I.T-ன் ஆணாதிக்கம்

it1I.T-ன் ஆணாதிக்கம்
தொடரும் ஆணாதிக்கமும் அடங்கிப்போன பெண்ணியமும்

 நம் சமுதாயத்தில்  பெண்கள் போலீசு , நர்சு வேலைக்கு செல்வதை  அருவறுப்பாகவே நீண்டகாலமாக பார்த்து வந்தனர்.அவர்களை பற்றி மோசமான கருத்தினை பதிவு செய்து  உலாவ விட்டு விட்டார்கள்.மாப்பிள்ளைக்கு பெண் தேடும் போது கூட சொல்வார்கள் “பொண்ணு வேலைக்கு போனா நல்லதுதான் ஆனா நர்சு வேலைன்னா கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான்””வேற வழியில்ல அவங்களுக்கு மேலதிகாரிகளுக்கு இணங்கித்தான் நடந்தாகவேண்டும்”.

“ஹவுஸ்  நர்ஸ் அப்படீனாவே அது விபச்சார தொழில்தான்”இது ஒரு எம்.டி.படித்த மருத்துவர் உதிர்த்த வார்த்தை,ஆணாதிக்க ஆணோ அல்லது பெண்ணோ தான் செல்லும் இடமெல்லாம் ஆணாதிக்க சிந்தனையை பரப்பி அதை பொது கருத்தாக்குகின்றனர்.அதில் வெற்றியும் பெறுகின்றனர்.இவர்களின் வாய்க்கு கிடைத்த புது அவல் தான் “ஐ.டி பெண்கள்”.ஐடியில் பணிபுரியும் பென்களை பற்றி சில கருத்துக்கள்  தூவப்படுகின்றன”ஐடி இருக்கிறவ  ஒருத்திகூட யோக்கியமா இருக்கமாட்டாளுக,பொட்ட கழுதங்க கையில காசு வந்தவுடன் ஆட்டம் போடறாங்க “இந்த கூற்றுகள் ஒரு புறம் இருக்க,வினவு எழுதியிருந்த ஐடி கட்டுரைக்கு பதில் சொல்ல வந்த கோமாளிகள்” நீ என்னா சொல்லற,இங்கே யாரும் பார்சியாலிட்டி பார்க்குறதுல்ல தெரியுமோ? மனிதனை இங்கே தான் மதிக்கறாங்க. உண்மையில் நான் பழகிய பல பேரிடம் ஒருவர் கூட “எங்களை மனுசனா மதிக்கறாங்க என்று சொன்னதே இல்லை” ஒரு பெண் தொழிலாளி கூட மனம் திறந்து கூறியதில்லை”இங்கெ பாகு பாடு இல்லாமத்தான்  நாங்க இருக்கோம்” என்று.

உண்மையை சொன்னால் மற்ற இடத்தில் விட ஐடி,பிபீஓக்களில் பெண்களுக்கு சரி சமமான ஊதியம் வழங்கப்படுகின்றது.இதுவே ஆணாதிக்க அரிப்புக்கு மூக்கிய காரணம்.சம்பளம் மட்டும் தான் இணையாக இருக்கின்றதே தவிர மற்ற படி வெளியே தொடரு அதே”பாலியல் ரீதியிலான தொல்லைகள்,கேலிகள்,ஆபாசப்பேச்சுக்கள் இப்படி நீண்டு கொண்டே போகின்றன ஐடி,பிபீஓ பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள்.”ஐடி,பிபீஓவந்த பிறகு பெண்கள் ரொம்பவே முன்னேறிட்டாங்க” என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது,அந்த ஒலியில் பெண்களின் மெல்லிய  விசும்பல் சத்தம் மறைந்து போகின்றது.

ஐடி,பிபீஓ-ல் சங்கம் கட்ட உரிமை யில்லாத காரணத்தால் இங்கு மற்ற தொழிலகங்களை போலன்றி தொழிலாளர்கள் உரிமைகளை பேசாது பெருமைகளையே பேச வேண்டும்.எதையும் பழகிக்கொள்,பழக்கிக்கொள் இது தான் ஐடி,பிபீஓக்களின் தார்மீகக்கட்டளை.எப்படி பள்ளி கல்லூரியில் ஆண்களை விட பெண்கள் குறைவாயிருக்கின்றார்களோ அதைப்போலவே ஐடி,பிபீஓ லும் இருக்கின்றது.எப்படி ஒரு ஆண்பள்ளி,கல்லூரிகளில் பெண்ணை நுகரத்துணிந்தானோ அதையே இங்கேயும் தொடர்கின்றான்.
ஐடி,பிபீஓ-ல் பெண்ணுக்கு உரிமையெல்லாம் கிடையாது. இருக்கும் முக்கிய கடமை “மற்றவர்கள் நுகர்வதற்கு தன்னை தயார் செய்வதே. இனி கதைக்குள் சென்று மீண்டும் கட்டுரையை தொடருவோம்.
—————————————————————————————————————————————————————————–

நல்லதூக்கம் ஹாஸ்டல் ரூம் மேட் எழுப்பினாள்”ஏய் எந்திரிடீ மணி 7.30 ஆயிடுச்சு”. .பஸ் 8.30 க்கு ஒண்ணு இருக்கு அதை விட்டா 9 மணிக்கு தான் பேரு வைச்சிருக்கானுங்க ஐடி ஹைவே என்று என முனகியபடியே எழுந்தேன்.கண்ணெல்லாம் ஒரே எரிச்சல் .அப்பா அம்மவிடம் போனில் இரவு 2 வரை சண்டை”என்னா எப்ப பார்த்தாலும் ரொம்ப அடம் புடிக்கற மாப்பிள்ளை வீட்டுலேர்ந்து திங்க கிழமை வராங்க  நீ லீவு போட்டுட்டு ஊருக்கு வா,ஏண்டி நீ கல்யானம் பன்னிக்குவியா மாட்டியா”இப்படி வசைகள் வாரத்துக்கு இருமுறையாவது நடக்கும்.அடுத்த நாள் அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல பேசுவார்கள். நான் ஊரிலிருந்து வந்து ரெண்டு வருச மாகுது காலேஜ் முடிந்தவுடனே வந்தேன்.அண்ணன்  இங்கே தான் எச் சி ல்-ல வேலை செய்யறான்.கடந்த ஆறு மாசமா அப்பாவும் அண்ணனும் மாறி மாறி “சீக்கிரம் கல்யாணம் பண்ணு பண்ணு” நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள்.ஒரு வேளை  அண்னனுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சோ என்னவோ என்ன கல்யாணம் பண்னச் சொல்லறான்.வாரத்தில் ஆறு நாள் வேலை ஞயிறு மட்டும் தான் விடுமுறை காலையிலேயே அண்ணன் போன் செய்வான் இன்னைக்கு எங்கேயெல்லாம் போற சொல்லு சினிமாவுக்கா நான் கூட்டிடு போறேன் ,கடைக்கா நான் கூட்டிட்டு போறேன்,இன்னைக்கு நீ போகாதே நான் வெளிய போறேன்.சொல்லாமல் எங்கேயாவது சென்று விட்டு வந்தால் எங்கே போனேன் என்று லிஸ்ட் ஒப்பிக்க வேண்டும்.ஆரம்பத்தில் பாசம் என நினைத்தேன் பின்னாளில் தான் தெரிந்தது அவன் தான் இலவச போலீசு என்று.

குளித்து விட்டு சாப்பாட்டை டிபன் பாக்ஸில் அடைத்துக்கொண்டு தெருவில் பேருந்து நிலையத்தை நோக்கி நடைப்போட்டேன்.வழக்கமாய் தெரிந்த முகங்கள் தெருவில் பட்டன. நின்று கொண்டிருந்த பஸ்-ல் ஏறினேன்.மகளிர் இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்து இருந்தனர். நடத்துனர் எதுவும் பேசாது டிக்கெட்  கொடுத்துக்கொண்டிருந்தார்.யாராவது கேட்பார்கள் என்று பேருந்தில் இருந்த பெண்கள் எல்லாம் நினைத்துக்கொண்டிருந்தோம்.யாரும் கேட்கவில்லை பேருந்து நகரத்தொடங்கியது  அப்படியே என் நினைவுகளும்.இந்த கம்பெனியில் சேர்ந்து 1 வருடம் இருக்கும் அடிக்கடி மிஸ்டு கால் வருகின்றது.கால் வந்தவுடன் எடுத்து ஹலோ என்றதுமே கட்செய்கிறார்கள்
போன மாதம் ஒரு கால் அவன் என்னோடு வேலை செய்யும் சீனியர் அவனிடம் தான் சந்தேகங்களை கேட்பேன் .”ஹலோ “என்றேன்.
நான்தான் முகில்   என்றபடி பேசிக்கொண்டிருந்தான் தேவையில்லாமல். இறுதியில் பயந்த படியே ” நான்………….” என்றான் . நான் “இப்படியெல்லாம் பேசறமாதிரியி ¢£ருந்தா என்கிட்ட பேசாதீங்க ” அவனோ தொடர்ந்து கொண்டே இருந்தான் டக்கென போனை ஆப்  செய்தேன் .எனக்கு பயமாய் இருந்தது நாளைக்கு ஆபீசில் என்ன பேசிக்கிட்டு இருப்பானோ?.அடுத்த நாள் முதல் அவன் என்னிட நேராய் பேசாது  அவனின் நண்பர்களிடம் பேசுவது போல ஜாடையாக பேசி வந்தான்…..
யாரோ நெருக்குவது போலிருந்தது ஒரு எருமை என்மேல் உரசிக்கொண்டிருந்தான். நான் முறைத்தபடியே  நகர்ந்து சென்றேன்.அந்த எருமையோ வெற்றி பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தது.அதற்குமேல் அவனின் முகத்தை பார்க்கவில்லை.பஸ் ஸ்டாப் வர பொறுமையாக  இறங்கினேன்.பஸ்சிலிருந்து இறங்க முற்பட்டு படிக்கட்டை நோக்கி வரும் போதே  சிரிப்புக்களும் கேலிகளும் அதிகமாகிவிடும். நாங்கள் எதையும் கேளாமல் செவிடர்களாய்தானிருக்க வேண்டும்.சமூகம் சொல்லித்தந்திருக்கின்றது நாங்கள் பெண்மையாம் அதிர்ந்து பேசினால் கூட வாயாடியாக்கப்படுவோம்.

அலுவலகத்துக்குள் வந்தேன் ஹாய் சொல்லிவிட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்.  சரியாக ஒரு மணி நேரம் ஆன உடன் சிலர் ஒவ்வொரு வராய் வந்து அருகிலுள்ளவரிடம் பேசுவது போல ஆபாசக்கதைகளையும்,அந்தப்பொண்ணை பார்த்தேன் என்று கதைஅளந்து கொண்டு இருந்தார்கள்.மதிய உணவுக்கு பெண் ஊழியர்களோடு உணவருந்தினேன்.சினிமா முதல் எல்லா கதைகளையும் பேசிக்கொண்டிருப்போம்.மறந்து மருந்துக்குகூட எங்களின் பாதிப்புக்களை பேசியதில்லை.மீண்டும் வேலை தொடர்ந்தது.சுமார் ஆறு மணிவாக்கில் பக்கத்து டீம் சூப்பர் வைசர் வந்தார் அருகில் உட்கார்ந்துக் கேட்காமலேயே சாப்வேர் டவுட்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்  பிறகு தேவையில்லாமல் மொன்னை ஜோக்குகளை அல்ளிவிட்டு சிரித்து கொண்டு இருந்தார்.மணியோ 7.30 ஆனது “என்னங்க நீங்க கிளம்புலயா?” என்ற படி அவர் கிளம்பினார். இது வாரத்துக்கு 3 முறையாவது நடக்கும்.அலுவலகத்தில் இப்படி பல பெண்களிடத்தில் தன்னை அறிவாளியாக காட்டிக்கொண்டு திரிபவர்கள் ஆண்களிடத்தில் பெருமைக்குரியவர்களாகின்றனர். நாங்கள் இப்படி சூப்பர் வைசர் போல மேலதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால் பஸ்ஸில் செய்ததை போல் விலகிக்கூட செல்லமுடியாது சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

பஸ்ஸில் இருந்த பொறுக்கிகளால்  எங்களை சிரிக்க வைக்க முடியாது எத்தனை ஜோக்குகளை சொன்னாலும்.மேலதிகாரிகளிடம் சிரிப்பே இல்லை யென்றாலும் கூட சிரித்துதான் ஆக வேண்டும்.இவர்களின் தூண்டிலில் மாட்டிய, தானாய் மாட்டிக்கொள்கிறவர்கள் யாரும் எப்பொதும் பெண்களாகிய எங்களுக்குள் இதைப்பற்றீ  பேசியதே இல்லை.பேசவும் முடியாது.அதை பேசினால் கூட இந்த சமூகம் எங்களை குற்றவாளியாக்கிவிடும்.பிரச்சினையை எதிகொள்ளும் நாங்கள் அமைதியாக பொறுமையாக  ஊமையாகத்தான் இருக்கின்றோம்.எங்களை கேலி செய்யும் போது நாங்கள் வாய்மூடி இருப்பது போலவே நன்றாக பழகு ஆண் ஊழியர்களும் இருக்கின்றார்கள்.எங்களுக்கு சமூகம் கற்று கொடுத்திருக்கின்றது ஆண்களின் உரிமை ஆதிக்கம் செய்வது,பெண்களின் உரிமை அமைதியாய் இருப்பது.
————————————————————————————————————————————————————————
 

ஆணாதிக்கம் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டும் போது  குறிப்பாக ஐடி பிபீஓவில் பெண்கள் மூன்று நிலையாக  வகைப்படுத்திக்கொள்கிறார்கள்.ஆணாதிகத்தை எதிர்கொள்ளாமல் விலகிச்செல்லல்,ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொல்லல்,அதை எதிர்த்து போராடுவது-இது மிகசொற்பமே.முதல்வகை பெண்கள் தான் இங்கு ஆகப்பெரும்பாலும்,சக ஊழியன் அனாகரீகமாக நடந்துகொண்டான் என்பதை வெளிப்படுத்துவதில்லை,இதனால் தங்கள் மானம் போய்விடுமோ என அஞ்சுகிறார்கள்.அதற்காக அவர்களை  குற்றம் சொல்ல முடியாது.கற்பு என்பதற்கான வரையரையை ஆணாதிக்கம் விரிவு படுதிக்கொண்டே போகின்றது.

பெண் என்றால் எப்படி இருக்கவேண்டும்? ஆண் ஒருவன் பார்க்கும் போது தலையை குனியவேண்டும்,பேருந்தில் என்வனாவது உரசினால் விலகிப்போகவேண்டும்.எதுக்குடா இப்படி இடிக்குற என்றால் பெண்மையின் புனிதம் கெட்டு விடும்.பள்ளி,கல்லூரி சலைகள்,பணிபுரியுமிடம் எங்கும் இவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பலருக்கும் ஆணாதிக்கம் என்றாலே கோபம் பொத்துக்கொண்டு கோபம் வருகின்றது. தனியாக சக பெண் ஊழியரை ஆபாசமாக பேசுவது,அப்பெண்ணிடம் இயல்பாக பேசுவது இப்படி செய்பவர்கள் பொறுக்கிகள் எனில் அதை அமைதியாகவோ அல்லது களிப்படைந்து கேட்டுக்கொண்டிருப்பது ஆணாதிக்கம் தவிர வேறென்ன.உன் தாயை ஒருவன் விபச்சாரி எனும் பொருள் படும் படி பேசினால் வரும் கோபம் உனக்குஏன் சக ஊழியரை அப்படி கீழ்த்தரமாக பேசும் போது  கோபம்  வரவில்லை.அதற்கு பேரென்ன?தன்னுடன் வேலை செய்யும் பெண் பாதிக்கப்பட்கிறார் மற்றவனால் கேலிக்குள்ளாக்கப்படுகிறார் எனில் உன்னை அமைதியாய் இருக்க வைப்பது எது?
ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொள்ளல்-

இவ்வகைப்பெண்களிடம் பெண்ணுரிமை பூத்தா குலுங்குகிறது? இது பென்ணடிமைத்தனத்தின், ஆணாதிக்கத்தின் மறு முகம்.ஒரு ஆண் எப்படி மற்றவரை கவர்வத்ற்காக திரிகின்றானோ அதைப் போலவே இப்பெண்ணும் திரிகின்றார்.தொடர்ச்சியான ஆணாதிக்கத்தின் தாக்குதல்கள் படிபடியாக இனிக்க ஆரம்பித்து விடுகின்றது.அதற்கு ஏற்ற படி த்ப்பாமல்  தாளம் போடுகின்றனர்..இங்கும் ஆண்களின் விருப்பத்தை தன் விருப்பமாக மாற்றிக்கொள்வதால் விசும்பல்கள் எழாது பெருமையே கொள்கின்றனர்.இதையே சாக்காக வைத்து ஆணாதிக்க வாதிகள் கூக்குரலிடுகிறார்கள்”இவளுங்க கையில பனம் வந்த வுடனே எப்படி ஆடறாங்க ,இதுக்குதான் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கணும்.”
ஐடி,பிபீஓ -ன் இந்த மிகச்சிறு கும்பலின் மானங்கெட்ட  நடத்தைதான் ஒட்டு மொத்த ஐடி,பிபீஓபெண்களின் நடத்தையாக காட்டப்படுகின்றது. 

இப்படிப்பட்டவர்களின் பெண்ணுரிமை என் முன்னால் பலமுறை அரங்கேறியிருக்கின்றது.

அதில் ஒன்று
HR ஆக பணிபுரியும் அவர்  ஆணாதிக்கத்திற்காக தன்னை மாற்றிக்கொண்டவர், ஏதாவது ஒரு function எனில் தன் பதவியையும் மறந்து குத்தாட்டம் போட்டுக்கொண்டிருப்பார்.சனிக்கிழமையெனில் free dress codeஅலுவலகம் அனுமதித்திலேலே முடிந்த அளவுக்கு ஆபாசமான ஆடையை அணிந்திருந்தார்.சீனியர் அக்கவுண்டன்ட் சொன்னான்”இங்க பாரு……… இது மாதிரி டிரெஸ் போட்டுட்டு வந்தா ரெண்டு புள்ள பெத்த எனக்கே ஒரு மாதிரி இருக்கு”.இதைக்கேட்ட எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது.அப்பெண்ணோ தனக்கு அங்கீகாரம் கிடத்தமாதிரி  சிரித்தார்.

 

இந்த ஆணாதிக்கத்திலிருந்து எப்படித்தான் விடுதலை பெறுவது?ஆண்டுக்கொரு தரம் பெண்கள் தினம் கொண்டாடி கேக் தின்று தண்ணீர் குடித்தால் மட்டும் வராது உரிமைகள்.அது போராட்டம் இன்றி கிடைக்காது.போராட்டத்திற்கு தேவை பெண்களிடம் ஐக்கியம்.அரசியல் ரீதியிலான ஐக்கியம் மட்டுமே நீடிக்கும்.ஆபரணம்,அழகு,ஆதிக்கம்,மதம் என அனைத்தாலேயும் கட்டிப்போட்டிருக்கின்றது ஆணாதிக்கம். இவற்றை தூக்கி எறியாமல் பேசும் நம் பேச்சுக்கள் ஆணாதிக்கத்துக்கு முதுகு சொறிவதாகவே இருக்கும்

குறிச்சொற்கள்: , , , ,

14 பதில்கள் to “I.T-ன் ஆணாதிக்கம்”

  1. Kalaiyarasan Says:

    மிகச் சரியான உண்மை. பலருக்கும் புரிய வேண்டும்.

  2. வெங்கட்ராமன் Says:

    இந்த மிகச்சிறு கும்பலின் மானங்கெட்ட நடத்தைதான் ஒட்டு மொத்த ஐடி,பிபீஓபெண்களின் நடத்தையாக காட்டப்படுகின்றது.

    இது நான்(ங்கள்) சொல்வது

    இந்த மிகச்சிறு கும்பலின் மானங்கெட்ட நடத்தைதான் ஒட்டு மொத்த ஐடி,பிபீஓ ஆண்களின் ஆணாதிக்கமாக காட்டப்படுகின்றது.

    உங்களுக்கு ஏற்ப்பட்ட பிரச்சனைகள், உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.

    உங்களுடைய பிரச்சனைகளை, உங்கள மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள். அதற்குமுன் அவர்களைப்பற்றியும் விசாரியுங்கள். நேரடியாகவோ/மறைமுகமாகவோ உங்கள் பிரச்சனைகளை உங்கள் நிர்வாகத்திற்கோ உங்களுக்கு பிடிக்காத நபர்களுக்கோ தெரியப்படுத்துங்கள்.

  3. rudhran Says:

    this needs to be written. keep writing. let more people atleast start to think. best wishes

  4. kalyanakamala Says:

    we shd fight for our rights till the last breath!
    kamala

  5. porattamtn Says:

    மாநகரத்து அரட்டைக் கலாச்சாரத்தில் (புரியும்படி லோக்கலா சொன்னா, கடலை போடுறது) ஆணாதிக்கத்தைக் கண்டு கொதிப்பதில் பிரயோசனமில்லை. அவ்வாறு நாம் சொன்னால், நாம் overreact செய்கிறோம் என்பார்கள். மாறாக, அரசியலை பெண்களிடம் கொண்டு செல்வதன் மூலம்தான் இந்த அற்பத்தனங்களை உடைத்து நொறுக்க முடியும். ஷைலஜா பிரவீணுக்கு நேர்ந்தது போன்று சத்தமில்லாமல் அன்றாடம் ஐ.டி.துறையில் அரங்கேறிக் கொண்டுதானிக்கிறது ஆணாதிக்கப் பொறுக்கித்தனம்.

  6. kunthavai Says:

    //சமூகம் சொல்லித்தந்திருக்கின்றது நாங்கள் பெண்மையாம் அதிர்ந்து பேசினால் கூட வாயாடியாக்கப்படுவோம்.

    தவறு நடக்கும் போது கண்ணியமாக எடுத்துச் சொன்னால் கண்டிப்பாக நமக்கு ஆதரவு தருவார்கள். அதையும் மீறித் நம்மை கேலிசெய்பவர்களை சட்டை பண்ணக்கூடாது என்பது என் கருத்து. நேர்மைக்கு எப்போதும் வெற்றி உண்டு.

    மேலும் எதையாவது உளறிக்கொண்டிருப்பவர்களை நாம் திருத்த முடியாது, நம்மை பற்றி நமது பெற்றவர்களுக்கு தெரியும், நமது மனசாட்சிக்கும் தெரியும். யாருக்கும் நிருபிக்க தேவையில்லை. இந்த மனஉறுதியும், தன்னம்பிக்கையும் எல்லா பெண்களுக்கும் இருந்தால் போதும்.

  7. kalagam Says:

    “தவறு நடக்கும் போது கண்ணியமாக எடுத்துச் சொன்னால் கண்டிப்பாக நமக்கு ஆதரவு தருவார்கள். அதையும் மீறித் நம்மை கேலிசெய்பவர்களை சட்டை பண்ணக்கூடாது என்பது என் கருத்து. நேர்மைக்கு எப்போதும் வெற்றி உண்டு.

    மேலும் எதையாவது உளறிக்கொண்டிருப்பவர்களை நாம் திருத்த முடியாது, நம்மை பற்றி நமது பெற்றவர்களுக்கு தெரியும், நமது மனசாட்சிக்கும் தெரியும். யாருக்கும் நிருபிக்க தேவையில்லை. இந்த மனஉறுதியும், தன்னம்பிக்கையும் எல்லா பெண்களுக்கும் இருந்தால் போதும்”

    பொறுமையாக சொன்னால் கேட்பார்களா?
    பேருந்தில் உரசிக்கொண்டு இருப்பவனிடம் சொன்னால் கேட்பானா?

    குந்தவையின் பதில் தான் ஆணாதிக்கத்துக்கு பக்கபலம். தன் பாதிப்பை எதித்து போராடாது அடிமையாய் அமைதியாய் இருக்க சொல்கிறார்.இது கூட ஆணாதிக்கத்தின் விளைவே.பெண்கள் ஐக்கியமாவதை முதலில் ஆணாதிக்க சிந்தனையுள்ள பெண்கள் தான் எதிர்ப்பார்கள்.ஏன் ஒரு ஆண் தன்னை இடித்து விட்டு செல்லும் மற்றொருவன் மீது சண்டை போட உரிமை தரும் சமூகம்.தன் உடலை உரசும் ஒருவனை கேள்வி கேட்க கூடாதா? நண்பர் குந்தவை நாய்க்கு இருக்கும் உரிமை கூட பெண்ணுக்கு கிடையாதா?.எப்படி அடிமைத்தனமாக சிந்திக்க முடிகிறது உங்களால்.

    “அரசியல் ரீதியிலான ஐக்கியம் மட்டுமே நீடிக்கும்.ஆபரணம்,அழகு,ஆதிக்கம்,மதம் என அனைத்தாலேயும் கட்டிப்போட்டிருக்கின்றது ஆணாதிக்கம். இவற்றை தூக்கி எறியாமல் பேசும் நம் பேச்சுக்கள் ஆணாதிக்கத்துக்கு முதுகு சொறிவதாகவே
    இருக்கும்”

    கலகம்

  8. kunthavai Says:

    //குந்தவையின் பதில் தான் ஆணாதிக்கத்துக்கு பக்கபலம். தன் பாதிப்பை எதித்து போராடாது அடிமையாய் அமைதியாய் இருக்க சொல்கிறார்.

    என்னங்க இது அநியாயமா இருக்கு, ரெம்ப தப்பா புரிஞ்சிருக்கீங்க . அநியாயம் நடக்கும் போது அதை எடுத்து சொல்லுங்க என்று தான் நான் கூறியிருக்கிறேன். இந்த மனஉறுதியும், தன்னம்பிக்கையும் எல்லா பெண்களுக்கும் இருக்கவேண்டும்.

    எந்த ஒரு நல்ல விஷயத்தையும் தடை செய்வதற்கென்றே, சிலர் கேலிசெய்து கொண்டே இருப்பார்கள். அவர்களுடைய குறிக்கோளே அவர்கள் சொல்வதை கேட்டு நாம் எரிச்சல் பட்டு நம்மை பலமிழக்க செய்வதுதான். அவர்களை தான் ஒதுக்க வேண்டும் என்று சொன்னேன்.

    எனக்கு புரட்சிகரமான எழுத தெரியாமல் இருக்கலாம், ஆனால் அடிமைத்தனமாக சிந்தித்தது கிடையாது.

  9. kunthavai Says:

    //தன் உடலை உரசும் ஒருவனை கேள்வி கேட்க கூடாதா?

    இவ்வளவு கோபமாக எழுதுகிற நீங்கள், சமுதாயத்துக்கு பயந்து கேள்வி கேட்கவில்லை, ஆனால் நான் கேட்டிருக்கிறேன்.

  10. kalagam Says:

    குந்தவை நண்பரே,

    நான் சொன்னேன் நீ ஏன் சொல்லவில்லை என்பதல்ல பிரச்சினை,ஏன் இந்த பிரச்சினைகளை கண்டு பெண்ணினம் எதிர்க்காமல் இருக்கின்றது என்பது தான் இக் கட்டுரையின் நோக்கம்,அதற்கு தடையாய் இருப்பதை உடைத்தாகவேண்டும் அதற்கு அரசியல் ரீதியிலான ஐக்கியம் தான் தீர்வு என்கிறது இக்க்கட்டுரை. உடை முதல் வளர்ப்பிலிருந்து ஒவ்வொன்றிலும் பெண்களை அடிமையாய் வைத்திருக்கும் இச்சமூகத்தில் ந்ங்கள் காட்டும் வழியில் சென்றால் வெல்ல முடியுமா? வெற்றி என்பது என்ன ஆணுக்கு நிகராக ஐடி யில் சம்பளம் வாங்குவது மட்டுமல்ல.

    கலகம்

  11. kalyanakamala Says:

    எதிர்க்கற‌துன்னா என்ன? நிச்சயமாக எந்தப்பெண்ணும் எதிர்க்கவே விரும்புகிறாள். ஆனால் ஆணாதிக்கச் சிந்தனையில் நசுக்கப்பட்ட மனது கொண்ட பெண்ணும் ஆணாததிக்க சிந்தனையில் நசுங்கிப்போய் தன் உருவமே இழந்த பெண்களால் மற்றும் ஆண்களால் சூழப்பட்டிருக்கும் பெண்ணும் இப்படிப்பட்ட சூழ்னிலையில் என்ன செய்ய முடியும் எனபதே கேள்வி?
    IT மட்டும் இல்லைங்க. பஸ்ஸில் பயணம் செய்யும்,தெருவில் நடமாடும் எல்லாப்பெண்களும் இந்தக்கொடுமையை எதிர் கொள்கிறார்கள் எனபதே என் கருத்து.
    அன்புடன்
    கமலா

  12. senthilsos Says:

    hello

    Some friends are doing this . They belong to various IT companies in blr.
    Any students interested in performing cultural programs are welcome. They are also open to IT women who want to voice their opinion on the current events.

    thanks
    senthil

    Feb 7th , Bangalore , SCM House

    http://seculardemocracy.blogspot.com/

    Justice Nagmohan Das, Honourable judge , High Court, Karantaka

    Dr. Baraguru Ramachandrappa, well known writer and director will speak

    see the slideshow at:

    http://seculardemocracy.blogspot.com/2009/01/secular-democratic-india.html

    do join – express your opinion – if u are a i.t professional have a voice..

    ——-

    Communalism , Terrorism , Culture policing refuses to die down and continue to haunt folks in Bangalore . Liberal and plural spaces are shrinking. Modern women are being looked down , beaten, warned by self styled – jeans clad – culture police who themselves seem to have lost their culture . Though the constitution we have given ourselves enshrines – SECULARISM and DEMOCRACY in its preamble. IT professionals are looked by the aam admi in Bangalore as a person who doesn’t care about social issues and see her/him only as a person who is interested in his pay packet , real estate , pubs and malls. Though many IT leaders might not be able / are not open about their views on social issues ,we IT professionals ( though facing forced voluntary resignations because of the global slowdown – without much real compensation) want to voice our opinion on this and uphold our constitution.

    We have prepared a blog and are writing articles. We are also organizing a seminar , with cultural programs and a documentary show .

  13. நிஜாம் Says:

    இந்த பின்னூட்டம் தாமதமான ஒன்று தான். பொறுத்து கொள்ளவும். பெண்களை வெளியே செல்ல அனுமதிக்காமல் இருந்த நமது சமுதாயம் இப்போது அனுமதிக்கிறது என்றால் பெண்களின் நிலை மாறி வருகிறது என்றே அர்த்தம். விரைவில் பாலியல் சம்பந்தமான கண்ணோட்டமும் மாறும். பொறுத்து கொள்ளவும். விமானம் பறந்து மேக கூட்டங்களுக்குள் செல்லும் போது ஒரு அதிர்வு தெரியும் அது போல் தான் இது.
    நான்காயிரம் ஆண்டுகளாய் தான் அடக்கி வைத்திருந்த பெண்கள் தன் கட்டுபாட்டை விட்டு செல்லும் போது வரும் கோபமும் பயமும் தான் இப்படி வெளி படுகிறது.

    ” இந்த நிலைமையும் மாறும்”

  14. nizaar Ahamed Says:

    முதலில் பெண்கள் மற்ற ஆண்களிடம் பேசும்போது நளினம் காட்டாமல் சற்று கறாராகவே பேசுவது அவர்களை பற்றிய ஒரு இமேஜை உருவாக்கும், அதுவே அவர்களுக்கு பாதுகாப்பனது. கறாராக பேசும் பெண்களிடம் ஆண்கள் சற்று விலகியே இறுப்பர்கள்

பின்னூட்டமொன்றை இடுக