Posts Tagged ‘நுகர்வியல்’

பாலியல் காதலர்கள் – நுகர்வியலின் வக்கிர உற்பத்தி

மார்ச் 11, 2010
பாலியல் காதலர்கள்
நுகர்வியலின்  வக்கிர உற்பத்தி

அந்த பேருந்து நிலையம் புதியது எனக்கு, எந்த பஸ் எங்கு நிற்கும் என்ற விவரம் தெரியவில்லை. ஒரு ஆளை பிடித்தேன். “ஏங்க ……..ஊருக்கு எந்த பஸ் போகும்?” அவர் ஏதோ ஏற இறங்க பார்த்து விட்டு “தோ அந்த பஸ் தான் நிறைய பஸ் உங்க ஊருக்கு இருக்கு”.
நண்பருடைய திருமணம் எண்பது கிலோ மீட்டர் தாண்டி இருந்தது. பெரும்பாலான ஊர்கள் போலவே இதுவும் ஒரு 5 கிலோமீட்டர் தாண்டினாலே கிராமத்தினை கொண்டிருந்தது. காலையில் வெகு சீக்கிரம் எழுந்து கிளம்பினேன். வரும் போது பிளாட்டுகளாக்கப்பட்ட விவசாய நிலங்கள் கண்ணை உறுத்தின. கிராமங்களில் பான் பீடா கடைகள் புதியதாய் முளைத்திருந்தன. விவசாய நிலங்களில் வறுமையின் கவிதை வறண்டு போய் இலக்கியம் எழுதிக்கொண்டிருந்தது. கூட வேலை செய்பவர் என்பதால் கண்டிப்பாக போக வேண்டிய அவசியம். அந்த ஊர் பெரிய நகரம் இல்லை, கிராமமும் டவுனும் கலந்திருந்தது.
கொஞ்சம் பெரிய மண்டபம் தான் ,ஒரு வழியாய் கல்யாணத்தில் சாப்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆகி இப்போது பஸ்டாண்டில் நிற்கிறேன்.அந்தப்பெரியவர் காட்டிய பஸ் சென்று கொண்டிருந்தது. நான் செல்ல வேண்டிய ஊருக்கு தொடர்ச்சியாக பல பேருந்துகள், சரி ஒரு டீ சாப்பிடலாம் என்று பேருந்துகளுக்குப் பின்னால் இருந்த டீக்கடைக்கு என் கண்கள் ஓடின.
ஒரு பேருந்துக்குப்பின்னால் ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு கல்லூரி படிப்பவர்கள் போல பையினை மாட்டிக்கொண்டிருந்தார்கள்.
டீயினைக்குடித்து விட்டு தயாராக இருந்த பஸ்ஸில் ஏறினேன். கூட்டம் முக்கால்வாசி இருந்தது, கண்ணாடி பக்கம் கிடைக்கவில்லை. இருபெரிய்யய மனிதர்களுக்கு மத்தியில் தஞ்சம் புகுந்தேன்.
ஒரு பெண் முன் படி வழியாக பஸ்ஸில் ஏறி வந்து என்னுடைய இருக்கைக்கு இடது புற இருக்கையில் அமர்ந்தார். எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது, அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால பஸ்ஸிற்கு பின்னாடி பாத்தமே அதேதான். யாரோ என் இருக்கைக்கு பின்னிருக்கையில் உட்கார்ந்தது போலிருக்கவே திரும்பினேன். அட வெளியே பார்த்த அந்தப்பையன்.
பஸ் கிளம்ப ஆரம்பித்தது. அந்தப்பெண் அவனிடம் பேசிக்கொண்டிருந்தார் ” ஏய் சும்மாவே இருக்கமாட்டியா? ஏன் இப்படி பண்ணுற , உன்னல்லாம் என்ன பண்றதுன்னே தெரியல” ஏதோ பெண்ணிடம் தகராறு செய்பவன் என நினைத்துக்கொண்டிருந்தேன். “என்னை நீ மாட்டி வுட்டுருவ, லீவு வேற சொல்லிட்டேன் போடா” என்றபடி அந்தப்பெண் சைகை காட்ட அவன் அப்பெண்ணோடு உட்கார்ந்தான்.
டிரைவர் டிவிடியைப்போட்டார் “அழகாக சிரித்தது அந்த நிலவு” எனப்பாடத்தொடங்கியது அது. ஊர்கதை உலகக்கதை எல்லாம் பேச ஆரம்பித்து அவள் தோள் மீது சாய்ந்து கொண்டான்.
பஸ்ஸில் எல்லோரும் தன்னைத்தான் பார்க்கிறார்கள் என்ற மானம் கொஞ்சம் கூட இல்லாமல் சத்தம் போட்டு பேசிக்கொண்டு, கைகளை முறுக்கிக்கொண்டு சேட்டைகளை செய்து கொண்டு வந்தார்கள். மிஞ்சிப்போனால் ரெண்டு பேருக்கும் 17 இல்லைன்னா18 வயசுதானிருக்கும். நான் மேற்கொண்டு இதை பார்க்காது கண்ணைமூடி தூங்குவது போல் இருந்தேன்.
அன்றாடம் பஸ்-ல் இப்படி ஒரு ஜோடியயாவது பாக்கறேன், அன்னைக்கு பஸ்ஸ்டாண்டுல பையன் பக்கத்துல உக்காந்துகிட்டிருக்குற பொண்ணு ………………………………………அப்பெண் சிரிச்சுகிட்டு போன் பேசிகிட்டு இருந்துச்சு. அப்புறம் போன வாரம் பிரவுசிங் சென்டர்ல ஒரு ஜோடி முத்தம் கொடுத்துகிட்டு இருந்துச்சு, நான் பாதியில பிரவுசிங்க விட்டுட்டு வந்தேன். யார் பாத்தா நமக்கென்ன நாய் மாரி ஊர் மேய்ஞ்சுகிட்டு இருக்குங்க. சென்னையில நிறய நடக்கும் ஆனா இப்ப சிறு நகரத்துல கூட சிலதுங்க ஊர் மேய்ஞ்சுகிட்டு திரியுதுங்க.
எந்த நம்பிக்கையில் தான் ஒருபெண் அல்லது ஆண் காதலிக்கிறான்/ள். ஒருவனைப்பற்றி முழுமையாக தெரியாமல் எதைப்பார்த்து, எதை வைத்து ஊர் சுற்றுகிறார்கள். கேட்டால் காதலிக்க உரிமையில்லையா என்கிறார்கள். முதலில் இவர்கள் செய்வது காதலா?
இவர்களில் பெரும்பாலோர் திருமணம் செய்வது இல்லை.
தன் காதலுக்காக போராடுவது கிடையாது. வீட்டிற்கு தெரிந்து விட்டது என்பதெல்லாம் ஒரு சாக்கு, ஒருத்தியை விட்டால் இன்னொருத்தி என்று ரயில் ஓடிக்கொண்டே இருக்கிறது. எனக்கு ஒரு விருப்பம் இப்படிப்பட்ட ஜோடியிடம் கேட்க வேண்டும் “காதல் என்பது என்ன?“. ஆனால் இவர்களைப்பார்த்தால் தானாகவே ஒரு அருவறுப்பு வந்து விடுகிறது.
எவன் பார்த்தால் என்ன?  நான் முத்தம் கொடுப்பேன், பஸ்ஸில் எல்லா சேட்டையும் செய்வேன் என்பவனை ஒரு காதலனாக பார்க்க முடியுமா?அல்லது ஒரு விபச்சாரியாக பார்க்கமுடியுமா? நாய்களைப்போல தன் உணர்ச்சிக்கு வடிகால் எல்லா இடங்களும் தாராளமாக இருக்கின்றன.
இவர்களெல்லாம் விபச்சாரத்தனத்திற்கு காதலை ஒரு சாக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
தனிமனித ஒழுக்கம் என்பது இல்லாமலே போய்விட்டது , அப்பாவுக்கு தெரிஞ்சா எனக்கவலையுறும் அப்பெண் அப்பாவுக்கு எப்பவுமே தெரியக்கூடாது என்கிறார். ஆனால் தான் செய்யும் செயல் சரியா தவறா?.
பாலுணர்வு மட்டும் சார்ந்தது எப்படி காதலாக இருக்கும் என்பதுதான் கேள்வி. சில மாதங்கள் முன் ஒருவன் என்னருகில் பேருந்தில் செல்லும் 2 மணி நேரமும் காதலியோடு பேசிக்கொண்டே இருந்தான். அப்படி எதைத்தான் பேசுகிறான்?
அந்தக்கதை இந்தக்கதை என்றூ மொக்கைகள் தான் பேச்சுக்களாகின்றன. எனக்கொரு சந்தேகம், ஒரு முறைகூட இந்த சமூகத்தைப்பற்றிய பேச்சு ஏன் உங்களிடம் இருந்ததில்லை. நீங்களும் வயிற்றுக்கு சோறு தானே உண்கிறீர்கள், ஏன் அரிசி, பருப்பு விலை ஏறியது? எதற்காக இவ்வளவு கல்விக்கட்டணம்? ஏன் யோசித்ததே இல்லை? ஏன் இவையெல்லாம் உங்களை பாதிக்கவில்லையா?

திரைப்படங்கள் இப்படி ஊர்மேய்வதை கலாச்சாரமாக்குகின்றன, “எதைப்பற்றியும் கவலை இல்லை எனக்கு என் உணர்வுதான் முக்கியம்” மற்றவர்கள் ஏதாவது நினைத்துவிட்டால் என்ற எண்ணம் தேவை இல்லாததாகிவிட்டது. “மனிதனை உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்த வேண்டும், அறவுணர்ச்சிகள் அல்ல” இந்த  மாபெரும் கருத்தை லீனாவின் தளத்தில் படித்தது போல ஞாபகம்.
நித்தியானந்தனையும், காஞ்சி சங்கரனையும் ஏன் தேவநாதனையும் கூட உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்துகின்றன.பின் நவீனத்துவவாதிகளை எது வேண்டுமானாலும் வழி நடத்தட்டும். உங்களின் உள்ளுணர்ச்சிகள் எங்களின் அறவுணர்ச்சியை பாதிக்கும் போது என்ன செய்வது? உங்களுக்கு அறவுணர்ச்சி தேவை இல்லாமலிருக்கலாம் நாங்களும் அறவுணர்ச்சியற்று இருக்க வேண்டுமென்பது அராஜகமாக இல்லையா?
ஒரு விசயத்தில் பின்நவீனத்துவவாதிகள் பெருமை கொள்ளலாம், இதோ இங்கே இளைஞர்களை உள்ளுணர்ச்சிகள் தான் வழி நடத்துகின்றன.
சுயநலத்திற்கு யாரைப்பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏன் தன்னைப்பற்றியும் கூட. உன் உரிமைபறிபோகிறதென்றால் உனக்கேன் அக்கறை நான் மானங்கெட்டு வாழ்வது என் உரிமை என்றாகிவிட்டது / இல்லை என்றாக்கப்படுகிறது, /பட்டுவிட்டது.
இவ்வுலைகைப்பற்றி பேசாதே, உழைத்து இந்த சாலையை அமைத்தார்களே அவர்களைப்பற்றிப்பேசாதே, அதோ இந்த ஓட்டுனர் எவ்வளவு பணிச்சுமைக்கிடையில் பேருந்தினை இயக்குகிறார்.அவர் கவலையினை என்றாவது புரிந்து கொண்டிருக்கிறாயா?
“இந்த முதலாளித்துவ உலகம் கற்றுக்கொடுக்கிறது, எல்லாவற்றையும் நுகர்ந்து விடு இம்………….. எல்லாவற்றையும், கருப்பாக இருந்தால் நீ நுகரப்படமாட்டாய், சிவப்பாக மாறு பலரும் உன்னைப்பார்ப்பார்கள், மற்றவர்கள் உன்னை ரசிப்பதுதான்  வாழ்வியலின் தேவை உழைப்பு அல்ல, எதைப்பற்றியும் சிந்திக்காதே, இவ்வுலகம் படைக்கப்பட்டதே அனுபவிக்கத்தான் அனுபவி நன்றாக அனுபவி, எத்தனைபேர் மாண்டாலும் உன் சுகத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதே.
இது தான் தாரக மந்திரம். உன் அடிமைத்தனத்துக்கு தடையாய் இருப்பவனெல்லாம் உன் எதிரிகள்”
” பொய்யாய் வாழ்வது தான் விருப்பமெனில், உண்மைகள் புரியும் போது பொய்கள் கலையும், அப்போது உங்கள் ” காதலும் ” பறந்து போகும். மறுகாலனியாக்கத்தால் தைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நீ உன்னைப்பற்றி என்னப்பேசப்போகிறாய்? ஏன் பேச மறுக்கிறாய்?
நாங்கள்பேசுகிறோம் மக்கள் விடுதலைக்கு உனக்கும் சேர்த்துதான், ஆனால் நீ உன் விடுதலைக்கு கூட பேச மறுக்கிறாய். ஒருவர் தன் துணையை தெரிவு செய்ய காதல் சிறப்பான வழிதான். ஆனால் இந்த காதல் வேசம் போடும் விபச்சாரிகளை என்ன செய்வது?”
கண்விழித்துப்பார்த்தேன் அப்பெண்ணின் மடியில் அவன் படுத்துக்கொண்டிருந்தான், நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. அதைப்பார்க்கும் போது ஒரு பிணத்தின் மடியில் இன்னொரு பிணம் படுத்துக்கொண்டிருப்பதைப்போல் இருந்தது.

தொடர்புள்ள பதிவுகள்

1.காதல் – ஏகாதிபத்தியமும் ஆணாதிக்க பார்ப்பனீயமும்
2.ஆன்மீகத்-தேடல்கள்
3. 

ட்ரிங் ட்ரிங்-ஹலோ திணிக்கப்படும் விளம்பரங்கள்

மே 13, 2009

ட்ரிங்  ட்ரிங்-ஹலோ 

திணிக்கப்படும் விளம்பரங்கள்

hello copy

 

திணிக்கப்படும் விளம்பரங்கள் மதிய வேளை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். செல்போன் ,மணி அடிக்க எடுத்தவுடன்”வணக்கம் நான் தான் மு.கருணாநிதி பேசுகிறேன். ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி , அனைவருக்கும் கலர் டிவி, 16000 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தோம். நல்லாட்சி தொடர ஆதரிப்பீர் உதய சூரியன் ,கை, நட்சத்திரம். ” அன்று மாலையே “வணக்கம் நான் ஜெயலலிதா பேசுகிறேன்” என ஆரம்பிக்கிறது. ஓட்டு அரசியல் பிரச்சாரம் அனைவரையும் எட்டுவதற்காக ரெக்கார்டு செய்யப்பட்ட வார்த்தைகள் செல்போன்களில்ஒலிபரப்பப்படுகின்றன.

 

 இது வெறும் பிரச்சார உத்தி என விட முடியுமா? இந்த சிந்தனையை கொஞ்சம் கிளறிப்பார்த்தோமாயின் நம்மை மனிதர்களாக கூட மதிக்காத இந்த முதலாளித்துவத்தின் கோர முகம் தெரியும். ஒரு பொருளை விற்பதற்காக செய்யப்படும் விளம்பரங்கள் பலவகையில் இருக்கிறது. செய்தித்தாள்விளம்பரம்,தொலைக்காட்சி விளம்பரம், நோட்டீஸ், டிஜிட்டல் போர்டுகள். ஒரு முதலாளி தன்னுடைய பொருளின் சேவையினை அதன் சிறப்பம்சத்தினை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டுமென விரும்புகிறான். இவ்வகையில்தான் மேற்கண்ட பிரிவுகளில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இருந்தாலும் தன்னுடைய பொருளை கண்டிப்பாக எல்லோரும் பார்த்தார்களா? எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து யோசிக்கும் போதுதான் செல்போன் அதற்கு மாபெரும் வரப்பிரசாதமாய் அமைகிறது.

 

கடந்த இரண்டு வருடங்களாக செல்போனின் பயன்பாடு மிக அதிக அளவில் அதிகரித்து உள்ளது. ஆம் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய பொருளின் சிறப்பம்சத்தை கொண்டு செல்லலாம். அதற்கு அவர்களின் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எப்படியும் ஒரு குறுந்தகவல் வருகிறது எனில் கண்டிப்பாக அதை அதை திறந்து பார்ப்போம் அதன் மூலம் அப்பொருளை நேரடியாக எல்லோருக்கும் கொண்டு வருகிறான் முதலாளி.

 

நுகர்வியல் தான் இங்கு அடிப்படை. உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ என் விளம்பரத்தை நீ கண்டிப்பாய் நுகரத்தான் வேண்டும். நுகராதன் மனிதன் இல்லை. இப்படி நம்மை கேட்காமலே நாம் விரும்பாமலே அனைத்து கம்பெனிகளின் விளம்பரங்கள் காதில் போடப்படுகிறன. “உங்களுக்கு கடன் வேண்டுமா? சார் எங்க லைப் இன்ஸ¥ரன்ஸ்ல நல்ல நல்ல திட்டம் இருக்கு நீங்க ட்ரைபண்ணுங்க” . தினந்தோறும் இவ்வார்த்தைகளை கேட்காமல் இருக்க முடியாது” இல்லைங்க எனக்கு வேண்டாம் என்றால் கூட சார் நிறைய ஆப்சன் இருக்கு என அவர்களை இழுக்க வைத்து விட்டனர்.

 

முதலாளியின் லாப வெறி பேசும் ஊழியன் எத்தனைதிட்டு வாங்கினால் என்ன எத்தனை ஆபாச அர்ச்சனை வாங்கினால் என்ன ஒரு நாளைக்கு இத்தனை பேரிடம் பேச வேண்டும் பேசித்தான் ஆக வேண்டும் என கட்டளையிடுகிறது. வேலையில்லாத்திண்டாட்டம் யார் யாரிடமோ திட்டுவாங்கிக்கொண்டு சிலரை நுகர்வோனாக்குவதில் மகிழ்ச்சிகொள்ள சொல்கிறது அல்லது சமாதானம் கொள்ள செய்கிறது . அது ஒரு புறம் இருக்க, பலர் போன் செய்தவுடன் பெயரையும் சேர்த்து சொல்கின்றனர். “என் செல்போன் எண் உங்களுக்கு எப்படி தெரியும் என்றால் நாங்க மொத்தமா கம்பெனியில் வாங்குவோம் என்கிறார்கள்.

 

என்னுடைய பெயரை என்னுடைய எண்ணை எனக்குதெரியாமல் மற்றவருக்கு தெரிவிக்க ஒரு முதலாளிமுடிவு செய்து விட்டான் எனில் அவ்வளவுதான் நான் வேண்டாம் என்றால் கூட எனக்கு கடன் தேவை குறித்த கால்கள் வந்து கொண்டே இருக்கும். இது தனி மனிதபிரச்சினையா இல்லையா? .இது என்னுடைய உரிமையை சிதைக்கிறதா இல்லையா? என்னுடைய தகவல்களை எனக்கு தெரிவிக்காது மற்றவனுக்கு அளிக்க நீயார் என கேட்டால் சிரிக்கிறான் முதலாளி காற்று நீர் வானம் பூமி ஏன் அந்த நிலவைக்கூட பார்ட் பார்ட் ஆக விற்று விட்ட இந்த சமூகத்தில் தனிமனித உரிமை ஒரு கேடா என்றவாறு.

 

“உனக்கென உரிமைகள் இல்லை அது நீயே காசு போட்டு வாங்கிய பொருளாயிருந்தாலும் எனக்காகத்தான் இயங்கப்படுகிறது.” அதில் வெற்றியும் அடைந்து விட்டார்கள். பலருக்கும் இது ஒரு தவறாகத்தெரிவதில்லை. “sms வந்தா வந்துட்டு போவுது அதுக்கு என்ன அது அவங்க வேலை” என சாக்கு சொல்கிறார்கள். அவர்கள் வேலை சாவு வீட்டில் இருக்கும் போதும் “உங்க காதலை வெளிப்படுத காதல் கவிதைகள் மாதம் வெறும் 30 ரூபாய்தான்” என்றுதான் வருகிறது.தொலைக்காட்சி ,டிஜிட்டல் விளம்பரம் போலன்றி நான் விரும்பாமலே அவைகளை நான் நுகரத்தான் வேண்டும் .

 

 என்னுடைய நேரம் என்பது போய் நான் ஒரு24 மணி நேர சந்தையாகிவிட்டேன் எப்போது வேண்டுமானாலும் பொருளை என்னிடம் அறிமுகப்படுதலாம் அதற்கேதும் தடையில்லை நான் ஒரு உணர்வுகளுள்ள, உரிமைகளுள்ள மனிதன் அல்ல . என்னிடம் எதை மற்றவர் பேசவேண்டுமென்பதை இனி முதலாளியே தீர்மானிப்பார். அவரின் தேவைக்கேற்ப லாபத்திற்கேற்ப எனக்கு நேரம் ஒதுக்கப்படும். இது தனிமனித உரிமைகளை மட்டும் பாதிக்கிறதா என்றால் அது மட்டுமல்ல முதலாளித்துவம் ஒட்டு மொத்த மனித குலத்துக்கே எதிரானதென்ற போது அனைத்தையும் கடைசரக்காக்கி விற்பனை செய்யாமல் ஓயாது.

 

ரிலையன்ஸ் தொலை பேசி வைத்திருப்போருக்கு இந்த அனுபவம் இருக்கும்”என்னங்க இன்னுமா ரீசார்ஜ் செய்ய மாட்டேங்குறீங்க சீக்கிரம் பண்ணுங்க” என ஒரு பெண் குழைவதைப்போல, அது ஏன் இந்த துறைக்கு ஆணைவிட பெண்கள் அதிகம் பயன்படுத்தபடுகிறார்கள்?

 

பெண்களின் குரல் frequency அதிகமாக தெளிவாக இருக்குமென்பதை விட அவர்கள் விற்பனை சரக்காக்காகமாற்றப்பட்டு விட்டார்கள்.இந்த சமூகம் பல்விளக்கும் பற்பசை முதல் கழிவறை கழுவும் விளம்பரம் வரை பெண் தான் மூலதனம்.அந்த் பெண்ணின் உரிமைகளை மறுத்து அவரை ஒரு விற்பனை பொருளாக மாற்றி அதை ஏற்று கொள்ள வைத்ததுதான் முதலாளித்துவம் செய்த மாபெரும் வெற்றி. அதே பார்முலாதான் மனித சமூகமனைத்தையும் வியாபாரப்பொருளாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

 

————————————————————————————————————————————–

 

கடந்த மாதம் நடந்த சம்பவம் இது எனக்கு போன் செய்த நண்பர்கள் சொன்னார்கள் “உனக்கு போன் பண்ணினா பாட்டு வருது”. இது குறித்து அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு உடனே தொடர்பு கொண்டு புகார் சொன்னேன் . பலனில்லை சுமார் 5 தடவை இப்படி புகார் செய்தும் பலனில்லைஒருவாரம் கழித்து போன் செய்தேன் “ஏற்கனவே 5 முறை புகார் பண்ணிட்டேன் பாட்டை எடுக்க முடியுமா இல்லையா ? “அப்படிங்களா முன்னாடியே எடுத்துருப்பாங்களே ” உங்ககிட்ட ஒரியாடவேண்டிய வேலை எனக்கில்லை.

 

யாரைக்கேட்டு எனக்கு பாட்டை போட்டீங்க நான் உங்களை கேட்டனா? ” சார் அதுக்கு காசு இல்லை ப்ரீ தான் எந்த சர்ர்ஜ் இல்லை ஒரு மாசம் பாட்டு வரும் வேணுமினா காசு கொடுத்து எக்ஸ்டண்ட் பன்ணிக்கலாம்” ப்ரீ என்பதை அழுத்தி சொன்னார். “என்னப்பார்த்தா உனக்கு பிச்சக்காரன் மாதிரி தெரியுதா என்னமோ ப்ரீ ப்ரீ சொல்லுற, என்னகேக்காம எனக்கு ஆபாசப்பாட்ட போடு உட்டுவீங்க வாடா மாப்புள வெங்காயமாப்புளன்னு வரும் நான் கேட்டுட்டு வாயமூடிக்கிட்டு இருக்கணுமா? உங்ககிட்ட எல்லாம் எத்தன முற சொல்லி இழவெடுக்கிறது.

 

இப்ப பாட்ட எடுக்க முடியுமா இல்லையா? கொஞ்ச அமைதிக்கு பின் பேசினார்” சாரி சார் கண்டிப்பா பாட்டை எடுத்துடுவோம் என்றபடி இணைப்பை துண்டித்தார். ஆனால் பலர் சும்மாதானே வருது என்றபடி, ஒரு மாசம் பாட்டுதான பாடிட்டு போவுது புல்லரித்து மகிழ ஆரம்பித்து விடுகின்றனர்.

 

 முதலாளித்துவத்தின் எந்த ஒரு இலவசமும் நம்மை அடிமையாக்குவதற்கே.அது இலவசம் அல்ல அதுதான் நம்மை அவன் திருடிக்கொண்டு போவதற்கான முதல் கடவு சீட்டு. நம்முடைய உரிமைகள் பறிக்கப்பட்டதற்கான முதல் அறிவிப்பு.

B.P.O.அடிமை.காம்-பகுதி 5 – அடிமைகளின் ஆசை மொழி

மார்ச் 25, 2009

B.P.O.அடிமை.காம்-பகுதி 5

அடிமைகளின் ஆசை மொழி

part5

வழக்கம் போலவே காலையில் பஸ்ஸை பிடித்து ரயில்வே ஸ்டேசன் வந்து அப்புறம் சைதாப் பேட்டையில் இறங்கி பிறகு 19 Bக்காக காத்திருந்தேன். ரொம்ப நேரம் ஆகியும் பஸ் வரவில்லை. பக்கத்தில் ஒருவர் கேட்டார்.19 B வரலியா? “பரதேசி நாய்ங்க எங்க பஸ்ஸ உடறானுங்க? வாரம் ஆனா அத்தன பஸ் உட்டோம் இத்தன பஸ் உட்டோம்ன்னு சொல்லுறானுங்க இந்த ரூட் பஸ் மட்டும் அப்படியே இருக்குதே” என புலம்ப ஆரம்பித்தேன்.அவரும் சில கெட்ட வார்த்தைகளோடு ஆரம்பித்தார் முடிப்பதற்குள் வந்துவிட்டது

பஸ் எங்கேயிருந்துதான் அவ்வளவு கூட்டமோ சட சடவெனெ ஏறினார்கள் . எனக்கு பத்திரமாக நிற்பதற்கு இடம் கிடைத்தது. மெதுவாக மாட்டு வண்டிபோல இயங்க ஆரம்பித்தது . ஒரு நான்கு ஸ்டாப்தான்சென்றிருக்கும் மத்தியகைலாசத்துக்கு சற்று முன் வண்டியை நிறுத்திவிட்டார்கள். நடத்துனர் மெதுவாக டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.ஆளாளுக்கு கத்திக்கொண்டிருந்தோம்.எதையும் காதில் போடவில்லை.15 நிமிட இடைவேளைக்கு பிறகு கிளம்பியது. கொஞ்ச நேர பயணம். நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் இறங்கினேன். வெயிலோ பட்டய கிளப்ப தலையில் கர்ச்சீப்பை கவிழ்த்துக்கொண்டு ஓடினேன்.

செய்ய வேண்டிய சம்பிரதாய வேலைகளை செய்து விட்டு அலுவலகம் உள்ளே சென்றிருந்தேன். ரொம்ப நாள் கழித்து டே ஷிப்ட்-ல் வந்திருந்தேன். எல்லோரையும் விசாரித்து விட்டு அமர்ந்தேன். என்னுடைய டீமைச்சேர்ந்த பெண் வந்து அமர்ந்தார்.அவரிடம் ஏதோ ஒரு மாற்றம். தெரிந்து விட்டது கண்ணாடியை மாற்றிவிட்டு லென்ஸ் போட்டிருந்தார். வேண்டுமென்றே கேட்டேன்” என்னங்க மூஞ்செல்லாம் வீங்கியிருக்கு வரவழியில விழுந்துட்டீங்களா? இல்ல உடம்பு சரியில்லயா?” “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லயே. லென்ஸ் போடிருக்கேன் ” என்றபடியே அவர் வார்த்தையில் ஒரு பெருமிதம். எனக்கு ஒரு சந்தேகம்” எதுக்காக லென்ஸ் போட்டிருப்பார்?”.

அடுத்த இரு நாட்கள் முழுவதும் வேறு வேலைகளில் மூழ்கிப்போனதால் அதைப்பற்றி என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை. ஆனால் வந்து அப்பெண்ணிடம் பேச இதை ஒரு சாக்காக வைத்து கொண்டு “இது நல்லாயிருக்கு”ஏன் மாத்தீட்டீங்க” என்ற பலரின் கேள்விகள் என் காதில் விழுந்து கொண்டே இருந்தன.

அன்று மாலை வேலை முடிந்து செல்லும் போது கேட்டேன் “எதுக்குங்க லென்ஸ் போட்டீங்க?”. “கண்ணாடி போட்டிருக்கிற்து அன் ஈஸியா இருந்துச்சு அதான்” தய்வு செய்து தப்பா எடுத்துக்காதீங்க அன் ஈஸின்னா கொஞ்சம் புரியல சொல்லுங்க”. “வேல செய்ய கஸ்டமா இருக்கு.” “அப்புடியா ஆமா நீங்க என்ன வேல செய்யுறீங்க” என்றேன். ஏன் தெரியாதா என்றபடி பேரைச் சொன்னார். “வேல செய்ய அந்தக்கண்ணாடி என்ன தொந்தரவா இருந்துச்சு நீங்க என்ன மரம் ஏறப்போறீங்களா? இல்ல ஒட்டப்பந்தய வீராங்கனையா? உங்க வேலைக்கு எந்தவிதத்துல அது தடயா இருந்துச்சு? ஒரு விசயத்த செய்யுறீங்கன்னா எதுக்குன்னே தெரியாமவே செய்யுறீங்களே எப்புடீங்க?”என்றேன்.

“அப்படி எப்படி சொல்லுறீங்க பத்து வருசம் முன்னாடி கிஷ்கிந்தா போனோம் அப்ப கண்ணாடி கீழ விழுந்துச்சு ,அப்புறம் எங்க அண்ணன் கூட சொன்னான் அதான் மாத்துனேன்”.    “அப்ப உங்க தேவைக்கு மாத்துல உங்க அண்ணன் தேவைக்காக மாத்துனீங்களா?இல்ல பத்து வருசமா அந்த விசயத்த நினச்சுகிட்டேயிருந்து லென்ஸ் போட்டீங்களா? பதில் சொல்லுங்க” என்றேன் அதற்கு பதில் இல்லை.

அறிவியலின் எந்த கண்டுபிடிப்பிற்கும் நான் எதிரா பேசலை அறிவியல் தான் கம்யூனிசம் . தன்னுடைய தேவை என்பதை மீறி மற்றவர்களின் தேவைக்காக தன்னை மாற்றிகொள்வது அப்படீங்குற விசயத்துல தான் எல்லோரும் தீவிரமா இருக்காங்க” ஏன் ஒரு விசயத்த செஞ்சீங்கன்னு கூட அதுக்கு பதில் சொல்ல முடியாம முழிக்ககுறீங்களே அதுதான் முதலாளித்துவத்தோட வெற்றி”

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க என்னோட தேவைக்குதான் நான் வாழறேன்” என்ற படி கிளம்பினார். அவ்வாரம் முழுவதும் வேலைப்பளு காரணமாக அவ்விசயத்தப்பற்றி பேசமுடியவில்லை.

அவ்வாரம் முடிந்து அடுத்த வாரம் நைட் ஷிப்ட்ல் இருந்தேன். எல்லோருக்கும் மெயில் வந்திருந்தது. அலுவலகத்தில் பெண்கள் எல்லோரும் பெண்கள் தின கொண்டாட்டத்தை கொண்டாடிவிட்டார்களாம்.அந்த புகைப்படங்கள் மெயின் சர்வரில் போட்டிருந்தார்கள். விபி,மேனேஜர் ஹெச்.ஆர்.மற்ற பெண் தொழிலாளர்கள் உட்பட சமமாய் உட்கார்ந்து போஸ் கொடுத்திருதார்கள்.இன்னொரு போட்டோவில் கேக் சாப்பிட்டுக்கொண்டிருதார்கள். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன் அடுத்த வாரத்தினை ஆவலாய் எதிர் நோக்கினேன்.

எதிர்பார்த்த வாரமும் வர நேரமும் கைகூட நான் ஆரம்பித்தேன்” போட்டோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு, என்ன அவ்வளவு ஜாலியா இருந்தீங்க, எல்லோரும் புடவைக்கட்டீருக்கீங்களே? எப்புடி முன்னாடியே சொன்னாங்களா?” ஆமா முன்னாடி நாள் எல்லோரையும் ஹெச் ஆர் கூப்பிட்டு சொன்னாங்க”.

“அப்புடியா சொன்ன வுடனே புடவைய கட்டீட்டு வந்துட்டீங்களா பெண்கள் தினம்னா என்னன்னு தெரியுமா ? அமெரிக்காவுல பெண்கள் தன்னோட கொத்தடிமைத்தனத்த எதிர்த்து போராடினாங்க ஆனா நீங்க எல்லாம் நவீன கொத்தடிமை பீபிஓவில அடிக்கவோ திட்டவோ வேண்டாம் சொன்னாவே செஞ்சுடுறீங்க இல்லயா?”.

” புடவை கட்டுறது என்ன தப்பு ?. “புடவை கட்டுறதப்பத்தி பேசல உங்களுக்கு எது தேவையோ அதை உடுத்த உங்களுக்கு உரிமை இருக்கு ஆனா மற்றவங்களோட கட்டளைய இன்பமா ஏற்று அடிமையா வாழறீங்கன்னுதான் சொல்லுறேன்,

அதாவது நீங்க உழைக்குற உழைப்புக்கு இங்க சம்பளம் இருக்கா இல்ல, காலையில வந்துட்டு தினமும் குறஞ்சது ரெண்டு மணி நேரம் ஓ.டி பாக்குறீங்களே அதுக்கு ஏதாவது அலவன்ஸ் தராங்களா? இல்ல நீங்க ஒரு பெண் அப்புடீங்கறதால எத்தன பிரச்சினய சந்திச்சு இருப்பீங்க அதப்பத்தி யோசிச்சு இருக்கீங்களா?இல்ல நவீன கொத்தடிமையா மாறிக்கிட்டு வர நமக்கு மகளிர் தினம் நாளைக்கு சேலை கட்டிட்டு வான்னு சொன்னா எதுக்கு வரணும் என்ன அவசியம்?

சுரண்டுகிற வி.பியும், ஹெச்.ஆரும். சுரண்டப்படுகிற எங்களோட எப்புடி மகளிர் தினம் கொண்டாடமுடியும்ன்னு ஏன் பேசல?”…………………….

சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தேன் ” அதே சீனியர் ஹெஆர் பசங்கள கூப்பிட்டு ஏப்பா எல்லோரும் வேட்டி கட்டிட்டு வாங்கன்னு சொன்னா எல்லோரும் கட்டிட்டு வருவாங்களா என்ன? ஆனா புடவை கட்டிட்டு வான்னு பெண்கள்கிட்ட சொன்னா உடனே தன்னோட தேசியக்கடமையா செய்யுறீங்க ஆனா ……………….”என்றேன்

அதற்குள் அவர் இடை மறித்தார் ” உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்களே எனக்கு பிடிச்சுருக்கு அதான் போட்டேன், எனக்கு பிடிச்சதான் நான் செய்யுறேன்.மத்தவங்களுக்காக வாழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” .

சரிங்க ” என்ன சைக்கிள் வச்சுருக்கீங்க?” .”லேடிபேர்ட்”என்றார். “ஏன் ஹீரோ சைக்கிள் வாங்கல அது லேடி பேர்ட விட தாங்கும் விலையும் குறைவுதான”. “எனக்கு பிடிக்கல” என்றார்.” எனக்கு பிடிக்குது பிடிக்கல என்பத யார் தீர்மானிக்குறா நீங்களா இல்ல அந்த சைக்கிள் கம்பெனிக்காரனா? ஏன்னா முதலாளி தீர்மானிக்குறான் இதுக்கு இப்படியெல்லாம் விளம்பரம் கொடுத்தா இப்படி வியாபாரம் ஆகும் என்று.

ஒரு காலத்துல கண்ணாடிக்குன்னு அத்தன விளம்பரம் வந்துச்சு மருத்துவமனைகள் மூலமா ஆனா இப்ப அதே மருத்துவ மனைகள் என்ன சொல்லுது கண்ணாடி போடுறது கண்ணுக்கு விலங்கு மாட்டுறது போலவாம். லென்ஸ் போடுங்க லேசர் சிகிச்சை செய்யுங்க என்று இப்ப சொல்லுங்க நீங்க உண்மையாகவே உங்க நல்லதுக்குதான் லென்ஸ் போட்டீங்களா? “

“நமக்கு நாமே ஒரு வட்டம் போட்டுக்குறோம் இந்த சைக்கிள் தான் வாங்கணும் ஏன்னா அது லேடிஸ்க்குன்னு உருவானது, என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன கண்ணாடின்னு கூப்புடுறாங்க ,டூர்க்கு போனப்ப என் பிரண்ட் சொன்னா ஏன் இன்னும் கண்ணாடி போட்டிருக்க லென்ஸ் போடலியான்னு?.இது மட்டுமல்ல பேர் அண்ட் லவ்லியில இருந்து அடிக்குற செண்ட் வரைக்கும் மனிதனை ஒரு பொருளா மாத்தி இருக்கு . கருப்பா இருந்தா தன்னம்பிக்கை போயிடும், வாழ்க்கையே நாசமாபோயிடும் பேர் அண்ட் லவ்லி போடுன்னு சொல்லுறான்.அந்த விளம்பரம் புடிக்குதோ இல்லையோ ஏதாவது கிரீமை வாங்கி பூசிக்கிறது.”

“இப்படி ஒண்ணு ரெண்டு இல்ல வாழ்க்கயில எல்லா விசயத்தையும் ஏன் வாழ்க்கையையே மத்தவங்களுக்காகத்தான் வாழறோம். உங்களுக்காக உண்மையிலே ஒண்ணு பண்ணனுன்னு நினச்சீங்கன்னா போராடுங்க , பெண்கள் அடக்கப்படும் போது, உழைக்கிற மக்கள் பாதிக்கப்படும்போது ஏன் நீங்க பாதிக்கப்படும்போதும் போராடுங்க.ஆனா பலரும் அதப்பத்தி பேசவே தயாராயில்லை அப்படீங்கற்துதான் உண்மை. நல்லா  யோசிச்சுப்பாருங்க தியேட்டர் வாசல்ல கால்கடுக்க நிக்கத்தெரியுது,

கல்ச்சுரல் புரோகிராம்ல ஆடத்தெரியுது,ஆனா மக்களோட நம்மளோட பிரச்சனயப்பத்தி ஏன் பேச முடியல எது தடுக்குது ?.எது உங்கள மக்களை பத்தி பேசவிடாம தடுக்குதோ அதுதான் உங்கள தியேட்டர் வாசலில நிக்கவும் , உங்க முன்னாடியே கூட வேல செய்யுறவன் ஒரு பெண்ணை பத்தி கிண்டலடிச்சு பேசுனா அமைதியா இருக்கவும் செய்யுது. யோசிச்சு பாருங்க யாருக்காகத்தான் நீங்க வாழறீங்க?அது ஒண்ணுதான் விடுதலையை பெற்றுத்தரும்.அதில்லாம நீங்க செய்யுற எந்த வேலையும் உங்களை அடிமையாக நீடிக்கவே உதவும்.”

அப்பெண் அப்போது பேசவில்லை.பின்வரும் நாட்களில் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.இது நடந்து எப்படியும் ஒன்றரையாண்டுகள் இருக்கும். மூன்று மாதங்களுக்கு முன் பேச நேர்ந்த போது கூட அந்த அடிமைத்தனத்தின் சாயல் அவரிடமிருந்து துளியும் விலகவில்லை என்பதனை அவரின் மவுனமே காட்டிக்கொடுத்தது.

ஒரு வேளை மவுனங்கள் தான் அடிமைகளின் ஆசைமொழியோ என்னவோ?