வழிகளும் விழிகளும்

வழிகளும் விழிகளும்

அன்று நீங்கள்
கொல்லப்பட்டிருக்கலாம்
மகாத்மாக்களின் ஆசியோடு….

உங்கள் குரல் வளைகளை
யுடைத்த அதே அன்னியச் சுருக்குகள்
எம் விடுதலையை யுடைக்க
காத்திருக்கிறது….

மார்ச் 23

மூன்று உயிர்கள் பறிக்கப்பட்டதாம்
இல்லை
இல்லை
இல்லவே இல்லை

உடல்கள் விதைகளாக
விண்மீண்களாக
எங்களின் குருதியாக
உணர்வாக
மாறிய நாள்

கைராட்டைகளின் முகமூடி
கிழித்து வஞ்சகர் தம்
குலை நடுங்க
தூக்குக்கயிற்றை
முத்தமிட்ட
தியாகத்தின் விழிகளே!

அன்னியனுக்கு அடிபணிய
மறுத்த
விதையின் வழிகளே

உங்களுக்கெங்கள் வீரவணக்கம்

குறிச்சொற்கள்: , , , , ,

7 பதில்கள் to “வழிகளும் விழிகளும்”

  1. மதுரை சரவணன் Says:

    வீர வணக்கம்..வாழ்த்துக்கள்

  2. குருத்து Says:

    நன்றாக எழுதியுள்ளீர்கள். தோழர் துரை. சண்முகம் எழுதியதை படித்தீர்களா? அழுத்தமாக இருந்தது. என்னாச்சு தோழர்? பல நாளாக ஆளைக் காணோம். வேலை அதிகமா?

  3. paraiyoasai Says:

    தங்களின் உணரைவுகளுடன் நாங்களும்…..

    {கவிதை நன்றாக உள்ளது.}

  4. paraiyoasai Says:

    உணர்வுகளுடன் நாங்களும் (எழுத்துப் பிழையை கவனிக்கவில்லை.

  5. வலிபோக்கன் Says:

    அன்னியனுக்கு அடிபணியமறுத்தவிதையின் வழிகளை இன்றைக்கு(dyfi) டைபிகாரனுக தேர்தல் ஓட்டு சீட்டுக்கு பயன்படுத்துற கொடுமையை பார்த்திங்களா?

  6. வலிபோக்கன் Says:

    அன்னியனுக்கு அடிபணியமறுத்த கவிதையின் விழிகளை இன்றைக்கு(dyfi) டைபிகாரனுக தேர்தல் ஓட்டு சீட்டுக்கு பயன்படுத்துற கொடுமையை பார்த்திங்களா?

  7. kalagam Says:

    தோழருக்கு வணக்கம்,
    டைபி, எஸ் எப் ஐ, காரர்கள் பகத்சிங்கை பயன்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள். தேர்தல் குறித்து சில இந்திய மாணவர் சங்க தலைவர்களுடன் நடந்த உரையாடலை உள்ளடக்கிய கட்டுரையை விரைவில் வெளியிட உள்ளேன் தோழர்,

    தோழமையுடன்
    கலகம்

பின்னூட்டமொன்றை இடுக