அழுகின்ற குழந்தையே!

அழுகின்ற
குழந்தையே!
அழுது கொண்டிருக்கிறாயா
அழு நன்றாக அழு
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
ஆனால் நிறுத்திவிடாதே

உன் உரிமைகள்
கிடைக்கும் வரை
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு

அமைதியாய் மட்டும்
இருந்திடாதே

மார்பறுக்கப்பட்ட
உன் தாய்களைப்பார்
கொன்று குவிக்கப்பட்ட
உன் சகோதரர்களைப்பார்

உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு

ஏன்?
எதற்காக?
கேள்வியை கேள்

மூலதனம் சொல்லிவிட்டது
நீ வாழ தகுதியற்றவன்
நீ சாகப்பட வேண்டியவன்
உன் இனம் மட்டுமல்ல
உழைக்கும் இனமே
வாழத்தகுதியற்றதுதான்

அழுகின்ற குழந்தையே!
நன்றாய்க்கேள்!!
தகுதியற்றவர்கள் தான்
அவர்களை தகுதியுடையோராக்கினார்கள்

உழைக்கும் கைகளின்
மீதேறிதான் அவர்கள்
உயர்ந்தவர்களாகியிருக்கிறார்கள்

உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு
அமைதியாய் மட்டும்
இருந்திடாதே

கேளாத செவிகள்
கிழிந்து போகட்டும்
கருணைகளின் கோட்டைகள்
நொறுங்கட்டும்

தேர்ந்தெடுத்திருக்கிறாய்
உனக்கான ஆயுதத்தை
உன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அழு

ஆம்
அழுகையின் அதிர்வுகளில்
உடைபட காத்திருப்பது
அதிகார பீடங்கள் மட்டுமல்ல
எங்களின் அடிமைத்தனமும் தான்

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , ,

7 பதில்கள் to “அழுகின்ற குழந்தையே!”

  1. rudhran Says:

    சிறப்பான பதிவு. இன்னும் பரவலாக எடுத்துச் செல்லுங்கள்.

  2. போராட்டம் Says:

    நன்று.

  3. baskar Says:

    மன அழுத்தத்தை வரவைக்கிறது இந்த அழுகை.

  4. செங்கொடி Says:

    குழந்தையின் அழுகை என்பது வீரியம் மிக்க ஆயுதம் தான். ஆனால் அந்த ஆயுதம் முதலில் தைக்கவேண்டியது அடிமைத்தளையைத்தான். அதை நொறுக்கிய பின்புதான் அந்த ஆயுதம் உருமாறி இலக்கு நோக்கிப் பாயும்.

    சிறப்பு தோழர்.

    செங்கொடி

  5. அஸ்கர் Says:

    நன்று.

  6. ஹைதர் அலி Says:

    அழுகின்ற குழந்தையே!
    நன்றாய்க்கேள்!!
    தகுதியற்றவர்கள் தான்
    அவர்களை தகுதியுடையோராக்கினார்கள்
    உண்மை இதோ தகுதியற்றவன் உன் அழுகையால் என் மதத்தையும் மறந்து உருவாகி கொண்டிருக்கிறென்

  7. nagarasan Says:

    அருமை தோழரே வாழ்த்துக்கள்

பின்னூட்டமொன்றை இடுக