Posts Tagged ‘புஜதொமு’

இது பதினாலாவது தேர்தல்

ஏப்ரல் 9, 2011

இது பதினாலாவது தேர்தல்

காந்தியின் கைராட்டையில்
சிக்கிக் கதறிய
எம் பாட்டனின்
சத்தங்கள் அடங்கிப்போயின
முதல் தேர்தலில்……..

இது பதினாலாவது
தேர்தல்

எத்தனையோ மாற்றம்
அன்று ஒருவனுக்கு
பாய்விரித்த  நாடு
பலருக்கும் பாய்விரிப்பதைப்
பார்க்கையில் என்னமாய்
புன்னகைக்கிறார் காந்தி

பதிமூன்று முறை
ரத்தம் குடித்த முதலாளியின் காட்டேரிகள்
திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் சிப்பீஎம்
சீபீஐ  பிஎஸ்பி விசி பாமக
என பல வண்ண செருப்பணிந்து
வருகின்றன

நீர் நிலம் காற்று
அனைத்தையும்
அன்னியனுக்கு யார் மூலமாக
தாரை வார்க்க என
தராதரம் பார்க்கத்தானா தேர்தல்

உணவு மூட்டைகளை
எலிகள் தின்கின்றன
உழைக்கும் மக்களை
கார்ப்பரேட் கரையான்கள் அரிக்கின்றன

ஜேப்பியார்களின்
பணமூட்டைகளில்
சிக்கித்திணறுகின்றான்
ஏழை மாணவன்

முதலாளித்துவசுரண்டலில்
சுண்டி விட்டது
தொழிலாளியின் ரத்தம்

சோறில்லை வேலையில்லை
கல்வியில்லை இல்லை
இல்லை
எங்கும் இல்லைகள்
எங்கு காணிணும்
இல்லைகள்

உண்டென்பதற்கு
இங்கு டாஸ்மாக்கைத்தவிர
வேறென்ன இருக்கிறது?

படிக்க காசின்றி
சட்டியைத்தூக்கும் மாணவனின்
முனகல்களும்

உழைக்கும் வர்க்கத்தின்
அழுகைகளும் கவலைகளும்
இன்றோடு நின்றுவிடுமா என்ன?

சனநாயகக் கடமையாற்றுவது
ஏதும் இல்லாமல்
செத்துப்போவதற்கா என்ன ?

இதை மாற்ற முடியுமா?
கண்டிப்பாய் முடியாது
இது உன் கடமை என்றால்
ஓட்டு எந்திரத்தை உடைத்துப்போடு

உழைக்கும் மக்களை உரித்துப்போடும்
தேர்தலைப் புறக்கணித்து
ஆயுதமேந்துவோம்
கார்ப்பரேட் முதலாளிகளின்
சொத்துக்களைப் பறிப்போம்!
ஆம்
அது ஒன்றுதான் தீர்வு தரும்

போபால் விசவாயு படுகொலை

ஓகஸ்ட் 30, 2010

போபால் விசவாயுப் படுகொலை

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 6

போராடு போரைத்தவிர வேறு வழி இல்லை



போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 5

ஓகஸ்ட் 12, 2010

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 5

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் - 5

தூணிலும் துரும்பிலுமேன்?
மனித ஜீனிலும் திணிக்கப்பட்ட
லாபம்

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 4

ஓகஸ்ட் 10, 2010

போபால் விசவாயுப் படுகொலை  கருத்துப்படங்கள் – 4

கருத்துப்படங்கள் - 4

பாசிச ராஜபக்சேவும் காங்கிரசு பாசிச களவாணிகளும்

மக்களை கொன்று தின்பதில் எத்தனை இன்பம்?

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் -3

ஓகஸ்ட் 3, 2010

போபால் விசவாயுப் படுகொலை – சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்

கருத்துப்படங்கள் -3

கருத்துப்படங்கள்-3

சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்

இன்னுமா இவர்களை நம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்?

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 2

ஜூலை 30, 2010

போபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 2

போபால் விசவாயுப் படுகொலை-2

தாயே !

உன்  குரல் என்னை சுடுகிறது
எங்கள் அடிமைத்தனத்தை
இன்னும் சுட்டுப்பொசுக்கு

போபால் விசவாயு படுகொலை , கருத்துப்படம் வரிசை – 1

ஜூலை 26, 2010

போபால் விசவாயு படுகொலை , கருத்துப்படம் வரிசை – 1

போபால் விசவாயு படுகொலை கருத்துப்படம் வரிசை - 1

ஏதுமறியா குழந்தையை கொன்ற முதலாளித்துவம்  அக்குழந்தையின் பிணத்தை வைத்து வியாபாரம் செய்கிறது.இது முதலாளித்துவ பயங்கரவாதமில்லையா?

தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡ – சும்மா அதிருதுல்ல

ஜூலை 21, 2010

தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡
சும்மா அதிருதுல்ல

அது மிகப்பெரிய தொழில் நகரம். தொழிற்சாலைகள்  வரிசையாய் தீப்பெட்டிகள் அடுக்கி வைத்தாற் போல் அழகாக  தொடர்ச்சியாக அமைந்திருந்தன. அந்த நிறுவனம் கொஞ்சம் பெரியதுதான், நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பெரியதல்ல. சுமர் 2000 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.  தொழிற்சாலை என்றாலே தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்றாலே சச்சரவு என்றிருக்கும் பல
லட்சக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு இதுவொன்றும் விதிவிலக்கல்ல. பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆலைக்கு செல்லும் ரோடு அது வளைந்து வளைந்து பார்ப்பதற்கு அரிவாள் போலவே இருக்கும்.

இந்த தொழிற்சாலையில் பெரிய சங்கம் என்றால்  அது சிஐடியூ(மத்திய சங்கம்) சங்கம் தான். தொழிலாளர்களின் பிரச்சினை என்றாலே மத்திய சங்கம் தான் முன் வந்து பைசல் செய்யும். ஏதாவது பிரச்சினை அதிகமென்றால் போதும் “தொழில் அமைதியை கெடுக்காதே” மத்திய சங்கத்தால் போஸ்டர்
ஒட்டப்படும். அவ்வளவுதான் முதலாளிகள் “ஆடி”ப்போய் விடுவார்கள். சங்கத்தின் தலைவர் அடிக்கடி சொல்லுவார் நம்ம சங்கம் இங்க வலுவா இருக்குறதால தான் நமக்கும் முதலாளிக்கும் அதிகமா பிரச்சினை வரதே இல்லை”.

தீபாவளி காலங்களில் போஸ்டர்கள் மத்திய சங்கத்தால் ஒட்டப்படும்.  வர்க்கமாய் தொழிலாளர்களை அணிதிரட்டச்சொல்லி அழைப்பு விடுக்கும். கடந்த முறை கூட போனஸ் பேச்சு வார்த்தையின் போது  நம்ம தோலர் தானே சிறப்பாக செய்து முடித்தார். ஓவ்வொருமுறையும் பண்டிகைகளின் போதுபோனஸ் கோரி  தோலர்களின் பணி சிறப்பாக இருக்கும். நான் கூட இந்த சங்கத்துல தான் இருக்கேன்.எனக்கு வயது 30 தான்
ஆகுது. நான் கேட்பேன் மத்திய சங்க தோலர்கள் கிட்ட “வித்யாசமா போராட்டம் பண்ணக்கூடாதா?” அதுக்கு பொறுப்புத்தோலர் சொல்வார் ” தோழர் உங்க வயசுதான் என்னோட அனுபவம், எதுக்கும் அவசரப்படக்கூடாது”.

கடந்த முறை போனஸ் பிரச்சினையின் போது சுமுகமாய் முடித்து விட்டு வந்த போது என்னிடம் சொன்னார் “அவசரப்பட்டா வெற்றிய சாதிச்சு இருக்க முடியுமா?” எப்பவாவது வேலை நிறுத்தம் என்று மத்திய சங்கம்
சொன்னால் கூட சிஐடியூ-ன் பல தோலர்கள் தவறாமல் வேலைக்கு வந்து விடுவார்கள்.  ஆரம்பத்தில் நான் எல்லா போராட்டங்களில் கலந்து கொள்வேன். மற்ற தோலர்களின் வர்க்க உணர்வு எல்லைக்குள் இருப்பதை அறிந்து நானும் அளவோடு இருக்கிறேன். “எதுவா இருந்தாலும் அளவோடுதான்ன்னு சும்மாவா சொன்னாங்க?”

அன்னைக்குகூட பேருந்தில் நானும் சங்கத்தோலரும் பயணித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நிறுத்தத்தில்ரெண்டு பசங்க ஏறினார்கள் பேருந்தில் கையில் புத்தகங்களோடு.”அன்பார்ந்த உழைக்கும் மக்களே…………..” என ஆரம்பித்த அந்த ஒல்லியான, கருத்தப்பையன் உலக நடப்பு, இந்துமதம், போலி கம்யூனிசம் என்று எனக்கு புரியாத பலவற்றையும் பேசிக்கொண்டே போனான் கடைசியாக புதிய ஜனநாயகம்ன்னு ஒரு புத்தகம் அதையும் வித்தாங்க. அந்தப்பபையன் என்கிட்ட கேட்ட போது நான் 7 ரூவா கொடுத்து அப்புத்தகத்தை வாங்கினேன்.

பேருந்து நகர்ந்தது. என்னவோ தோலர் செமக்கடுப்பில் இருந்தார். நான் கேட்டதுக்கெல்லாம் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தார். புத்தகத்தின் தலைப்பில் போலிக்கம்யூனிஸ்டுகளின் துரோகம் என்று போட்டிருந்தது. அட நம்ம தோலர்(அச்சுதானந்ந்தன்) படம் போட்டிருந்தது. நான் தோலரிடம் கேட்டேன்”தோலர் அவங்க யாரை போலி கம்யூனிஸ்டுன்னு சொல்றாங்க?” “தெரியலை ” என்றார். “என்னா தோலர் இப்புடி சொல்றீங்க? நம்ம அச்சு தோலர் போட்டோவை போட்டுருக்காங்களே”

” நீங்க மொதல்ல  எதுக்கு அந்த புக்க வாங்குனீங்க, அவங்க நக்சலைட்ஸ், அவங்க கருத்த ஏன் நீங்க புடிச்சுகிட்டு தொங்கறீங்க?”,

“தீவிரவாதிங்க எல்லாம் பகிரங்கமா பேசுறாங்களா, போலீசு இவங்கள பிடிக்காம இருக்கு, அவன் சொல்றபடி பார்த்தால் கேரளாவில அச்சு தோலர் இனவெறி பிடிச்ச நபரா?,ஈழப்பிரச்சினையில  இந்திய போலி சனநாயகத்தை எதிர்த்து ஏன் ஒரு போராட்டம் கூட பண்ணல” நான் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனேன்.

மிகவும் குழப்பமான தோலர் சொன்னார் “முதல்ல சங்கத்த மதிக்க பழகுங்க, ஏதோ ரெண்டு தீவிரவாதிங்க கொடுக்கற புத்தகத்த வச்சு பேசாதீங்க? நீங்க ஈழத்துக்கு ஆதரவா என்ன பண்ண முடியும்? அதுக்கு நம்ம கட்சி சீபீஎம் இருக்கு. அவங்களுக்குத் தெரியாததா உங்களுக்கு தெரியும்? “. இந்த ஜனநாயகத்தில நம்பிக்கையில்லாதவங்க அவங்க, லால்கரில கூட மாவோயிஸ்டுங்க மக்களை பகடைக்காயா பயன் படுத்துனாங்களே, தெரியாதா? என்ன?”

“போன வாரம் ஒரு பையன் பஸ்ஸில சொல்லிக்கிட்டு இருந்தான் “மார்க்சிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களை கொன்று  நிலங்களை இந்தோனேஷியாவின் சலீம் குழுமத்திற்கு கொடுக்க நினைக்கிறது, மக்கள் போராட்டத்தை பாசிசமாய் அடக்குகிறது……………….

நான் முடிப்பதற்குள் அவர் சொன்னார் “முதல்ல  இதுமுதலாளித்துவ நாடு சோசலிச நாடு அல்ல, இதுக்கேத்தபடி தான் வாழ வேண்டும், உங்களுக்கு போனஸ் வாங்கி கொடுத்தது யார் அந்த மாவோயிஸ்டா ,சங்கமா?,” அவர் கடைசியாய் கேட்ட கேள்வி என் வாயை அடைத்தது.அப்புறம் தோலரிடம் அது சம்பந்தமாக எதுவும் கேட்பதில்லை.

ஆனால் இப்போது அந்த தீவிரவாத புத்தகங்களை அதிகமாய் என்னோடு வேலை செய்யும் ராஜா படித்துக் கொண்டிருப்பதாகவும் அதிகமாய் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் வேறு சிலர் சொன்னார்கள். என்னிடம் கூட பலமுறை கேள்வி கேட்டிருக்கிறான். நான் உட்பட பலரும் காதில் போட்டுக்கொள்ளவே மாட்டோம். அவன் இப்போது தனியாளாக ஆலை நுழைவாயிலில் புத்தகமெல்லாம் விற்கிறான். சிலர் வாங்குவார்கள். பொறுப்புத்தோலருக்கு அவனைப்பார்த்தாலே செம எரிச்சலாக இருக்கும் அவனை பற்றி  எங்களிடம் திட்டிவிட்டுதான் வருவார். ஆனால் மற்ற சங்கங்களின் தலைவர்களோடு நம்ம தோலர் நெருக்கமாக இருப்பார். ஏன் பி.எம்.எஸ் (bharathiya masthur union) சங்க  மாநாட்டுக்கு தோலர்தான்
வாழ்த்துரை சொன்னார்.

திடீரென்று எங்கள் ஆலையில்   ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். சுமார் 60 பேர் வரை தூக்கி விட்டனர், அந்த ராஜாவுக்கும் ஆப்பு வைத்து விட்டார்கள்.அதில் நம்ம தோலருக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால்  மத்திய சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். எல்லா சங்க நிர்வாகிகளும் கூடினார்கள். வழக்கம் போல இதற்கும் மத்திய சங்கம் தலைமை வகிக்க, அல்லும் பகலும் என்ன வகையான போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. வந்திருந்த ஒருவர் சொன்னார்

ஓசூர்- ல யாரோ துடைப்பக்கட்டை, செருப்பு எடுத்துக்கிட்டு போராடுனாங்களாமே அப்புடி பண்ணுவமா தோலர்”

பொறுப்புத்தோலர் சொன்னார்”சட்டம் ஒழுங்க பாதிக்குற மாதிரி எதுவும் செய்யக்கூடாது, என்ன செய்தால் முதலாளி பயப்படுவானோ அப்படி போராடணும். நான் எதுக்கும் சீபீஎம் மாவட்டச்செயலாளர் கிட்ட கலந்து
ஆலோசனை பண்ணிக்குறேன்”. என்றபடி கிளம்பியவர் சுமார் 2 மணி நேரம் கழித்து வந்தார்.

” நாளைக்கு நாம நடத்துற போராட்டம்,இந்த முதலாளிக்கு மட்டுமில்ல, உலக முதலாளித்துவத்துக்கே குலை நடுங்கும், அகில உலக பாட்டாளி வர்க்கமே பெருமைப்படுற மாதிரி ஒரு சிறப்பான போராட்டத்தை நாளைக்கு முன்னெடுக்கப்போறோம். இப்ப நான் சொன்னா முதலாளிக்கு தெரிஞ்சுடும், தோலர்களே நீங்க நாளைக்கு தயாரா வாங்க எதுக்கும் ” நான் எப்போதுமே தோலரின் கண்களில் அப்படி ஒரு நெருப்பைபார்த்ததில்லை”

சின்னதாய் கவிதை தோன்றியதெனக்கு

உன் கண்கள்
நாளை வெடிக்கும் எரிமலை
உடைபடட்டும்  முதலாளித்துவ பணமலை
தொழில் அமைதியே தொழிலாளர் நலன்

உயர்த்துவோம் செங்கொடி
சுத்தியலறிவாள் நட்சத்திரத்தோடு
ஆண்டவனே கருணைக்காட்டு
அழிந்து போகட்டும் அடக்குமுறைகள்

எனக்குத்தூக்கம் வரவில்லை, நாளைக்கு என்ன வகையான போராட்டம் நடக்கும்” ஒரு வேளை ஆலையை இழுத்து மூடுவாரா தோலர்? இல்லை முதலாளிக்கு அடிவிழுமா? ச்சே ச்சே அவர் அப்படி சட்டத்துக்குவிரோதமாக செய்ய மாட்டார். யோசனையிலேயே தூங்கிப்போனேன்.  காலையில் பூஜை புணஸ்காரங்களை முடித்தபடி மனைவியிடம் சொன்னேன். அவளோ “பாத்துங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு தள்ளி நின்னுக்கோங்க, போலீஸ் லத்தி சார்ஜ் பண்ணுனா  நான் பஸ்ஸ¤க்கு வந்தேன்னு பொய் சொல்லுங்க,

அரெஸ்ட் ஆயிடாதீங்க, யார் எப்புடி நாசமா போனா நமக்கென்ன? சொல்றத நல்லா புரிஞ்சுக்கோங்க” என்று சொல்லிக்கொண்டிருக்க என் மனமோ தோலரின் வித்யாசமான போராட்டத்தைப்பற்றியே லயித்துப்போனது.

பேருந்திலிருந்து இறங்கினேன், ஆலைக்கு செல்லும் வழியெங்கும் போஸ்டர்கள் முளைத்திருந்தன. அதில் நூதன போராட்டம் என்று இருந்தது. நான் நினைத்தேன் “நம்ம தோலர் உஷார் தான் எதிலேயும்”.

போராட்டத்தை ஆரம்பித்து வைப்பவர் என்று சீபீஎம் மாவட்டச்செயலாளர் பெயர் போட்டிருந்தது. “சரி இன்னைக்கு எப்படியோ போர்க்களமாகிவிடும்”
ஆலையை நெருங்கினேன், போராட்டம் இன்னும் அரை மணி நேரத்தில் துவங்கப்போவாதாய் பொறுப்புத்தோலர் சொன்னார்.  எனக்கு கொஞ்சம் நடுக்கமாய் இருந்தது. அவர் என்னிடம் வந்து “இங்க பாருங்க தோழர், இது முதல் கட்டப்போராட்டம் தான் இதிலே மொத்தம் 30 பேர் மட்டும் தான்
கலந்துக்கப்போறோம், அதில நீங்களும் ஒண்ணு” எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

நான் மறுப்புச்சொல்ல வாயெடுத்தேன் . “மறுக்காதீங்க தோழர், இப்படி மறுத்தா எப்படி புரட்சி வரும் , இப்படி தயங்குனா எப்படி ரஷ்யாவில லெனின் புரட்சிய நடத்திக்காட்டி இருப்பார்? நாம் தொழிலாளர் வர்க்கம் என்ற படி அவர்
மைக்கில் 30 பேர் பேரையும் அறிவித்து விட்டார்.எங்கள் 30 பேருக்கும் மாலைகள் போடப்பட்டன. நாங்கள் பந்தலின் முன்னே வந்து கோஷங்கள் போட்டோம்.

மாவட்டசெயலாளர் கட்சி அவருக்கு ஒதுக்கியிருக்கும் சுமோவில் வந்தார். எங்களை பெருமிதத்தோடு பார்த்துவிட்டு ரஷ்யாவில் நடந்த புரட்சிகர நடடிக்கைகளைப்பற்றி கனல் தெறிக்க பேசிவிட்டு கடைசியாய் சொன்னார்”இப்போராட்டம் உலக முதலாளித்துவத்துக்கு மரணத்தைப் பரிசாய்
தரும்”நாங்கள் 30 பேரையும் சுற்றி கோஷம் போட்டபடி  இருந்தார்கள். முதலில் நான் தான் நின்றுகொண்டிருந்தேன். நான் என் மனைவிக்கு என்ன பதில் சொல்லுவேன், ஜெயிலுக்கு போய் விட்டால் என்ன செய்வது?

சீபீஎம் மாசெ வந்தார் என்னிடம் “பரவாயில்லையே தோழர் சின்ன வயசில ரொம்ப துணிச்சலான முடிவு” என்றபடி கையில் சிறிய கத்தியை எடுத்தார். என் தலைக்கருகில் கொண்டு வந்தார்.அய்யோ என்ன நடக்கப்போகிறதெனக்கு? ஒருவேளை ரத்தம் சிந்தபோகிறேனா? இல்லை என் ரத்தத்தை  அவர் வெற்றித்திலகமாக இட்டுக்கொள்ளப்போகிறாரா? இல்லை கையை கிழித்துக்கொள்ளும் போராட்டமா?

அய்யோ எனக்கு பயம் அதிகமாகி நடுங்கினேன், கண்களை இறுக்கி மூடினேன். அவ்வளவு தான் இவ்வுலகத்தைகடைசியாய் பார்க்கிறேன் என நினைத்துக்கொண்டேன். மாசெ தோலர் என் தலையின் கையை வைத்தார். தலையில் தன்ணீர் தெளிக்கப்பட்டது. “அய்யோ என்ன நடக்கபோகிறது”

மாசெ தோலர் சிறிய கத்தியால் என்  தலையில்………………………………………… …….எடுத்தார். கண்ணைத்திறந்தேன். ரத்தத்துளிகள் கத்தியில் இருந்தது.  எனக்கு டெட்டால் வைத்தார்கள்.முழக்கங்கள் திமிறின,  பொறுப்புத்தோலர் பேசினார்”இதோ இந்த முதலாளித்துவத்துக்கெதிராக புரட்சிகரமான முறையில்  நமது தோழர்கள்………………….. போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். இதற்கு இந்த ஆலை நிர்வாகம்

அசையாவிட்டால் நாளை இந்த உலகமே அதிரும் படி இன்னொரு போராட்டம் நடக்கும்” ஒளிந்திருந்து முதலாளியின் ஆட்களும் போலீசும் பயத்தோடு கேட்டுக்கொண்டிருந்தது.

முடிந்து வேலைக்கு சென்றோம்.எல்லோரும் கை கொடுத்தார்கள், யோசித்தேன், புரட்சி அது சீபீஎம் கட்சியால் மட்டும்தான் நடத்தும். அதற்கு மட்டுமே தகுதி இருக்கிறது.

————————————————————————————————————————

வேலை முடிந்து வீட்டிற்கு போனேன். பக்கத்து வீட்டு குழந்தை அலறி அடித்துக்கொண்டு ஓடியது, என்மனைவி பார்த்தாள் என்னை “என்னங்க இப்புடி மொட்டை அடிச்சுகிட்டு வந்திருக்கீங்க?” காலையின்
புரட்சிகர போராட்டத்தை அவளுக்கு விளக்கினேன். கடைசியாய் சொன்னேன் . “போராட்டம்ன்னா யாருக்கும் பாதகம் இல்லாம இருக்கணும்? இந்த பு ஜ தொ மு காரனுங்க மாதிரி சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது, தொழில் அமைதியை பாதுகாக்க வேணும் “. கடைசி வாக்கியத்தை எனக்கு அருகில்
வசிக்கும் ராஜாவின் காதில் விழுமாறு உரக்கக்கூறினேன். ” நாளைக்கு என்ன போராட்டம் தெரியுமா?

கோவணத்தோடு கையில் சட்டி வச்சிருக்குற போராட்டம்”

தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡
சும்மா அதிருதுல்ல

——————————————————————

மாபெரும் தோலர் கோவிந்துக்குட்டி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை ஒட்டி இக்கதை பலமாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தாலும் இப்போது பதிப்பிக்கப்படுகிறது.

மார்க்சிஸ்டு பாசிஸ்டுகளின் பரிணாம வளர்ச்சி

சாயம் வெளுத்துப் போன போலிகள்

தீவிரவாதத்தை வேரறுப்போம் இந்திய தேசியம் & சிபிஎம் ஜாய்ண்ட் கார்ப்பரேசன்

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் – CPM!!

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

விழுப்புரத்தில் விவிமு தோழர்களை வெட்டிப் படுகொலை செய்த பாசிச CPM

உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வதற்கு அரிவாள்! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல்!

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல், CPMன் தோல்வி, ரவுடியிசம், உத்தபுரம்

கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!

லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

இது ஒரு காதல் கதை – காதலனா ? தாலியா?

ஜூலை 13, 2010

இது ஒரு காதல் கதை
காதலனா ? தாலியா?

நாங்கள் நால்வர் நண்பர்கள். எல்லாம் தேடிப்பிடித்து பொருத்தியது போல் சிந்தனையில் ஒற்றுமை, எதிலும் எந்த விசயத்தை பகிர்ந்து கொள்வதிலோ புதியதாக ஒன்றைத் தெரிந்து கொள்வதிலா ஈகோ பார்த்ததில்லை. எங்களில் ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாக  அப்படி ஒரு நெருக்கம். சொல்லப்போனால் நாங்கள் எல்லாருமே அரசியலறிவில் புதியதாய் நுழைந்திருந்தோம்.  நாம்இப்போது பார்க்கப்போவது மற்ற இருவரைப்பற்றியல்ல அதோ அவர்தான் கதிர் . அவருக்கும் என்னுடைய வயதுதான் ஆகிறது ஆனாலும் நாங்கள் “வாங்க” மரியாதையாகவே பேசிவந்தோம்.

நால்வரும்  ஒரு ஞாயிறு காலை ஒரு வேலையினை முடித்து விட்டு ஜூட் விட ஆரம்பமானோம்.

மற்ற இருவரும் எங்களை இறக்கிவிட்டுவிட்டு வடபழனி சிக்னலிலிருந்து வேறுதிசையில் செல்ல நானும் குமாரும் பேசிக்கொண்டிருந்தோம். சரியான வெயில், மண்டையைப்பிளந்தது. கதிர்  சொன்னார். ” ஏங்க கரும்பு ஜூஸ்……….”  கடைக்குப்போய் குடித்தோம்.

நான் கிளம்பும் வேளையில் ” ஒரு பொண்ணுகிட்ட கல்யாணம் பண்ணிக்குறீங்ளான்னு கேக்கலாம்னு இருக்கேன் “என்றார் கதிர் . “என்ன சொன்னீங்க , தெளிவா சொல்லுங்க” என்றேன். “இல்ல என் கூட ஆபிஸ்ல ஒருத்தர் வேலை செய்யறாங்க அவங்கிட்ட காதலிக்கறதா சொல்லிடலாம்னு இருக்கேன்”. எனக்கு அதிர்ச்சி, இருக்காதா ஒரு மாதத்திற்கு  முன் கதிருக்கும் எனக்கும் கடுமையான விவாதம் காதலைப்பற்றி. என்னைப்பொறுத்தவரை காதல் அது தன் துணையை தெரிவு செய்வதற்கான வழி. நிலபிரபுத்துவ காலத்தில்  பெண்ணும் பொருளாக மாற்றப்பட்டனர். கடுமையான ஆணாதிக்க சுரண்டலின் தவிர்க்க இயலாத வகையில் பெண் தன் துணையை தெரிவு செய்யத்துணிகிறார், அதுதான் காதல்.

ஆணாதிக்க சமுதாயத்தை மீறி என் துணையை நான் தெரிவு செய்வேன் என்பது ஒரு முற்போக்கான  சுதந்திரமான முடிவு அது வரவேற்கதக்க முடிவும் கூட.  வருகின்ற துணையைப்பற்றி ஏதும் அறியாது குடும்பத்தினர் முடிவு செய்து வேறு வழியின்றி வாழ்வதெல்லாம் நல்லபடியாக வாழ்வை கொண்டு போகாது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து  பின்னர் செய்யும் மணம்  நீடித்திருக்கும் என்பதோடு பிறக்கின்ற குழந்தையின் வாழ்க்கை முறையும் சிறப்பாக இருக்கும்.

ஆணும் பெண்ணும் தன் துணையை தெரிவு செய்வதற்கு காதலைத்தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்ன?ஒரு பெண்ணோ ஆணோ  தன் துணையை தெரிவு செய்ய விடாமல் தடுப்பது எது? சாதி, மதம், பணம், குலம், கவுரவம், அந்தஸ்து போன்றவை தானே. பெரும்பான்மை காதல் திருமணங்களில் இவற்றில் ஏதாவதொன்று உடைபடுகின்றது. ஆனால் கதிரைப் பொறுத்தவரை காதல் என்பதே பொய் அது பெண் சுதந்திரத்திற்கான முதல் படி அல்ல, ஒரே சாதியில் தான், சொந்தத்தில்தான் என் அலுவலகத்தில் காதலிக்கிறார்கள் என்பார். காதலைப்பற்றிய இவ்விவாதம் சில நாட்கள் நீடித்தது.  கடைசியாக காதல் முற்போக்கின் ஒரு அம்சம் என்ற அளவில் மட்டும் அவர் ஒத்துக்கொண்டார்.

அவர் இப்படி கேட்பார் நான் சிறிதும் எதிர்பார்க்க வில்லை. விசாரித்தேன் பெண்ணைப்பற்றி அவரிடம். அவர் பணி புரியும் அதே நிறுவனத்தில் அப்பெண்ணும் வேலை செய்வதாகவும் சொந்தஊர் சென்னையிலிருந்து 150 கி.மீ தள்ளி இருப்பதாகவும் கூறினார். அப்பெண் மறைமுகமாக காதலிப்பது போல் தெரிவதால் தான் அந்த முடிவுக்கு வந்ததாகவும் சொன்னார். தன்னுடைய சாதி மறுப்புக்கொள்கைகள் அவருக்குத்தெரியுமென்றும் கூறினார்.

” உங்களுக்கு எதிரி யாருங்க” என்றேன். “இந்த நாட்டை சூறையாடுற உலக வங்கி ஏகாதிபத்தியம் அப்புறம் ஏகாதிபத்திய கைக்கூலிகள் ” என்றார். ” அந்தப் பொண்ணைக் கேட்டுப்பாருங்க எதிர்த்த வீட்டு பிரமிளாவோ அல்லது பக்கத்து வீட்டு அனிதா இல்லைன்னா கூட வேலை செய்யுற தாரிணின்னு சொல்லுவாங்க. உழைக்கும் மக்களை  ஒடுக்குறவன பத்தி நீங்க பேசுறீங்க ஆனா அந்தப் பொண்ணு கவலை என்னவாயிருக்கும்?  அவ முடி நெறயா வளர்த்திருக்கா, அவ குத்திக்காட்டி பேசுறவ,  அவ அன்னைக்கு புது ட்ரெஸ் போட்டுகிட்டு ரொம்ப பந்தா காட்டுறா இதைத் தாண்டி வேற ஏதாவது இருக்கப்போவுதா என்ன?

“அந்தப்பொண்ணு மட்டுமில்ல பையனோ பொண்ணா  இந்தக்காலத்துல எப்புடி இருக்காங்க? இந்த நாட்டு மக்கள் மேல அக்கறையா இருக்காங்களா என்ன?  இந்த மக்கள் மேல அக்கறை வச்சு அதுக்குன்னு போராடுற நீங்களும் மக்களை மதிக்காத ஒருத்தரும் எப்படி இணைஞ்சு வாழ முடியும்? ”

“அவங்கள மாத்தவே முடியாதுன்னு சொல்லுறீங்களா?” இது கதிர் .

“நான் அப்புடி சொல்லலை மாற்றம் ஒன்றே மாறாததுன்னு ஆசான்கள் சொல்லியிருக்காங்க, மக்களை மாற்ற முடியுமின்னுதான்  நாம இப்ப வரை பேசறோம். முதல்ல அந்தப்பெண் கிட்ட உங்களைப்பத்தி பேசுங்க அரசியலை கொண்டு போங்க புத்தகங்களை  படிக்கச்சொல்லுங்க, என் திருமணம் இப்படித்தான்னு, என் வாழ்க்ககை இப்படின்னு உங்கள் மீது ஒரு கருத்தை ஏற்படுத்துங்க, அப்புறம் உங்க காதலை தெரிவியுங்க , அவங்களே முடிவு செய்யட்டும், உங்களை வாழ்க்கைத்துணையா ஏத்துக்கறதா வேண்டாமா என்று”

“சரிங்க” என்றபடி சென்றவரை சில நாட்கள் கழித்து கேட்டேன். தான் காதலை தெரிவித்து விட்டதாகவும் மனசு கேக்கவில்லை என்றும்  அப்பெண்ணும் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார்.”முட்டாள்த்தனமான முடிவென்று நினைத்துக்கொண்டு என்னுடைய சந்தேகம் அவரிடமே கேட்டேன் “எப்புடிங்க அன்னைக்கு அப்புடி பேசுனீங்க அதுக்குள்ள காதல் வலையில விழுந்துட்டீங்க”.

“நீங்கதான சொன்னீங்க காதல்ங்குறது உரிமைன்னு பெண்சுதந்திரத்திற்கானதுன்னு அதான் யோசிச்சு என் கருத்தை மாத்திகிட்டேன் என்றார் ” ஆக  சும்மா கிடந்த சங்கை நான்தான் ஊதி விட்டிருக்கிறேன்.

சில மாதங்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது அவர் சொல்லுவார் அந்தக்கூட்டத்துக்கு வரச்சொன்னேன் வந்திருந்தாங்க” சில மாதங்கள் ஓடின. அப்பெண் தன் வீட்டில் காதலை சொல்லி விட்டதால் அவருடைய தந்தை கதிரை சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார்.

“சரி போய்ட்டு வாங்க” என்றோம். அவர் மட்டும் அப்பெண் வீட்டிற்கு சென்றிருந்தார். எங்களுக்கு கொஞ்சம் பயம் தான். பொண்ணு வீட்டுக்காரனுங்க ஏதாவது செய்திடுவார்களோ என்று. அன்று இரவு வந்த அவர் அப்பெண்ணின் வீட்டில் போய் பேசி விட்டதாகவும் சொன்னார்.

அப்பெண் ஒரு மாதம் கழித்து தன்னுடைய தந்தை கண்டிப்பாக தாலி கட்டவேணடுமென்று சொல்லி விட்டதாகவும்  அப்பெண்ணின் அக்கா வீட்டுக்காரர் தி.க என்றும் அவர் தாலி கட்டிவிட்டதால் நீங்களும் தாலி கட்ட வேண்டுமென்று கதிரிடம் சொல்ல ஆரம்பித்தார். பார்ப்பானை வைத்துதான் சாங்கியமென்றும்  கண்டிச­ன்  ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருந்தது.

பார்ப்பன இந்து முறையில் பெண்ணை கேவலப்படுத்ததான் தாலி என்றும் பார்ப்பனனின் மந்திரமே பெண்ணை விபச்சாரியாக்குவதுதான் என்று பல முறை சொல்லியும் அப்பெண் கேட்கவேயில்லை. அப்பெண்ணின் அப்பாவுக்கு பணிஓய்வு பெற 4 மாதங்களிருப்பதால் அதற்குள் திருமணம் நடத்த ஏதுவாக விரைவாக பதில் சொல்லுமாறு அப்பெண் கூறினார்.

இந்த சம்பவமெல்லாம் எங்களுக்கு முன்னே நடந்தேறுகிறது. ஒருகட்டத்தில் அப்பெண் “தாலி கட்டுனா என்னை கல்யாணம் பண்ணு………….” என்க ,குமாருக்கும் அப்பெண்ணிற்கும்  சண்டையில் முடிந்திருக்கிறது. நாங்கள் எடுத்த சமாதான முயற்சிகள் பயனற்றுப்போயின. அப்பெண்ணின் ஒரே பதில் “தாலிகட்டி சம்பிரதாயத்தோடுதான் கல்யாணம் அப்படீன்னா பேசுங்க….”

“குறைந்தபட்சம் தாலிகட்டுறது தப்புன்னு தெரியாத அளவுக்கு என்ன வெங்காயம் காதலிச்சீங்களோ ஒரு இழவும் தெரியல, இப்ப என்ன பண்றது” என்றேன்.

“இல்ல நான் தாலியப்பத்தி யல்லாம் பேசியிருக்கேன், சுயமரியாதையா இருக்கணுமுன்னு பேசியிருக்கேன்” என்றார் கதிர்.

“அப்பன் கிட்ட பேசி காதலனை கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தற அளவுக்கு தைரியம் இருக்கு ஆனா தாலிகட்டாம கல்யாணம் பண்ண முடியலை இல்லையா? வரதட்சணை வேண்டாமெனில் கசக்குதா? அடிமைத்தனம் புடிக்குது உனக்கு சுதந்திரம் கொடுக்குறவன் பிடிக்கலையா? எவன் உன்னை விபச்சாரியா (பார்ப்பன இந்து மதம்) ஆக்குறானோ அவன் மேல வைக்குற நம்பிக்கையை ஒரு சதவீதம் இந்தக்காதலன் மேல வைக்க முடியலேன்னா இதுக்குப்பேர் காதல் கிடையாது. ரெண்டு பேரும் உணர்வுகளுக்கு அடிமையாயிட்டீங்க “என்றேன்.

இன்னொரு நண்பர் சொன்னார் “கடைசியா அந்தப்பெண்கிட்ட பேசிப்பாருங்க, அரசியலை சொல்லிட்டு  பக்குவமடைஞ்ச பிறகு காதலிச்சிருக்கணும். இப்ப என்ன பண்றது. எல்லாம் அப்பெண்ணோட கையில்தான் இருக்குது.”

எனக்கோ நம்பிக்கையில்லை கதிர் மீது ” தாலிகட்டிகிட்டுதான் வரப்போறாரென நினைத்தேன்”

அப்பெண் கடைசி வரை தன் முடிவில் தெளிவாயிருந்து அடிமைத்தனத்தில்  இல்லற வாழவென உறுதியாயிருக்க , கதிரோ   அந்தக்காதலை விட்டார். கதிர்  விட்டார் என்பதை விட அப்பெண் தன் முடிவில் மிக உறுதியாயிருந்தார் என்பது தான் உண்மை. ஒரு மாதம் கழித்து அப்பெண் முதல் அவர்கள் வீட்டிலிருப்பவர் வரை பலரும் கதிரை கெஞ்சிப்பார்த்து விட்டார்கள்,  தயவு செஞ்சு  “தாலி கட்டுங்க” என்று.

அப்பெண் ஆரம்பத்தில் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிவிட்டு பின்னர் காதலித்தால் மீள மாட்டான் என்று கட்டளைகள் விதித்து இருக்கிறார் .  அப்பெண்ணின் கண்ணீர், கோபம் ” எல்லாம் தாலி கட்டுங்க” என்றமைந்திருந்தது. பின்னர் வேறு நபருடன் பார்ப்பன முறைப்படி திருமணமும் செய்து ஈராண்டுகளாகிவிட்டன.

இந்த பார்ப்பன இந்து சமூகத்தின் மேல் அப்பெண் வைத்த நம்பிக்கையில்  கொஞ்சம் கூட தன் குடும்பத்தை மீறி மணக்கத்   துணிந்த காதலன் மீது இல்லை. அப்படியயனில் அந்தப்பெண் பொய்யாய் காதலித்தாரா?  இல்லை அவர் உண்மையாக கூட காதலித்திருக்கலாம் ஆனால் தாலிகட்டாமல் சாதி சொல்லாமல் வாழ்ந்தால் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணம் அந்தக்காதலைலையே தின்று விட்டது. தாலி பெரியதா? காதலன் பெரியதா? என்றபோட்டியில் அப்பெண் கடைசியில் தாலியை கட்டிக்கொண்டு போய்விட்டார்.காதலிப்பது பெரிய விசயமல்ல, இந்த மூடநம்பிக்கை சமுதாயத்தை எதிர்த்து இயங்குவதுதான் பெரியது.

பெண்ணுரிமையை வைத்துக்கொள் என்றால் எனக்குத்தேவையில்லை நான் இடிமையாய்தான் இருப்பேன், அடிமைத்தன வாழவில் அடிமைத்தன பிள்ளையை பெற்று அடிமைக்குழந்தையை அடிமைத்தனமான முறையில் வளர்ப்பேனென்றால் இங்கு என்னதான் செய்ய முடியும். கொண்ட காதலுக்காக கடைசி வரை சுயமரியாதையை கொண்ட அரசியலை இழந்து வாழமுடியுமா என்ன?

இல்லை நீ மக்களை பற்றி சிந்தித்துதான் ஆக வேண்டும். சுயமரியாதையோடுதான் வாழ வேண்டும். நீ சிந்திப்பதற்கு எல்லாமிருக்கிறது, இவ்வுலகே எனக்கு சொந்தம். சுயமரியாதைக்கு, உழைக்கும் மக்கள் உரிமைக்கு , முக்கியமாக பெண்ணுரிமைக்கு  உன்னால் முடிந்ததை எதுவேண்டுமென்றாலும் செய். பெண் ஆணைப்போல சுயேச்சையான பொருளாதாரத்துடன் வாழ அனுமதி அளிப்பதை விட வேறு ஏது சுதந்நிரம்?

ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம் வாரதிற்கொருமுறை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வேண்டும் எனில் தாலி கட்டித்தான் ஆக வேண்டுமென்று அடிமை விலங்கை ஆசையாய் மாட்டிக்கொண்டு திரிபவர்களுக்கு சுயமரியாதையும் , கம்யூனிசமும் கசக்கத்தான் செய்யும் .
சிலருக்குத் தோன்றலாம் தாலிங்குறது ,பார்ப்பானை வச்சு கல்யாணம் பண்றது சாதாரண விசயம் அதுக்கு காதலை விடலாமா? தாலி என்பதோ பார்ப்பன மந்திரமோ ஒரு செயல் மட்டுமல்ல. தாலி ஏன் உருவாக்கப்பட்டது?  இது என்னுடைய பொருள் என்று கணவன் சொல்லுவதற்காக, ஆம் திருமணத்திற்கான அடையாளமாய் பெண்ணுக்கு இருக்கும் தாலி ஆணுக்கு ஏன் இருப்பதில்லை?

ஆண்களும் பெண்களும் நிறைந்துள்ள ஒரு கூட்டத்தில்  மணமான பெண்களை கண்டறியமுடியும். ஆனால் ஆண்களை முடியுமா என்ன? அவனே சொன்னால் தான்  தெரியும். சரியான விசயமெனில் அது ஏன் ஆணுக்கில்லை. பெண்ணை பொருளாக்கும் எதையும் ஏற்பதற்கில்லை. எனும் போது எப்படி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் பெண்ணை வைப்பாட்டியாக்கும் மந்திரத்தை ஏற்க முடியும்.

பெண்ணுக்கு விடுதலை தர நினைத்த கதிரின் உண்மையான சுயமரியாதையுள்ள அரசியல்   அடிமைத்தனத்திற்கு கிஞ்சித்தும் விலை போகாமல் நின்றது. சுயமரியாதை அது தனக்குமட்டுமல்ல மற்றவர்களையும் சுயமரியாதையாகவே இருக்கக்கோருகிறது. நாத்திகர்களாக கூறிக்கொள்ளும் பலர் மறு அழைப்பின்போது தாலி கட்டிக்கொள்வதை அறிந்திருக்கிறேன். ஆனால் எதுவும் புரியாதது போல் நடிக்கும் ஒரு அடிமையை திருமணம் செய்வது ஒரு உண்மையான பகுத்தறிவுவாதியால் இயலாது.

இப்பாது காதல் என்று நான் பேச ஆரம்பித்தாலே கதிரின் கதைக்கு சென்று விடுகிறேன். அந்த அளவுக்குகாதல் பற்றிய பெரிய படிப்பினையாகிப்போனது கதிரின் காதல். காதல், பாசம்,வீடு,நட்பு,அப்பா,அம்மா,

உறவினர்கள் இதில் எதுவுமே அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. ஒரு அரசியலில் இருக்கும் நேர்மை  இப்படி எல்லாவற்றிலும் பிரதிபலிப்பது சாத்தியம்தான். அதற்கு முதலில் நேர்மையாக இருத்தல் வேண்டும். கதிர்  என் நண்பன் என்பதில் மிகவும் பெருமைதான்.

மக்களைப்பிளக்கும் சாதியை

மாதரை வதைக்கும் தாலியை

சித்தத்தையே அழிக்கும் சாத்திரத்தை

மொத்தமாய் புதைப்போம்

மகஇக, புமாஇமு,புஜதொமு,விவிமு ஆகிய புரட்சிகர அமைப்பில் உள்ள தோழர்களின் புரட்சிகர மணவிழா பத்திரிக்கையில் பொறிக்கப்படும் புகழ்பெற்ற வாசகம்.

I.T-ன் ஆணாதிக்கம்

கதை

கண்டிப்பாய் வருவீர்களா தோழரே? புதுவையில் போர்க்கோலம்

மே 4, 2010

கண்டிப்பாய் வருவீர்களா தோழரே?
புதுவையில் போர்க்கோலம்

இந்த முறையும் மே 1க்கு கலந்து கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாயிருந்தேன். முதல் நாள் விழுப்புரத்தில் ஒரு வேலை விசயமாக நண்பரின் இல்லத்தில் தங்கி விட்டேன். மே 1 காலை 10.30 மணிக்கு கிளம்பினேன்.   காலை 10.30 மணியையைப்போலவே இல்லை. இரவெல்லாம் மழை. விழுப்புரம் பேருந்து நிலையம் கூட்டமின்றி வெறிச்சோடிக்கிடக்க, பேருந்திற்காக காத்திருந்தேன் வரிசையாய் தனியார் பேருந்துகள். அரை மணி நேரம் கழித்து வந்த அரசுப்பேருந்தில் ஏறினேன். வெளியூர் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்களை போராட்டங்களில் மட்டும் தான் பார்க்க முடிகிறது.

கடைசியாய் நாங்கள் தோழர் பசந்தா கருத்தரங்கில் பார்த்ததுதான். அப்புறம் வாய்ப்பே இல்லை. ஒவ்வொருமுறை வாய்ப்பு கிடைக்கும் போதும்  எப்படி இருக்கீங்க என்பதில் தொடங்கி, சுவையான நிகழ்வுகள் என போய்க்கொண்டு இருக்கும்.  இம்முறை முக்கியமாக அங்காடித்தெருவைப் பற்றி பேசலாம் என எண்ணியிருந்தேன். பேருந்து விழுப்புரம் டவுனை கடக்கும் போது ஒரு கண் கொள்ளாக்காட்சியைப் பார்த்தேன்.

சிஐடியூ தோலர்கள் கும்பலாக பேனர் பிடித்தபடி பேரணியில் சென்று கொண்டிருக்க, முன்னே பேண்ட் வாத்தியம் சென்று கொண்டிருந்தது. சினிமாப் பாட்டுக்கு தாளம் தப்பாமல் அடித்துக்கொண்டிருக்க, சிஐடியுவோ அதில் வர்க்கப்பார்வையை தேடிக்கொண்டிருந்தது. புதுவையை அடைந்தேன் மணி 12 ஆனது. பேருந்து நிலையத்தில் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அமைதியாய் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்தேன்.

நண்பர்கள் இருவருக்கும் போன் செய்து கேட்டேன் இருவரும் ஒரே மாதிரி சொன்னார்கள் லேட் ஆயிடுச்சு, எப்புடியும் 3 மணி ஆயிடும். சரி என்ன பண்ணலாம் என்று யோசித்தபடியே  அருகிலிருந்த நபரிடம் பேச்சுக்கொடுக்க, புதுவையில் பீச் இருப்பது தெரிந்தது. சரி பீச்சுக்குத்தான் நடந்து போவோமே என்று கிளம்பினேன். வேடிக்கைப்பார்ப்பதற்கு அல்ல, நேரம் கடக்க ஒரு வழி.

பேருந்து நிலையம் விட்டு நேராய் போய்க்கொண்டிருந்தேன், யாரையும் கேட்க வில்லை, ஆங்காங்கே போர்டுகள்பல்லைக்காட்டின” பீச்-க்கு செல்லும் வழி”. செல்லும் வழியில் தெருக்களின் பெயர்களைப்பார்த்தேன். முதலில் தமிழ், பின்பு ஆங்கிலம், பின்னர் பிரெஞ்சு என மும்மொழிகளில் இருந்தன. காலனியின் எச்சங்கள் பெருமையாய் படர்ந்திருந்தன.கடற்கரைக்கென செல்லும் அந்த பிரத்யேகமான அந்த சாலைதான் மினிஸ்டர் ரெசிடென்சியல் ஏரியாவாம். பல புதிய கட்டிடங்கள் கூட பிரெஞ்சுமுறையில் இருந்தன.
அமைதியாக இருந்தது. பீச்சை நெருங்கிய போது மற்றொரு கிளைச்சாலையில் ஏதோ கூட்டமாய் இருந்தது.

நெருங்கிபார்த்தேன் அது சினிமா பட சூட்டிங், கொரியாகாரர் போல இருந்த அந்த ஸ்டண்ட் மாஸ்டர் சண்டைகாட்சிகளை தெளிவான தமிழில் இயக்கிக்கொண்டிருந்தார். சூட்டிங்கை பார்த்தேன் ஒரு ஆம்புலன்ஸ் போன்ற வண்டி அதில் சில முகமூடி அணிந்த நபர்கள் , வெயிலில் துணை நடிகர்கள் பைக்கில் நால்வர், எங்கடா  நாயகனைக்காணவில்லைஎன்று தேடியபோது ஜீவா வந்தார். மற்ற துணை நடிகர்களெல்லாம் வெயிலில் நனைந்து வியர்வையில் ஊறிப்போயிருக்க. ஜீவா செயற்கையாக ஒரு டப்பாவிலிருந்து வியர்வையை தெளித்துக்கொண்டிருந்தார்.

பார்த்தால் உண்மையான வியர்வைவிட ஜீவாவின் மேல் போடப்பட்ட வியர்வை அதிகமாய் இருந்தது,எப்போதும் போலிகள் தான உண்மைகளைத் தின்கின்றன. அங்கிருந்து கிளம்பி கடற்கரைக்கு சென்றேன், அம்பேத்கார் மணி மண்டபம் இருந்தது. கடற்கரையை இரண்டு ரவுண்ட் சுற்றினே. பிரெஞ்சுகாரர்கள் பலர் அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நம்மவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் நினைத்தேன் “அவனோட ஊர்ல போய் என்னன்னு சொல்லுவான், நம்ம காலனி நாட்டுக்கு போய்ட்டு வந்தேன்னு சொல்லுவானா”

மீண்டும் கிளம்பினேன். வரும் வழியில் கம்பன் அரங்கத்தில் விழாவாம், கவர்னர், முதல்வர், எல்லா அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்களாம். இன்றுதான் திறக்கப்படப்போகிறதாம். அதைக்கடக்கும் போது ஒருவர்என்னிடம் கேட்டார்”இன்னைக்கு திறக்கப் போறாங்களாமா?”   “ஆமா இன்னிக்கே போயிடுங்க அப்புறம் உடமாட்டாங்க” என்ற படியே கிளம்பினேன். ஆபாசக்கவிஞனுக்கு கோடிக்கணக்கில் அரங்கம், உழைக்கும் மக்களுக்கோ பட்டை நாமம்.

மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்தேன். எதிர்பார்த்த நண்பர்கள் வந்து சேர , பேருந்து நிலையத்தில் திரும்பியபக்கமெல்லாம் சிவப்பு நிறமாயிருக்க, நண்பர்களோடு  பேசிக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. பசித்தது, எந்த ஹோட்டலிலும் சாப்பாடு இல்லை, இறுதியாக
ஒரு ஹோட்டலில் நுழைந்து ஆளுக்கொரு தோசை சொன்னோம், சாப்பிட ஆரம்பித்த வேளையில் பறைசத்தம் கேட்டது. அப்படியே விட்டுவிட்டு கிளம்பினோம்.

தோழர்கள் பறையடித்தவாறே இருக்க, மற்ற தோழர்கள் பேருந்து நிலையத்தில் இரு பக்கங்களையும் முற்றுகையிட்டு  முழக்கமிட்டனர். சுமார் 20 நிமிடம் கழித்து ஒருபக்கத்தை மட்டும் விட்டு மற்ற பக்கத்தை முற்றுகையிட்டு  தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசு பொறுமையாய் வந்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை போலும். அனைத்து பேருந்துகளும் முடங்கிப்போயின.

தோழரின் மைக்கைப் பிடுங்கினார் ஒரு  அதிகாரி,  மைக்கிலிருந்து முழக்கம் வருகிறதென்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது அந்த மெத்தப்படித்தவர். தோழர்கள் தங்கள் போர்க்குரலைத்தொடர
கடுமையான டிராபிக் ஜாம். தோழர்கள் பேருந்து போக்குவரத்தை வரிசைப்படுத்தினர். போலீசு வேடிக்கைப்பார்த்தது. கைது செய்ய வரும் வேனை தோழர்கள் டிராபிக் ஜாமிலிருந்து மீட்டு முன்னே கொண்டு வந்தனர். (என்னன்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்குது !!!!!)

நடுவில் ஒரு சீபீஎம் கொடி கட்டிய ஆட்டோ வந்தது அதில் எம்ஜியார்படத்து வர்க்கப்பாடல்களை ஒலிபரப்பியபடி சென்றார் ஒரு தோலர்.அவர் பார்வையில் அவர் வர்க்கப்போராட்டத்தை சினிமாப்பாட்டுக்கள் மூலம் நடத்திக்கொண்டிருந்தார்.

போலீசின் வண்டிகள் வரிசையாய் நிரம்பின, அவர்களிடம் போதிய வண்டிகள் இல்லை. தனியார் பேருந்துகளை கொண்டு வந்தனர். ஒவ்வொரு பேருந்துக்கும் அளவுக்கு ஏற்ற தோழர்களை தோழர்களே ஒழுங்கமைத்துக் கொண்டு வண்டியில் ஏறினர்.சீறிய முழக்கம் ஆளும் வர்க்கத்தின் காதை கண்டிப்பாய் கிழித்திருக்கும்.   இப்போது கலைக்குழு தோழர்களிடமிருந்து பறை  வேறு  தோழர்களிடமிருந்தது.

அவர்கள் ஆரம்பித்தார்கள். அந்த இசை இறுதிவரை குறையவே இல்லை. அதிலும் மிகவும் ஒரு குட்டித்தோழர் ஆர்வமாக பறையடித்தார். அவரைபார்க்க எனக்குப் பொறாமையாக இருந்தது. இந்த வயதில் நான் என்ன செய்திருப்பேன் என நினைத்தேன்” விளையாடவும் வயிறு முட்டத்தின்னவும் தவிர எதுவும் நினைவில் இல்லை ” வெட்கம் பிடுங்கித்தின்றது.

உன் விரல்களில்  இன்னும்
உரமேற்று  தோழனே
மரத்துப்போன எங்கள்
அடிமைத்தோல்களை
அடித்துக் கிழி

காவல் வண்டியில் ஏற்றவே 6 மணிக்குமேல் ஆனது. தோழர்கள் காவல் பயிற்சிப்பள்ளியில் வைக்கப்பட்டார்கள். அங்கேயே பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சியாவும் நடந்தேறியது. 8 மணிக்கு போலீசு விடுதலை செய்தது நாங்கள் கிளம்பினோம், ஆளுக்கொரு திசையாய். மறுபடியும் அடுத்த போராட்டத்தில் தானே பார்க்க முடியும்.

மீண்டும் பேருந்தில் ஏறிசென்ற போது வழியில்  பல சிஐடியூ போர்டுகளுக்கு சந்தனம் பொட்டு வைத்திருந்தார்கள். பூசையெல்லாம் காலையிலேயே முடிந்திருக்கும் போல.அதிமுக  மேதின விழா சாலையில் நடந்து கொண்டிருந்தது. தோலர் குண்டு கல்யாணம் பேசிக்கொண்டிருந்தார். அவர் என்ன பேசுவார் தொழிலாளர் உரிமைகள் செயாவின் சுருக்குப்பையில் இருப்பதை விளக்குவார். ஒருவகையில் புதுவையின் இப்போராட்டம் ஒரு தொடக்கமே. “நம்முடைய ஆயுதத்தை எதிரி தான் தீர்மானிக்கிறான்”

உண்மைதான் புதுவையிலிருந்து 4 கி.மீ தள்ளி உள்ள இடத்தில்  பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தந்திருந்தால் இவ்வளவு சிரமம் போலீசுக்கே இருந்திருக்காது.  பாசிசம் எவ்வளவு கொடூரமானதாயிருந்தாலும் அது முட்டாள்தனமானது. ஆசான் மார்க்ஸ் சொன்னாரே “முதலாளித்துவம் தன் புதைகுழியை தானே தோண்டிக்கொள்கிறதென்று” எத்துணை உண்மை. இந்த முட்டாள் பாசிசம் தானே நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை தீர்மானித்தது. அது இதனால் எதை மூடி மறைக்க நினைத்ததோ அது தானாய் வெடித்து விட்டதல்லவா,   “மகிழ்ச்சி என்பது போராட்டமே”, இனி போராட்டங்களை மகிழ்ச்சியாய் தொடர்வோம்.
அடுத்தப்போராட்டத்தில் அந்த குட்டித்தோழரை பார்ப்பதற்கு ஆவலாயிருக்கிறேன். கண்டிப்பாய் வருவீர்களா தோழரே? இன்னமும் எங்கள் தோல்கள் கிழிக்கப்படவில்லையே.





1.ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் போராட்டம் – படங்கள் !!

2.ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம் ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!

ஸ்ரீநி & சாநி – அமைதியைத் தேடுவோரே ! கேட்கிறதா எமது குரல் ?

மார்ச் 19, 2010

ஸ்ரீநி & சாநி

அமைதியைத் தேடுவோரே ! கேட்கிறதா எமது குரல் ?

ஒரு காலத்தில் ஸ்ரீநித்யானந்தாவிற்க்கு அல்லக்கையாய் இருந்த நம்ம சாரு நிவேதிதா அவரை கண்டபடி திட்டிக்கொண்டு இருக்கிறார்.  அவன் நடிகையின் குண்டியை அவன் நக்கினால் அதற்கு நானா பொறுப்பு? ஆங்கில புத்தகங்களை மொழி பெயர்த்ததற்கு இன்னும் பணம் தர வில்லை. கும்பமேளா யாத்திரைக்கு 1 லட்சம் கொட்டினேன்.  அத்தான் என்னை ஏமாத்திட்டு போயிட்டீங்களே? என்றாடி புலம்பிக் கொண்டிருக்கிறார்.

அவர் திட்டுவதும்,  புலம்புவதும் உண்மைதானா?  நம்ம சாநி மட்டுமல்ல ஸ்ரீநியின் முன்னாள் அல்லக்கைகள் பலருக்கும்  அவனை திட்ட வேண்டிய இப்போது அவசியமிருக்கிறது.

ஸ்ரீநியின் ஆளுயர போட்டோக்கள் மாட்டப்பட்ட மருத்துவமனைகள், ஹோட்டல்கள் இதர எண்ணற்ற அங்காடிகளின் புனித இடங்களெல்லாம் எல்லாம் வெறுமையாய் காட்சியளிக்கின்றன.  அவை எப்போதும் வெறுமையாய் இருக்கும் எனறு சொல்ல முடியாது.

எனக்குத்தெரிந்து அந்த விபச்சாரியை (ஸ்ரீநி ) வைத்து பணம் சம்பாதித்த மாமாக்கள் சரக்குக்கான மவுசு குறைந்தவுடன் வேறு ஒரு விபச்சாரிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். குமுதம் மாமாவோ அவனை வைத்து தானும் கல்லா கட்டிக்கொண்டு இப்போது சீக்காளி விலைமகளை மாமாப்பயல் தூற்றுவது போல வைதுக்கெதண்டிருக்கிறது.

ஸ்ரீநியை திட்டும் ஊடகங்களாகட்டும் அல்லக்கைகளாகட்டும் உதிர்க்கும் வார்த்தைகள் என்ன?  ஏமாற்றி விட்டார்? புனிதமான காவியுடையை போட்டுக்கொண்டு…….. என்று இழுக்கின்றன. சாநியாகட்டும் மற்ற யாராகட்டும் பார்ப்பன இந்து மதத்துககு எந்த கேடும் வராத தீர்வை கேட்கிறார்கள். ஒன்று அவர் நல்லவராயிருக்க வேண்டும், இல்லையயனில் அவர் தப்பே செய்திருந்தாலும் அவருக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பில்லை. (  note this point u’r honourஅவர் நல்லவராயிருந்தால் அது இந்து மதத்தோடு தொடர்புடையது.)

சாநி குமுதம் ரிப்போர்ட்டரில் “”சரசம் சல்லாபம் சாமியார்…..” எனற பெயரில் தொடரினை எழுதி வருகிறார் அதில் 2 வது பாகத்தில் அவர் எழுதுவதைப்பார்க்கும் எல்லோருக்கும் புரியும் சொல்லும் கருத்து “ இதுக்காக அவர் ரொம்ப மோசமில்லை கொஞ்சம் மோசம்”

“”என் மனைவி அவந்திகாவுக்கும் அதே தான் நடந்தது. பழம், அவித்த காய்கறிகள் தவிர எதைச்சாப்பிடடாலும் உடனே அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய நிலையில் இருந்தாள். கடந்த நான்கு ஆண்டுகளாக அலோபதி,  சித்த வைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று எந்த வைத்திய முறையிலும் குணமாகவில்லை. இந்த சாமியார் ஏதோ புரியாத கைகளை ஆட்டி நமக்குப்புரியாத வார்த்தகைளைச் சொன்னார்.சரியாகி விட்டது”

அதாவது இன்னமும் ஏதாவது ஒரு மருத்துவமனையிலோ அல்லது லாட்ஜிலேயோ நித்தியின் படத்தை மாட்டி வைத்திருந்தால் என்ன நடக்கும் ? நித்தியின் சிடியினைக்கேட்டு மக்கள் கூட்டம் மொய்க்கும்.  பேர் கொஞ்சம் டேமேஜ் ஆகும். தனக்கு வியாபாரத்திற்காக பயன் பட்டவன் இப்போது கொஞ்சம் தள்ளி வைக்கப்பபட்டிருக்கிறான். அவ்வளவுதான் அதற்காக அவனை முற்றிலும் அவர்கள் வெறுத்து விட்டார்கள் என்று சொல்லமுடியுமா?

இப்போதுகூட நித்தி பாலியல் ரீதியாக சம்பந்தப்படுத்தப்பட்டு வீடியோ வெளியே வந்திருப்பதால் அவனை திட்டுவது போல் பாசாங்கு காட்டுகிறார்கள். இதே பாலியல் அல்லாது வேறு ஏதாவது பிரச்சினையில் சிக்கியிருந்தால் அது ஒரு குற்றமாகவே இனம் காணப்படாது.

மருத்துவர் ருத்ரன் சொன்னது போல் இவன் மீது கோபம் கொள்ள இப்படி ஒரு படம் தேவைப்படுகிறது. எவ்வளவு கேவலமான அடிமைத்தனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

போலிச்சாமியார் என்று ஒன்று இல்லை, சாமியார் என்பதே போலிதானே அதில் என்ன தனியாக போலி?  நான் கடவுளை நேரடியாக வணங்குகிறேன். அவன் என்னைப் படைத்தது உண்மை என்றால் நான் பேசுவது அவனுக்குப் புரிய வேண்டுமா இல்லையா?  அப்படிப்புரியும் போது நடுவில் எதற்கு ஒரு புரோக்கர் ? நான் சொன்னால் கடவுள் கேட்க மாட்டானா? அவனுக்கு புரோக்கர் தேவைப்படுகிறதா?  அவன் சொன்னால் தான் ஆண்டவனுக்கு புரியுமா ?   நான் சொன்னால் என்னைப்படைத்தவனுக்கு ஏன் புரியாது ?  எல்லாவற்றையும் அவன்தான் படைத்தானென்றால் , எல்லாவற்றுக்கும் அவன் சிரத்தை தேவையயனில்  ஜெயேந்திரன் சங்கரராமனை கொன்றதற்கும், தேவநாதனின் பாலியல் பூசைக்கும், நித்திக்குட்டியின் “ஆன்மீக” ஆராய்ச்சிக்கும் பரம்பொருளின் சிரத்தை தேவைப்பட்டதா ? பக்தனுக்கு இக்கேள்விகள் எப்போதுமே எழுவதில்லை. எழுகின்றவர்கள் பக்தர்களாக நீடிப்பதுமில்லை. இல்லாத ஒருவனை வைத்து  மேற்கொள்ளப்படும் மாய்மலங்கள் தான் மதம்.

மதம் என்ற கஞ்சா செடியும்

ஆன்மீகம் என்ற ஹெராயினும்

இறைவன் இருக்கின்றான். எல்லாப்பிரச்சினைகளுக்கும் அவன் தான் இறுதித்தீர்வு. மக்கள் நல்வழிகளில் செல்வதில்லை உலகம் கண்டிப்பாக அழியும் நம்பை கல்கி பகவானோ, அல்லாவோ, இயேசுவோ   அல்லது ………….. காப்பாற்றுவார்கள்”

மக்களுடைய பொருளாதார, சமூகப்பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? அதைத்தீர்கக என்ன வழி? உழைப்பவர்கள் ஒருசாரராகவும் அதைவைத்து பிழைப்பவர்கள் ஒரு சாரராகவும் இருக்கிறார்கள்.  பொருளாதார ரீதியாக பலமானவர்கள் தங்களின் சுகங்கள் பறிபோகா வண்ணம் சட்டங்களைப்படைக்கிறார்கள். அவர்களின் சுகங்கள்  உழைப்பவர்களின் ரத்தத்தை கேட்கின்றன. அதை எப்படி மாற்றியமைப்பது?  இல்லை அதை மாற்றியமைக்க முடியாது. ஏனென்றால் அது இறைவன் கொடுத்தது. யார் இறைவன் தெரியுமா ? உன்னையும் என்னையும் ஏன் இந்த உலகத்தையும் படைத்தான். இப்பூவுலகில் நடக்கும் ஒவ்வொன்றிற்கும் அவன்தான் காரணம்.

உனக்கென்று ஆண்டவன் என்ன கொடுத்தானோ அதுதான் அதைத்தாண்டி நீ எதையும் பெற முடியாது. உன்னுடைய குறைகளுக்காக ஆணடவனை வணங்கு, தொழு,  கண்ணீர் விடு. கருணைக்காட்டுவான். மதமென்ற நிறுவனம்  பல கடவுள்களை பெற்றது.  மக்களின் கலாச்சாரங்களுக்கேற்றபடி பல தேவர்கள் பிறந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தோன்றியதாக சொல்லப்பட்ட தேவர்கள் பின்னாளில் ஆளும் வர்க்கத்தின் தூதர்களானார்கள். மக்களின் எல்லாத்தேவைகளுக்கும் கடவுளும் மதமும் காரணமாக அறியப்பட்டன. அவைகளோடு பின்னி பிணைக்கப்பட்டார்கள்.  எல்லாவற்றிற்கும் கேள்,  கருணையோடு கேள், கெஞ்சிக்கேள், உன்னை வருத்திக்கேள். ஆண்டவன் தருவார்.  ஆண்டவனைப்பெற்ற அதிகாரம்  தன்னைக்காக்க  மதமென்னும் கஞ்சாவை நிறுவனமாக்கி மெல்ல மெல்லக் கொடுத்தது.

உனக்காக நீ போராடுவது தவறு அது ஆண்டவனை கோபம் கொள்ளச்செய்யும், போராடுவது ஆண்டவனை மட்டுமா கோபம் கொள்ளச்செய்யும் ,அதிகாரத்தையும் கூட அல்லவா ? ஆண்டவனிடம் நீ கேள்வி கேட்க முடியாது. அதிகாரத்தையும் நீ கேள்வி கேட்க முடியாது. அவராவது ஏதாவது பார்த்துக்கொடுப்பார். அதுவும்  முன்னோர்கள் சரியில்லை யயனில் அதுவும் கிடைக்காது. கேள்விக்கு அப்பாற்பட்டதாய் மதம் விளங்கியது.

இந்த மாடர்ன் உலகில் மக்கள் தங்கள் பிரச்சினைகளை மறக்க புது வழிமுறை தேவைப்படுகிறது. அறிவுஜீவிகள், மேதாவிகள், தின்று செரிக்காத உடல்கள் எல்லாவற்றுக்கும் அமைதிதான் பற்றாக்குறை. அவற்றைத்தேடி அலைகிறார்கள். சாதாரண மனிதனும் பொருளாதார பிரச்சினை ஆனாலும் சரி சமூகபிரச்சினை ஆனாலும் சரி அதற்கும் அமைதிதான் பற்றாக்குறை என நினைக்கிறான்/ நினைக்கவைக்கப்படுகிறான்.

மதத்தில் பாடப்பட்ட அதே ராகங்கள் இங்கேயும் ஒலிக்கின்றன.  ஆனால் வேறு வித்யாசமான வழிகளில்….. சமூகத்திலிருந்நு பிரிந்து வாழ்,  சமூகத்தைப்பற்றி நினைக்காதே .ஆனால் ஒரே தீர்வுதான் போராடாதே எதற்கும் எங்கேயும். எல்லாம் கர்ம வினை தான் காரணம். போதை என்றால் கஞ்சா மட்டும் தான் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. தேவைக்கேற்றபடி அது ஹெராயின், பிரவுன் சுகர் என்றபடி போய்க்கொண்டே இருக்கிறது. பார்ப்பனீயத்தை ஒழிப்பதுதான் என் குறிக்கோள் என்று  எந்த சாமியாராவது சொல்லியிருக்கிறாரா?

இல்லை எந்த ஆனந்தமாவது அழிந்து போன விவசாயத்ததை, சிதைக்கபடும் தொழில்களை,  உறிஞ்சப்படும் நீர் வளத்தை பற்றி அதற்காக போராடுவதைப்பற்றி பேசியிருக்கிறார்களா?  பிறப்புக்கு முன்னும் இறப்புக்கு பின்னும் எல்லாவற்றையும் பேசுவார்கள் ஆனால் அதற்கு நடுவில் வாழும் வாழ்க்கையின் போராட்டங்களை பற்றி ஏன் பேசுவதில்லை ? அரிசி,  பருப்பு,  மிளகாய் என தினமும் விலைவாசி அவர்கள் சொல்கிறார்களே அந்த அண்ட சராசரத்தயைம் தாண்டி போகிறதே அதை குறைக்க என்ன வழி?

ஏன் பேசவில்லை என்பதல்ல நாம் தப்பித்தவறி கூட பேசிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமைதிதான் வேண்டுமானால் அது மயானத்திலும் கிடைக்கும். யாருக்குத்தான் அமைதியின் மீது காதலில்லை? அந்த அமைதியை பெற அதிகாரத்தை கைப்பற்றியாக வேண்டும். அதற்கு அமைதியாய் இருக்க முடியுமா என்ன?

அமைதிதான் எல்லாவற்றுக்கும் தீர்வென்பவர்கள் அமைதியாயிருப்பதில்லை. அவர்கள் அமைதியை ஜட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்து விடுகிறார்கள், சிறு குழந்தைகளின் பேண்ட்களை பிடித்து இழுக்கிறார்கள், அவர்கள்தான் இசுரேலை புனித பூமியன்கிறார்கள், ராமனுக்கு கோயிலைக்கட்டு என்கிறார்கள், செத்த மாட்டுக்காக 5 தலித்துக்களை கொன்றார்கள், அவர்கள்தான் சாட்சாத் பெருமாள் கோயிலுக்குள்ளே புகுந்து கொலையும் செய்கிறார்கள்.

மறுபடியும் சாணியிடம் போவோம்

சாநி போட்டிருக்கும் அந்த சாணியைப்பார்ப்போம்  ” எனக்குத் தெரிந்த பெண். கையில் மூன்று மாத குழந்தை  . நடு இரவில் அவரை அடித்து உதைத்து கணவன் வீட்டை விட்டு விரட்டு விட்டான். குளிர் காலம். நியூயார்க் நகரம். பாஸ்போர்ட் கணவன் கையில். கையில் காசு இல்லை. ஒரு தோழி தான் உ துணை செய்திருக்கிறார். என்னிடம் அந்தப்பெண் இதைச் சொன்ன போது ஒரு விசயம் ஆச்சர்யமாக இருந்தது. அவள் கணவன் ஐ.ஐ.டியில் தங்கப்பதக்கம் பெற்றவன்.இப்போது அந்த மனிதன் செய்த பாதகச்செயலுக்காக அவன் வாங்கிய தங்கப்பதக்கம் போலியானது என்று சொல்வீர்களா? அதேதான் இந்தச் சாமியாருக்கும் பொருந்தும். இவருடைய சல்லாபங்களை பார்த்து விட்டு “இவர் ஒரு பிராடு”” என்று சொல்லும் போது இதை யோசிக்க வேண்டும். பதஞ்சலி முனிவரிடமிருந்து யோகத்தையும், புத்தனிடமிருந்து ஞானத்தையும் கடன் வாங்கி, அதைத் தனது சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொண்டவர் நித்யானந்தா.’

அவன் கெட்டவன்தான், ஆனா அவ்வளவு கெட்டவன் கிடையாது. இது தான் ஸ்ரீநிக்கு சாநி போட்ட ஸ்டேட்மெண்ட்.  சாநியை ஸ்ரீநி வென்ற இடமென்று ஒரு கதையைச்சொன்னதாக இங்கு எழுதியிருக்கிறார். சாநியைப்பொறுத்த வரை நித்யானந்தா பொம்பளை விசயத்தை தவிர சாமியார்தான். சாமியார் செய்த தப்பு அவ்வளவு தான். இதற்காக சாமியாரே இல்லைன்னு சொல்ல முடியுமா? ஸ்ரீநியின் நீலப்படம் வந்த ஒரு நாளுக்குள்ளேயே தன் தளத்தில் அவரை திட்ட ஆரம்பித்திருந்தார். திட்டாமல் இருந்திருந்தால் “ஏன் அமைதியாய் இருக்கிறாய் உனக்கும் அவனுக்கும் வேறு தொடர்பு இருக்கிறதா?”  போன்ற கேள்விகள் வரும். தன் இமேஜ் சரிவதை திட்டிக் காப்பாற்றினார்.

ஆனால் அந்த மனசு கேக்குமா? ஆண்டவன் ஒரே மனசை படைச்சுட்டானே. அவர் நினைத்தாலும் அதைமீறி அவர் மனது அவர் சாமியார்தான், எல்லாம் அறிந்தவர் தானென சான்றிதழ் தருகிறது. பாட்சா படத்தில் ஒரு டயலாக் “அய்யா மனசில வர முதல் காதல்ங்குறது முள்ளு மாரி அவங்களை குத்திகிட்டே இருக்கும்”

அப்படித்தான் ஸ்ரீநி மீதான சாநியின் காதல் அவரே நினைத்தாலும் விட மறுக்கிறது போலும். போதையின் சுவை மீண்டும் அவரையறியாமலே கேட்கிறது. ஆமா இவரையயல்லாம்  பெரியாரியவாதின்னு போடுகின்ற மாமாப் பத்திரிக்கைகளை எதைக்கொண்டு அடிப்பது?

அமைதியாய் இருக்கக்கூடாத நாம் அமைதியாயிருக்கிறோம். நம் உரிமைகள் ஒவவொன்றாய் பறிக்கப்பட்டுகொண்டிருக்கின்றன. விதர்பாவில் இலட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள்செத்துப்போய் விட்டார்கள்.

ஒரே வழிதான் மாற்று. சமூகத்தை சார்ந்திருப்போம். மக்களை சார்ந்திருப்போம். மக்களைப்படிப்போம் , மக்களை கற்போம், மக்களிடம் சென்று கற்பிப்போம். அது ஒன்றுதான் உண்மையான ஆனந்தத்தை பெறும் வழி. போராட்டம் ஒன்று தான்  சுயமரியாதையைத் தரும். போராட்டம் ஒன்று தான் மகிழ்ச்சியைத்தரும்.

அன்றாடம் பேருந்துகளில், புகைவண்டிகளில் , தெருக்களில் “அன்பார்ந்த உழைக்கும் மக்களே ” என ஆரம்பிக்கும் நக்சல்பாரி தோழரைக் கேளுங்கள் எது ஆனந்தம் என்று, தில்லையிலே தமிழ் முழங்க தம் ரத்தத்ததை சிந்திய தோழர்களைக் கேளுங்கள்,  தண்டகாரண்யாவிலே அந்நிய ஆதிக்கத்திற்கெதிராக ஆயுதமேந்தும் பழங்குடின மக்களைக் கேளுங்கள் எது மகிழச்சி,  எது ஆனந்தம் என்று.

அதை விட்டுவிட்டு இன்னும் கும்மிருட்டில் குண்டலினியை நீங்கள் எழுப்பிக்கொண்டிருந்தால் நீங்கள் மனிதத்தன்மையை மட்டுமல்ல மானத்தையும் இழந்து விட்டீர்கள் என்று பொருள்.

நித்தியிடம் ஆனந்தம் தேடி சென்றவர்களாகட்டும், இனி அவனிடம் பொறுமையாய் காலம் கனிந்தபின் தேடப்போகும் நபர்களாகட்டும், வேறு யாரிடமாவது ஆனந்தம் என்ற ஹெராயினை , பிரவுன் சுகரை  சுகிப்பவர்ளாகட்டும் நம்ம சாநி உட்பட,

உங்கள் காதுகளில் கேட்கிறதா புரட்சிக்கவியின் எழுத்தில் எமது குரல்பாரடா உனது மானிடப் பரப்பை” “காடுகளைந்தோம்”

related

0.சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!
1.ஆன்மீகத்தேடல்கள்
  • 2.வர்க்கம்
    ஒன்றே பதில் சொல்லும்
  • தில்லையில் பார்ப்பன சதிராட்டம்- அடிவருடிகளின் ஒயிலாட்டம்

    ஜூலை 15, 2009

    தில்லையில் பார்ப்பன சதிராட்டம்
    அடிவருடிகளின் ஒயிலாட்டம்

    பல நாட்கள் கழித்து தில்லைக்கு சென்றிருந்தேன்.ஆரம்பத்திலிருதே தில்லையை பிடிக்காது அதற்கு நான் சொன்ன காரணம் “இங்க பாப்பானும் பன்னியும்தான் அதிகமா இருக்கு” , பின்னர் தேவையின் கருதியும், ம க இ க வின் போராட்டங்களுக்கு என பலமுறை வந்தாயிற்று . ஆனால் பல நாட்கள் கழித்து சென்ற எனக்கோ பார்ப்பன சதிராட்டமும் அடிவருடிகளின் கோலாட்டம், ஒயிலாட்டம் ……. என பலவும் காத்திருந்தது.

    காலையில் வேலையினை முடித்துவிட்டிருந்தேன். நண்பர் கேட்டார் “இன்னைக்கு தேர் தரிசனம் வரீங்களா போலாம்”.வேண்டாங்க அந்த பாப்பான் மூஞ்சில முழிச்சாலே” என இழுத்தேன். கூட இருந்த இன்னொருவரோ “அப்ப எப்பத்தான் இத தெரிஞ்சுக்கப்போறீங்க” என்ற படி கிளம்பினோம்.

    சிதம்பரம் மேல வீதி முழுக்க போலீஸ் பந்தோபஸ்து மிகஅதிகமாகவே இருந்தது. ஒரே கூட்டம். மக்கள் எல்லாம் செட் செட்டாக கிளம்பிக்கொண்டிருந்தனர்.சிறியவர், பதின்வயது பெண்கள் , ஆண்கள், பெரியவர்கள்  என குரூப் குரூப்பாக சென்று கொண்டிருந்தனர்.  தனது சொந்தக்கதை சோகக்கதையை பெரியவர்களும் , பெண்கள் ஏதோ சிரித்தபடி செல்ல அவர்களை பார்ப்பதற்காக பொறுக்கிகளென எப்படியோ சாமியை பார்க்கும் சாக்கில் இத்தனையும் நடந்து கொண்டிருந்தது.
    செல்லும் வழியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன”தீட்ஷிதர்களுக்கு சொந்தமான சபா நாயகர் திருக்கோயில் தேர் ஆனித்திருமஞ்சனம் “. பார்த்தவுடன் எனக்கு திக்கென்று இருந்தது . என்னடா அரசு கோயிலை பொதுவாக்கப்போறோமுன்னு உண்டியலை வச்சிருக்கு .

    “இவன் என் கோயில்னு எப்பவும்
    போல ஒட்டிருக்காணுங்க” இதே புரட்சிகர அமைப்புக்கள் போஸ்டர் ஒட்டினால் கழுதை வேலையை சிறப்பாய் செய்யும் அரசாங்கம்  ஒட்டிய பசையில் பார்ப்பன நாற்றத்தை கண்டு பயந்தே போனது.

    மேலும் பல அடிகள் நோக்கி நடக்க தரிசன கடைகள் பலவும் முளைத்திருந்தன வந்த கூட்டமெல்லாம் கடைகளில்தான் முக்கால் வாசி மொய்த்திருந்தன. அம்பாசடர் காரில் வந்த நபரோ “தங்களுடைய பொருட்களையும், குழந்தைகளையும் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் திருடர்கள் ஜாக்கிரதை ” சொல்லிக்கொண்டிருந்தார். ஏற்ற படி பார்ப்பன தீட்ஷிதர்கள் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தனர்.திருட்டுக்கோட்டைக்கு அருகில் அப்படி சொல்ல அவருக்கு அதிகம் தைரியம் வேண்டும்.

    கோயிலுக்கு மிக அருகில் சென்று விட்டு திரும்பும் போது ” ஒரு டிஜிட்டல் பிளக்ஸ் போர்டினை பார்த்தேன் “இலவச அன்னதானம் அனைத்து பக்தர்களும் தவறாது அன்னதானத்தை பெற்றுக்கொள்ளவும். இப்படிக்கு நவதாண்டவ தீட்ஷிதன்”  என்றிருந்தது. கூட வந்தவர் சொன்னார் ” அவன் யார் தெரியுமா? கோயிலில் கொலுசு திருன கேசுல அவன் தான் முதல் A1 குற்றவாளி” மறுபடியும் அவனை(போட்டோவை) பார்த்தேன். நல்ல திருட்டு முகம்.

    தேவாரம் திருவாசகம் மிக மெல்லியதாக ஒலித்துக்கொண்டு சிறு கும்பல் வந்து கொண்டிருந்தது. எல்லோரும் சிவ சிவ என நடராசன் ஆடல் வல்லானின் புராணம் பாடிய கும்பல் தெருவில் பாராயிரம் பாடிக்கொண்டு செல்ல பாவம் பக்தர்கள்தான்  நின்று கூட பார்க்கவில்லை. அட சிவப்பழங்களே உங்க பக்திய நீங்கதானய்யா மெச்சனும். தமிழில் தேவாரம் திருவாசகம் பாடலாம் என தீர்ப்பு வழங்கிய போது எங்கயா போனீங்க? ஒரு வெங்காயத்தானும் வரவில்லையே. நாத்திகர்கள் தானே பாடினார்கள்.

    எல்லாம் எங்கே போனீர்கள்? பாப்பான் வீட்டு கழிவுகளை சுவைக்கவா? என்ன இப்படி சிவ பக்தர்களை திட்டலாமா என தோன்றலாம். சிவனுக்கு முன் காமகளியாட்டங்கள் , பார்களும் நடந்து கொண்டிருக்கும் போது அந்த சிவன்தான் பேசமாட்டான் . கல்லிலே இருக்கும் தேரைக்கு இரை தரும் ஈசன் எனக்கு தரமாட்டானா என வியாக்கியானம் பேசத்தெரிந்த உனக்கு  அந்த சிவனைப்பற்றி திருச்சிற்றம்பலத்தில் பேச மனமுருகி பாட என்னகேடு? சீந்த ஆளின்றி தெருவில் பாடுமுனக்கு பாடலோடு சிவனை நடராசனை காப்பாற்றுங்கள் என கதற என்னத்தடை?

    ஆம் மிகப்பெரிய தடை இருக்கிறது அது பொருளாதாரத்தடை.பார்ப்பானை ஒட்டி சோப்பு போட்டு அவன் மனம் நோகாது அவன் தின்றுபோட்ட எலும்பினை நக்கிகொண்டிருக்கும் ஆதினங்கள் தானே அடுத்த குறி.சாமியை வைத்து பார்ப்பான் செய்வதைத்தானே நீயும் செய்து கொண்டு இருக்கிறாய்?

    எப்படி உலகின் ஏதாவது ஒரு மூலையிலுல்ள முதலாளிக்கு எதிராக பேசினால் லோக்கல் முதலாளி அவனுக்கு வக்காலத்து வாங்குவார்களோ.அப்படித்தான் பார்ப்பனீயத்துக்கு வாலாட்டி தமிழை வைத்து சம்பாதித்து, திருடி, தின்று செரித்து விடுகிறார்கள்.அடுத்தது தான் என்பதால்தான் பெரிய திருடனுக்கு சின்னதிருடன் சப்பைகட்டு கட்டுகிறான்

    தானம் கொடுத்த திருடனின் விசயத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். யார் சொத்தினை யார் தானம் கொடுப்பது? மக்களின் தங்கள் பணத்தினால் அவர் ரத்தத்தால் நிமிர்ந்த கோயிலும் அந்த சாமியும் பார்ப்பான் சிக்னல் காட்டினால் தான் தரிசனம் கிடைக்கும். எங்களின் சொத்தை திருடி சோறு செஞ்சு வச்சுருக்கேன் வந்து வழிச்சு நக்கிட்டு போங்க என்கிறான் தீட்சித பார்ப்பனன்.

    மக்களுக்கு இது தெரியாமலா இருக்கிறது, எங்கே போனது இத்தனை கூட்டம் பெரியவர் ஆறூமுகசாமி தேவாரம் இசைக்கும்  போது. கண்டிப்பாய் இருக்கும் அவர் பார்ப்பானாய் இருந்திருந்தால். அவன் திருடன் , இந்தக்கோயிலில் தான் விபச்சாரம், மூர்த்தி தீட்சிதன் பணப்பங்கு பிரிக்கும் போது பார்ப்பனதீட்சித ரவுகளாலேயே கொல்லப்பட்டான், இவன் தான் தமிழை  நீச பாசை என்கிறான், தமிழர்களை தே..மவன் என்கிறான் எனத்தெரியாதா என்ன?

    எல்லாம் தெரிகிறது. நாம் சொன்னால் அதற்கு மேலும் கதை சொல்கிறார்கள்”  வேற என்னங்க பண்றது” என்ற தீர்ப்போடு. இதுதான் மதத்தின், மத நம்பிக்கையின் அவலம். கடவுள் நம்பிக்கை சொல்லித்தருகிறது ” ஒன்ணும் செய்ய முடியாது, விபச்சாரமே செஞ்சாலும் அவன் பிராமணன், அவன் தான் சாமியோட எல்லாம் பண்ணனும்.
    தேவாரமோ திருவாசகமோ  ஏன் இன்னும்  நடராசனின் காதில் ஒலிக்கவில்லையா? கண்டிப்பாய் ஒலித்தாலும் புரியாது! பார்ப்பன ஆதிக்கத்தில் புழுங்கி அழும் அந்த நடராசனின் சத்தம் இன்னும் கேட்காததற்கு காரணம் அவன் இன்னும் சமஸ்கிருதத்தில்  புலம்பிக்கொண்டிருப்பதாலயோ என்னவோ!

    தன்னை நல்லபடியாய் காப்பாற்றும் அல்லது காப்பாற்றுவார் என நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை பக்தர்களுக்கு  கடவுளோ அல்லது தன்னை காப்பாற்றுவார்கள் என நம்பிக்கொண்டிருக்கும் கடவுளுக்கு பக்தர்களாளோ கண்டிப்பாய் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் மத அவலத்திலிருந்து, மதத்திலிருந்து மீளாத வரை.

    ———————————————————————————————————————————

    கடந்த வியாழன் அன்று  மீண்டும் அரசு சார்பில் 3 உண்டியல்கள் தில்லையில் வைக்கப்பட்டிருக்கின்றன. சென்ற முறை  உண்டியல் திறப்பின் போது உண்டியலில்  அதில் எண்ணையை ஊற்றினார்கள்.இந்த முறை புதிய உண்டியல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 31 பார்ப்பன அடிவருடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

    ——————————————————————————–

    சிவனடியாரை கொல்ல முயற்சித்த 6 பேர் மீது வழக்கு

    சிதம்பரம் அருகே உள்ள குமுடிமுலை கிராமத்தை சேர்ந்தவர் சிவனடியார் ஆறுமுகசாமி. இவர் சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் கோர்ட்டு மூலம் உத்தரவு பெற்று தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினார்.

    இதற்கு சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சிவனடியார் ஆறுமுகசாமி சிதம்பரம் கோவிலுக்கு அவ்வப்போது சென்று தேவாரம், திருவாசகத்தை தொடர்ந்து பாடிவந்தார்.

    அப்போது ஆறுமுக சாமிக்கும், தீட்சிதர்களுக்கும் மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆறுமுகசாமி உட்கார்ந்திருந்தார்.

    அப்போது அவரை சிலர் தாக்கியதாக தெரிகிறது. தீட்சிதர்கள் தாக்கியதாகவும், அதில் காயமடைந்ததாகவும் கூறி சிதம்பரம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். தாக்குதல் குறித்து சிதம்பரம் போலீஸ் நிலை யத்தில் ஆறுமுகசாமி அளித்துள்ள புகார் மனுவில்,

    நேற்று நடராஜர் கோவில் நான் உட்கார்ந்திருந்தபோது 6 தீட்சிதர்கள் என்னிடம் வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்கள், உன்னால் தான் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நிம்மதி கெட்டு விட்டது என்று கூறி ஆபாசமான வார்த்தை களால் திட்டினர். மேலும் என்னை தாக்கி கொலை செய்ய முயன்றனர் என்று கூறியுள்ளார்.

    ஆறுமுகசாமி புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிதம்பரம் போலீசார் 6 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்(??????)

    ——————————————————————–

    சாயம் வெளுத்துப் போன போலிகள்

    ஜனவரி 1, 2009

    cpm1சாயம் வெளுத்துப்போன போலிகள்
    போர்ஜரி கம்யூனிஸ்டுகள்

    ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்ட்.மணி , ஞாயிறு என்பதால் பேருந்தும் அதிகமில்லை ரொம்ப நேரம் காத்திருந்து ஏறினேன் .நகர பேருந்தில் கூட்டம் அதிகமில்லை . ஒரு சென்ட்ரல் கொடுங்க என்றேன் .ரொம்ப பொறுமையாக அவ்ர் இந்தாங்க என்ற படி சில்லரையை கொடுத்தார்.கூட்டம்  இல்லாதபோதுதான் அவர் முகத்தில் சிரிப்பும் சந்தோசமும் இருக்கும்.மிக விரைவாக வந்து சேர்ந்தது.வெளியே பலகை தெரிந்தது சென்னை சென்ட்ரல் . அப்படியே இறங்கி ரயில்வே நிலைத்துக்குள் சென்றேன்.கியூ ரொம்ப நீளமாக இருந்தது,அரை மணி நேரம் காத்திருந்து டிக்கெட்ட் ஐ வாங்கினேன் . நான் 2வது பிளாட்பாரம் செல்வதற்கும் ரயில் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.. அப்பெட்டியில் நான் தான் முதல் ஆள் மற்ற நாளில் அன்ரிசர்வு பெட்டிகலில் ஏற வேண்டுமெனில் தற்காப்பு கலை தெரியமல் உள்ளேயே செல்ல முடியாது .இன்னும் அரை மணினேரம் இருக்கின்றது.  மெதுவாய் புத்தகத்தை  புரட்டிக்கொண்டிருந்தேன். சரியாய் 30 நிமிடம் ஆக  ரயில் கிளம்பியது.
    எதிரில் ஒருவர் பொறியியல் புத்தகத்தை வைத்து கொண்டிருந்தார் ஒரு  கல்லூரியின் புரபசர் என்றார்.அவருக்கு அருகி சுமார் நாலு மலையாளிகள்.மற்றவர்கள் யாரென தெரியவில்லை.அந்த மலையாளிகள் தொன தொன என்று பேசிக்கொண்டே வந்தனர்.அவர்களின் பேச்சு கேரளாவை மிதமிஞ்சி புகழ்ந்து கொண்டே வந்தார்கள்.இந்தியத்தை தூக்கி வைத்து ஆடிக்கொண்டு வந்தார்கள் . அங்கு எல்லோரும் படித்த்வர்கள்,எல்லோரும் அறிவாளிகள்என்று, பேசுவது மலையாளமாக இருந்தாலும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.ரயில் கிளம்பி 1.30 மணி நேரம் ஆகிவிட்டது. என்னால் தாங்க முடியவில்லை ,களத்திலிறங்க முடிவு செய்து விட்டேன்.
    அதிலே அதிகம் பேசிய நபரிடம் கேட்டேன் ” நீங்க பாலக்காடா ? இங்கேயிருந்து போவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்”, நாங்க பாலக்காடில்ல,திருவனந்தபுரம் எப்படியும் போக  8 அவர்ஸ் ஆகும். சம்பிரதாயமாக  சடங்கு கேள்விகளை கேட்டு இப்போது ஆரம்பித்தேன்.”ஆமா,னீங்க என்ன கட்சி  ஒருவர் ” நாங்கள் எல்லோரும்  CPM,ஒருவரை சுட்டிக்காட்டி இவர் தான்   டைபி நகரச்செயலாளர்”.”ரொம்ப வசதியாய் போச்சு என்ற படியே “கேரளாவுல கோக்குக்கு எதிரா – நீங்க தான போராட்டம் செஞ்சீங்க? ”  ஆமாம் நாங்க தான்,  எப்பவுமே மக்களோட பிரச்சினைக்காக நாங்க தான் போராடுறோம்.அப்படியா  பிளாச்சிமடா வில போராடுனது  red flag ன்னு படிச்சேன். நீங்களோ மார்க்ஸிஸ்டுன்னு சொல்லுறீங்க.”இல்ல அவங்க மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் டெர்ரெர்ரிஸ்ட், நக்சலைட்ஸ்.”என்ன நக்சலைட்ன்னு சொல்லுறீங்கபோலீசு காரன் கிட்ட அடிவாங்கி மண்ட உடஞ்சு நிக்கறாங்க,உண்ணாவிரதமெல்லாம் இருக்காங்க.உலகத்திலேயே உண்ணாவிரதம் இருந்து அட்வாங்கி திருப்பி அடிக்காத பயங்க வாதி அவங்க தனோ” என்றேன்.அந்த  இரு வரிசையில் இருந்தவர்களும் விவாதத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.அத நானும் அவர்களும் உணர்ந்தனர்.உடனே அவர் ” நீங்க ரெட் பிளாக்கா?”என்றார்.  அதுவரை ரசித்த் ஆமோதித்த அருகிலிருந்தவர்களோ நான் தீவிரவாதியா என பார்க்க் ஆரம்பித்தார்கள்.

    நான் ரெட் பிளாக் இல்லை அப்படியே இருந்தாலும்  சொல்லறதுக்கு எனக்கு தயக்கம் இல்லை.சொல்லுங்க உங்க மார்க்சிஸ்டு அரசாங்கத்தால் ஏன் கோக்கை தடை செய்ய முடியவில்ல? ” அது சென்ட்ரல் கையில் இருக்கு நாங்க என்ன செய்ய முடியும்.
    “அப்படியா சரி  பெரியாறு பிரச்சினை என்னங்க? என்றேன். ஆக்சுவலா கேரளா மன்னருக்கு சொந்தமான இடம்  அங்கே தமிழ் தன்ணீ கேட் தொல்ல பண்ணறாங்க. கேரளா மன்னருக்கு சொந்தமான இடம்னா கேரளாவுக்கு சொந்தமானதா,அப்படீன்னாஒரு காலத்துல சேர மன்னன் கேரளாவை ஆண்டான்னு சொல்லுறாங்க,அதுக்காக கேரளாவை தமிழன் சொந்தம் கொண்டாட முடியுமா. (அப்போதுபு.ஜ வில் பெரியாறு சம்பந்தப்பட்ட கட்டுரை வந்திருந்தது) .கையிலிருந்த புத்த்கத்தை எடுத்து புள்ளி விவரத்தோடு பெரியாறு அணை குறித்து சொல்ல ஆரம்பித்தேன்.அவர் வாய் திறக்க முடியவில்லை.

    அது சரி அணையோட நீர் மட்டத்தை உயர்த்தலாம்ன்னு  supreme court  சொன்ன பிறகும் உங்களால சட்டசபையில  சட்டம் போட்டு தடுக்க முடியுது? ஆனா 1 லி கோக் கழிவால 8 லி நல்ல  தண்ணீ பாதிக்கப்படுது,விளை நிலமெல்லாம் அழிஞ்சு போகுது அதை சட்டசபை கூட்டி தடுக்க முடியாதா? . அட ஆமா என்றார்கள்  பெட்டியிலிருந்தவர்கள்.  “டைபி கோக் பேக்டரிய உடைச்சதா பெருமை பட்டீங்கன்னா அதே டைபி தானே த்மிழ் நாட்டுக்கு தண்ணீ தரக்கூடாதுன்னு மறியல் செஞ்சங்க? அங்க ஒண்ணு பேசற்து,கர்னாடகாவுல தமிழகத்துக்கு  நீர் தரக்கூடாதுன்னு சொல்லறது.இங்கேயும் தண்ணீ கொடுன்னு போராடுறதுன்னா? நீங்க எல்லாம் ஒரே கட்சின்னு சொல்லிக்குறீங்க எதுக்கு இந்த பித்தலாட்டம்.இப்படி இனவெறியோட செயல் படுற முதல்வரை மார்க்சிஸ்டு தன் கட்சியிலிருந்து நீக்கியிருக்கணுமா வேண்டாமா? நீக்க மாட்டாங்க ஏனா அது  போர்ஜரி பார்ட்டி ஆப் இந்தியா.

    ” நீங்க சொல்றது சரி தான் நாமெல்லாம் இந்தியர்கள் மொழி இன பேதம் இருக்கக்கூடாது ஆமா நாங்க தப்புதான் பண்ணறோம்”வேறு வழியின்றி உண்மையை ஒத்துக்கொண்டார்”. நான் தீர்க்கமாய் சொன்னேன் “தோழர் லெனின் சொல்லியிருக்கின்றார் கம்யூனிஸ்டுக்கு நாடு மொழி எல்லை கிடையாது என்று  நீஙக்ள் பேரை மாற்றிக்கொள்ளுங்கள்”கம்யூனிசத்தை கேவலப்படுத்தாதீர்கள் என்றேன். அவரை தன் வாயாலேயே சொல்ல வைத்தேன்  போர்ஜரி கம்யூனிஸ்டு என்று.

    இந்த விவாதத்தின் போது என்னுடன் பயணம் செய்த சுமார் 15 பேர் எனக்கு அதிகமாய் உதவினார்,பல ஆங்கில வார்த்தைகளை கல்லூரி பேராசிரியர் சொல்லிக்கொடுத்தார்.,சேலத்திலிருந்து திருப்பூர்  நான் செல்லும் வரை  அந்த நான்கு” தோல”ர்களும் வாய் திறக்கவேயில்லை.
    —————————————————————————————————————————————————————————–

    இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இருக்கும் . அவரிடம் நான் கேட்ட கேள்விகளை விடுதலை,சந்திப்பு போன்ற போலிகளிடம் இப்போது  கேட்டால் கூட பதில் சொல்ல மாட்டார்கள்.அந்த ரயிலில் வந்த நால்வராவது கொஞ்சம் நாணயமாக அரசியல் பேசினார்கள் .இவர்களோ தன்னை அறிவாளி என்று கூறிக்கொள்கிறார்கள் . வினவோ,மற்ற தோழர்களோ கேட்ட கேள்விக்கு அரசியல்  ரீதியாக பதிலளிக்க திராணியற்ற்வர்கள் எழுப்பிய முழக்கம் தான் மருதையன் பார்ப்பனன் என்பது.பார்ப்பனன் என்று சொன்னதாலே மனம் புண்பட்டு சித்ம்பரத்தில் கழன்று கொண்டவர்கள் சொல்கிறார்கள் மருதையன் பார்ப்பனன் . இதற்கு ஏற்கனவே தோழர் பதில் சொல்லிவிட்டிருந்தாலும் நாமும் சொல்வோம்  “அவரின் நடைமுறை வாழ்வில் பார்ப்பனீயத்தை இம்மி அளவாவது காட்ட முடியுமா”.அவரின் பேச்சில் உள்ள பார்ப்பனீய எதிர்ப்பை எந்த சி.பி.எம் காரனின் பேச்சில் கேட்க முடியும்?.

    கிடாவெட்டு தடை சட்டம்,சிறீ ரங்கம் கோயிலில்  நுழைதல் ,சிதம்பரம் கோயில் பிரச்சினை போன்ற பல போராட்டங்கள் பார்ப்பனீய எதிர்ப்பை பறை சாற்றியிருக்கின்றன.போலிகளின் பார்ப்ப்ன தலைமயோ என்ன சொல்கிறது ” நான் முதலில் பிராமணன் அப்புறம் கம்யூனிஸ்டு”.போலிகளில் இனியும் புரட்சிகர அணிகள் இருந்தார்கள் எனில் பதில் சொல்லுங்கள்”தூய்மையின் வடிவம் என்று இப்போது பாராட்டும் நிரூபன் சக்கரவர்த்தியை பைத்தியக்காரன் ஆக்கியது யார்?,” “எம்ஜிஆர் செயாவுக்கு தரகு வேல பார்ப்பதயே வேலையாக வைத்துக்கொண்டு திரிவது யார்” இந்த கேள்விகளுக்கு உங்கள் தலைமை கண்டிப்பாய் பதில் தராது, நாங்கள் சொல்கிறோம் ஏனெனில் அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள்.

    வினவு,கலகம், உள்ளிட்டோரின்  கேள்விக்கு உங்கள் தலைமை சொல்லும் பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம்  இருக்கின்றதா? புரட்சி கர அமைப்புகளின்  முகவரிகளை அளித்த் பின்னும் எதற்கெடுத்தாலும் மறைமுகத்தலைமை என்று குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பது எதை காட்டுகின்றது? போலிகளில் உள்ள புரட்சிகரம் என சொல்லும் அணிகளே உங்களுக்கு அரசியல் சித்தாந்தத்தையும் அவர்கள் அளிக்கவில்லை என்பது தான் உண்மை.தனது பித்தலாட்ட கொள்கைகளை மறைக்க பயங்கரவாத பீதியூட்டுகிறார்கள். நீ£ங்களும் உடனே அமைதியாகிவிடுகிறீர்கள் இல்லையா. கடந்த வருடம் லயோலா கல்லூரியில் நடந்த எஸ் எப் ஐ  மா நாட்டில் சிவக்குமாரை  எதற்காக அழைத்தீர்கள் .R.S.S. கருத்துக்களை உமிழும் அவர் உங்களுக்கு தேனாய் இனிக்கிறார்.புத்த்ககண்காட்சியில் போய் பார்த்தீர்களா  மொட்டை சோவின் அல்லயன்ஸ் ல் கையெழுத்து போட்டு சீன் காட்டிக்கொண்டிருந்தார்.போலி விடுதலை சொன்னாரே
    R.S.S.BJP ஐ நாங்கள் எதிர்க்கின்றோம் என்று எப்படி   சிவக்குமார்  உங்களுக்கும், R.S.S.க்கும் வேண்டப்பட்டவராயிருக்கிறார்.

    போலிகளுக்கு  எதிராய் எழுந்த மாபெரும் நக்சல்பாரி எழுச்சியை  “வாதம்” என்று  அழைக்கின்றார்கள்.தோழர் ஸ்டாலினின் சோவியத்தை சிதைவுற்ற சோசலிசம் என்று  குறிப்பிடுகின்றார்கள்.ரணதிவேவோ தோழர் மாவோ அவர்களை போலி மருத்துவர் என்றார்.இந்த சீபிஎம் சீ பி ஐ போலிகளோ மந்திரம் போட்டே புரட்சியை சாதித்து விடு வார்கள் போலிருக்கின்றது.

    சந்திப்பு தனது  தளத்தில் “மாமா வேலை செய்பவர்களுக்கு” என எழுதியிருக்கிறார்.அய்யா சந்திப்பு மாமா வேலை செய்வது யார்?
    உங்களின் மாபெரும் தரகன் அரிகிஷன் சுர்ஜிட் செஇத காரியங்கள் என்ன? எப்போது பார்த்தாலும் செயாவின் தோட்டத்திலேயே வந்து கழுவிக்கொண்டிருந்தாரே அதை பற்றி என்ன எழுதுவீர்கள்  கூட்டணி வேந்தர் என்றா?  போலிகளின் இன்னொரு வாதம் எங்கல் பெயரை பயன்படுத்துகிறார்கள்.ஏன் சந்திப்பு உங்களை போல எங்களையும் முட்டாள் என நினைத்தீர்களா? சீபிஎம் பெர்ரை சொன்னாலே மக்கள் செருப்பை கழட்டும்போது அந்த பேரை யார்தான் சொல்வார்கள். ஆனால் ம க இ க வின் பாடல்களின் மெட்டை நீங்கள் பயன்படுத்துவது எல்லோருக்கும் தெரியும் .
    கலகம் தயார் ம க இ க உள்ளிட்ட புரட்சிகர அமைப்பின் வேலைகளில் பார்ப்பனீயம் இல்லையென்றும் உங்கள் மாமா வேலைகளை பட்டியலிடவும் ,  நீ தயாரா? கருத்திலும் களத்திலும் உங்களைப்போன்ற போலிகளை ம க இ க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் எதிர் கொள்ளாமல் இல்லை.ஆனால் உங்களின் பரிணாம வளர்ச்சி எங்கு தான் போய் முடியும் என்பது தான் தெரியவில்லை.
    பின்குறிப்பு : அந்த ரயிலில் வந்த நபர்களின் முகவரியோ கூட வந்தவர்களின் முகவரியோ தெரியாது. அந்த நாலு பேரின் முகவைரியை கொடு என்பார்கள் போலிகள்.
    இதைதான் விவாதப் பொருளாய் மாற்றுவார்களே தவிர கண்டிப்பாய் நம் அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கமாட்டார்கள்.