரும்”. வரும் வழியில் கோயில் இருந்தது. “இதுதான் அவுங்க கோயில்” என்றார். ஒரு பத்து நிமிடம் நடந்திருப்போம். ஊர் வந்தது. ஊரை முதன் முறையாக யார் வந்து பார்த்தாலும் சொல்லிவிடுவார்கள். இது தாழத்தப்பட்டவர்களின் ஏரியாவென்று.

முன்னர் பார்த்த வீடுகளுக்கருகில் இருந்ததைப்போல  அல்ல, 90  சதவிகிதம் குடிசை வீடுகள், சிலர் இப்போதுதான் கட்டிடங்கள் சிறியதாய் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  ராஜாவின் நண்பர்கள் சிலர் எங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். பேசிக்கொண்டிருந்தோம். மதிய வேளை  நெருங்க நெருங்க நான் தோழரிடம் கிளம்பலாம் கிளம்பலாம் என்றபடி கிசுகிசுத்தேன். கிளம்பும் போது சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டுமென்று பிடித்து கொண்டார்கள்.

யார் வீட்டிலும் அதிகம் சாப்பிட்டு பழகாதவன் நான். அது வரை ஹோட்டலில் மொத்தமே 15 தடவை கூட சாப்பிட்டு இருக்க மாட்டேன். எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டுக்கு வந்துதான் சாப்பிடுவேன். எங்கு போனாலும் சரி மதிய நேரம் நெருங்கும் போது ஏதாவது ஒரு பொய்யைச்சொல்லி கிளம்பிவிடுவேன். தவிர்க்க இயலாமல் சாப்பிட வேண்டிவரும் போது தர்ம சங்கடத்தோடு சாப்பிட்டு எழுவேன். தாழத்தப்பட்ட உழைக்கும் கிராமத்து மக்களின் அவர்களின் உணவு முறை எப்படி இருக்கும் அதைப்பற்றி நினைத்ததேயில்லை. ஏன் நினைக்கிறேன் ? அவசியமே அதுவரை எழவில்லை.

என் மனதிற்கு தெரிந்ததெல்லாம் வீட்டில் தான் கரெக்டா இருக்கும். வீட்டில் என்றால் கொதிக்க வைத்த குடிநீர் சுத்தமாக வடிகட்டி அப்படி இப்படி என்று அதுவரை எனக்குத்தவறாக தெரியவில்லை. எப்போதும்  எங்கு சென்றாலும் உணவிற்கு முன் கிளம்பும் நான் தோழரோடு வந்திருப்பதால் பேசிக்கொண்டிருந்ததில் நேரத்தை  விட்டுவிட்டேன்.  சில மாதங்களாகத்தானே தோழரே அறிமுகம் . அவரிடம் முன்னரே சொல்லவும் தவறி விட்டேன். ஒரு வழியாக  சாக்கு சொல்லிவிட்டு தோழரை இழுத்துச்செல்லாத குறையாக கிளம்பினேன்.

கிளம்பும் போது என்னுடன் பணிபுரியும் இன்னொருவர் ” அதெல்லாம் முடியாது சாப்பிட்டுட்டுதான் போயாகணும்” என்றபடி கைகையை இழுத்துக்கொண்டு சென்றார். அருகில் அவர் வீடு. அது ஒரு குடிசை பனை இலையால் வேயப்பட்டிருந்தது. . அக்குடிசைக்கு வெளியே ஒரு கட்டிலைப் போட்டார்கள் . அது கயிற்றுக்கட்டில் வெள்ளைக்கயிறு பழுப்பு நிறமாய் பல்லைக்காட்டியது. அதற்கு எதிரில் இரு ஸ்டூல்களை போட்டார்கள் இரண்டிலும் இரு தட்டுக்கள் வைக்கப்பட்டன.

தட்டு நிறைய சோறு போட்டார்கள். எங்களை உட்காரச்சொன்னார்கள். வேறு வழியின்றி தயக்கத்தோடு சங்கடத்தோடு உட்கார்ந்தேன். தட்டிலிருந்த சோற்றைப்பார்ர்தேன். என் வாழக்கையில் இந்த கலரில் (லைட் பழுப்பு) சோறு இருப்பதே இப்போது தான் தெரிகிறது. ஏதோ குழம்பு ஊற்றினார்கள். பார்ப்பதற்கே வழவழப்பாக  அருவருப்பாக இருந்தது. “ உட்கார்ந்தாயிற்றே இனி எழுந்திருக்கவும் முடியாதே”. தோழர் தயக்கமின்றி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

குழம்மில் கைகை வைத்தேன், எனக்கு என்னபோல் இருந்தது. மனதை திடமாக்கிக்கொண்டு  சோற்றைப்பிசைந்தேன் குழம்போடு, “அய்யோ!!!!!! எந்திரிச்சும் ஓட முடியாதே” பிசைந்த சோற்றில் ஒரு கவளத்ததை வாயில் போட்டேன். என் வாழ்வில் அவ்வளவு கேவலமான சுவை அது. வயிற்றைக் குமட்டியது வாந்தி வந்துவிடுமோ பயம் எனக்கு, எதிரில் எல்லோரும் நிற்கிறார்கள். வேறு வழியே இல்லை.

கண்ணை இறுக்க மூடினேன். பிசைந்த சோற்றுக்கவளங்கள் எப்படி என் வாய்க்குள் போயின என்பது எனக்குத்தெரியவில்லை. ஒரு பெருமிதம் எனக்கு ” அப்பாடா ஒரு வழியா முடிச்சாச்சு” கிளம்பினேன் அங்கிருந்து. பேருந்தில் வரும் போது கூட தோழரிடம் எதுவும் பேச வில்லை. பேருந்து நிறுத்தத்தில் பேசிவிட்டு அவரும் நானும் கிளம்பிவிட்டோம்.

வீட்டில் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஹோட்டலில் சாப்பிட்டதாய் சொன்னேன். தோழர் கொடுத்த புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு கடுமையான செயலை செய்தது போல  குழம்பினேன். இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் உழைக்கும் மக்கள் உண்ணும் உணவு எனக்கு கேவலமாய்த் தெரிந்திருக்கிறது. அதைத்தின்றால் வயிறு குமட்டுகிறது. பச்சைத்தண்ணீர் எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

வ்வளவு கேவலமான வாழ்வை வாழந்திருக்கிறேன்  எனில் அது எவ்வளவு கேவலமானது, நான் எவ்வளவு கேவலமானவன். அந்த சோற்றை தின்றுவிட்டுதான் இதோ இந்த சாலையை உழைக்கும் மக்கள் செப்பணிட்டார்கள். இதோ நான் படுத்திருக்கிறேனே இந்தக்கட்டிலை செய்தார்கள். வீட்டைக் கட்டினார்கள். அதில் சொகுசாய் வாழும் நான் அவர்களின் உணவை குற்றம் சொல்லிக்கொண்டு வாழும் போது  ,  நான் இந்த மக்களிடமிருந்து எவ்வளவு அந்நியமாய் இருக்கிறேன்.எவ்வளவு கேவலமானவன்?  எவ்வளவு கேவலமானவன்? எவ்வளவு கேவலமானவன்?  நான் வெறுப்பாய் தின்ற சோற்றில் எவ்வளவு பெரிய பாடம் கற்றிருக்கிறேன்.

எப்படியும் பல ஆண்டுகளை கடந்து போன அந்த சம்பவம் என் நினைவில் அகலாத ஒன்றாகி விட்டது. எதிர்பாராத அந்நிகழ்ச்சி  என்னுடைய  நடுத்தர வர்க்கத்துக்கே உரித்தான டீசண்ட் -ஐ புரட்டிப் பிய்த்து எறிந்துவிட்டது.

B.P.O அடிமை .காம் பகுதி-3,அடிமைகளின் சொர்க்கம்

I.T-ன் ஆணாதிக்கம்

https://kalagam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

எய்ட்ஸ் விளம்பரங்கள் – மனிதனைத்தின்னும் தொற்று நோய்கள்

ஓகஸ்ட் 10, 2009

எய்ட்ஸ் விளம்பரங்கள் மனிதனைத்தின்னும் தொற்று நோய்கள் aids copy

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கே.கே நகருக்கு நானும் எனது நண்பர்கள் சிலரும் ஒரு வேலை விசயமாக சென்றிருந்தோம். காலையில் வந்த வேலை முடிந்து போகவே அப்படியே டீக்கடையில் ஒதுங்கினோம். அப்போது ஒரு குரூப் வந்து கொண்டிருந்தது, ஒரு ஆண் கோமாளி வேசம், மற்ற படி மூன்று பெண்கள். கழைக்கூத்தாடிகள் போல உடையணிந்து கொண்டு வந்திருந்தார்கள். டீக்கடைக்கு முன்தான் பஸ் ஸ்டாப் மற்றும் பெரிய நிழல் தரும் மரமிருந்தது.

 

எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு நாலு டீ ஒரு பால் என்றவாறு ஆர்டர் செய்தோம். நண்பர் கேட்டார் யாருங்க இது? பதில் தரும் வகையில் கோமாளி வேசம் போட்டவர் ஒரு பேனரை விரித்து வைத்தார். அதில் “பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையே சிறந்தது” “வெளியில் போனாலும் சரி யாரிடம் போனாலும் சரி ஆணுறை பயன்படுத்துங்கள்” என்றிருந்தது. கொடுத்த டீயை விட வசனம் சூடாக இருந்ததால் கோதாவில் இறங்கினோம்.

 

முதலில் நான் ஆரம்பித்தேன் கோமாளியிடம் சென்று “எனக்கு ஒண்ணுமே புரியலை அங்க என்ன போட்டு இருக்கு” என்றபடியே பேனரை சுட்டினேன். கோமாளிக்கோ ஒரு சந்தோசம். என்னை வைத்து அரசியல் பண்ண ஆரம்பித்தார். நான் அவரை வைத்து அரசியல் பன்ண வந்திருக்கிறேனென்று தெரியாமல்.

 

“எல்லோரும் இங்க வாங்க அண்ணன் என்னவோ கேள்வி கேக்குறாரு? அண்ணே இன்னொருவாட்டி கேளுங்க” மறுபடியும் கேட்டேன் அவர் சொன்னார்”அதாவதுன்னா உடலுறவு மூலமாத்தான் எய்ட்ஸ் பரவுது, நீங்க யார்கிட்ட போனாலும் சரி ஆணுறைய மட்டும் மறக்காம போடுங்க” பெருமிதத்தோடு, கூட இருந்த பெண்களுக்கும் அப்படி ஒரு சந்தோசம். நான் ஆரம்பித்தேன் “ஏங்க ஆணுறை போட்டுக்கிட்டா எய்ட்ஸ் வராதா?” “ஆமா கண்டிப்பா வராதுண்ணா” தனக்கே உரிய ஏற்ற இரக்கங்களோடு.

 

“அது வேற மேட்டர், சரி அது என்ன யாரிடம் போனாலும் சரி, வெளியில் போனாலும் சரின்னு போட்டு இருக்கு” “அது வந்து ……..எச்சில் முழுங்கியபடி ஆரம்பித்தார் அது ஒரு எழுத்து நடைக்காக போடுறது சரின்னா கரெக்ட்ன்னு அர்த்தம் இல்லை சும்மா. நண்பர் கேட்டார் “சும்மாவா அது என்ன சும்மா வெளியில் போறது சரின்னு எழுதி விட்டு சும்மான்னா என்ன அர்த்தம்?”

 

அவர்கள் ஏதோ எழுத்து நடைக்குள் திசை திருப்புவதை உணர்ந்து மீண்டும் கேட்டேன் ” அய்யா ஒரு சந்தேகம் வெளிய விபச்சாரிகிட்ட போனா ஆணுறை போடுறது சரி, தேவைன்னு சொல்லுறீங்க இல்லைன்னா எய்ட்ஸ் வரும் அப்புடீங்கறீங்க, ஆனா அது சரியா? தவறா?ன்னு சொல்ல மாட் டேங்குறீங்களே? இது என்ன அயோக்கியத்தனம்? யார் யார்கிட்ட வேணுமினாலும் போங்க ஆணுறை போட்டுகிட்டு போன்னா என்ன அர்த்தம்நீங்க எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்ய வந்தீங்களா இல்ல ஆணுறை கம்பெனிக்கு விளம்பரம் தேட வந்தீங்களா இல்ல ஆள் பிடிக்க வந்தீங்களா என்றவாறு அந்த கோமாளியையும் பெண்களையும் கேட்டேன். அமைதியாய் இருந்தார்கள்.

 

நண்பர் சொன்னார்”வாய் மூடி இருக்கறதுல்ல பலனில்லை பதில் சொல்லியே ஆகணும்”. பகிரங்கமாய் கொஞ்சம் சத்தமாக நடந்த இவ்விவாதத்தை பார்க்க டீ குடிக்க, பேருந்து நிறுத்தத்திற்கு வந்த வர்களென ஒரு கூட்டமே கூடிவிட்டது. ஒரு டிப்டாப் ஆசாமி மட்டும் ஏதும் பேசாது கவலைகளின் ரேகைகள் ஓட நண்பரின் அருகில் நின்று கொண்டிருந்தான்.

 

கோமாளி கொஞ்சம் காட்டமாய் சொன்னார்”எவன் எவன் யார்கிட்ட வேணுமினாலும் போலாம் அது தனி மனித உரிமை அத நாங்க தடுக்க முடியாது, அது எங்க வேலையும் இல்லை, ஆணுறை போடுன்னுதான் சொல்ல முடியும் அவுசாரிகிட்ட போறவனை தடுக்கவாமுடியும்”. ரொம்ப சந்தோசம் ஆணுறை போடுன்னு சொல்லுற வாயால கூடா உறவுன்னு சொன்ன என்ன குறஞ்சு போவீங்களா?”

 

மீண்டும் சொன்னார் கோமாளி”அது தனிமனித உரிமை அதை கேக்க வேண்டிய அவசியம் இல்லை” ” என்னது? தனிமனித உரிமையா? ஒரு கனவன் தன் மனைவியிடம் உறவு கொள்வது வேண்டுமானாலும் தனிமனித உரிமையாயிருக்கலாம். ஆனால் இன்னொரு மணமானவர் இன்னொரு பெண்ணிடம் உறவு கொள்வது தனிமனித உரிமைன்னு சொல்றத இப்பத்தான் கேள்விப்படுறேன், அப்படீன்னா இந்த நாட்டுல விபச்சாரியிடம் உறவு கொள்வதும், கள்ளகாதலும் தப்புன்னு சட்டம் சொல்லுது, கைதுன்னு தினம் பேப்பர்ல வருது, ஆனா இப்படி சொல்லுறீங்களே?

 

ஆணுறை விளம்பரத்துக்காக வந்தீங்களா? இல்லை உண்மையாவே எய்ட்ஸ் தடுக்குற நோக்கத்தோடு வந்தீங்களா? ஆமா நீங்க எல்லாம் யாரு? தாங்கள் தன்னார்வக்குழுவினர் என்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணவிற்காக வந்ததாகவும் கூறினார்கள் அப்பெண்கள். முடிவாய் சொன்னோம்

 

 “உங்கள் பிரச்சாரம் கள்ள உறவினை தடுப்பதாக, பெண்ணை ஒரு பண்டமாக மாற்றுவதினை எதிர்க்க வேண்டுமே தவிர ஆணுறைக்கு ஆள் பிடித்து த ருவதாய் அமையக்கூடாது”. “ஒரு தன்னாவர்வ குழுவான நீங்கள் மக்களுக்கு உண்மையை சொல்வதற்காக உருவாகவில்லை. மாறாக பன்னாட்டு நிறுவனங்களிடம் வாங்கிக்கொண்டு மக்களிடம் அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதற்காகத்தானே.

அவன் அதிரடியாய் சொல்வதை நீங்கள் மென்மையாய் சொல்கிறீர்கள்” வேறு வழியின்றி கோமாளியும் கூட்டத்தப்பார்த்து இனிமேல் நாங்க அப்படியும் சொல்லுறோம் என்றவாறு கூத்தடிக்காமலே சென்றார்.

 

 தன் குழுவைப்பற்றியோ எங்கிருந்து பணம் வருகிறதென்பதைப்பற்றியோ கோமாளிக்கோ மற்ற பெண்களுக்கோ தெரியவில்லை. கூட இருந்த அந்த டிப்டாப் ஆசாமி உடனே அக்கூட்டத்தோடு எஸ்கேப் ஆனார். பின்னர் தான் தெரிந்தது அவர்தான் அந்த குழுவுக்கு ஆர்கனைசர்.அவன் பேசியிருந்தால் இன்னும் நன்றாக அம்பலப்படுத்தியிருக்க முடியும். ஆள் பார்த்து இந்த என் ஜீ ஓ ஆசாமிகளெல்லாம் பேசுவார்கள்.

 

அவர்களை சரியாய் அம்பலப்படுத்தியபோதே தெரிந்து கொண்டு விட்டான் அந்த ஆசாமி அதனால் தான் அமைதியாய், பின் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

 

 

இச்சம்பவம் நடந்து பல மாதங்கள் வரை பேருந்தினுள்ளே இருக்கும் ஆணுறை விளம்பரங்களை (எய்ட்ஸ் விழிப்புணவு பிரச்சாரமாம்!!) கிழித்துக்கொண்டிருந்தேன். ———————————————————————————————————————————————————————————— கடந்த மாதம் வரை அடிக்கடி ஒரு விளம்பரம் எப்.எம் -ல் ஒலிபரப்பாகிக்கொண்டு வந்தது. வீட்டு வேலைக்காரியிடம் அண்ணி துணி எடுத்து போடுவாள் (என்ன மரியாத இவளுக்கெல்லாம்) துவைக்கச்சொல்லி, அதில் கணவனின் தம்பியின் பேண்ட் பாக்கெட்டில் ஆணுறையை பார்த்துவிட்ட வேலைக்காரி சொல்ல அதற்கு அண்ணி காண்டம் தான தப்பு ஒண்ணும் இல்லையே.

 

 கார் சாவியை எடுத்ததை விட காண்டம் பயன் படுத்துவது தவறில்லை என்கிறாள். மேலும் இன்னொரு விளம்பரத்தில் கிளிக்கு,நாய்க்கு காண்டம் என பெயர் வைப்பது என்று காண்டம் என கூறுவது தப்பில்லைஎன கிழவி வந்து சொல்கிறது.

 

இதன் மூலம் முதலாளித்துவம் மாபெரும் உண்மையை சொல்லித்தருகின்றது. தவறை நான் சொல்வது போலச்செய் அது தவறே அல்ல. கட்டற்ற பாலியல் உறவுகளை கோருகிறது ஏகாதிபத்தியம், முதலாளித்துவம்.

மனிதனை தன் சுயமரியாதையை, தன் நிலமையை எதிர்த்து போராடுவதற்கு எதிரான எல்லாவற்றையும் எளிதாக தருகிறது. அதன்படி தான் இந்த “யார்கிட்ட வேண்டுமானாலும் போ ஆணுறையை யூஸ் பண்ணு”. இதையே தன்னாவக்குழுக்கள், அரசு என அனைவரும் சேவை செய்து கொண்டிருக்கின்றனர்.

 

கொடுமையிலும் கொடுமை என்ன வென்றால் பெண்ணை கட்டற்ற பாலுறவின் நோக்கத்துக்கான இந்த பல விளம்பரங்களில், பிரச்சாரங்களில் நடிக்கும்பல பெண்கள் என்னவோ நாட்டுக்கு சேவை செய்வதைப்போல பெருமையாய் நடிக்கின்றனர்.

 கண் முன்னே நாடு பற்றி எரிவதைப்பற்றி, விவசாயம் அழிவதப்பற்றி, கைத்தறி நசிந்ததைப்பற்றி துளிவார்த்தை பேசாது தினவெடுத்து திரிபவனுக்கு பாதிப்பு வருமாம் ஆணுறையை பயன்படுத்தச் சொல்லி பிரச்சாரம் வேறு. சற்று யோசித்துப்பாருங்கள் யார் இதற்கெல்லாம் பனத்தை வாரி வழங்குவது?

 

நம் வாழ்வினை , கோவணத்தையும் சேர்த்து பறித்த அதே முதலாளிகள் தான் ஆணுறயை போட்டுக்கொள்வதற்காக பல கோடிகளை வாரி கொடுக்கின்றனர். சும்மா கொடுக்கவில்லை ஆணுறைகள் ஒரு விற்பனைப்பொருள், ஆணுறை மட்டுமல்ல பாலியல் சார்ந்துள பல பொருட்களை விறபனை செய்வதற்கு புதிய யுக்தி தேவைப்படுகின்றது.ஒரு பொருளை விற்க முதலாளி செய்யும் பல டிரிக்குகளில் இதுவும் ஒன்று. தான் போட்டதை விட பல பல மடங்காய் லாபம் தேவை அவனுக்கு. ஏன் நாளை ஆனுறை வாங்காதவர்கள் எல்லாம் கைது செய்யப்படலாம் யார் கண்டது மக்களுக்காகவா அரசாங்கம்?

 

இந்த விளம்பரங்கள் மனிதனை விழுங்கும் தொற்று நோய்கள், மனிதன் தன் சுயமரியாதைக்காக, தன் அடிமைத்மத்தனத்துக்கெதிராகா போராடும் வரை இவ்வகை தொற்று நோய்கள் நம்மை ழுங்கிக்கொண்டே இருக்கும். வர்க்கப் போராட்டம் என்ற அறுவை சிகிச்சை ஒன்றே அதற்கு சரியான மருந்து.