இது பதினோராவது தாள்

இது பதினோராவது தாள்

உண்மையில் நான்
என்னதான் எழுதப்போகிறேன்
இது பதினோராவது தாள்

எதுவும் பிடிக்கவில்லையயனக்கு
எழுத்துக்கள் தடுமாறுகின்றன
நேற்றிலிருந்து எழுதிக்கொண்டேயிருக்கின்றேன்
தாள்களை கிழிப்பது அனிச்சையாய்
கொண்டேயிருகிறது….

என்னால் சிந்திக்க முடியவில்லை
நெஞ்சடைத்து செத்துப்போன
இருபதினாயிரம் குரல்கள் என்னை
நெருக்குகின்றன
ஒப்பாரிக்குரல்கள் செவியை
கிழிக்கின்றன

இரண்டு வருடம் தண்டனை
லட்சம் ரொக்க ஜாமீன்
வந்து விட்டது தீர்ப்பு
முதலாளி குற்றவாளியல்ல
சிரிக்கிறான் ஆண்டர்சன்

குடித்த மூத்திரம் வழிகிறது
(அ)நீதி மன்ற படிகளில்
மனதில் பதிய வை
இதுதான் சனநாயகமாம்
காந்தி கெ(V)டுத்த விடுதலையாம்

ராமனுக்கு மலச்சிக்லென்றால்
சோனியாவுக்கு சளுக்கென்றால்
கருணாவுக்கு வலிப்பென்றால்
செயாவுக்கு கொழுப்பென்றால்
எரியும் நாடு
அமைதியாயிருக்கிறது

இந்த அமைதியை சுவாசிப்பதற்கு
அந்த மீத்தைல் ஐசோ சயனைட்டை
சந்தோசமாய்சுவாசித்திருப்பேனே…….

கவிதையயழுதுவதற்கு பதில்
ஆயுமெடுத்து பழகியிருந்தாலாவது
எனக்கு நிம்மதி கிடைத்திருக்கும்

அதனாலென்ன
காலம் ஒன்றும் கடந்து விடவில்லையே.

போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

‘கவிதைகள்’

குறிச்சொற்கள்: , , , , ,

6 பதில்கள் to “இது பதினோராவது தாள்”

  1. உமா Says:

    எதற்கு எரியவேண்டும் என்று நாட்டிற்குத் தான் இன்னும் தெரியவில்லை. எழுத்தும் ஆயுதம் தானே. தொடருங்கள்.

  2. போராட்டம் Says:

    //இந்த அமைதியை சுவாசிப்பதற்கு
    அந்த மீத்தைல் ஐசோ சயனைட்டை
    சந்தோசமாய்சுவாசித்திருப்பேனே…….//

    சுவாசித்தவர்களுக்கு
    இறப்பிலும், வாழ்விலும்
    அமைதியில்லை.
    அமைதியாயிருப்பவர்கள்
    சுவாசித்திருக்கவில்லை.

    கூர்மையான வரிகள். தொடர்ந்து எழுதுங்கள் தோழர்.

  3. baskar Says:

    கோபத்தையும் ஆதங்கத்தையும் உங்களின் கடைசி வரிகள் கொண்டு செல்ல வேண்டிய இடத்தை காட்டுகின்றன 

  4. நொந்தகுமாரன் Says:

    இத்தனை இழப்பெல்லாம் எளியவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும்.

    இந்த தீர்ப்பு வேறு செய்தி சொல்கிறது. ஏகாதிபத்தியவாதிகளே நீங்கள் ‘எங்கள் ‘ இந்தியாவிற்கு வாருங்கள்! அணு உலைகளை திறவுங்கள். பிரச்ச்னை ஏதும் எனில், 500 கோடி என்ன? நஷ்ட ஈட்டை 50 கோடியில் முடித்து தருகிறோம் என்பதாக தான் இருக்கிறது.

  5. சர்வதேசியவாதிகள் Says:

    ///அதனாலென்ன
    காலம் ஒன்றும் கடந்து விடவில்லையே.///

    சூடான வரிகள்…

    இன்னும் காலம் இருக்கிறது
    அடுத்த போபால் கூடங்குளத்திலோ, கல்பாக்கத்திலோ இருக்கலாம்!
    அதற்க்கு முன் விழித்துக்கொண்டால், இன்னும் காலம் இருக்கிறது!!!

    சமீபத்த்தில் தெஹல்காவில் படித்தது: முதலாளித்துவ லாபவெறியால், செல்பேசி நிறுவனங்கள், கட்டுபாடுகளை மீறி மின்காந்த அலைவரிசையை பரப்புவதால், டெல்லி, மும்பை நகரங்களில் மின்காந்த அலைகளின் அளவு (EMR- Electro Magnetic Radiatiuon) வரம்புமீறி உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டிய அரசோ மெத்தனம் காட்டுகிறது
    http://www.tehelka.com/story_main45.asp?filename=Ne120610coverstory.asp

  6. kalagam Says:

    வருகை புரிந்து கருத்துக்களை தெரிவித்த தோழர்கள் உமா, போராட்டம், நொந்தகுமாரன், பாஸ்கர்,சர்வதேசியவாதிகள் ஆகியோருக்கு நன்றி!

    கலகம்

பின்னூட்டமொன்றை இடுக