வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்!

வெண்மணி தியாகிகள் தினம்

 

 

 

 

 

ஆறிடுமா
இல்லை அணைந்திடுமா
உங்கள் மேலிட்ட தீ

எப்படி எரிந்து போயிருக்கும்
உங்கள் உடல்கள்
அடங்கக்கூடியவையா 
உங்கள் குரல்கள்
மறந்துவிடுமா
உங்கள் நினைவுகள்…….

ஆண்டுகள் பல ஆனாலும்
சாதியின் கொடுங்கரங்கள்
வர்க்கத்தோடு பிண்ணிப்பிணைந்து
படர்ந்து கொண்டிருக்கின்றன

இல்லை விடமாட்டோம்
அவை அழிய விடமாட்டோம்
தீயின் நாக்குகள்
உங்களின் மேல் சுட்டதை விட
இன்னும் அதிகமாய்
எங்களுள் கனன்று கொண்டிருக்கிறது

வெண்மணி தியாகிகளே
உங்கள் நினைவுகளை சுமந்து
வர்க்கப்போரை வாளாய் ஏந்தி
களத்தில் நிற்கிறோம்

முதலாளித்துவத்தை, நிலப்பிரபுத்துவத்தை
பார்ப்பனீயத்தை,
மறுகாலனியை வீழ்த்தாது
வீழாது எங்கள் தலை.

 

 

பலியான வெண்மணித் தியாகிகள்

1. சுந்தரம் (45)
2. சரோஜா(12)
3. மாதாம்பாள்(25)
4. தங்கையன் (5)
5. பாப்பா (35)
6. சந்திரா (12)
7. ஆசைத் தம்பி (10)
8. வாசுகி (3)
9. சின்னப்பிள்ளை (28)
10. கருணாநிதி(12)
11. வாசுகி (5)
12. குஞ்சம்பாள் (35)
13. பூமயில் (16)
14. கருப்பாயி (35)
15. ராஞ்சியம்மாள் (16)
16. தாமோதரன் (1)
17. ஜெயம் (10)
18. கனகம்மாள் (25)
19. ராஜேந்திரன் (7)
20. சுப்பன் (70)
21. குப்பம்மாள் (35)
22. பாக்கியம் (35)
23. ஜோதி (10)
24. ரத்தினம் (35)
25. குருசாமி (15)
26. நடராசன் (5)
27. வீரம்மாள் (25)
28. பட்டு (46)
29. சண்முகம் (13)
30. முருகன் (40)
31. ஆச்சியம்மாள் (30)
32. நடராஜன் (10)
33. ஜெயம் (6)
34. செல்வி (3)
35. கருப்பாயி (50)
36. சேது (26)
37. நடராசன் (6)
38. அஞ்சலை (45)
39. ஆண்டாள் (20)
40. சீனிவாசன் (40)
41. காவிரி (50)
42. வேதவள்ளி (10)
43. குணசேகரன் (1)
44. ராணி (4)

 வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்!

 

தொடர்புடைய பதிவுகள்
 
 
1.வெண்மணிச் சரிதம்
2.மறையாது மடியாது நக்சல்பரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பரி!
 

குறிச்சொற்கள்: , , , , , , ,

5 பதில்கள் to “வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்!”

  1. செங்கொடி Says:

    வெண்மணியின் நெருப்பு
    நம்முள் கனலை மூட்டட்டும்
    இன்னும் திறக்கப்படாத கதவுகளை
    தேடித்தேடி தட்டட்டும்.

    செங்கொடி

  2. மறையாது மடியாது நக்சல்பரி மரணத்தை வென்று எழும் நக்சல்பரி! « சர்வதேசியவாதிகள் Says:

    […] வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்! […]

  3. மறையாது மடியாது நக்சல்பரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பரி! « சர்வதேசியவாதிகள் Says:

    […] வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்! […]

  4. குருத்து Says:

    வெண்மணி நினைவு கூறும் நாளில்… போலிகள், தலித்தியவாதிகள் நினைவுக்கு வருகிறார்கள்.

    போலிகள் – புரட்சியை கைவிட்டுவிட்டார்கள். பாராளுமன்றத்தையும், சட்டமன்றத்தின் புனிதம் காக்க போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
    விவசாயிகளை மிரட்டி, உருட்டி, ஆண்டைகளுக்கு நிலம் சப்ளை செய்கிறார்கள்.

    தலித்தியவாதிகள் – மீசை முறுக்கி கொண்டு, அறிக்கைகளை விட்டுக்கொண்டு அடையாள போராட்டங்களை, சீர்திருத்த போராட்டங்களை மட்டும் முன்னெடுக்கிறார்கள்.

    இந்த நாட்டின் பெரும்பான்மையான விவசாயிகளை விட்டுவிட்டு, இங்கு ஒரு மாற்றமும் வந்துவிட போவதில்லை. உழுபவனுகு நிலம் சொந்தம் என்னும் முழக்கத்தின் அடிப்படையில் நக்சல்பாரிகள் தான் சரியாக முன்னெடுத்து செல்கிறார்கள்.

  5. வித்யாசாகர் Says:

    “வெண்மணி தியாகிகளே
    உங்கள் நினைவுகளை சுமந்து
    வர்க்கப்போரை வாளாய் ஏந்தி
    களத்தில் நிற்கிறோம”

    ஆம்! வீட்டுக் கூரைக்கு மேல் பதித்த நெருப்பாக ‘நம்மை தகித்து தான் கொண்டுள்ளது சாதி. ஓர் தினம் கழற்றி எறிவோம். வீடும் கூரையும் போனால் போகட்டும்; தனித்து நிற்கையில் ஜாதியின்றி நிற்போம். அந்த தொலைந்த ஜாதிகளில் முதலாளித்துவத்தின் ஆணிவேர் கூட தொலைந்திருக்கலாம்!

    மிக்க நன்றி தோழரே! நாமான சமூகம் நோக்கி தங்களின் பார்வை கூர்ந்ததில் பெருமை கொள்க்பாவனாய்..

    வித்யாசாகர்

பின்னூட்டமொன்றை இடுக