மாபெரும் இந்திய அயோக்கிய சனனாயகமும்-தூக்கி நிறுத்தும் தூண்களும்-

மாபெரும் இந்திய அயோக்கிய சனனாயகமும்தூக்கி நிறுத்தும் தூண்களும்2008-272V--Scales-of-Justice-today

இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று வரும் சிங்கள பேரினவாதத்துக்கெதிராகவும், போரினை நடத்தி ரத்தம் குடித்த இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழர் தேசிய இயக்கம், தமிழ்தேச பொதுவுடமைகட்சியை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுக்க இந்திய தேசியக்கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.

அதன் படி எரிக்க முயன்ற போது 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய (அ)நீதிமன்றம் ஒருவாரம் தேசியக்கொடியை வீட்டின் முன் ஏற்ற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

அதை ஏற்காத மூவர் நிபந்தனையை தளர்த்தக்கோரியவர்களுக்கு நாட்டாமையாக ஆணையிட்டிருக்கிறார் நீதிபதி.

 

அதில்’’தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த முடியாது. இதை ஏற்காவிட்டால் அவர்கள் தொடர்ந்து ஜெயிலிலேயே இருக்கட்டும். இந்த வழக்கில் போலீசார் விரைவில் குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும். RopePull-lg

அரசியல் அமைப்பு சட்டம் 5-வது பிரிவில் தேசிய கொடி, தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவற்றை அனைத்து குடிமக்களும் மதிக்க வேண்டும் என்று கூறுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் 51-ஏ பிரிவு, தேசிய கீதம், தேசிய கொடி ஆகியவற்றில் குடிமக்களுக்கு உள்ள கடமைகள் பற்றி கூறுகிறது.

இந்த கடமையை மக்கள் எப்படி நிறைவேற்ற வேண்டும். குடிமக்கள் எப்படி இதில் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழகஅரசு குழு ஒன்றை அமைத்து விசாரித்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’என்று தீர்ப்பில் கூறினார்” 3 பேரும் தேசியக்கொடியை ஏற்றவில்லையெனில் ஜெயிலிலேயே கிட என்கிறார்.

அதுமட்டுமில்லாது மக்கள் எப்படி இக்கடைமையை நிறைவேற்றவேண்டுமென அறிக்கை தாக்கல் செய்யவும் சொல்லியிருக்கிறார். இதை படிப்பவருக்கு என்ன புரியும் ஆகா “கடமை தவறாத நீதிபதி இன்னொரு அப்துல் கலாம்”வந்துவிட்டாரென்று.

 

ஆனால் உண்மை என்ன? மத்திய அமைச்சர் மிரட்டினார் என்னிடம் மன்னிப்பு கேட்க வில்லையெனில் அவரின் பேரை சொல்லி புகார் செய்வேன் என்பவர் கட்டாயமாக ஏற்று இல்லையேல் சாகு என்கிறார். அவ்வளவு நீதிமானெனில் அந்த அமைச்சரின் பேரைச்சொல்லி அவருக்கு தண்டனை கொடுத்துப்பார்க்கட்டும். ஒரு வாரம் வேண்டாம் ஒரு நாள் அமைச்சரின் வீட்டில் கொடியை ஏற்றச்சொல்லி சொல்ல தீர்ப்பு வழங்கட்டுமே. ஏன் அவரின் பேரை சொன்னால் என்ன எது குறையும். ஏதாவது குறையலாம் வசதி, வாய்ப்புகள், பதவி உயர்வு……..

 

 ஏதோ இந்த நீதிபதிமட்டுமல்ல நீதிமன்றங்கள் பலவழக்குகளை தானாக முன்வந்து எடுத்து தீர்ப்பு சொல்லுகிறது, கண்டனம் தெரிவிக்கிறது. ஆனால் மக்களின் பிரச்சினைகள் எதும் நீதி மன்றங்களுக்கு புலப்படாமலேயே போய்விடுகின்றன. ஒருவேளை அவைகள் போட்டிருக்கும் கண்ணாடியின் ஆளும் வர்க்கசாயல் அப்பியிருக்கும்.

 

ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறர்கள், தாய்மார்கள், குழந்தைகள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டார்கள் ஒருதாஇன் வயிற்றை கிழித்த ஆட்லெறிகுண்டு அந்த சிசுவின் தலையை பிய்த்துப்போட்டது தெரியாதா நீதி மன்றமே உனக்கு.

 

இதை தானாக வழக்கு பதிவு செய்ய என்ன கேடு? ஆம் கேடு தான் தன்வர்க்கத்துக்கு தானே ஏதாவது கேடுண்டாக்கிக்கொள்ளுமா? என் இனமக்கள் கொல்லப்படுகிறார்கள், இந்திய அரசுதான் போரை நடத்துகிறது எனத்தெரிந்தும் அமைதியாய் கவிந்து படுத்துக்கொண்டு மானாட மயிலாட பார்க்கமுடியுமா? பார்க்கிறார்கள் பல சூடு சொரணை கெட்டவர்கள் அப்படித்தான் எல்லோரும் வாழவேண்டுமா? 001200902200340

ஆம் அப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்கிறது நீதிமன்றம்.தமிழ் மக்களை கொத்துகொத்தாய் கொல்லும் போது, அகதியெனக்கூறி அலைக்கழிக்கும்போது, தாழ்த்தப்பட்ட , சிறுபான்மை இனமக்கள் பாதிக்கப்படும் போது, தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படு சுடுகாடு நோக்கி தள்ளபடும் போது மூடிகிடக்கும் நீதி மன்றம் வாயைத்திறக்கிறது “தேசியக்கொடியை ஏற்று இல்லை உள்ளயே கிட” அட போலீசுக்காரர்கள் உங்கள் மண்டையை பிளந்தபோது கூட நீதிபதிகளே இப்படி கடினமாக பேசவில்லையே.

அவ்வளவு தேசியத்தின் மீது பற்றா? தேசியத்தின் மீது இருக்கும் பற்றினை விட ஆளும் வர்க்கத்தின் மீது இருக்கும் பற்று அளவிடமுடியாதது. சென்னை நீதிமன்றத்தில் நுழைந்து கொலைவெறியாட்டம் போட்டவர்களுக்கு பூச்செண்டு அடிவாங்கியவர்களுக்கு அறிவுரை.

அடடா இதுக்கு பெயர் தான் நடு நிலைதவறாத சனநாயகமா? தான் செத்தாலும் தன் வர்க்கத்துக்கு சேவை செய்வதைத்தான் பெருமையாக திறமையாக கருதுகிறார்கள். அடிப்படை உரிமைகளில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா?

 

எதுவய்யா கருத்து சுதந்திரம்? முதலாளிகள், ஆளும் வர்க்கபிரதிநிதிகளின் கருத்துக்கு வரவேற்பு, ஒடுக்கப்பட்டவர்களின் கருத்துக்கு வாய்ப்பூட்டு, நாளை அமெரிக்காவின் கொடியை எரித்தால் கூட கடுமையான சட்டம் கொண்டு தண்டிப்பார்கள். அதற்கும் பலவித காரணங்களை சொல்லி சப்பை கட்டுகட்டி வாயை அடைப்பார்கள்.

 

 அவர்களின் தேவை ஆளும் வர்க்கத்தின் சேவைதானே தவிர மக்களுக்காக அல்ல. நாளை ஆளும்வர்க்கம் கொடியை பீத்துணி என அறிவித்தால் கூட அப்படியே துடைத்து விட்டு போவார்கள், பெயர்கள் தான் காவல்துறை, ராணுவம், நீதித்துறை……..

 

 இதற்கு பெயர் தான் மாபெரும் இந்திய சனனாயகமாம் !!!!! நம்பாதவர்களுக்கு களி நிச்சயம் என்பது மட்டும் உண்மை.

குறிச்சொற்கள்: , , , , ,

4 பதில்கள் to “மாபெரும் இந்திய அயோக்கிய சனனாயகமும்-தூக்கி நிறுத்தும் தூண்களும்-”

  1. k.pathi Says:

    hi…hi….
    judges are boneless

  2. kalagam Says:

    The Madras High Court judge who had earlier said a union minister pressured him on the phone to grant bail to two people seems to have made a U-turn. Now he says the minister did not talk to him.

    http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1133645

  3. rsyf Says:

    //அரசியல் அமைப்பு சட்டம் 5-வது பிரிவில் தேசிய கொடி, தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவற்றை அனைத்து குடிமக்களும் மதிக்க வேண்டும் என்று கூறுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் 51-ஏ பிரிவு, தேசிய கீதம், தேசிய கொடி ஆகியவற்றில் குடிமக்களுக்கு உள்ள கடமைகள் பற்றி கூறுகிறது.//

    இந்த கடமையை மக்கள் எப்படி நிறைவேற்ற வேண்டும். குடிமக்கள் எப்படி இதில் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கவலைப்படும் நீதிபதி,
    இதே அரசியல் அமைப்பு சட்டம் சொல்லும், மக்களின் அடிப்படை உரிமைகளான உணவு, கல்வி, வீடு, வேலை… பற்றி கவலைப்படாத மவுனம் என்ன?

  4. செங்கொடி Says:

    நீதி மன்றங்கள் ஆளும் வர்க்கத்தின், அதிகார வர்க்கத்தின் வால் என்பது பல வழக்குகளில் சாதாரண மக்களுக்கே புறிந்து போன ஒன்று. நீதிமன்ற அவமதிப்பு என்பது தான் அதன் இல்லாத மரியாதையை இதுவரை காப்பாற்றி வருகிறது. பின் ஜனநாயகமாவது தூணாவது…?

    தோழமையுடன்
    செங்கொடி

பின்னூட்டமொன்றை இடுக