ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள்

ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள்
 
நான் சொன்னது தவறு தான்
சரியென்று சொல்லவில்லை
என் வார்த்தைகள் தடுமாறின
என்னவென்று உன்னைச்சொல்ல

எல்லாவற்றையும்
ஆடைகளைந்து அம்மணமாய்
நீ பாலியல் வன்புணர்ச்சி
செய்து கொண்டிருக்கும் போது
என்னவென்று உன்னைச்சொல்ல

எல்லோரின் உறுப்புக்களையும்
ஆராய்ச்சி செய்யும் உனக்கு
என்னதான் தேவை?
எனக்கு ஒன்றும் புரியவில்லை
இந்த ஆராய்ச்சியை மருத்துவத்தில்
செய்திருந்தால் பல பட்டங்கள் வாங்கியிருக்கலாமே?
நாங்கள் செய்த “பாவம்”
உன்னுடைய சமூக மருத்துவ கோலம்

விமர்சனங்கள் வந்தன
நான் என்ன செய்வேன் தோழரைப்போல்
நான்  இலக்கியவாதியா என்ன?
என்னால் முடியவில்லை
திட்டினேன்
மக்களின் மொழியில்
அது சரியென்று சொல்லவில்லை
உணர்ச்சிகள் மேலோங்கும் போது
அறிவு கரைந்து விடுகிறது

கரைந்து போன அறிவினை
மீட்டுக்கொண்டேன்
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்

உனக்குத்தெரியுமா
காலைமுதல் மாலை வரை
ஓடாய் உழைத்து கருத்துப்போன
எங்கள் பெண் பாட்டாளியின்
வியர்வை கரிக்குமென்று
கண்டிப்பாய் வாய்ப்பில்லை
உன் வாய்கள் எதையோ சுவைத்து
அச்சுவைதனை
உலகிற்கு முரசரைந்து கட்டியம் கூறலாம்
வறண்டு போன விவசாயத்தை
இற்றுப்போன ஆடைகளை
ஒடுங்கிப்போன ஆலைகளை
உன் உணர்ச்சிகள் தருமா?

நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்
ஒடுக்கப்பட்டவர்களுள் ஒடுக்கப்பட்டவர்களின்
உரிமைகளை
அம்மணமாய் பாடையில் ஏற்று
உழைக்கும் மக்களின் உறுப்புக்களை
ஆராய்ச்சி செய் – கூடவே அவர்களுக்காக
உழைத்தவர்களையும்

எல்லாவற்றையும்
நான் நிறுத்திவிட்டேன்
நீ நிறுத்தாதே தொடர்ந்து செல்

உன் அம்மணப்பேனாவுக்கு
நோபல் பரிசுகூட கிடைக்கலாம்

விவசாயம் நொடிந்து
விசம் குடித்து
செத்த பிணங்கள் அம்மணமாய்
பிணவறையில்
பளபளக்கும் ஆடையோடு
விரைந்து செல்
நிர்வாணக்கவிதைகள் எழுது
ரசிப்பதற்கு காத்திருக்கிறார்கள்
உன்னால் நிர்வாணமாக்கப்படாதவர்கள்
 
 
1.லீனா மணிமேகலை: COCKtail தேவதை!
2.கவிதைகள்-அழகு

  2.

குறிச்சொற்கள்: , , , ,

16 பதில்கள் to “ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள்”

  1. போராட்டம் Says:

    இதுதான் நிறுத்திக் கொள்வதா? 🙂 உங்களிடமிருந்து ஒரு அழகான கவிஞர் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியாக இக் கவிதை விளங்குகிறது.

    //என்னால் முடியவில்லை
    திட்டினேன்
    மக்களின் மொழியில்
    அது சரியென்று சொல்லவில்லை
    உணர்ச்சிகள் மேலோங்கும் போது
    அறிவு கரைந்து விடுகிறது//

    இந்த நேர்மையில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லாத “மயிரைப் பிடுங்கிப்” போடும் ‘கலகக்காரர்களும்’, ‘கலகக்காரிகளும்’ தான், சிறு கூச்சமும் இல்லாமல், லெனினுக்கும், நமக்கும் ‘மார்க்’ போடுகிறார்கள். இந்த அயோக்கியர்களின் அயோக்கியத்தனமான ‘கட்டுடைத்தல்களுக்கு’ பல்லை இளித்துக் கொண்டு வேறு நாம் பதில் சொல்ல வேண்டுமாம். மன்னியுங்கள், நாங்கள் சி.பி.எம்-ல் இல்லை. எமது தோழர்களின் கோபம்தான் எமது உணர்வின் அடையாளம். எங்களுக்கு கோபப்படுவது போல நடிக்கத் தெரியாது.

    //விவசாயம் நொடிந்து
    விசம் குடித்து
    செத்த பிணங்கள் அம்மணமாய்
    பிணவறையில்
    பளபளக்கும் ஆடையோடு
    விரைந்து செல்
    நிர்வாணக்கவிதைகள் எழுது
    ரசிப்பதற்கு காத்திருக்கிறார்கள்
    உன்னால் நிர்வாணமாக்கப்படாதவர்கள்//

    ஆழமானதும், இந்த விவகாரத்தின் முழுமையை ரத்தினச் சுருக்கமாக விவரிப்பதுமான படிமம். தொடர்ந்து எழுதுங்கள் தோழர்.

    • kalagam Says:

      தோழர் போராட்டம் அவர்களுக்கு நன்றி,

      ஆரம்பத்திலிருந்து எழுதிய கவிதைகளையும் சரி கட்டுரைகளையும் சரி திருத்தி
      எப்படி கவிதைகளை எழுதவேண்டும் என்றும் ஏன் அப்படி எழுத வேண்டும் என்று கருத்து கூறும் உங்களின் பணி மிக்க சிறப்பானது. ஒரு குழுவில் இருப்பவரைப்போல எதையும் எப்படி எழுத வேண்டும் என்பதை வரை வளர்த்தெடுக்கும் போக்கு மிக மிக சிறப்பானது.

      தவறு செய்யும் போதோ தடுமாறும் போது உங்களைப்போன்ற தோழர்களின் (இலக்கியவாதிகளின்) விமர்சனங்கள் தேவையானதும் கூட உங்களிடமிருந்து நாங்கள் கற்க வேண்டியது இன்னும் ஏராளம்.

  2. செங்கொடி Says:

    சிறப்பான கவிதை தோழர்,

    உங்களின் சுயவிமர்சனத்தையே கவிதைக்கான தளமாக எடுத்துக்கொண்டது அருமை. அதையே வர்க்க எதிரிகளுக்கான சாட்டையாகவும் மாற்றிய உத்தி மிக நன்று.

    தோழமையுடன்
    செங்கொடி

  3. villavan Says:

    great.

  4. tamilcircle Says:

    மக்கள் பேசும் மொழியை
    என்ன
    பூர்சுவா பண்பாடு கொண்ட
    இலக்கிய மொழியாக்கவா முடியும்!?

    மக்கள் மொழியை
    நகரிகமற்ற மொழி என்று
    மக்கள் எதிரிகள் கூச்சல் எழும்பும் போது!
    அதையும் எதிர்கொண்டு போராட வேண்டும்.

    வாழ்த்துகள் தோழர்

  5. muhilan Says:

    thotarnthu aluthunkal thozar
    -thozamaiytan muhilan

  6. muhilan Says:

    தொடர்ந்து எழுதுங்கள் தோழர்.

  7. சிங்கக்குட்டி Says:

    “தமிழ்மணம் 2009 விருது” போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்,
    சிங்கக்குட்டி.

  8. ஜூலிஸ் ஃபூசிக் Says:

    இதை கவிதை என்று சொல்வதா?

    கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தான
    உங்களின் சுய விமர்சனம் என்பதா?

    மூச்சாய் சுவாசிக்கும் மார்க்ஸியத்தை மூர்க்கமாக
    தன் வக்கிரப் பேனாவால் கிறுக்கிய
    கிறுக்கியின் மீதான உங்களின் கோபம் என்பதா?

    இவையனைத்தையும் இயல்பாக, எந்த ஒரு செயற்கைத் தனமும் இல்லாத உங்களின் கவிதை மிகச் சிறப்பாக இருக்கிறது தோழர்.

    வாழ்த்துகள் தோழர்! (கவிஞர்) 🙂

    தொடர்ந்து எழுதுங்கள்..

  9. குருத்து Says:

    தோழர்கள் சொன்னது போல, சுயவிமர்சனத்தையே ‘அவர்களின்’ அம்பலப்படுத்துவதற்கும் பயன்படுத்தி உள்ளீர்கள். அருமை.

    நீங்கள் நிதானமாக எழுதினால், நன்றாக எழுத முடியும் என்று தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

    போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்திய படங்கள், தமிழ்மணத்தில் முதல் பரிசை தட்டிச் சென்றிருக்கின்றது. வாழ்த்துக்கள்.

  10. paraiyoasai Says:

    பாராட்டுக்கள்.

    ##உன் அம்மணப்பேனாவுக்கு
    நோபல் பரிசுகூட கிடைக்கலாம்##

    இது லீனாமணிமேகலைக்கு மட்டுமல்ல…. எழுத்து விபச்சாரகளுக்கும் நல்ல சவுக்கடி.

  11. பி.ஏ. ஷேக் தாவூத் Says:

    வினவு என்ற முற்போக்கு வேடமிட்ட மாவோயிஸ்ட்டு மரமண்டைகளின் இணையதளத்தின் வேஷம் கலைகின்றது.
    தொடர்ந்து முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.
    http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html

  12. shreya Says:

    தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

  13. காக்க காக்க லீலாவைக் காக்க, சுதந்திரம் உங்களுக்கு மட்டும். « கலகம் Says:

    […] லீனா மணிமேகலை: COCKtail தேவதை! ஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைகள் […]

  14. Palani Chinnasamy Says:

    you are stand in your height in your word

பின்னூட்டமொன்றை இடுக