கலைஞருக்கோ எதுவும் புரியவில்லை
காண்பது கனவா இல்லை நனவா?
பசிக்கு போன் போட்டு
நிஜம்தானென புலம்புகிறார்
விசியும் சொல்கிறார்
“வருந்ததக்கது,கண்டிக்கத்தக்கது”……
ஈராக்கில் அடித்தார்கள்
பிரான்ஸில் அடித்தார்கள்
இந்தியாவிலும் அடிப்பார்களா?
பசிக்கு விழுந்த செருப்படியின்
வடுக்கள் கலைஞரிடத்தில் தெரிக்கிறது……
செருப்பாலடித்தும்
கலங்காமல் உட்கார்ந்திருந்தாராம்
பொறுமையினை
காத்தாராம் தீட்டுகிறது
தலையங்கம் தினமணி
செருப்புக்களின் தேவை முடிந்துவிடப்போவதில்லை……
பத்திரிக்கையாளர் கண்ணியத்தை
காற்றில் விட்டுவிட்டாராம்
மானத்தை விட்டு அடிமையாய்
நக்கிப்பிழைக்கும் கூட்டத்தில்
மனிதனாய் எதிர்த்தானே அவன் வீரன்
நாங்கள் பெருமையாய் சொல்லுவோம்
கண்ணியத்தினை விட்ட மாவீரனென்று……..
யார் காலை யார் நக்குவது
நக்குவதற்கு போயஸ்தோட்டத்துக்கும்
கோபாலபுரத்துக்குமென
சிறுத்தையும் மாங்காயும்
புலியும் சிங்கமும் அரிவாள் கொண்டையோடு
படையெடுக்க
ஈழத்திலோ
ரசாயன எரிகுண்டு
தமிழகத்திலோ
செயாவுக்கு பூச்செண்டு…..
“காங்கிரசை புறக்கணிபோம்”
காங்கிரசை புறக்கணித்து
இந்தியச்சாக்கடையில் விழச்சொல்கிறார்கள்
புறக்கணிக்கப்படவேண்டியது
காங்கிரசு மட்டுந்தானா இல்லை இந்தியமா?………..
செருப்புகள் காத்திருக்கின்றன
இப்போது தவறவிட்டால்
மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்காது
வாக்கு மழை தேடிவரும் ஓட்டுப்பொறுக்கி
பன்றிகளுக்கு செருப்புமழையை
பரிசாய்த்தருவோம் – பரிசோடு
கொசுறாக போலி சனனாயகத்துக்கு பாடையும் கட்டுவோம்.
குறிச்சொற்கள்: ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், கவிதைகள், சிதம்பரம், செருப்படி செருப்புகள், தேர்தல் 2009, நக்சல்பரி, பு ஜ தொ மு, பு மா இ மு, புலிகள், பெ வி மு, ம க இ க
9:53 பிப இல் ஏப்ரல் 10, 2009 |
http://pithatralgal.blogspot.com/2009/04/blog-post_09.html
ஈழத் தமிழனின்
இன்னல்களைப் பற்றி
கவலை கொள்ளாத
எவனும்
ஓட்டுக் கேட்டு வந்தால்
இருக்கவே இருக்கு
10:12 பிப இல் ஏப்ரல் 10, 2009 |
கலகம், இவர்களெல்லாம் செருப்படி படாமலிருக்கத் எச்சரிக்கையாக இருப்பார்களே ஒழிய அதற்கான தவறுகளைத் திருத்திக்கொள்ள மாட்டார்கள்.
11:02 பிப இல் ஏப்ரல் 10, 2009 |
செருப்புக்களின் தேவை முடிந்துவிடப்போவதில்லை…… ///
ஆமாம்…ஆமாம்!
புறக்கணிக்கப்படவேண்டியது
காங்கிரசு மட்டுந்தானா இல்லை இந்தியமா?……….. /////
கட்டாயமாக இரண்டும் தான்!
செருப்புகள் காத்திருக்கின்றன
இப்போது தவறவிட்டால்
மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்காது
வாக்கு மழை தேடிவரும் ஓட்டுப்பொறுக்கி
பன்றிகளுக்கு////
குறி தவறாமல் வீணாகாமல் பயன்படுத்த வேண்டும்!
10:51 முப இல் ஏப்ரல் 11, 2009 |
செருப்பால் அடித்த பத்திரிக்கையாளரே அதற்காக வருத்தம் தெரிவித்துவிட்டு ஆனால் எந்த விடயத்திற்காக செருப்பை வீசினாரோ அந்த விடயம் இன்னமும் பதிலளிக்கப்படாமலே உள்ளது என கூறியுள்ளார். எந்த மானமுள்ள, சுரணையுள்ள, சோறோ அல்லது சப்பாத்தியோ சாப்பிடுகிற காங்கிரஸ்காரன் அக் கேள்விக்கு பதிலளிப்பானா???? கொலைகார ஓநாய்கள்
11:00 முப இல் ஏப்ரல் 11, 2009 |
ராஜிவ்காந்தி கொலையான தினத்தில் சென்னை வீனஸ் திரையரங்க ஏரியாவில் திட்டமிட்டு கலவரத்தை நடத்தியவன் அந்நாள் காங்கிரஸ்காரனான ப.ரங்கநாதன். பூட்டியிருந்த அரிசி கடையை உடைத்து அங்கிருந்த அரிசியையெல்லாம் கொலுத்தியதாக கேள்வி. இவன் ப.சி யின் அல்லக்கை என்பதும் சாதாரன டீக்கடையில் வேலை செய்தவனென்பது எத்துனை பேருக்கு தெரியும்.
11:04 முப இல் ஏப்ரல் 11, 2009 |
இந்த தேர்தலில் காங்கிரஸ்ஸை தமிழகத்திலிருந்து சுவடு தெரியாமல் அழிக்க வேண்டும்.
1:28 பிப இல் ஏப்ரல் 17, 2009 |
நேற்று அத்வானிக்கு செருப்படி!
இனி வரிசையாய் விழும்!
உணர்ச்சிகள் சீக்கிரம் வடிந்துவிடும்!
மக்களின் கோபத்தை எல்லாம், சேகரித்து, அமைப்பாக்க வேண்டும். அதில் நாம் வெற்றி பெறவேண்டும்