Posts Tagged ‘பாராட்டுதல்’

டேய் ! இது செம்மொழி மாநாடு , தமிழ்த்தாயை காணவில்லை…….

ஜூலை 1, 2010

டேய் !   இது செம்மொழி மாநாடு

செம்மொழியான தமிழ்மொழியே!

ஓடித்திரிந்த
சாலைகள் எல்லாம் வெள்ளை
வெளேரென்று மின்னுது
உள்ளுக்குள்ளே தமிழ்த்தாய்
என்னை விதவையாக்கி
விட்டானென விம்மி விம்மி அழுகுது

யாராடா தமிழ்த்தாயின் மூத்த மகன்?
கல்லுடைக்கும் தொழிலாளியும்,
கதிரறுக்கும் ஆத்தாளும் அல்லவா
தமிழ்வாரிசுகள்

பீத்த மகனெல்லாம்
மூத்த மகனென்று பீற்றித்திரிவது
கண்டு தமிழ்த்தாய் ஒப்பாரி வைக்குது
ரஹ்மானின் பாப் இசையில் எல்லாமே  அடங்குது

தமிழ்மொழியே!! தமிழ்மொழியே!!

கோவையில் செம்மொழிக்கு
கொண்டாட்டமாம்
கொங்கு நாட்டானுக்கு
நாலு நாள் வேலையில்லை- சோத்துக்கு
திண்டாட்டமாம்

கலைஞர் அவர் வாழும்
வரலாறு , வாயைத் திறந்தால்
வருமாம்   தமிழ் ஆறு    அதில்
கழக குஞ்சுகள் நீச்சலடிக்க
நக்கிப்பார்தால்
அட ! இது
டாஸ்மாக்கு பீரு

பண்டாரங்க  வெளியே விக்குது
பகவத் கீதை  உள்ள போனா
டான்ஸ் ஆடுது பணக்கார கீதை

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்

பறையனுக்கு மந்திரி
பதவியாம்!!
சமத்துவம்  வந்து  புல்லரிக்குது
அடிச்ச கொள்ளைக்கோ
கையரிக்குது

ஈழத்தின் பிணநாற்றம்
தாங்காமல் ஓடி வந்த சிவத்துக்கு
பொன்னோடு

ஈழத்தமிழனுக்கு திருவோடு
கடலில்  துப்பாக்கி சூடு
சாதி மாறி  காதலிச்சா  ஒரே போடு

பாலாறு திரிஞ்சு போக
பெரியாறு பொரிஞ்சு போக
எதைப்பிடுங்க மாநாடு ?

போலீசு சொல்லுது

டேய் !   இது செம்மொழி மாநாடு

———————————————————————————————————————————————————————————————தமிழ்த்தாயை
தமிழ்த்தாயை காணவில்லை…….

இங்லீஸ்ல பேசுங்க ஈஸியா!
இங்கிலீஸ்ல பேசி  இம்ப்ரஸ் பண்ணுங்க
இங்கிலீஸ்ல படிச்சா அறிவு வரும்

“டாடி மம்மி வீட்டில் இல்லை
தடைபோட யாருமில்ல”

திரும்பிய பக்கமெல்லாம்
இங்கீலீசு கப்’அடிக்க
தேடி  வந்த தமிழ்த்தாய்க்கு
வெடிகுண்டு செக்கப்’

யாரோ தூய தமிழில்
ஆத்தா! ஆத்தா!
என்றழைக்க,

இங்கேயாவது இருக்குதே வாஞ்சையோடு
போனாள் தமிழத்தாய்

கண்மணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்
டேய் “ங்கோத்தா”  “ங்கோத்தா”……

பின்னங்கால் பிடரியிலடிக்க
ஓடிய தமிழ்த்தாயை காணவில்லை
கண்டு பிடித்து தருவோருக்கு
அடுத்த செம்மொழி மாநாட்டில்
பொற்கிழியும் பன்னாடையும்
ச்சீ ச்சீ !!!   ச்சீ !!!

பொன்னாடையும் நிச்சயம்.

    செம்மொழி மாநாடு  special

‘கவிதைகள்’