செருப்பு

செருப்பு

செருப்புக்கு தன்மானம் இருக்கிறதா?
அஃறிணைக்கு எப்படி உணர்ச்சி இருக்கும்?

பல்லாயிரக்கணக்கான  நினைவுகளை
தாங்கி வந்த அந்த செருப்பின்
உணர்ச்சிகள் எல்லாம்
ஏகாதிபத்திய முகத்தில் பயத்தின்
வடுக்களாய் பரவி கிடக்கிறது…..

வந்தது கட்டளை செல்லும்
இடமெல்லாம் செருப்புக்குத்தடை
தடைகளுக்குத்தான்
எப்போதும் தடையேதும் இல்லையே…..

தடைபட்ட செருப்புக்கள்
மீண்டும் பேசின
தேவையான போது
அவை பேசிக்கொண்டே இருந்தன

“வழி தவறிய மீனவர்களை பாதுகாக்கிறோம்”,
“தமிழர்கள் நலமுடன் இருக்கிறார்கள்”
வடிவேல் கிருஷ்ணமூர்த்தியின்
ஊளையினை செருப்புக்களால்
தாங்கி கொள்ள முடியவில்லை
துடித்தன
காலைக்கடித்தன
கேட்டவர்கள் பிஸ்கெட்டினை
கடித்தபடி செருப்புக்கு விடை கொடுததார்கள்

அமைதியாய்
அம்சாவின் அம்சமான
நினைவுகளில் நீந்திக்கொண்டிருந்தார்கள்…..

சிறைபட்ட செருப்புக்களால்
இப்போது பேசமுடிவதில்லை
மானமில்லாதவனுக்கு வாழ்க்கைப்பட்டதால்
அவை அமைதியாயிருக்க வைக்கப்பட்டிருக்கின்றன

செருப்புக்கு தன்மானம் இருக்கிறதா?
அ·றிணைக்கு எப்படி உணர்ச்சி இருக்கும்?

கண்டிப்பாய் இருக்கும்
அது அஃறிணையாய் இருப்பதனால் தான்

அதன் உணர்ச்ச்சிகள் மரத்துப்போக
அது மனிதத்தோலில் ஒன்றும் செய்யப்படவில்லையே.

குறிச்சொற்கள்: , ,

2 பதில்கள் to “செருப்பு”

  1. kuttysamy Says:

    ரசித்தேன் வாழ்த்துக்கள் ….

  2. nagarasan. Says:

    மரத்துப்போக அது மனிதத்தோலில் ….அருமையான வரிகள், படித்த ஜடங்களுக்கு வுணர்ச்சி வருமா? அந்த செருப்புக்கே வெளிச்சம். நாகராசன்.

பின்னூட்டமொன்றை இடுக