பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்? – கதை

பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்? – கதை

நான் பல ஆண்டுகள் பார்ப்பனர்களின் சதியோ, அவர்களின் சாதிவெறியோ அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி சரியாக அறிந்த பின்பு அவர்கள் எந்த அளவுக்கு ஒவ்வொரு செயலிலும் , அணுவிலும், மூச்சிலும் சாதியத்தை , பார்ப்பனீயத்தை பரப்புகிறார்கள் , இவர்கள் எவ்வளவு ஆழமாக சிந்தித்து தனது கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பதை நினைக்கும் போது  ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகின்றேன்.

அவர்களின் பார்ப்பன வெறியை பார்ப்பன குழந்தைகள் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். இதனை நான் புரிந்து கொள்ளவே இல்லை அப்பொழுது. ஆனால் பல ஆண்டுகள் கழித்து நான் “அட அந்த நாய் எப்புடி பேசியிருக்கான்” என நினைப்பதுண்டு.

——————————

————————————————————– 

 

கதை – 1

இப்போது நான் ஏழாவது படிச்சுக்கிட்டுருக்கிறேன்.  என்னோட க்குளோஸ் நண்பன் விஷ்ணு. நானும் விஷ்ணுவும் அரைக்கிளாஸ்ல இருந்து நண்பர்கள்.  அரைக்கிளாஸ்ல அவன் தன்னோட பேனாவை விட்டுட்டு போயிட்டான். அடுத்த நாள் நான் அவனுக்கு அதைத்தந்தேன் அப்படித்தான் நானும் அவனும் பிரண்டானான். நானும் அவனும்  சில வருடங்கள் வேற வேற செக்சனில் படிச்சாலும் ஒண்ணாவே ஸ்கூலுக்கு போவோம், ஜாலியா விளையாடிகிட்டு இருப்போம்.

அவனோட அப்பா, அம்மா எல்லாருமே எனக்குத்தெரியும். எங்க வீட்டுக்கு போகணுமின்னா அவங்க வீட்டத்தாண்டித்தான்  போகனும். பையன் நல்லா வெள்ளையா கொழுக் மொழுக்குன்னு இருப்பான். ஐந்தாவது படித்து முடிக்கறதுக்குள்ள அவனுக்காக பல பேர்கிட்ட நான் சண்டை போட்டிருக்கேன், அடி கொடுத்துட்டும் பல சமயம் அடி வாங்கிட்டும் வருவேன்.

5 வது வரைக்கும் ஒண்ணா படிச்ச எங்களை 6-ம் வகுப்புக்கு மேல் நிலைப்பள்ளிக்கு போனதால அவனும் நானும் வேற வேற பிரிவுக்கு மாத்தி போட்டுட்டு பிரிச்ச்சுப்புட்டாங்க. 7-ம் வகுப்பு ரெண்டு பேரும் ஒரே வகுப்புல போட்டுட்டாங்க. எனக்கு அவாஅளவு சந்தோசம் சரி பழைய பிளாஷ் பேக்குக்குள்ள ரொம்ப நேரம் போகாம நேரா கதைக்குள்ள வந்துடறேன்.

நான், ஜான், சுரேஷ், அப்புறம் என் உயிர் நண்பன் விஷ்னு எல்லோரும் ஒரே குரூப். விளையாடுனாலும் சரி என்ன பண்ணினாலும் ஒரே மாதிரிதான். நாங்க எல்லோரும் அவன வெள்ளையான்னுதான் கூப்பிடுவோம், இல்லை “பாப்பா” ன்னு தான் கூப்பிடுவோம். பாக்குறதுக்கு பையன் குழந்தை மாதிரி வெள்ளையா கொழுக்மொழுக்குன்னு இருக்கறதால அந்தப்பெயர்.

திடீர்ன்னு ஒரு நாள் சுரேஷ்க்கும் விஷ்ணு வுக்கும் சண்டை வந்துடுச்சு. இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு இருந்தங்க.  என்ன சண்டை? ஓடிப்புடிச்சு விளையாடறதுல இருந்த தப்புதான். திடீர்ன்னு விஷ்ணு டீச்சர்கிட்ட போனான் என்னவோ சொன்னான். டீச்சர் சுரேஷை கூப்பிட்டாங்க, குச்சி உடையற வரைக்கும் அடிச்சாங்க. அப்புறாம் உன்னோட பிரண்ட்ஸ்களை கூப்பிடுன்னு விஷ்ணு கிட்ட சொன்னாங்க.

நாங்க எல்லாம் பயந்துகிட்டே போய் நின்னோம்.

“டேய் சுரேஷ் உன்னை என்னடா சொன்னான்?” அப்படீன்னு டீச்சர் கேட்டாங்க? அதுக்கு விஷ்ணு சொன்னான் “டீச்சர் என்னை பாப்பான் பாப்பான்னு கூப்பிட்டன் டீச்சர், என் சாதிப்பேரை சொல்லறான் டீச்சர்”.
உண்மையில் எங்கள் யாருக்கும் அய்யரை பார்ப்பான் என்றூ கூப்பிடுவார்கள் என்ற விசயமே தெரியாது. குழந்தையை பாப்பா என்பார்கள் அப்படித்தான் அவனை அழைத்தோம். ஆனால் அவன் விளையாட்டுப்பிரச்சினையில் சாதியை இழுத்து அடி வாங்கிக் கொடுத்துவிட்டான்

இந்த சம்பவத்தை நினைக்கும் போது இப்போது கூட ஆச்சரியமாய் இருக்கிறது. பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்?

இது மாதிரி நிறைய கதைகள் இருக்கிறது  பிறகு ஒவ்வொண்ணா வரும்

, , ,

5 பதில்கள் to “பார்ப்பன குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள் பாருங்கள்? – கதை”

  1. ஜெகதீஸ்வரன் Says:

    கதை போலதான் தெரிகிறது.

  2. nondhakumaran Says:

    கதையா, அனுபவ கதைகளா! – சரியாக சொல்லிவிடுங்கள். இல்லையென்றால்..புனைவு என சொல்லி.. உங்கள் மீது அவதூறு செய்ய போகிறார்கள்.

  3. கலகம் Says:

    தோழர், அது உண்மையாக என் வாழ்வில் நடந்த சம்பவம் தான். அதை கதையாக எழுதி இருக்கிறேன். அது மட்டுமல்ல நான் எழுதிய புனைவு கதைகளில் வரும் வசனங்கள் பல நான் நேரடியாக போலிகளிடம் கலந்து உரையாடிய போது வெளிப்பட்டதே

    தோழமையுடன்
    கலகம்

  4. டோண்டு ராகவன் Says:

    சிறுவயதில் குழந்தைகளுக்கு தவறாக சொல்லிக் கொடுப்பது எல்லா இடங்களிலும்/ஜாதிகளிலும் நடப்பதுதான்.

    பதிவர் லக்கிலுக் தனக்கு பார்ப்பனர்களை பிடிக்காது என்று சொன்ன காரணமே அவருக்கு ஐந்து-ஆறு வயதாக இருக்கும்போது அவர் கிளாஸ்மேட் பார்ப்பன மாணவன் தன் மேல் எச்சில் உமிழ்ந்தான் என்பதே.

    ஓக்கே, எனது பின்னணிக்கு செல்வேன். நான் பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் 1963-ல் சேரும் வரை இம்மாதிரி சாதீய எண்ணங்கள் எதுவும் எனக்கில்லை. பிறந்து வளர்ந்த திருவல்லிக்கேணியில் உள்ள சூழலில் நான் இருந்ததால் நான் நானாகவே இருந்தேன். இது பற்றி ஏதேனும் எண்ணம் இருந்திருந்தாலும் இந்த சாதி ஒசத்தி, வேறொரு சாதி மட்டம் என்ற ரீதியில் யோசித்ததே இல்லை. பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான நேர்க்காணலில் கூட அப்போதைய தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் திரு முத்தையன் அவர்கள் என்னைப் பார்த்து “நீங்கள் பார்ப்பனரா?” என்று கேட்ட போது “ஆம் ஐயா” என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?” என்ற அடுத்தக் கேள்விக்கு அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் “நிச்சயமாக ஐயா” என்றேன். அவர் புன்னகை புரிந்த வண்ணம் இன்டர்வியூ முடிந்தது என்றார். வெளியில் வந்ததும் என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக சங்குதான் என்றார்கள். “அடப் போடா மயிரே போச்சு” என்றேன். என்ன ஆச்சரியம்! தேர்வு கிடைத்தது. இந்த அழகில் ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்று வேறு கூறியிருந்தார். ஆக, முத்தையன் அவர்கள் என் பதிலுக்காக கோபம் எல்லாம் படவில்லை. இதில் என்ன விசேஷம் என்றால் திரு. முத்தையன் பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற பேச்சு அப்போது உண்டு. அதில் உண்மையிருந்தாலும் அதை தனது முடிவுக்கு அடிப்படையாக வைத்து கொள்ளாதது அவர் பெருந்தன்மைதான் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்கிறேன்.

    ஆனால் நான் கல்லூரியில் சேர்ந்ததுமே இந்த பார்ப்பன வெறுப்பை நேரடியாகவே அனுபவித்தேன். பல வேற்று சாதியினர், அதிலும் தெற்கு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் எங்களை போன்றவர்களிடம் வேண்டுமென்றே எங்கள் சாதியை மட்டம் தட்டுவார்கள். அதுவும் ஹாஸ்டலில் இருக்கும் மாணவர்கள் பாடு திண்டாட்டம்தான். நல்ல வேளையாக நான் டே ஸ்காலராக இருந்ததால் ரொம்ப கஷ்டமெல்லாம் படவில்லை. எனது நண்பர்கள் எல்லா சாதியிலிருந்தும் வந்தவர்கள். அவர்களும் டே ஸ்காலர்களே, அதுவும் திருவல்லிக்கேணியில் வசிப்பவர்களே. ஆக இப்படியே விளையாட்டாகவே கல்லூரிக்காலம் முடிந்தது.

    1971-ல் பம்பாய்க்கு சென்று மூன்றரை ஆண்டுகள் இருந்ததில் இந்த பார்ப்பன வெறுப்பு என்னை அண்டவில்லை. ஏனெனில் தமிழ்நாட்டைத் தாண்டியதுமே பார்ப்பன வெறுப்பு கிட்டத்தட்ட மறைந்து விடுகிறது. பம்பாய்க்கு பிறகு அடுத்த 7 ஆண்டுகள் சென்னையில் வசித்தபோதும் நேரடியாக தாக்கம் ஏதும் இல்லை. 1981-லிருந்து 2001-வரை தில்லியில் இருந்தபோது பார்ப்பனர்களுக்கு மிகப்பெரிய மதிப்பே இருந்தது. உதாரணத்துக்கு ஒரு பிராம்மண புரோகிதர் பஞ்சக்கச்சம் அணிந்து, திருநீறோ திருமண்ணோ இட்டு சென்றால், “நமஸ்தே பண்டிட்ஜீ, ஆயியே பண்டிட்ஜீ” என்றெல்லாம் வட இந்தியர்கள் மரியாதையுடன் பேசுவார்கள். ஆக, இங்கும் எனக்கு எந்தவித தாக்கமும் இல்லை.

    தாக்கம் என்று சீரியசாகக் கூறப்போனால் இங்கு திரும்ப வந்து வலைப்பூ தொடங்கியதும்தான் எனக் கூறவேண்டும். போலி டோண்டு பிரச்சினையே அதனால்தான் வந்தது என்பது எல்லோருக்குமே தெரியும். அதே சமயம் என் சார்பாக இருந்தவர்கள் பல சாதி மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதையும் இங்கு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

    கிட்டத்தட்ட எல்லா நாளுமே பார்ப்பனர்களை தாக்கியே பல பதிவுகள் தமிழ்மணப்பக்கங்களில் காணக்கிடைக்கின்றன. உதாரணத்துக்கு தமிழ் ஓவியா போடும் பதிவுகள்.

    தலித்துகள் மேல் வன்கொடுமையா, பார்ப்பனீயத்தைத் தாக்கி பதிவு போடுவார்கள். உள்ளே போய்ப் பார்த்தால் வன்கொடுமை செய்தது கவுண்டராகவோ, தேவராகவோ, வன்னியராகவோ, அல்லது வேறு யாராவதாகவோ பார்ப்பனர் அல்லாதவராக இருப்பார்கள். நான் கேட்பது இதுதான், “பின்னே ஏண்டா ஜாட்டான் பார்ப்பனீயம் எனக் கூறுகிறாய்? உயர்சாதீயம் என சொல் இருக்கிறதல்லவா, அதைக் கூறு” என்பதே. உடனே விளக்கெண்ணெய் விளக்கங்கள் வரும், அதாவது, “நாங்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறோம், பார்ப்பனரை அல்ல” என்று. இங்கு அவர்கள் பார்ப்பனீயம் என்று உயர்சாதீயத்தையே கூறுகின்றனர். உயர்சாதீயம் என்ற ஒரு தனிச்சொல் இருக்கும்போது தேவையற்று பார்ப்பனீயம் என்று பேசி பார்ப்பனரை ஏன் இழிவுபடுத்த வேண்டும்? இப்போது என்ன நடக்கிறது என்றால் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட பார்ப்பனருக்கு மோட்டிவேஷன் இல்லாமல் போகிறது. என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் பார்ப்பனர்கள் உள்ளனர்.

    மோடிக்கு ஆதரவா, இஸ்ரேலுக்கு ஆதரவா, உடனே பார்ப்பனீயம் வந்துவிடுகிறது. இந்த நிலைப்பாடுகளுக்கும் பார்ப்பனீயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பகுத்தறிவுடன் ஒரு கேள்வி கேட்டாலே அவர்களுடைய தீசிஸ் எல்லாம் காலி. அதுவும் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளனான என்னைப் போய் நாசிஸத்துக்கும் ஆதரவாளன் என அபத்தமாக சரித்திர அறிவேயில்லாது எழுதுவார்கள். ராமாயணத்தில் ஏதேனும் பிடிக்காத விஷயமா, உடனே அதை எழுதி விட்டு, பார்ப்பனர்களே பதில் கூறுங்கள் என்ற ரேஞ்சில்தான் விடுதலை போன்ற பத்திரிகைகள் எழுதுகின்றன.

    ஒரு பார்ப்பனன் திருடனாக இருந்து போலீசில் பிடிபட்டால் “பார்ப்பனத் திருடன்” என நீட்டி முழக்குவார்கள். அதையே வேற்று சாதிக்காரன் செய்தால் அப்போது சமரச சன்மார்க்கமாக வெறுமனே பெயரை மட்டும் போட்டு திருடன் எனக் கூறுவார்கள். கீழ்வெண்மணியில் தலித்துகளை ஒரு பார்ப்பன மிராசுதார் எரித்திருந்தால் பெரியார் என்ன மாதிரி ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார்?

    நான் நேரடியாக பாதிக்கப்படாமல் பார்ப்பன வெறுப்பைப் பார்த்தது தியாகி வாஞ்சிநாதனனின் விதவைக்கு பென்ஷன் தரும் விஷயத்தில்தான். அவர் பார்ப்பனத்தி என்பதற்காகவே விடுதலை பத்திரிகை அவருக்கு பென்ஷன் தரக்கூடாது என்றெல்லாம் வரிந்து கட்டி எழுதியது. ஆஷ்துரை என்னதான் இருந்தாலும் கலெக்டராம், ஆகவே அவரை கொன்றது ராஜத்துரோகமாம். கொலையாளியின் விதவைக்கு பென்ஷன் தரக்கூடாது என்று மனதில் ஈரமேயில்லாது அப்பத்திரிகை எழுதியது. 60 ஆண்டுகள் விதவையாக கஷ்டப்பட்ட அப்பெண்மணி பென்ஷன் வாங்காமலேயே இறந்தார். அதுவும் என்னை பாதித்தது.

    ஒன்று நிச்சயம். என்னுடன் நேரடியாக பழகியவர்களில் மா.சிவகுமாரும் ஒருவர். அவர் ஒரு முறை என்னிடம் கூறியிருக்கிறார், “ஜாதிவெறி இல்லாதவர்களில் நீங்களும் ஒருவர்” என்று. இப்போதும் அதே கருத்துதான் வைத்திருப்பார் என நினைக்கிறேன். மற்றவர்களும் ஏறத்தாழ அந்த நிலைப்பாட்டுடனேயே இருப்பார்கள் என நம்புகிறேன். இணையத்தில் எனது இந்த மாதிரி பதிவுகள் கூட விருப்பு வெறுப்பின்றியே போடப்படுகின்றன. Setting the record straight என்ற வகையிலேயே அவை உள்ளன. ஆகவேதான் பதிவர் மீட்டிங்குகளிலும் என்னுடன் மனம் விட்டு பேசுபவர்கள் அதிகமே. பார்க்க: http://dondu.blogspot.com/2008/12/blog-post_29.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  5. டோண்டு ராகவன் Says:

    கூடவே இதையும் பார்த்துவிடவும். சிறுவயதுமுதல் பார்ப்பனர்களை வெறுப்பவர் பேசுவது.

    http://www.jeyamohan.in/?p=1314

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

பின்னூட்டமொன்றை இடுக